எச்சரிக்கை
இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.
Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.
Have a great day.
Have a great day.
பரமாசாரியாரின் அருள் வாக்கு
Saturday, December 01, 2007
பதினெட்டாம்படியின் மகத்துவமும், தத்துவமும்
ஒண்ணாம் படியில் ஏறுகின்றேன்
உனையன்றி காட்சிகள் தொலைக்கின்றேன்! [காணல்]
இரண்டாம் படியில் ஏறுகின்றேன்
ஒலிகள் சத்தம் மறக்கின்றேன்! [கேட்டல்]
மூணாம் படியில் ஏறுகின்றேன்
மணங்கள் யாவும் விடுகின்றேன்! [நுகர்தல்]
நாலாம் படியில் ஏறுகின்றேன்
அறுசுவை அகற்றி செல்கின்றேன்! [உண்டல்]
ஐந்தாம் படியில் ஏறுகின்றேன்
தொடுவுணர்வற்று நகர்கின்றேன்! [தொடுதல்]
ஆறாம் படியில் ஏறுகின்றேன்
காமங்கள் யாவும் தொலைக்கின்றேன்! [காமம்]
ஏழாம் படியில் ஏறுகின்றேன்
கோபங்கள் அகலப் பார்க்கின்றேன்! கோபம்]
எட்டாம் படியில் ஏறுகின்றேன்
லோபம் விலகக் காண்கின்றேன்! [லோபம்]
ஒன்பதாம் படியில் ஏறுகின்றேன்
மோஹம் பறந்திடச் செய்கின்றேன்! [மோஹம்]
பத்தாம் படியில் ஏறுகின்றேன்
மதமென்னும் பேயை விரட்டுகின்றேன்! [மதம்]
பதினொண்ணாம் படியில் ஏறுகின்றேன்
வெறுப்புகள் விலகிடக் காண்கின்றேன்! [மாத்ஸர்யம்]]
பனிரண்டாம் படியில் ஏறுகின்றேன்
அசூயை அகற்றி வாழ்கின்றேன்! [அசூயை]
பதிமூணாம் படியில் ஏறுகின்றேன்
பெருமிதமின்றிச் செல்கின்றேன்! [தற்பெருமை]
பதினாலாம் படியில் ஏறுகின்றேன்
சத்வகுணத்தை விடுகின்றேன்! [சத்வம்]
பதினைந்தாம் படியில் ஏறுகின்றேன்
சிற்றின்ப குணத்தைத் விடுகின்றேன்! [ரஜம்]
பதினாறாம் படியில் ஏறுகின்றேன்
தாமஸ குணத்தைத் தொலைக்கின்றேன்! [தாமஸம்]
பதினேழாம் படியில் ஏறுகின்றேன்
கற்றதையெல்லாம் மறக்கின்றேன்! [வித்யை]
பதினெட்டாம் படியில் ஏறுகின்றேன்
அறியாமை இருளைப் போக்குகின்றேன்! [அவித்யை]
பகவானே உனைக் காண்கின்றேன்
பந்தபாசத்தை விடுகின்றேன்!
ஸ்வாமியே சரணமெனக் கதறுகின்றேன்
சாஸ்வத நிலையில் திளைக்கின்றேன்!
மகரஜோதியில் கரைகின்றேன்
மனத்தினில் களிப்பே உணர்கின்றேன்!
பதினெட்டாம்படிக்கதிபதியே சரணம் ஐயப்பா!
ஸ்வாமியே சரணம் ஐயப்பா!
திரு விஎஸ்கே அவர்கள், பதினெட்டாம்படியின் தத்துவத்தைக் குறித்து எழுதிய பாடல். அவரோட பதிவிலேயும் போட்டிருக்கலாம். இங்கேயும் ஜி3 செய்துள்ளேன்.
டாக்டர் சார், உங்களோட பாடலை உங்களைக் கேட்காமல் ஜி3 செய்து போட்டிருப்பதற்கு மன்னிக்கவும். பாடல் என்னோட போன பதிவின் அர்த்தங்களுக்குப் பொருந்தும் வண்ணம் அமைந்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
எஸ். கே. க்கு முதலில் நன்றி!
