இரண்டு நாள் முந்தி அபி அப்பா "பொங்கள்" பத்தி எழுதி இருந்த பதிவுகளைப் படிச்சுட்டுப் பின்னூட்டம் போட்டுட்டு இருந்தேனா? அதிலே இருந்த தப்புக்களைப் பார்த்தால் தலை சுத்த ஆரம்பிச்சது. சரி, ஒண்ணோ, இரண்டோ இருக்கும் சுட்டிக் காட்டலாம்னு பார்த்தால், சுட்டிக் காட்டிட்டு இருப்பதைத் தவிர வேறே ஒண்ணுமே செய்ய முடியலை, எண்ண முடியலை, கடைசியில் தோல்வியை ஒத்துக்கிட்டுத் தலையில் அடிச்சுட்டு உட்கார்ந்தேன். வேறே வழியே இல்லை. எத்தனை சொன்னாலும் அவர் திருத்தி என்னமோ எழுதப் போறதில்லை. விரக்தியின் எல்லைக்கே போய் உட்கார்ந்துட்டு இருந்தபோது, திடீரெனப் பதிவுகளைப் படிக்க முடியலை, என்ன ஆச்சு எனக்கு? தலை சுத்தலில் கண் மறைக்கிறதா? அல்லது என்னோட தமிழ் ஆர்வம் அதிகமாகிக் கண்களில் இருந்து அபி அப்பாவின் தமிழைப் பார்த்துவிட்டு ஆனந்த பாஷ்பம் பொழியுதா? என்னன்னே புரியலை.
"சொத்!" எதுவோ கீழே விழுந்த சப்தம். என்னனு குனிந்து பார்த்தால், கண்ணாடி, கண்ணுக்குப் போடுவது தாங்க, கையில் வந்தது. ஃப்ரேம் லூசாகி விட்டது, டைட் பண்ணணும்னு நினைச்சுட்டே கையில் கண்ணாடியை எடுத்தால், என்ன ஆச்சரியம்? ஒரு பக்கத்து ஃப்ரேமே உடைஞ்சு போயிடுச்சு. கொஞ்ச நாள் முந்தி ஒரு புத்தகத்தில் படிச்சேன். வெளிநாட்டுக் காரர் ஒருவர் லலிதா சகஸ்ரநாமம் டேப்பை இந்தியாவில் இருந்து வாங்கிப் போயிருந்தாராம். வாங்கும்போதே இதுக்குப் "பவர்" அதிகம், தினமும் சொன்னால், அதுவும் ஒரே சிந்தையுடன் சொன்னால் அதிகமாய் சக்தி இருக்கும் என்று. அதைச் சோதனை பண்ணிப் பார்க்க வேண்டி அவர் தினமும் அந்த சஹஸ்ரநாமம் காசெட்டைத் திரும்பத் திரும்பப் போட்டுக் கொண்டே ஒரே சிந்தனையாக இருந்திருக்கிறார். திடீர்னு ஒரு நாள் அது வெடித்தே விட்டதாம். அது போல அபி அப்பாவின் தமிழுக்கும் கண்ணாடியை உடைக்கும் அளவுக்குச் சக்தியா என்று வியந்து போய் விட்டேன், போங்க, மூணு நாளா கண்ணாடி இல்லாமல் எதுவும் செய்ய முடியலை, நேத்துச் சாயங்காலம் தான் ஒரு மாதிரி ஃப்ரேம் சோல்டரிங் பண்ணி வந்தது. பவர் வேறே ஜாஸ்தியாகி இருக்கு. கண்ணாடியையே மாத்தணும், அதுக்குள்ளே, இது வேறே. இனி "மொக்கை இடைவேளை" முடிஞ்சு பதிவுகள் ஆரம்பம்.
அவ்வளவு பெரிய தில்லாங்கடியா நம்ம தொல்ஸ்...
ReplyDeleteஇது தெரியாம போச்சே இம்புட்டு நாளும்...
நல்ல நகைச்சுவை நடை கீதா, இந்தப் பதிவில்..
ReplyDelete@புலி, என்னத்தைச் சாட்டறீங்க அப்புறம் தினமும்? இந்தப் பவர் இருக்கிறது கூடத் தெரியலையே? :P :P
ReplyDelete@பாசமலர், என்ன நகையோ? என்ன சுவையோ? போங்க, அபி அப்பாவின் தமிழைப் பார்த்தால் ஒரு நாளைக்கு எனக்கு அவங்க தமிழ் டீச்சரைப் பார்த்து நல்லா 4 வார்த்தை கேட்கலாமான்னு வருது!
