எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, March 06, 2009

எப்படியாவது போஸ்ட் போடுவோமில்லை?

எங்க வீட்டிலே எலக்ட்ரானிக் பொருட்களோ, இல்லை எலக்ட்ரிகல் பொருட்களோ தொந்திரவு கொடுத்தால் மெகானிக் வரும்போது அது என்னமோ தெரியலை, சொல்லி வச்சாப்போல ஒழுங்கா வேலை செய்ய ஆரம்பிக்கும். சளபுள, சளபுள னு பேசிட்டு இருக்கிற குழந்தைங்க, டீச்சர்(துளசி இல்லை) தலையைக் கண்டதும் அமைதியா ஆகிறாப்போல. தண்ணீர் இறைக்கும் பம்ப்செட் ஒரே தகராறு. ஆனால் மெகானிக் தொட்டதுமே ஒழுங்கா சத்தம் கொடுத்துட்டு ஓடும். எடுக்காத குழல் விளக்குகள் பளிச்சுனு எரியும், (மின்சாரம் இருந்தால் தான், அதிலே சந்தேகம் இல்லை)அது போல ஒரே சத்தம் போட்டுட்டு இருந்த ஏசி, மெக்கானிக் வந்தால் இருக்கிற இடமே தெரியாம, ஓடுது. இந்த கணினியும் அப்படித் தான் நிபுணரை வரச் சொல்லி இருக்கிறது தெரிஞ்சோ என்னமோ, இன்னிக்குக் கொஞ்சம் ஒழுங்கா இருக்கு. இந்தக் கிருஷ்ணமூர்த்தி வேறே, இன்னுமா யுத்தம் முடியலைனு கேட்டுட்டு இருக்கார். போஸ்ட் இரண்டு முறை போட்டும் இரண்டு முறையும் பப்ளிஷ் ஆகலை. அஹோபிலம் போஸ்ட் மட்டுமே வந்திருக்கு. இன்னிக்கு மறுபடி முயல்கின்றேன். நல்லவேளையா, எழுதி வச்சது நல்லதாப் போச்சு, இல்லைனா திரும்ப அது வேறே ஒரு அதிகப் படி வேலை. சாயந்திரத்துக்குள்ளே கட்டாயமாய்ப் போட்டுடறேன்.

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், என்று கண்ணன் பத்தின போஸ்ட் அநேகமாய்ப் பெண்களுக்கே பிடிக்குதுனு நினைக்கிறேன். ஒவ்வொருத்தரும் அவங்க குழந்தையை வளர்த்ததோட ஒப்பிட்டுப் பார்த்து சந்தோஷம் கொள்கின்றார்கள். பல பெண்களும் தனி மெயிலில் தொடர்பு கொண்டு தங்கள் கருத்துகளைத் தெரிவித்தமைக்கு நன்றி. இன்று மாலைக்குள் துவாரகையின் கதை போஸ்ட் போட்டுடறேன்.

8 comments:

  1. என்ன கொடுமை! ஏன் இத்தனை பெரிய போஸ்ட் உண்மை தமிழனாட்டமா:-))

    ReplyDelete
  2. //பல பெண்களும் தனி மெயிலில் தொடர்பு கொண்டு தங்கள் கருத்துகளைத் தெரிவித்தமைக்கு நன்றி//

    கொஞ்சம் விட்டா போதுமே,

    சப்பானல இருந்து சாக்கிசான் மெயில் பண்ணாக!
    அமெரிக்கவுல இருந்து மைக்கேல் சாக்சன் மெயில் பண்ணாகன்னு அள்ளீ வுடுவீங்களே!

    ஏதோ அஹோபிலம் பதிவுகள் நல்லா போகுதுன்னு நாங்களும் ஒத்துக்கறோம். ஆனா இதெல்லாம் ரொம்பவே ஒவர். :)))

    ReplyDelete
  3. /இந்தக் கிருஷ்ணமூர்த்தி வேறே, இன்னுமா யுத்தம் முடியலைனு கேட்டுட்டு இருக்கார்./

    யுத்தம் முடிஞ்சதுன்னா, சமாதானமா, அமைதியா இல்ல இருக்க வேண்டும். காணோமே?
    எப்படியாவது ஒரு post போட்டுருவோமில்லன்னு இன்னொன்னுக்குத் தயாராகிற சன்னத்தம் மாதிரியில்ல இருக்குது..?!

    ReplyDelete
  4. ஆஹா, ஒரு அம்பிதான் உங்களுடன் வம்பிழுத்துக் கொண்டிருக்காருன்னு நினைச்சேன், ஒரு கோஷ்டியே இருக்கும் போல... :-)

    ReplyDelete
  5. அபி அப்பா, படத்திலே கண்ணன் தான் தெரியறான், நடராஜ் தெரியலை! :((((((
    இன்னும் பெரிசாப் போஸ்ட் போடலாமா? பரவாயில்லையா???

    ReplyDelete
  6. //சப்பானல இருந்து சாக்கிசான் மெயில் பண்ணாக!
    அமெரிக்கவுல இருந்து மைக்கேல் சாக்சன் மெயில் பண்ணாகன்னு அள்ளீ வுடுவீங்களே!//

    க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அம்பி, புகை விடாதீங்க ஓவரா!!!! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  7. //எப்படியாவது ஒரு post போட்டுருவோமில்லன்னு இன்னொன்னுக்குத் தயாராகிற சன்னத்தம் மாதிரியில்ல இருக்குது..?!//

    நறநறநறநறநற! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :P:P

    ReplyDelete
  8. //ஆஹா, ஒரு அம்பிதான் உங்களுடன் வம்பிழுத்துக் கொண்டிருக்காருன்னு நினைச்சேன், ஒரு கோஷ்டியே இருக்கும் போல... :-)//

    எனக்கு இப்போ ஒரு உண்மை தெரிஞ்சாகணும்!! \

    மெளலி, நீங்களும் அந்த கோஷ்டியில் இல்லைதானே?? :P:P:P

    ReplyDelete