என்னடா இதுனு நினைக்காதீங்க. கொஞ்ச நாட்களாவே, மாசங்களா?? ஆமாம், கிட்டத் தட்ட ஒரு வருஷமாக் காணவே காணோம். வரவே இல்லை. அப்பு வந்திருந்தப்போ அதுக்குக் காட்டணுமேனு நினைச்சேன். ஒரே ஒருநாள் வந்ததுதான். அப்புவுக்குக் காட்டினேன். அதுக்கப்புறமா வரவே இல்லை. சரிதான், திருந்திடுச்சு, ஒழுங்காக் கணவனோட குடித்தனம் பண்ணறதுனு நினைச்சேன். கொஞ்சநாட்கள் முன்னாலே பார்த்தா ஒரே சண்டை, சச்சரவு, வீட்டில் உட்காரமுடியலை, ராத்திரி தூங்க முடியலை, அவ்வளவு சத்தம், சண்டை,கத்தல். ரொம்பக்கவலையாப் போச்சு. ஆனால் வந்திருக்கிறது யாருனும் தெரியலை. சத்தம் மட்டும் எங்கிருந்தோ கேட்டுட்டு இருந்தது.
இன்னிக்குப் பாருங்க காலம்பர எழுந்துக்கறச்சேயே மனசுக்கு சந்தோஷமா இருந்தது. என்னோட கால்வலி, அதனால் விளைந்த வயித்து வலி எல்லாத்தையும் மறக்கடிக்கறாப்போல் பக்ஷிகளின் கூச்சல், ரொம்ப சந்தோஷமா. அதிலும் அணில் இருக்கே வாலைத் தூக்கிண்டு தென்னை மரத்திலே நட்ட நடுவிலே உட்கார்ந்துண்டு, வெடுக், வெடுக், வெடுக் னு கத்திண்டு இருந்தது. ஒரு படம் எடுத்துடலாம்னு நினைச்சேன். காமிராவை எடுத்துண்டு வரதுக்குள்ளே ஓடிப் போயிருக்கு. என்னடானு பார்த்தா எல்லாப் பறவைகளும் மறுபடி கூச்சல். இம்முறை பயம் கலந்த கூச்சல், குழப்பம். அடப் பாவமே, எதுக்கானும் அடிபட்டிருக்கோ, நேத்திக்குக் காக்காய்க்குவச்ச சாதத்தைச் சாப்பிட்டுட்டு இருந்த குயில்குஞ்சை காக்காயெல்லாம் சேர்ந்து விரட்டிட்டு இருந்ததே?? இப்போ அதானா??? இருக்காதே?? காலம்பர ஏழு மணி தான், இன்னும் சமைக்கவே ஆரம்பிக்கலையே???
அதுக்குள்ளே கொல்லைக்கிணற்றடியிலே இருந்து கூப்பாடு. போய்ப்பார்த்தா, கண்ணில் உசிரை வச்சிண்டு, வயிற்றிலே சுமையோடு நின்னுட்டு இருக்கு. சாப்பிட்டு எத்தனை நாளாச்சோ தெரியலை! சாப்பாடு வேணுமாம். இந்த மாதிரி அநியாயமும் உண்டா? போனமுறை பிரசவம் பார்க்கும்போதே இதான் கடைசினு சொல்லி அனுப்பி இருந்தேன். சரினு ஒரு வருஷம் தொல்லை இல்லையேனு பார்த்தா, இப்போ இப்படி எனக்கு உடம்பு முடியாதப்போ வந்து நிக்குதே? இனிமே இதுக்கு நான் பிரசவம் பார்த்து, பத்தியம் வடிச்சுப் போட்டு, மருந்து கிளறிக் கொடுத்து!!!!!!! என்னத்தைச் சொல்றது போங்க! அப்புறமாக் குளிச்சுச் சமைச்சுச் சாப்பாடு போட்டேன்னு வச்சுக்குங்க! அப்புறமும் போகலை, காலைக்காலைச் சுத்துது. இத்தனை நாள் எங்கே போச்சு இந்தப் பாசமும் உருகலும், தெரியலை. அங்கேயே போய்க்கவேண்டியது தானே! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
யாருனு கண்டு பிடிச்சு எழுதற சிஷ்ய(கே)கோடிங்க பதிவிலே இலவசமா என் சார்பிலே யார் வேணாலும் பின்னூட்டம் போடலாம்.
ungaloda pet doga????
ReplyDelete-LK
http://lksthoughts.blogspot.com/
2009/12/blog-post_24.html
Good one
ReplyDeleteஉங்க வீட்டு நாய்/பூனை
ReplyDeleteபூனையா? நாயா? பூனையாதான் இருக்கணும்.
ReplyDelete//யாருனு கண்டு பிடிச்சு எழுதற சிஷ்ய(கே)கோடிங்க பதிவிலே இலவசமா என் சார்பிலே யார் வேணாலும் பின்னூட்டம் போடலாம்.//
இது என்ன கடை தேங்காய எடுத்து .....கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!
Vera Edhu... Dog-dhan
ReplyDeletegud
ReplyDeleteregards,
ram
www.hayyram.blogspot.com
வாங்க எல்கே, உங்க வலைப்பக்கத்தைப் பார்த்தேன், பின்னூட்டம் கொடுக்கறதுக்குள்ளே ஆற்காட்டார் தயவு அதிகமாயிடுச்சு! :P இன்னிக்குக் கட்டாயம்! :))))))))
ReplyDeleteஅப்புறம் செல்லமாக நாய் வளர்த்தோம், ஆனால் இப்போ இல்லை! :(
ReplyDeleteவாங்க புதுகை, மொக்கைக்கே ஆதரவுங்கறீங்க??
ReplyDeleteநாய் இல்லைங்க பூனையார் தான்! :D
@திவா, கரெக்டா சொல்லிட்டீங்க, பூனையார் தான்!
ReplyDelete//இது என்ன கடை தேங்காய எடுத்து .....கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!//
பின்னே?? தலைவினா ஆயிரம் வேலை இருக்காது, மேலே பாருங்க எல்கேக்கு பதில் சொல்லி இருக்கேன், அந்தப் பிரச்னை வேறே, எல்லா இடத்துக்கும் தலைவி வர முடியுமா என்ன?? :P:P:P:P:P
வாங்க பி என் எஸ், எங்க அப்பாவோட வேலை பார்த்தான் P.N. Subramaniam னு ஒரு ஆங்கில ஆசிரியர், அவர் நினைப்பு தான் வந்தது! :D முதல் வரவுக்கும் கருத்துக்கும் நன்றிங்க
ReplyDeleteவாங்க ஹேராம், முதல் வரவுக்கும், கருத்துக்கும் நன்றிங்க.
ReplyDelete//இத்தனை நாள் எங்கே போச்சு இந்தப் பாசமும் உருகலும், தெரியலை. அங்கேயே போய்க்கவேண்டியது தானே!//
ReplyDeleteநீங்க எம்புட்டு நல்லவுங்கன்னு அதுக்கும் தெரிஞ்சிருக்கு பாருங்க! :)
@கவிநயா, அதானே! :P:P:P :)))))))))))))))))
ReplyDelete