இந்த விருது கொடுக்கிற விஷயம் தெரியும்னாலும் என் வரைக்கும் வரும்னு எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் விருது வாங்கி இருக்கும் மத்தவங்க அளவுக்கு எதுவும் எழுதவில்லை. இப்போவும் திவா தேர்ந்தெடுத்திருக்கும் மற்ற இருவரும் எப்போவோ வாங்கி இருக்கணும். கோமா மனோரமா தான் தெரியும், பனோரமா தெரியாதுனாலும் அதையும் கத்துக் கொண்டு, பின்னி எடுக்கிறார். ஹாஸ்யத்திலும் அப்படியே! பத்திரிகைகளில் என்ன பெயரில் எழுதறார்னு புரியலை! எனக்கு மனோரமாவையும் தெரியாது, பனோரமாவும் தெரியாது. மலையாள மனோரமாவானு கேட்பேன்! பனோரமா யாருங்க அதுனு கேட்பேன்! இவ்வளவு ஞானவான் ஆன என்னை எப்படி தேர்ந்தெடுத்தார்னு புரியலை!
குமாரோ கேட்கவே வேண்டாம். கட்டுமானத் துறையிலிருந்து ஆரம்பிச்சு, லினக்ஸ் வரை அனைத்தும் இணையவழிப்பாடம் எடுத்துட்டு இருக்கார். இதிலே நான் எங்கே இருந்து வரேனு புரியலை! தப்பு நடந்து போச்சு! போகட்டும். இனி நான் யாருக்குக் கொடுக்கிறதுனு மண்டை காய யோசிக்கவேண்டி இருக்கு. அனைவருமே நண்பர்கள், நண்பிகள். யாரை விடறது, யாரைச் சேர்க்கிறது? எத்தனை பேருக்குக் கொடுக்கிறது? ஒண்ணும் புரியலை! தர்ம சங்கடம்!
முதலில் வருபவர்கபீரன்பன். இவரோட பதிவுகளை முதலில் எல்லாம் பின்னூட்டம் கொடுக்காமலே படித்து வந்தேன். யாரோ ரொம்பப் பெரியவர் நல்லா எழுதறார், நாம குறுக்கிட்டு எதுவும் எழுதக் கூடாது என்று நினைச்சால்???? கடைசியிலே பார்த்தால், (முதல்லே இருந்து தான்) இளைஞர்! அதுக்கப்புறம் நம்ம புத்தி சும்மாவா இருக்கும்? இது எ.பி. இது த.பி. இது க.பி. என்று ஒவ்வொன்றாய்க் கண்டு பிடித்துச் சொல்லிக் கொண்டிருக்கின்றது. என்றாலும் மென்மையாகவும், அதே சமயம் உறுதியுடனும், அழுத்தம் அதிகம் காட்டாமல் வார்த்தைகளை வெளிக்கொண்டுவர முடிந்த இவருக்கு இந்த விருது எல்லாம் ஜுஜுபி!
அடுத்து யார்னு யோசிச்சால் ஜீவாநினைவுக்கு வந்தார். தெளிந்த ஞானம் இவரிடம் நிறையவே உண்டு. இவரோட பதிவுகளும், நிதானமான போக்கும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும். "அசலம்"னு பேர் வச்சிருக்கணுமோனு தோணும். இவரோடும் இதைப் பகிர்ந்து கொள்கின்றேன்.
மூன்றாவதாக யாரென்றால் முதல்லேயே இவரைக் குறிப்பிட்டிருக்கணும். ஆனால் திடீர்னு வரார், திடீர்னு காணாமப் போறார். இப்போ இருக்கார்னு நினைக்கிறேன். சூடான் புலி இவரைத் தேர்ந்தெடுத்ததுக்குக் காரணம் வேண்டாம்னு நினைக்கிறேன்.
இன்னொருத்தர் இருக்கார். ஆனால் அவர் ரொம்ப பிசினு நினைக்கிறேன். காணோம் அவரைக் கொஞ்ச நாட்களாய். இது தவிரவும் பகிரவும், மகிழவும் வலை உலகு பூராவும் மக்கள் இருக்கின்றனர். அனைவருக்கும் உரித்தான இந்த விருதை அனைவரும் பகிர்ந்து கொள்ளுமாறு அழைக்கின்றேன். இப்போ சொல்லி இருக்கும் மூன்று பேரும் செய்யவேண்டியதைக் கீழே குறிப்பிட்டிருக்கின்றேன். அவங்களுக்கு எப்போ முடியுமோ அப்போ இவ்வாறு செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன். திவாவுக்கு என் நன்றி.
1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும் (Put the logo on your blog)
2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும் (Add a link to the person who awarded you)
3. 3 அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும் (Nominate at least 3 other blogs)
4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும் (Add links to those blogs on yours)
5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும் (Leave a message for your nominees on their blogs)
கீ அக்கா, நன்னி!
ReplyDeleteவேலைக்கு போய்கிட்டு இருக்கேன். வந்து திருப்பி கமென்டறேன்.
