எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, December 07, 2007

சாலை ஜெயராமனின் பகிர்வுகள்

கல்வியில் அரிச்சுவடிப் பாடம் எவ்வாறோ, அதைப் போலவே இறை பக்தி என்பது மிகவும் அவசியம். குழந்தைப் பருவத்தில், பேரறிவின் விளிம்பு கொண்ட இறைத் தத்துவத்தை, இரை உணர்வோடு, இறை உணர்வையும் எளிமையாகப் பெறுவதற்காக பெரியோர்கள் செய்து வைத்த வழியே வழிபாட்டு முறைகளாகும்.பள்ளிக்கல்வியில் தகுதி நிலையை வைத்து, அறிவினை சோதித்து, தேர்வு முறைகள் நடத்தி பள்ளிக் கல்வி என்ற நிலை மாறி, கல்லூரிப் பட்டம் முதலியவை படிப்படியாக வைத்ததுபோல், இறை நிலையிலும் மிக உயர்ந்த நிலையான முக்தி நிலை என்பதை நம் தேகம் நல்ல முறையில்
இருக்கும் போதே பல நிலைகளில் படிப்படியாக அறிந்து கொள்ள வேண்டும். வெறும் வழிபாடு மட்டும் இறைநிலையை அறிய உதவாது.

நம் இந்திய மத தர்மங்கள் இறைஉணர்வை அடைவதற்கான வழிமுறைகள் கோடானு கோடி வழிகளை வைத்திருக்கிறது. அதிலும் தமிழ் வழி வந்த செம்மல்கள்
தங்கள் பங்களிப்பை மிக அதிகமாகவே தந்திருக்கிறார்கள். குறிப்பாகத் திருக்குறள் தந்த திருவள்ளுவர் போன்ற சித்தர்கள், முக்தர்கள் பல வழிகளை
அறிவித்துச் சென்றிருக்கிறார்கள். இதைத் தமிழ் கூறும் நல்லுலகம் என்ற தலைப்பில் தயார் செய்து வைத்திருக்கிறேன்.

வெறும் வழிபாட்டு நெறிகள் சடங்கு சம்பிரதாயத்திற்கு மட்டுமே வித்தாக இருக்கும். இந்த உண்மையை அறியாததாலேயே உலகில் பல்வேறு மதங்கள் பேதப்பட்டு, அறிவின் நிலை மாறி இறைவுணர்வை கொச்சைப் படுத்தி முடிவில் நாட்டுக்கு நாடு, தெருவுக்குத் தெரு மதபேதத்தினால் மனிதனின் இயல்பு வாழ்க்கை நிலைமாறி முடிவில் மதத்தின் பெயரால், அறியாமையும், படுகொலைகளும், மனித வாழ்வைத் தடம் மாறச் செய்து விட்டன.
பொதுவாக அனைத்து மதங்களும் ஒரே செய்தியை பலவாறாகக் கூறிவருவதை தற்போது காண்போம்.குறிப்பாக இறைவனின் வாச ஸ்தலத்தை எவ்வாறு பல மதங்களும் ஒரே கருத்தாய்க் கொண்டிருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

1) 'ஈசன் இருப்பிடம் இருதயம்' என்பது அப்பர், சுந்தரர் போன்ற சைவ சமயக்குரவர்களுடைய வேத ஆகமங்களின் கருத்து

2) 'ஹிருதயகமலவாசா' என்பது வைணவப் ஆழ்வாராதிப் பெரியோர்கள் கருத்து

3) 'கல்பு' என்ற இருதயத்தில் அல்லா ஒளியாய் உள்ளான் என இஸ்லாம் வேதமான புனித குரான் கூறுகிறது.

4) 'புனித தூய இருதயம்' என கிருத்துவ வேத ஆகமம் புனித விவிலிய வேதம் (பைபிள்) அறிவிக்கிறது.

5) இந்துமத புனித பகவத் கீதையில் உன் பிடரியின் வழி இருதயத்தில் உள்ளேன் என்னையே நினை என்னையே வந்தடைவாய். உன் ஹிருதயத்தின் நடுநாயகமாய் இருந்தேன் என் விஸ்வ ரூப தரிசனத்தின் மகிமையை உன் இருதய சிம்மாசனத்தில் வைத்து வழிபடு என
போர்க்களத்தில் உபதேசித்த மொழியில் இருந்தும், இறைவன் மனிதனின் சுத்த இருதயத்தில் அன்றி வேறு எங்கும் வெளியாவதில்லை என மிகத் தெளிவாக அறியலாம்,

