உஷத் காலம் எனப்படுவது விடிகாலை மட்டுமில்லாமல், சூரிய அஸ்தமனத்தின் பின்னே வரும் காலத்தையும் குறிக்கும் எனச் சொல்லுவதுண்டு. காலை, மாலை ஆகிய நேரங்கள் ஆரம்பிக்கும், பகல் ஆரம்பிக்கும், இரவு ஆரம்பிக்கும் நேரத்தின் தேவியை உஷா எனச் சொல்லுவார்கள். இந்தப் பிரதேசம் இந்தியாவின் மேற்குக் கோடியில் இருப்பதால் சூரியன் அஸ்தமிக்கும் இடம், அல்லது சூரியன் இங்கே அஸ்தமிக்கின்றான் என்றாலும் வேறோர் இடத்தில் அதே சமயம் உதயம் ஆகிக் கொண்டிருப்பதால், அவன் சுற்றுவதைக் குறிக்கும் வண்ணமும் ஓகா எனப் பட்டது. தற்போது மதுரையில் இருந்து ஓகா வரையிலும் ரெயில் செல்லுகின்றது. இந்தப் பிரதேசத்துக்கே ஓகா மண்டலம் எனப் பெயர் உண்டு. ஸ்ரீகிருஷ்ணரின் பேரன் ஆன அநிருத்தனின் மனைவியின் பெயரும் உஷா, அதனாலும் இந்தப் பெயர் வழங்கப் பட்டிருக்கலாம்.
துவாரகை எவ்வாறு நிர்மாணிக்கப் பட்டது என்பதை இன்னும் சில நாட்களில் கண்ணன் வருவானில் பார்க்கப் போகின்றோம், என்றாலும், இங்கே கொஞ்சம் சுருக்கமாய். யாதவ குலத்தைக் காக்க வேண்டிக் கண்ணன், அனைத்து யாதவர்களையும் ஒன்று திரட்டி, மதுராவில் இருந்து அவர்களை மேற்கே கொண்டு வந்து சேர்த்தான். வழியில் இறந்தவர்கள் பலர். என்றாலும் அனைத்து யாதவர்களும் தங்கள் கால்நடைச் செல்வங்களுடன், மட்டுமின்றி தங்களுக்குச் சொந்தமான அனைத்துப் பொருட்களுடனும், தங்கள் வீடு, வாசல்களை மதுராவில் காலியாக விட்டு விட்டு இங்கே வந்து சேர்ந்தனர். கருடனின் ஆலோசனையின் பேரில் இந்த நகரம் இங்கே இருந்த அசுரர்களைக் கொன்று விட்டு நிர்மாணிக்கப் பட்டதாய்ச் சொல்கின்றனர்.
விஸ்வகர்மா நகரை நிர்மாணித்ததாயும் சொல்லுகின்றனர். மஹாபாரதத்திலே, விஷ்ணு புராணத்திலே, பாகவதத்திலே என அனைத்திலும் இந்த நகரின் நிர்மாணத்தைப் பற்றிச் சொல்லப் பட்டிருக்கின்றது.
ஸ்ரீமத் பாகவதத்தில் ஸ்ரீகிருஷ்ணர் சமுத்திரத்தை ஒதுங்கிப் போகச் சொல்லிக் கேட்டுத் தியானம் செய்தது பற்றிக் குறிப்பிடப் பட்டுள்ளது. "ஏ, சமுத்திர ராஜனே, நீ என்னிடம் அன்பு பூண்டிருப்பதும், மரியாதை காட்டுவதும் உண்மையானல், பனிரண்டு யோஜனை தூரம் இங்கிருந்து நீ விலகிச் செல்வாயாக! நீ இடம் கொடுத்தாயானால், என்னுடைய மக்களுக்கும், எங்கள் சைன்யங்களுக்கும், கால்நடைச் செல்வங்களுக்கும் மிக்க உதவியாய் இருக்கும். மேலும் இங்கே அழகிய மாடங்களும், கோயில்களும், உத்தியானவனங்களும் எடுக்கப் படும்." என்று வேண்டிக் கொள்ள, வாயுவின் உதவியோடு சமுத்திர ராஜன் விலகிச் செல்ல அங்கே ஒரு அழகான நகரம் விஸ்வகர்மாவால் நிர்மாணிக்கப் பட்டது. துவாரகா என்ற பெயர் ஏன் ஏற்பட்டதெனில், துவார்= வாயில், கதவு, என அர்த்தம் கொள்ளலாம். இந்த இடத்தில் வாயில் என்பதே பொருந்துகின்றது. கா= என்றால் பிரம்மா எனப் பொருள். பிரம்மனைக் காணும் வாயில் என்னும் அர்த்தத்தில் இந்தப் பெயர் அமைக்கப் பட்டதாய்ச் சொல்கின்றனர். இது லெளகீக விளக்கமாய் இருந்தாலும் ஆன்மீகச் சான்றோர் நம் கர்மங்களைத் தொலைத்துவிட்டு நமக்கு முக்தியைக் கொடுக்கும் வாயில் இது எனச் சொல்கின்றனர். அதனாலேயே துவாரகையை முக்திதாம்களில் முக்கியமான ஒன்றாய்ச் சொல்லுகின்றனர்.