// பொங்கள்//
ReplyDeleteஅய்யா பாருங்க.. அம்மா பாருங்க..
அண்ணா பாருங்க.. போனா வராது..வந்தா போவாது(?)..
கேளுங்க இந்த அநியாயத்தை...
என்னோட ஒத்த வரில பத்து குத்தம் கண்டுபிடிக்கிற டீச்சருக்கு பொங்கள் தான் பொங்கலாம்...
நெசமாவே அபி அப்பா தமிழ் வேலை செய்யுதோ?...:))
// கீதா சாம்பசிவம் said...
ReplyDeleteஅபி அப்பாவின் தமிழைப் பார்த்தால் ஒரு நாளைக்கு எனக்கு அவங்க தமிழ் டீச்சரைப் பார்த்து நல்லா 4 வார்த்தை கேட்கலாமான்னு வருது!//
கீதா அக்கா ,இந்த சொ.கா.சூ எதுக்குங்கறேன்?..
அவங்க தமிழ் டீச்சர்,என்னோட தமிழப்பாத்துப்புட்டு, உங்கள 8 வார்த்தை கேக்கலாமான்னு நெனச்சுப்புட்டாக்கா?..
அப்ப என்னா செய்விங்க?
அப்ப என்னா செய்விங்க?:P:P:P
@ரசிகரே, என் கையிலே மாட்டாமல் தப்பிச்சுட்டு வரீங்களே? உங்களுக்கு யாரோ எடிட் பண்ணி, ஜி3யும் பண்ணிக் கொடுத்தால் ஏன் பேச மாட்டீங்க? :P :P
ReplyDeleteஃப்ரேம் லூசாகி விட்டது, டைட் பண்ணணும்னு நினைச்சுட்டே கையில் கண்ணாடியை எடுத்தால், என்ன ஆச்சரியம்?
ReplyDeleteபோச்சு போ ஃப்ரேமும் லூசாகிவிட்டதா):P
@வேதா, அசத்திட்டாரில்லை, அபி அப்பா தன்னோட தமிழாலே??
ReplyDelete@சார், திராச, சார், என்னமோ உள்குத்து, உள்குத்துங்கறாங்களே, அது இதுதானா? :P
ஏங்க அவரு தான் பொங்கள் அப்படின்னு ஏன்சொல்றேன்னு ஒரு பெரிய விளக்கம் எல்லாம் குடுத்து இருந்தாரே.. பார்க்கலியா...சரி ஒரு கண்ணாடி உடைந்ததுக்கு இவ்வளவு பெரிய பதிவு ரொம்ப ஓவர்..
ReplyDelete// கீதா சாம்பசிவம் said...
ReplyDelete//ரசிகரே, என் கையிலே மாட்டாமல் தப்பிச்சுட்டு வரீங்களே?//
ஓரு முடிவோடத்தேன் திரியற மாதிரி தெரியுதே.ஏன் இந்த கொலை வெறிங்க டீச்சர்..
உங்களுக்கு யாரோ எடிட் பண்ணி, ஜி3யும் பண்ணிக் கொடுத்தால் ஏன் பேச மாட்டீங்க? :P :P///
ஆஹா.. கீதா அக்கா.. ஹோம்வர்க் சரியா இருக்குன்னு மட்டுந்தேன் பாக்கனும். யாரு எழுதி கொடுத்தா? யார் திருத்தி குடுத்தான்னெல்லாம் கேக்கப்படாது... ஆமா..:)))
;-)))))
ReplyDeleteவேற வழியில்லை தலைவி..(லேட்டு) ;)
இப்போ எல்லாம் அபிஅப்பா பதிவுகளைப் படிச்சா இந்த எபெக்ட் வரது நிஜம்தான். உங்களுக்கு கொஞ்சம் ஜாஸ்தியாப் போச்சு போல!!
ReplyDelete(ஆனாலும் கண்ணாடி உடைஞ்சதை எல்லாம் பதிவா போட்டு, அதையும் அடுத்தவனைக் குத்தம் சொல்ல எப்படித்தான் முடியுதோ. இதுக்கு என் கண்ணாடி உடையும் போல இருக்கே.)