மேலும் மனித வாழ்க்கையில் இறப்புக்குப் பின், சைவம், திருக்கையிலாய பதவி என்னும் கயிலாய லோகம் என்றும், வைணவம், வைகுண்ட லோகம் என்றும், இஸ்லாம், மெகராஜ் என்ற அல்லாவின் ராஜ்யத்திற்கு உன்னை ஆயத்தப்படுத்து எனவும், கிருத்துவம், பரலோக ராஜ்யம் உங்களிடையே மிக சமீபமாக இருக்கிறது எனவும் இறைவன் வாழும் மற்றொரு உலகத்திற்குப் பலவாறான பெயர்களில் சொல்லப்பட்டாலும் கருத்து பொதுவான ஒரு
இறைவுலகை அறிவித்தே எல்லா வேதங்களும் இப்பூமிக்கு இறக்கப்பட்டுள்ளன. உபதேசம் என்பது வெறும் வாய்மொழிமட்டும் அல்ல. உப + தேசம் அதாவது 'உப' வேறொரு `தேசம்' உலகம். என்பது போன்ற கருத்தினையும் உள்ளடக்கி வைத்துள்ளது.

தமிழறிவு எவனொருவனுக்கு இல்லையோ அவனுக்கு முக்திநிலை இல்லை. ஏனெனில் இம்மொழியில் மட்டுமே இறைநிலை என்பதை மனிதன் அடைவதற்கு பல பரிபாஷைகளை பெரியோர்கள் விட்டு வைத்து இருக்கின்றனர். ஆன்மீக நெறிவழியில் இதுவரை கோயில், குளம், வழிபாடு போன்றவை தாண்டி - மிக எளிய வழியான கடவுள் தத்துவத்தை / கட + உள் என்பதாக இக் 'கட' மாகிய 'தேகத்திற்கு' 'உள்` கடவுள் உள்ளான் என்பது போன்ற நான் அறிந்து வைத்துள்ள ஆன்ம தத்துவங்களை தங்களைப் போன்றோருடன்
பகிர்ந்து கொள்ளுதலில் மிக்க மகிழ்ச்சி அடைவேன். பரோபகாரம் என்பது பர வாழ்வாகிய சொர்க்க வாழ்வுக்குச் செய்யும் உபகாரமே ஆகும்.

இகஉபகாரமாகிய தொண்டு, உதவி போன்றவைகளால் ஒருபோதும் மனித வாழ்வில் நிறைவைப் பெற்றுத்தர முடியாது.கல்வி, வாழ்வியல், பொருள் ஆதாரம், தமிழ் கூறும் நல்லுலகம், அறிவு, அறியாமை, ஞானம், வள்ளுவம் போன்ற பல்வேறு தலைப்புகளில் ஏற்படுத்தப் பட்ட ஆன்ம காரியம் எவ்வாறு உலகியல் ஆகிய அழிபொருள் தேடலில் மாற்றுக் கருத்துக்களாக உருவகப்படுத்தப் பட்டது போன்ற சிந்தனைகளைத் தாங்கள் விரும்பினால் மீண்டும் பகிர்ந்து கொள்வோம் என கூறி நிறைவு செய்கிறேன்.

பிளாக்கில் எழுதாவிட்டாலும் உங்களுடன் பகிர்ந்து கொள்வது மிகவும் மன நிறைவைத் தருகிறது. பெருமைக்கு எழுதுவது என்பது கூடாது. நல்ல செய்தியைத் தரவேண்டும். இணைய தளம் அதன் பயன்பாடு மிகச் சிறப்பாக வைத்துள்ளது. இது போன்று நன் முறையில் பயன்படுத்திக் கொள்வது நன்மை பயக்கும். செய்திகள் சுவாரஸ்யமாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் மற்ற மதுரை அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என விழைகிறேன். கடிதம் எழுதப் புறப்பட்டால் பக்கம் பக்கமாக சிந்தனை விரிகிறது. பகிர்ந்து கொள்ள நல்ல நட்பு இல்லாததால் அனைத்தும் அடைபட்டுக்கிடக்கிறது.
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற நல் எண்ண அடிப்படையிலேயே நமது தமிழ் வையத்துள் வாழ்வாங்கு வாழும் மொழியாக உள்ளது

இவை திரு சாலை ஜெயராமன் எனக்கு அனுப்பிய மெயிலில் வந்த செய்தி! அவர் விருப்பத்தின் பேரில் பகிர்ந்து கொள்கிறேன். அவரால் அவரோட வலைப்பக்கத்தில் வெளியிட முடியவில்லை.

20 comments:

  1. கீதா அக்கா.. மறுபடியும் கஷ்டமான பாடமா?..ஏதோ புது விசயம் சொல்ல வர்ரீங்கன்னு தோனுது .. பிரசண்ட் போட்டுக்கோங்க.. காலையில வந்து படிக்கிறேன்..ஹிஹி..

