எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, March 09, 2009

ஆனந்தம் பொங்கும் விளம்பரங்கள்!

அதியமான் எழுதி இருக்கும் அற்புதமான கவிதை டெம்ப்ளேட்டைப் பார்த்ததும் கண்ணிலே தண்ணி வந்துடுச்சு. ஏற்கெனவே கவிநயாவின் கவிதையைப் படிச்சுட்டுக் கண்ணிலே தண்ணி வந்தது. தேனொழுகும் என்ற வார்த்தைகளில் மனம் மட்டுமில்லாமல் கண்ணும் கலங்க அங்கே போனால் ஒரு அருவியே வந்தது. அருமையான டெம்ப்ளேட். அவர் மனசை உணர்த்த இதைவிடச் சிறந்த ஒன்றில்லை. வாழ்த்துகளும், ஆசிகளும் அர்ச்சனாவுக்கும், அவங்க அப்பாவுக்கும்.

இன்று புதிதாய் வந்திருக்கும் ஏர்டெல் விளம்பரமும் அழகிய கவிதை. நான் இன்னிக்குத் தான் பார்த்தேன். ஏற்கெனவே வந்தாச்சா தெரியலை. அப்பாவுக்கு செல்லில் பேசக் குழந்தை போகின்றான் ஒருத்தருக்கும் தெரியாமல். தாத்தா தூங்க, அம்மா சமைக்க, மொட்டை மாடிக்குப் போய்த் தனியாய் உட்கார்ந்து அப்பாவோடு பேசறான். விளையாட்டுக் கைபேசியில். அந்தப் பையனின் முகபாவங்கள் அற்புதம். "எனக்கு எப்போ லீவு வரும்"னு கேட்கிற அதே பையன். மெல்லிய சிரிப்பும், குழப்பமும் முகத்தில் கொஞ்ச வெட்கம் மீதூற அம்மாவைப் பார்க்கும்போது மனதை அள்ளுகின்றது. ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை செய்யுதோ இல்லையோ விளம்பரங்கள் அருமை. ஆனந்தம் பொங்கும் ப்ரூ விளம்பரங்களைப் போல. காலையிலே இருந்தே அந்த ஏர்டெல் விளம்பரப் பையன் தான் மனதில் நிற்கின்றான்.

13 comments:

  1. கிட்டத்தட்ட 3 வாரமா இந்தப் பையனைப்பார்த்து நாங்கள் சந்தோஷப்பட்டுக் கொண்டிருகிறோம் கீதா.
    அதே போல அம்மாவுக்காக மழைத்தண்ணீர் கொண்டு வருவதும்.
    விளம்பரங்கள் உயரத்தைத் தொட்டுக் கொண்டிருக்கின்றன.

    ReplyDelete
  2. தலைவிஜி,
    வணக்கம். வந்ததும் இப்போ தான் இந்த பக்கம் வழி தெரிஞ்சுச்சான்னு கேள்வி கேப்பீங்கன்னும் எனக்கு தெரியும். ஆன்மீகப் பதிவுன்னா பாத்துட்டு அப்படியே அப்ஸ்காண்ட் ஆயிடுவேன் ஆனா அதியமானுக்கும் அவர் மகளுக்கும் ஆசிர்வாதம் இல்லை பண்ணிருக்கீங்க? எப்படி வந்து வாங்கிக்காம போறது? என்ன சொல்றதுன்னு தெரியலை. உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.

    அந்த ஏர்டெல் விளம்பரம் ரொம்ப அருமையா இருக்கும். சமீப காலத்தில் என் மனதை தொட்ட விளம்பரம் அது.

    ReplyDelete
  3. நான் கூட பார்த்தேன். நல்லா இருந்தது.

    ReplyDelete
  4. பையன் அம்மாவ பத்தி புகார் பண்ணறான்னு நினைச்சேனே?

    இன்னும் என் பேவரைட் குழந்தையோட முதல் ஸ்கூல் நாள்தான்.(icici bank)

    ReplyDelete
  5. அப்படியா வல்லி, நான் எப்போவோ தான் தொலைக்காட்சியிலே உட்காருகிறேன். காலம்பர வேளுக்குடிக்கு அப்புறம் வரும் நிகழ்ச்சியோட சரி, நான் பார்க்கிறது. அதான் தெரியலை!