ஸ்கந்தபுராணத்தில் சனகாதி முனிவர்கள் இங்கே வந்து விஷ்ணுவைக் குறித்துத் தவம் இருந்ததாயும், அந்தத் தவத்தின் பயனாலேயே இந்தப் பெயர் ஏற்பட்டதெனவும் சொல்லுகின்றது. மேலும் மரீசி, அத்ரி, ஆங்கிரஸர், புலஹர், க்ருது போன்ற முனிவர்கள் இங்கே இருந்து தங்கள் தவங்களைச் செய்துள்ளனர். இந்த இடம் பஞ்சநதி என்ற பெயரில் வழங்கப் படுகின்றது. கோமதி நதி இங்கே ஓடுகின்றது.சனகாதி முனிவர்களால் சித்தேஷ்வர் மஹாதேவரும், ஸ்ரீகிருஷ்ணரால் மஹாபத்ரகாளி சக்தி பீடத்திலும் வழிபடப் பட்டுள்ளது. சமுத்திரக் கரையில் உள்ள இந்த நகரம் காலதேச வர்த்தமானங்களாலும், பல்வேறு விதமான இயற்கை மாற்றங்களாலும் மாற்றத்துக்கு உட்பட்டிருந்தாலும் ஸ்ரீகிருஷ்ணர் இங்கே இருந்தார் என்பதற்கான சான்றுகள் சமுத்திரத்தை அகழ்வாராய்ச்சி செய்து கொண்டு வருவதன் மூலம் நிரூபணம் ஆகி வருகின்றது.
சமுத்திரதை அகழ்ந்து கண்டுபிடித்தவை பற்றியும் கொஞ்சம் எழுதுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்.
ReplyDeleteஅதைத் தனியா எழுதலாம்னு நினைக்கிறேன் மெளலி, பார்க்கலாம்.
ReplyDeleteசிலபிழைகள் இருக்கிறதே, அம்மா:
ReplyDeleteஉஷத்காலம் என்பது வைகறைப் பொழுதை மட்டுமே குறிக்கும். குறிப்பாக சூரிய உதயத்திற்கு முந்தின ஐந்து நாழிகைப் பொழுதைகே குறிக்கும். உஷை சூரியனுடைய மனைவியாகவும் போற்றப்படுகிறாள். இரவும் பொழுது புலரும் நேரத்தையும், மாலையும் இரவும் சந்திக்கும் நேரத்தையும் சந்த்யா என்றே குறிக்கப் படுகிறாள். ப்ராத சந்த்யா, சாயம் சந்த்யா என்றே வேதங்களில் குறிப்பிடப் பட்டிருக்கிறது.
பாணாசுரனின் மகள் உஷைக்கும், வைகறைப் பொழுதைக் குறிக்கும் உஷைக்கும் பெயரோன்றைத் தவிர வேறு எந்த சம்பந்தமும் இல்லை.
//சிலபிழைகள் இருக்கிறதே, அம்மா://
ReplyDeleteஎழுதும்போதே நினைச்சேன் சார். ஆனால் சம்ஸ்கிருத அகராதியில் உஷஸ் என்பதற்கு இந்த அர்த்தம் கொடுத்திருக்கவே தைரியமாய்ப் போட்டேன். எதுக்கும் கேட்டுடறேன், அறிஞர்களையும். சூரியன் அங்கே தன்னுடைய பரிவர்த்தனையைச் செய்யும் இடம் என அந்த ஊர்க்காரங்க சொல்லியே கேட்டிருக்கேன், குஜராத்தில் வசிக்கும் நாட்களில்.
उष्स्=dawn, twilight(morning), deity that presides over morning and evening in twilight hours. I took the last one.I may be wrong.
//பாணாசுரனின் மகள் உஷைக்கும்//
இது தெரியும், ஆனால் பெயர்க்காரணம் இதுவாயும் இருக்கலாம் என்பதே! நன்றி சார், கவனத்துடன் படிச்சுத் தவறையும் சுட்டுவதற்கு. எனக்கு விடை கிடைச்சதும், திருத்திடறேன். நன்றி மீண்டும்.
துவாரகாவாசியைப் பற்றி இப்பப் படிக்க ஆனந்தமா இருக்கு.
ReplyDeleteமௌலி சொல்லுகிறார்ப்போல் அகழ்வாராய்ச்சியைப் பற்றியும் எழுதுங்கள். மகளிர் தின வாழ்த்துக்கள் கீதா.
கீதா, அப்படியே இந்த "உஷா" வையும் பார்த்திருக்கலாம். நாம் சந்திக்க முடியாதது வருத்தம்தான்.
ReplyDeleteசோமநாத் , ஜெய் சோமநாத் படித்ததால் ஒரு மோகம் என்றால், துவாரகாவின் பழமை என்ன
அருமை! இன்னும் ஒரு முறை நிதானமாய் நாலு நாட்கள் இருந்துப் பார்க்க வேண்டும் என்று
திட்டம் போட்டு இருக்கிறேன்.
கண்ணன் எப்ப வருவான்?
ReplyDeleteஅகழ்வாராய்ச்சி பற்றிய செய்திகள் சரியாக் கிடைக்கலை வல்லி, உறுதியான குறிப்புகள் கிடைத்தால் ஒழிய எழுத முடியாது.
ReplyDeleteஉஷா, என்னோட சூரத் பயணம் உறுதியா இல்லை, கடைசிவரையிலும் நான் வரலைனே சொல்லிட்டு இருந்தேன். அப்புறம் ரொம்பவே சொன்னதால் சூரத் பயணம் நேர்ந்தது. அதான் உங்களுக்கு மெயில் கொடுத்துத் தொலைபேசியதோடு போச்சு. முன் கூட்டிய திட்டம் என்றால் இங்கே இருந்து கிளம்பும்போதே உங்களுக்குச் செய்தி கொடுத்திருப்பேன். :(((((((
ReplyDeleteதுவாரகாவின் பழமை அருமை! தொடர வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாங்க மாதேவி, எந்த நாட்டுக்கு மாதேவினு சொல்லவே இல்லை! :))))) போகட்டும், முதல் வரவுக்கும், கருத்துக்கும் நன்றிங்க!
ReplyDelete