    ReplyDelete
  2. @ரசிகரே, இது ரொம்பவே ஜனரஞ்சகமான பதிவு, உங்களுக்கு இங்கே எல்லா ரசமும் கிடைக்கும். இப்போக் கிடைக்கிறது பக்தி ரசம், அதான் நேத்துக் கொடுத்தேனே, மொக்கை ரசம் பத்தாது? :P

    @வேதா, நாங்களும் ஒரு வார்த்தைப் பின்னூட்டம் போடுவோமில்ல? :P

    ReplyDelete
  3. // வெறும் வழிபாட்டு நெறிகள் சடங்கு சம்பிரதாயத்திற்கு மட்டுமே வித்தாக இருக்கும். இந்த உண்மையை அறியாததாலேயே உலகில் பல்வேறு மதங்கள் பேதப்பட்டு, //

    உண்மையாவே ரொம்ப சரியா புரிஞ்சி வச்சிருக்கிங்க கீதா அக்கா..

    ReplyDelete
  4. எவ்வளவு எடுத்துக்காட்டுகள்.. விளக்கங்கள்..
    சூப்பர்..

    ReplyDelete
  5. பரிபாஷைகளை பெரியோர்கள் விட்டு வைத்து இருக்கின்றனர்.//

    இதை என்னால ஏற்றுக்கொள்ள முடியலைங்க அக்கா..
    எங்களோட கடவுள் மட்டுமே சொர்க்கத்துக்கு டிக்கெட் போடுகிறார்ங்கர மாதிரி .எங்க மொழி மட்டுமே ஆன்மீகத்துக்கு சிறந்த்துன்னு சொல்லறது தப்பில்ல?..
    சமஸ்கிரிதம்காரங்களும்,யூதர்களும்,உருதுகாரர்களும் அவிங்க பாஷையை இதே மாதிரிதேன் சொல்லுவாய்ங்க..

    ReplyDelete
  6. // தமிழறிவு எவனொருவனுக்கு இல்லையோ அவனுக்கு முக்திநிலை இல்லை. ஏனெனில் இம்மொழியில் மட்டுமே இறைநிலை என்பதை மனிதன் அடைவதற்கு பல

    // இகஉபகாரமாகிய தொண்டு, உதவி போன்றவைகளால் ஒருபோதும் மனித வாழ்வில் நிறைவைப் பெற்றுத்தர முடியாது.//
    மன்னிச்சுடுங்க அக்கா இதுலயும் எனக்கு உடன்பாடு தோனலை..

    ReplyDelete
  7. // பொதுவான ஒரு
    இறைவுலகை அறிவித்தே எல்லா வேதங்களும் இப்பூமிக்கு இறக்கப்பட்டுள்ளன.//


    பக்குவமடையும் வரை இறை கன்செப்ட் மனிதனுக்கு ரொம்ப அவசியம் .அதனால
    எழுதப்பட்டவை (இறக்கப்பட்டவையல்ல ) .
    ஆனா அதுலயும் நெறய பேதங்கள் காலத்துக்கேற்ப்ப.. இந்து மதம் வர்ணங்கள் சாதிகள்.,ஒரே கடவுள்ன்னு சொல்லிக்கொள்கின்ற கிருஸ்துவத்தில் கத்தோலிக்,ப்ரொடஸ்ட்ன்னு ஆயிரம் வகைகள் அவர்களுக்குள்ளேயே சண்டைகள்.இஸ்லாமில் சுன்னி,குர்தீஷ் ந்னு பல பிரிவு அவர்களுக்குள்ளே போர்..

    மொத்தமா பிரச்சனைகள் இருந்தாலும்,பலவகையில தனிமனித ஒழுக்கத்துக்கு ஒரு உத்தரவாததை மதம் வழங்க முயல்கிறதுன்னு தோனுது..

    ReplyDelete
  8. நல்ல ஆழமான ஆனால் இன்னும் ஆராய்ந்து திருத்த வேண்டிய சிந்தனைப்பதிவு இது..
    வழங்க்கியதுக்கு நன்றிகள் அக்கா..

    ReplyDelete
  9. ஆமாம் கீதா அக்கா..என்ன இது .. நம்ம அம்பிய சொல்லிப்புட்டு தொடர்ந்து மத்தவிங்ககிட்டருந்து ஜி3 செஞ்சி பதிவு போடறிங்க?.. அப்பறம் நாங்களும் ஆரம்பிச்சுடுவோமில்ல..ஹிஹி...

