குரு சாந்தீபனியின் ஆசிரமத்தில்!!!!
கண்ணன் இப்போது தன் குருவான சாந்தீபனிக்கு என ஒதுக்கப்பட்டிருந்த பகுதியின் தோட்டத்தில் தரையில் மான் தோலை விரித்துப் படுத்திருந்தான். அவனுக்குள் எண்ண ஓட்டங்கள். இனி இந்த பிரமசரிய விரதம் முடியும்வரையிலும் அவனுக்கு வேறு நினைவுகள் இருக்க முடியாது. இருக்கக் கூடாது. அவன் நினைவுகள் அனைத்தும் குருவின் கட்டளைகளை நிறைவேற்றுவதிலேயே செல்லவேண்டும். அவர் கற்றுக்கொடுப்பதை நன்கு கற்றுத் தேர்ச்சி பெற்றுச் சிறந்த மாணவனாகப் பெயர் வாங்க வேண்டும். அவனைப் பெற்றவர்களுக்கும், வளர்த்தவர்களுக்கும் அதுவே மனமகிழ்ச்சியைக் கொடுக்கும். பெற்றவர்கள்??? வளர்த்தவர்கள்?? கண்ணன் கண்களில் அவனையும் அறியாமல் கண்ணீர் சுரந்தது. மனம் விம்மித் தணிந்தது. அவன் மறக்கவேண்டியவை என்னவெல்லாம் இருக்கின்றன?? கோவர்தன மலை, விருந்தாவனம், கோகுலம், கோபர்கள், கோபிகள், அங்கே உள்ள பசுக்கள், காளைகள், யமுனை நதி, யமுனைக்கரை, அங்கே நிலவொளியில் “ராஸ்” ஆடிப்பாடிக் கழித்த நாட்கள், எல்லாவற்றுக்கும் மேல் அவனின் மூச்சுக்காற்றோடு தன்மூச்சையும் கொடுத்து அவனுடனேயே ஐக்கியமான ராதை, அவன் வாழ்வின் வசந்தம், ஆநந்தம் (அவளை இனி நான் காணவே முடியாதன்றோ??) தந்தை நந்தகோபர், தாய் யசோதை, (ஆஹா, யசோதா அம்மா என்னை இந்தக் கோலத்தில் பார்த்தால் என்ன சொல்லுவாள்?) யாரையுமே இனி அவனால் நினைத்துப் பார்க்க முடியாது. அவன் கடமைகள் வேறாகிவிட்டன. அவனுக்கு முன்னால் பரந்து விரிந்த ஒரு உலகமும், அதன் மக்களும், அவன் சேவையை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். அவன் வந்து தங்களை உய்விப்பான் என நம்புகின்றனர். இந்த நம்பிக்கையை நான் பொய்யாக்க முடியாது. என் வாழ்நாளில் அவர்களுக்கான சேவைக்கே இனி முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். கண்ணனின் சிந்தனைகள் தொடர்ந்தன.