ReplyDeleteலோபம், அசூயை, சத்வகுணம், தாமஸ குணம் இதுக்கு எல்லா என்ன அர்த்தம் என்று சொல்ல முடியுமா?
அருமை. அருமை. சாமியே சரணம் ஐயப்பா
ReplyDeleteஇது எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு கீதா அக்கா..
ReplyDeleteஎன்னன்ன செஞ்சாக்கா.. ஏகாந்த நிலையை அடையலாமுன்னு
வாழ்க்கையின் தத்துவத்தையே பதினெட்டு படில அடக்கிட்டாய்ங்க..
பாட்டுலயுந்த்தேன்.
உங்க ஜி3 சூப்பர் ...
ReplyDeleteநல்ல விசயங்கள எல்லாருக்கும் சொந்தமானது.
தன்னலமில்லாத யார் வேணாலும் சுட்டு விளப்பரப்படுத்தலாம்..
தப்பில்லை டீச்சர்...
இத்தனை விஷயங்கள் இருக்கிற இதில்!!
ReplyDeleteவி. எஸ். கேக்கும் உங்களுக்கும் நன்றிகள்..;)
புலி சொல்லியதை போல அந்த வார்த்தைகளுக்கு எல்லாம் அர்த்தத்தை பதிவாக இடுங்கள் தலைவி :)
எனது பதிவில் வருவதை விட, பலரும் படிக்கும் உங்களது வலைப்பூவில் வந்தது குறித்து மிக்க மகிழ்கிறேன் தலைவி!
ReplyDeleteரசிகன் சொன்னது போல நல்ல விஷயங்கள் அனைவர்க்கும் பொதுவே!
மீண்டும் நன்றி!
அசூயை என்பது பொறாமை, லோபம் என்பது கஞ்சத்தனம்.
ReplyDeleteகீதா மேடம் கோவிச்சுக்குவாங்க, ஆகையால் மற்ற இரண்டிற்கும் அவங்களே பதில் சொல்லட்டும்....
// வேதா said...
ReplyDelete/லோபம், அசூயை, சத்வகுணம், தாமஸ குணம் இதுக்கு எல்லா என்ன அர்த்தம் என்று சொல்ல முடியுமா?/
அசூயை என்றால் முகம்சுளிப்பது என்ற அர்த்தம் வருமா?
சத்வம் என்றால் அமைதியான என்ற அர்த்தம் சரியா? மத்த ரெண்டும் எனக்கு தெரியல கொஞ்சம் சொல்லுங்க :)//
அவ்வ்வ்வ்வ்வ்வ்.........ஃகன்பார்மா உப்புசத்யாகிரக காலமேத் தான்.ஹிஹி..:).
// VSK said...
ReplyDeleteஎனது பதிவில் வருவதை விட, பலரும் படிக்கும் உங்களது வலைப்பூவில் வந்தது குறித்து மிக்க மகிழ்கிறேன் தலைவி!
ரசிகன் சொன்னது போல நல்ல விஷயங்கள் அனைவர்க்கும் பொதுவே!//
உங்க பெருந்தன்மைக்கு ரொம்ப நன்றிகள் சார்.. அருமையா எழுதியிருக்கிங்க...படிப்படியான ஆன்மீக நிலைகளையும்,முடிவில் (18 ம்படி) முழுமையான சரணாகதியே இம்மையில் மறுமையெய்தும் வழின்னு நல்லா சொல்லியிருக்கிங்க.. வாழ்த்துக்கள்.
// மதுரையம்பதி said...
ReplyDeleteஅசூயை என்பது பொறாமை, லோபம் என்பது கஞ்சத்தனம்.
கீதா மேடம் கோவிச்சுக்குவாங்க, ஆகையால் மற்ற இரண்டிற்கும் அவங்களே பதில் சொல்லட்டும்....//
ஆஹா.. தெரியலைங்கரத சொல்ல இப்படியும் ஒரு வழி இருக்குதா?..சூப்பரு...:)