    ReplyDelete
  6. வாங்க அதியமான், பெரியவங்க நீங்க இந்தப் பக்கம் வந்ததே சந்தோஷம், :P:P:P:P எங்கேருந்து குறை சொல்றது?? சில குறிப்பிட்ட விளம்பரங்கள் மனதைத் தொட்டு உலுக்கவும் செய்யும்.

    ReplyDelete
  7. வாங்க திவா, எனக்கும் அது பிடிச்சதுதான் முன்னே. இப்போ ப்ரூ விளம்பரம், ரேமண்ட்ஸ், அப்புறம் லேட்டஸ்ட் ஏர்டெல். ஒரு தரம் பாருங்க, அப்புறம் உங்களுக்கும் பிடிச்சுடும். :)))))))))

    ReplyDelete
  8. உண்மைதான் கீதாம்மா! ஏர்டெல் விளம்பரம் சூப்பர். அதே போல் யானை ஒன்று தன் குட்டியை சிறுவர்களோடு விளையாட அழைத்து வரும் விளம்பரம் கண்டு அசந்துவிட்டேன். நல்ல கான்செப்ட்டுக்காக விளம்பரதாரர்கள் நல்லாவே யோசிக்கிறர்கள்.

    இருப்பதிலேயே சிம்பிளான, சில்லியான விளம்பரம், 'ஆனந்த் பனியன்கள்!!!'

    ReplyDelete
  9. கண்ணன் ஊருக்கு போய் வந்ததுல இருந்து குட்டி பிள்ளைங்கள பார்த்தா ரொம்பவே கண்ல தண்ணி வருது போல. இல்லம்மா? :)

    நிறைய கவித்துவமான விளம்பரங்கள் அழகா இருக்கு. நானானி அம்மா சொன்ன ஆனைக்குட்டி விளம்பரமும் எனக்கு பிடிக்கும்!

    ReplyDelete
  10. வாங்க நானானி, ஆனைக்குட்டி விளம்பரம் எனக்கும் பிடிச்சதே, ஆனால் ரொம்ப நாளா வருதே, அதான் சொல்லலை,

    வாங்க கவிநயா, பல விளம்பரங்கள் அருமையான கவிதை தான், முன்னர் "தாரா" எண்ணெய்க்கு ஒரு விளம்பரம் வரும். ஒரு பையன் வீட்டிலே கோவிச்சுண்டு போவான், வீட்டிலே ஜிலேபி பண்ணும் செய்தி வீட்டு வேலைக்காரர் மூலம் தெரிந்து கொண்டு திரும்புவான். "ஜெலேபி" என்னும் அவன் குரல் இன்னும் காதில் ஒலிக்கிறது. இப்போ பெரிய ஆளாக ஆகி இருப்பார், அந்தப் பையர்! :))))))))

    டிஸ்கி: எனக்கும் ஜெலேபி ரொம்பப் பிடிச்சது!

    ReplyDelete
  11. மன்னிக்கவும், ரொம்பப் பிடிக்கும்னு எழுத நினைச்சு, பிடிச்சதுனு வந்துடுச்சு. :)))) அப்புறமா ஜிலேபி தராமப் போயிடப் போறீங்க! :P

    ReplyDelete
  12. FIAT காரு விளம்பரத்துக்கு, ஒரு குட்டிப் பையன் வருவானே அவங்க அப்பா கூட.. பார்த்திருக்கீங்களா??? கலக்கிருப்பான் :-)

    ReplyDelete
  13. வாங்க உழவரே, தமிழ், ஆங்கிலம் இரண்டிலேயும் போட்டுட்டு இருக்கீங்க, என்ன காரணம்??

    கார் விளம்பரம் தானே? பார்த்திருக்கேன். என்றாலும் இது மனதைக் கவர்ந்தது என்பதை விட மனதைத் தொட்டது. கார் விளம்பரம் கவர்ந்தது. இரண்டுக்கும் வித்தியாசம் உண்டே? :))))))

    ReplyDelete