குரு சாந்தீபனி தன் புதிய சீடர்களான கிருஷ்ணன், பலராமன், உத்தவன் மூவரையும் தன் நம்பிக்கைக்கு உகந்த தன் மருமகன் ஆன ஸ்வேதகேதுவிடம் ஒப்படைத்திருந்தார். ஸ்வேதகேது மிகவும் திறமைசாலி என்று பேசிக்கொண்டார்கள். பார்ப்பதற்கு சாந்தீபனியின் சாயலில் இருந்தாலும் இளைஞன். மிகவும் அறிவாளியாகவும், அனைத்து வேதங்களிலும் நிபுணன் எனவும் பேசிக்கொண்டனர். ஸ்வேதகேதுவின் மாணாக்கர்களில் இவர்கள் மூவரைத் தவிர அவந்தி தேசத்து இரட்டையர்களான விந்தன், அநுவிந்தன் இருவரும் இருந்தனர். ஆனால் யார் விந்தன், யார் அநுவிந்தன் என்பது சற்றுக்குழப்பமாய்த் தான் இருந்தது கண்ணனுக்கு. அவர்களோ தங்களுக்குள்ளேயே பேசிக்கொண்டனர். இரட்டையர்கள் தாங்கள் இருவரும் அரசகுமாரர்கள் என்பதும் கண்ணனோ, பலராமனோ அரசகுமாரர்கள் இல்லை என்பதையும் வெளிப்படையாய்க் காட்டினார்கள் . அவர்களோடு நட்புரிமையோடு கண்ணன் பழக முயன்றால் தங்களைப் போன்ற ராஜகுலத்து மாணாக்கர்கள் இம்மாதிரி இடைச்சிறுவர்களோடு பழகுவது அகெளரவம் என்ற தொனி தொனிக்கப் பேசினார்கள். மேலும் தங்கள் மான் தோலை அணிவதிலும் அலட்சியம் காட்டியதோடு, பிக்ஷைக்குச் செல்லுவதும் மதுராவின் அனைத்து வீடுகளிலும் சென்று பிக்ஷை எடுக்காமல் அரசகுமாரிகளும், பெருந்தனக்காரர்களும் இருக்கும் மாளிகைகளில் மட்டுமே பிக்ஷை எடுத்தார்கள். கண்ணன் அவர்களின் அறியாமையை நினைத்துச் சிரித்துக்கொண்டான்.
கண்ணனோ திரிவக்கரையின் அழைப்பையும் ஏற்று அவள் வீட்டிற்குச் சென்று ஒருநாள் பிக்ஷையை வைத்துக்கொண்டான். அன்போடு அவள் சமைத்து அளித்த எளிய உணவு அவனுக்கு அமுதமாக இனித்தது. அந்த உணவில் அவள் மனதின் அன்பு பரிபூரணமாக வெளிப்பட்டது. என்ன ஒரு கஷ்டம் என்றால் அவன் செல்லும் இடங்களிலெல்லாம் இந்த ருக்மியின் செல்லத் தங்கை ருக்மிணி கண்ணனை எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள். இவள் என்ன நினைக்கிறாள் மனதில்??? யாரிடம் பிக்ஷைக்குப் போனாலும் அந்த வீட்டுப் பெண்மணி பிக்ஷை அளிக்கும்போது இவளும் தன் கைகளால் கண்ணனின் பிக்ஷா பாத்திரத்தில் பிக்ஷை போட்டுவிட்டுக் கண்ணனைப் பார்த்துச் சிரிக்கவேறு செய்கிறாளே. அவள் என்னதான் அழகாய் இருந்தாலும், ஒரு நாட்டின் அரசகுமாரி, இப்படிச் செய்யலாமா?? முற்போக்குத் தேவைதான் ஆனாலும் இது கொஞ்சம் அதிகமோ?? கண்ணனால் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை. ஆனால் அவள் அண்ணன் ருக்மியை எனக்குச் சுத்தமாய்ப் பிடிக்கவில்லை. ஆனால் இந்தப் பெண்ணோ??? அடடா??? எவ்வளவு பெரிய கண்கள்?? கடல் போன்ற கண்களில் மிதக்கும் அந்தக் கருமணிகள்!! ஆஹா அந்தக் கருமணிகள் என்னை எங்கோ இழுத்துச் செல்கின்றனவே?? அவள் கண்களின் கருமணிகள் இங்கேயும், அங்கேயும் அலைந்து திரிந்து என்னைப் பார்த்ததும் நிலைகொண்டுவிடுகின்றன. ஆனால் அந்தக் கண்ணின் கருமணிகள் என்னைக் காந்தம் போல் இழுத்துச் செல்கின்றன. அந்தக் கண்களின் ஆழத்துக்குள் என்னை இழுத்துச் செல்கின்றன. நிலவைப் போல் பிரகாசிக்கும் அவள் முகமண்டலத்தில் என்னை உலாத்துகின்றன. இவள் ராதையைப் போல் இல்லை. ராதை ஒரு காட்டாறு. இவள் மலையிலிருந்து உற்பத்தி ஆகி, ஒரு ஒழுங்கோடும், அழகோடும், நெளிந்து, வளைந்து, செல்லும் இடமெல்லாம் செழிக்கச் செய்துகொண்டு செல்லும் கங்கையைப் போன்றவள், யமுனையைப் போன்றவள். ராதையிடம் ஆநந்தம் பரிபூர்ணமாய்ப் பிரவாஹித்துப் பூச்சிதறல்கள் போல் கொட்டிக்கொண்டே இருக்கும். இவளோ, சூரியனைக் கண்டதும் மலரும் தாமரையைப் போல் என்னைக் கண்டால் மட்டும்……. அடடா?? இது என்ன?? நான் என்ன நினைக்கிறேன்?? நான் இருப்பது சாந்தீபனியின் ஆசிரமத்தில் அல்லவோ?? இந்த மாதிரி எண்ணங்கள் தகாதவை அன்றோ?? ஆஹா, இந்தப் பாவத்தை எப்படித் தொலைக்கப் போகிறேனோ??? இவர்களை நான் தற்சமயத்துக்கு மறந்தே ஆகவேண்டும். அதோ சுதாமா! சுதாமா வருகிறானே!