ஹா ஹா ஹா.... உங்க கண்ணாடி உடைந்ததை சொன்ன மாதிரியும் ஆச்சி... அபிஅப்பாவை சொன்ன மாதிரியும் ஆச்சி. 2 இன் 1. சூப்பர் கீதாம்மா. ;-)
ReplyDelete@didiயக்காஆஆஆஆவ், ஏன் புகை விடறீங்க பெரிசா? இது ஓவர்னால் மத்ததை எல்லாம் என்ன சொல்வீங்களோ? :)))))))
ReplyDelete@ரசிகரே, தமிழ் மட்டுமா, இப்போ கதையின் கருவைக் கூட ஜி3 பண்ணிட்டு இருக்கும்போது ஏன் பேச மாட்டீங்க? சொந்தமா ஒரு கதையோ, கவிதையோ தப்பில்லாமல் எழுதுங்க பார்க்கலாம். :P
@கோபிநாத், வந்தீங்களே, அதே பெரிசு! :))))
ReplyDelete@இ.கொ. கண்ணாடி போட்டிருக்கீங்களா என்ன? அப்போ உடைஞ்சாலும் உடையும், அவரோட தமிழுக்கு அவ்வளவு சக்தி இருக்கு!
@காட்டாறு, ரொம்பவே நன்றி, புரிஞ்சிட்டதுக்கு! :))))))
// @ரசிகரே, தமிழ் மட்டுமா, இப்போ கதையின் கருவைக் கூட ஜி3 பண்ணிட்டு இருக்கும்போது ஏன் பேச மாட்டீங்க? சொந்தமா ஒரு கதையோ, கவிதையோ தப்பில்லாமல் எழுதுங்க பார்க்கலாம். :P//
ReplyDeleteடீச்சர் அதென்ன அப்படி சொல்லிட்டிங்க.. நீங்க நடுவரா இருந்து நடத்த(?) கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிய தப்பில்லாம எழுதியிருக்கேன்.வந்து பாருங்க..:P:P:P
http://rasigan111.blogspot.com/2007/12/i.html
என்ன கொடுமை சார்! நான் அப்படி என்ன தப்பு பண்னிட்டேன்!நானும் பல பேர் வச்சி தப்பு திருத்திதான் போடறேன்! இருந்தும் என்ன பன்ன! சமீபத்தில் கூட டாடடம்மாவின் அமரிக்க விஜயம் பதிவில் தெரியாத்தமா "அனு ஒப்பந்தம்"ன்னு போட்டு பின்ன கூட ஒர்க பண்ற குப்புசாமி கண்டு பிடிச்சு அவன் தலையிலே அடிச்சுகிட்டு அணு ஒப்பந்தம்ன்னு மாத்தினான்!ஆனா பொங்கல் பதிவிலே என் தப்பு இல்ல அதே குப்புசாமி தான் (என்னை பழி வாங்கும் விதமாக)ல்\ள் ன்னு மாத்தி விட்டான்:-((
ReplyDeleteஎன்னமோ போங்க. உங்க தப்பு மேட்டரை படிச்சு, நானும் ஆறு மாசமா கண்ணாடிய மாத்தணும்னு நினைச்சுக்கிட்டே மறந்து போன விஷயத்தை ஞாபகப்படுத்திட்டீங்க...
ReplyDeleteகீதா - தங்களின் தமிழார்வம் - அனைவரும் தாய் மொழியாம் தமிழை ஒழுங்காக எழுத வேண்டுமென்ற தங்களின் தனியாத அவா - மெய் சிலிர்க்கிறது. அரும்பணியை அறப்பணியாகச் செய்யும் கீதா வாழ்க - வளர்க அவரது தொண்டு
ReplyDeleteவாழ்த்துகள்.
ஆமா கண்ணாடி ஸ்பேரெல்லாம் வச்சிக்கறது இல்லையா - சாம்பு மாமா என்ன பண்றார் - இதெல்லாம் கூட அரேஞ்ச் பண்ணாம.
//போச்சு போ ஃப்ரேமும் லூசாகிவிட்டதா):P// - தி.ரா.ச
ReplyDeleteஉடன்படுகிறேன் - அப்பீலே இல்லை