    ReplyDelete
  10. // உங்களுக்கு இங்கே எல்லா ரசமும் கிடைக்கும்.//

    என்னதிது சாம்பு மாமாவ வச்சு ஏதாவது ஓட்டல் துவங்கர ஜடியாவா?..ஏற்க்கனவே அவர சமையலரையில கஷ்ட்டப்படுத்தறதுக்கு சம்மன் அனிப்பியிருந்தோமே?.கெடச்சுதா?..:)))

    ReplyDelete
  11. ஒரு நிமிஷம் நீங்க தான் எழுதி இருக்கீங்களோ?னு அதிர்ச்சியில் உறைந்து விட்டேன். நல்ல வேளை, தலைப்பை பார்த்தேன். :p

    என்னது அவரால பதிவிட முடியலையா? பேசாம உங்கள மாதிரி ஒரு உபிசாவை நியமிச்சுக்க சொல்ல வேண்டி தானே? :)))


    அவரோட சொந்த கருத்துக்கள் ரெம்ப நல்லா இருக்கு. :))

    ReplyDelete
  12. //நம்ம அம்பிய சொல்லிப்புட்டு தொடர்ந்து மத்தவிங்ககிட்டருந்து ஜி3 செஞ்சி பதிவு போடறிங்க?//

    @rasigan, நல்லா கேளு பா நியாயத்தை. :))

    @geetha paati, ஆமா! இந்த ரசிகனுக்கு இவ்ளோ பின்னூட்டம் போடறத்துக்கு மாசம் எவ்ளோ அக்கவுண்ட் டிரான்ஸ்பர் செயறீங்க? :p

    ReplyDelete
  13. @ரசிகரே, பதிவை நல்லாப் பிரிச்சு மேய்ஞ்சதுக்கும், கருத்துக்கும் நன்றி, உங்களுக்கு உடன்பாடில்லாத கருத்துக்களுக்கு அவர் தான் பதில் சொல்லணும், என்பதால் நான் ஒண்ணும் சொல்லவில்லை.

    அப்புறம் இன்னொரு விஷயம், நான் ஜி3 தான் செய்தேன், இல்லைங்கலை, ஆனால் எழுதினது யார்னு தலைப்பிலேயே கொட்டை எழுத்தில் கொடுத்துட்டேன் பாருங்க, அம்பி மாதிரி அவர் பேரிலேயே போட்டுக்கிறாரே? அது போல் என் பேரிலா போட்டிருக்கேன்? :P நீங்க அம்பிக்கு வக்காலத்து வாங்காதீங்க! :P

    @அம்பி, அவர் பப்ளிஷ் பண்ணினால் எழுத்து உடைஞ்சு வருதாம், அதான் எக்ஸ்ப்ளோரரில் முயற்சி செய்யுங்கனு கூட சொன்னேன். ஆளே காணோம்! அப்புறமா ஒரு விஷயம் நான் அவர் பேரைப் போட்டுட்டுத் தான் பதிவே பப்ளிஷ் பண்ணி இருக்கேன், உங்க மாதிரி, டெக்னிகலுக்குத் தங்கமணியும், பதிவு எழுதத் தம்பியும் வந்து உதவி செய்துட்டு, ஒரு நன்றிக்குக் கூட அவங்க பேரு போடாமல் இருக்கிறதில்லை! ரசிகன் பேரைப் பார்த்தாலே தெரியலை? என்னோட எழுத்துக்களின் ரசிகன் என்று? நான் ஏன் பொட்டி ட்ரான்ஸ்பர் பண்ணணும்? அது உங்க வழக்கம்! :P

    ReplyDelete
  14. சாலை ஜெயராமன் - இன்னொரு மதுரைக்காரரா? வருக வருக...

    ReplyDelete
  15. நன்றி பாச மலர்

    ReplyDelete
  16. தங்கள் கருத்துக்கு நன்றி அம்பி

    ReplyDelete
  17. ரசிகரே தங்கள் ரசனையைக் கெடுத்தேனா. எழுதியே கொல்லுவேன். ஏன்னா நான் மதுரை ஆளாக்கும்

    ReplyDelete
  18. அது என்ன உபிசா, G3 எனக்கும் இதையெல்லாம் சொல்லிக் கொடுங்கோ

    ReplyDelete
  19. நல்லதோர் ஆக்கத்துக்கு ஐயா சாலை ஜெயராமனுகும், அதை எம்மோடு பகிர வ்ழி செய்த திருமதி கீதா சாம்பசிவத்துக்கும் என் இருதயங் கனிந்த நன்றிகள்.

    அன்புடன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    நான் வழங்கும் மகாயோகம்
    என் கவிதைகள்

    ReplyDelete