சுதாமா நல்லதொரு நண்பன். அவனைக் குசேலன் என்றும் அழைக்கின்றார்கள். பிரபாஸ க்ஷேத்திரத்தின் சமுத்திரக்கரையின் ஏதோ ஓர் ஊரிலிருந்து இங்கே வந்துள்ளான். இவன் தந்தை குரு சாந்தீபனியின் கூடப் படித்தவரும், அவரோடு வேதங்கள் கற்றும் கொடுத்துவந்தார். சாமவேதத்தில் நிபுணர் எனப் பேசிக்கொள்கின்றனர். ஸ்வரம் பிசகாமல் பாடுபவர் என்றும் சொல்கின்றனர். ஆனால் அவர் இறந்துவிட்டாராமே?? சுதாமாவிற்கு இன்னும் குருகுலவாசம் முடியவில்லை. எவ்வளவு ஒல்லியாய் இருக்கின்றான்?? மிகவும் பலஹீனமானவனும் கூட. ஆனால் அவன் அறிவோ சுடர் விட்டுப் பிரகாசிக்கின்றதே. வந்த இந்த ஒரு வாரத்தில் எத்தனை விஷயங்களைச் சொல்லிக் கொடுத்துவிட்டான்! இவனுக்கும் சாமவேதத்தை ஸ்வரம் பிசகாமல் பாடத் தெரிகிறது. அர்த்தங்களையும் நன்கு சொல்கின்றான். ம்ம்ம்ம் எனக்கும் இப்படிப் பாடச் சொல்லித் தருகிறேன் என்று வாக்களித்திருக்கிறான். எவ்வளவு இனிமையாக இருக்கிறது கேட்க. நமக்கு எப்படியோ ஒரு மாதிரியாகச் சமாளிக்க முடிகிறது. ஆனால் அண்ணன் பலராமனுக்குத் தான் ரொம்பக் கஷ்டமாய் இருக்கிறது. அதிலும் காடுகளிலும், மேடுகளிலும் இஷ்டத்துக்குச் சுற்றி வந்துவிட்டு இப்போக் கட்டிப் போட்டாற்போல் இருக்கிறது தமையனுக்கு. எல்லாரிடமும் பெரிய குரலில் அதிகாரமாயும், கத்தியும் பேசிப்பழக்கப் பட்ட அண்ணனுக்கு இப்போது பணிவாகவும், விநயமாகவும் பேசச் சிரமமாக உள்ளது. சேச்சே, பலராமன் கண்ணனிடம் அலுத்துக்கொண்டான். யாரிடம் கோபித்துக்கொள்வது?? இங்கே கோபித்துக்கொள்ளக் கூட முடியாது போலிருக்கிறதே! கண்ணனால் சிரிப்பை அடக்கமுடியவில்லை. அண்ணனுக்கு எவ்வகையிலும் தான் உதவுவது எனத் தீர்மானித்துக்கொண்டான் கண்ணன். அண்ணனை விட்டுக் கொடுக்கக் கூடாது.