// பத்திரிகைகளில் என்ன பெயரில் எழுதறார்னு புரியலை! //
ReplyDeleteகோமதி நடராஜன். ஆ.வி ன்னு நினைக்கிறேன். ஹாஸ்ய துணுக்குகள்ளே பாத்த நினைவு!
/யாரோ ரொம்பப் பெரியவர் நல்லா எழுதறார், நாம குறுக்கிட்டு எதுவும் எழுதக் கூடாது என்று நினைச்சால்???? கடைசியிலே பார்த்தால், (முதல்லே இருந்து தான்) இளைஞர்!//
அக்கிரமமா இல்லே? என்னையும் இப்படித்தான் நினைச்சீங்க! நாங்க எல்லாருமே இளைஞர்களா போயிட்டோம்! :-)))))))))))))))
ஜீவாவுக்கு லிங்க் தராம விட்டுட்டீங்க. ம்ம்ம் அவர் இன்னும் சங்கீத சீசன் முடிஞ்சு வரலே! :-))
ஜீவாவுக்குக் கொடுத்திருக்கேனே?? அவருக்கு இப்போ ராத்திரியாச்சே, காலம்பர பார்ப்பார்.
ReplyDeleteசாரி, ஜீவாவோட பதிவுக்கு லிங்க் இல்லைன்னு நினைச்சேன், இருக்கு.
ReplyDeleteகாலை வந்தாச்சு, பார்த்துட்டேன் கீதாம்மா,
ReplyDeleteபட்டாம்பூச்சி விருதுக்கு நன்றி!
Baton-ஐ கொடுத்துட்டீங்க, அதை இன்னும் மூவரிடம் கொடுக்க நேரம் இருக்குமா, தெரியலை, பார்ப்போம்!
கபீரன்பன் ஐயாவுக்கும், நாகை சிவாவுக்கும் என் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஉங்களுக்கும் உங்களிடம் இருந்து விருதை பெற்ற அனைவருக்கும் என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)
ReplyDeleteதிவா, எத்தனை பேரு இருக்காங்க, ஆனால் மூன்றே பேரைத் தேர்ந்தெடுக்கிற கஷ்டத்தைக் கொடுத்துட்டீங்களே?
ReplyDelete//அக்கிரமமா இல்லே? என்னையும் இப்படித்தான் நினைச்சீங்க! நாங்க எல்லாருமே இளைஞர்களா போயிட்டோம்! :-)))))))))))))))//
இல்லையே, ஜீவா, அவரை கபீரன்பன் ஐயானு கூப்பிட ஆரம்பிச்சதுமே புரிஞ்சது அவர் இளைஞர்னு~ :P:P:P:P:P சரியா ரெங்க திவாத் தாத்தா???
நன்றி ஜீவா, உண்மையிலேயே மூன்று பேரைத் தேர்ந்தெடுப்பது சிரமம் தான். :(
ReplyDeleteநன்றி கோபி. ரொம்ப ரொம்ப நன்றி.
ReplyDeleteவிஜி, இன்னிக்கு முயன்றேன் முடியலை, இணையம் ஒத்துழைக்கலை, பார்க்கலாம் பின்னர்! நன்றிம்மா.
விருதுக்கு நன்றி!
ReplyDeleteவேற என்னத்த சொல்ல.....
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
சகோதரி கீதாசாம்பசிவம்,
ReplyDeleteவணக்கம்.நீங்களெல்லாம் ஆய்ந்தறியும்
திறமையுடன் எழுத்தாற்றல் கொண்டவர்கள்
என்பதை உங்களின்வலைகளை நுனிப் புல்லாக
மேய்ந்ததில் தெரிந்து கொண்டேன்.
எனக்குப் போய் பட்டாம்பூச்சி விருது என்பதை
நம்ப முடியவில்லை.ஜீவாவுக்கும் மற்ற அன்பர்கள்
அனைவருக்கும்,என்சிரம் தாழ்ந்த நன்றி!
அன்புடன்,
தங்கமணி.
@புலி, வாங்க, குகையிலே இருந்து வெளியே வந்தாச்சா??
ReplyDeleteசீக்கிரம் போடுங்க உங்களோட தேர்வை!
@தங்கமணி அம்மா, ஆய்ந்தறியும் எழுத்தாற்றல் என்றெல்லாம் இல்லை. புத்தகங்களைப் படிச்சுட்டு நான் எழுதறதுக்கும், உங்கள் உள்ளத்தில் இருந்து ஆத்மார்த்தமாய் வரும் கவிதைகளுக்கும் வித்தியாசம் இருக்கு இல்லையா?? ஆத்மார்த்தமாய்த் தானாக அருவி போல் கொட்டும் உங்கள் கவிதைகளுக்கு முன்னர் நான் எம்மாத்திரம்? எனினும் உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. ஆசிகளையும் வேண்டுகின்றேன்.
டாக்டர் விஜய், பத்மஸ்ரீ விவேக் வரிசையில் நானும்....(உங்க புண்ணியத்தில்)
ReplyDeletehttp://tsivaram.blogspot.com/2009/02/blog-post_24.html