கண்ணன் தனக்குப் பாடங்கள் நன்கு புரிந்தால் கூட அண்ணனுக்குப் புரியவில்லை எனில் தன்னை வெளிக்காட்டிக்கொள்ளுவதில்லை. தானும் மந்திரங்களையும், சாஸ்திரப் பிரயோகங்களையும் மறந்துவிட்டாற்போல் காட்டிக்கொண்டான். பின்னர் அண்ணனைக் கேட்டுத் திருத்திக்கொள்வது போல் பாவனையும் செய்தான். அண்ணனைக் கேட்கும் சமயம் அவனும் நினைவில் இருத்திக்கொள்வானே! தான் அண்ணனுக்கு உதவியாகச் செய்யும் இதைக் கூட அண்ணன் அறியாதவண்ணமே செய்தான் கண்ணன். ஒவ்வொன்றையும் பலராமனைக் கேட்டே செய்துவந்தான். ஆனால் பலராமன் கண்ணனை உள்ளும், புறமும் அறிந்தே வைத்திருந்தான். தன்னை சந்தோஷப் படுத்தவே கண்ணன் இப்படிச் செய்கிறான் என்பதைப் புரிந்து கொண்டான் பலராமன்.என் அருமைத் தம்பி, என்ன இருந்தாலும் என்னைவிட புத்திசாலிதான், கெட்டிக்காரன் தான் அவனைப்பார்த்து நான் பொறாமை கொள்வேனா என்ன?? இவனை நான் எவ்வளவு நேசிக்கிறேன், போகட்டும், இதுதான் கண்ணனுக்கு மகிழ்வைக் கொடுத்தது என்றால் அப்படியே இருக்கட்டும். நான் கண்ணனுக்கு வழிகாட்டி மாதிரியே எல்லாமும் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.
கண்ணன் சார்பில் விருந்தாவனத்துக்குச் செய்திகள் எடுத்துச் சென்ற உத்தவன் திரும்பிவிட்டான்.
//அண்ணனைக் கேட்டுத் திருத்திக்கொள்வது போல் பாவனையும் செய்தான். அண்ணனைக் கேட்கும் சமயம் அவனும் நினைவில் இருத்திக்கொள்வானே! தான் அண்ணனுக்கு உதவியாகச் செய்யும் இதைக் கூட அண்ணன் அறியாதவண்ணமே செய்தான் கண்ணன். ஒவ்வொன்றையும் பலராமனைக் கேட்டே செய்துவந்தான். ஆனால் பலராமன் கண்ணனை உள்ளும், புறமும் அறிந்தே வைத்திருந்தான்// .....:)
ReplyDeleteutthavn enna seythi kondu vanthann .. kathirukiren
ReplyDeleteநல்ல அண்ணன் அருமை தம்பி!!
ReplyDeleteநன்றாக இருக்கின்றது. ருக்மனியின் காதல் பிச்சைக்கு சென்ற இடமெல்லாம் தொடர்வது புதிய தகவல். குருமாதா தம் மகன் போல பார்த்துக் கொண்டதும்,தன் மகனை நினைத்து சோகத்தில் ஆழ்வதும் இனி வரும் என்று நினைக்கின்றேன். நன்றி அம்மா.
ReplyDeleteஅட, தக்குடு, வாங்க வாங்க, சீச்சீ,அம்பி நினைப்பிலே வாங்கனு சொல்றேன்! :P:P:P ஒண்ணுமே சொல்லாம பெரியவங்க சிரிச்சா எப்புடி?????????
ReplyDeleteவாங்க எல்கே, முன்னாலே இருந்த படம் நல்லா இருந்தது. அதைப் பார்த்துத் தான் சாதுவான பையர்னு சொல்லிட்டிருந்தேன். இந்தப் படம் வில்லர் மாதிரி இல்ல இருக்கு??? க்ர்ர்ர்ர்ர்ர்ர் நல்லாவே இல்லை, போங்க!
ReplyDelete:)))))))))
உத்தவன் வந்து சொல்லும் செய்திக்குக் காத்திருங்க! :D
வாங்க ஜெயஸ்ரீ,நன்றி.
ReplyDeleteவாங்க பித்தனின் வாக்கு, சரியாச் சொல்றீங்க. நீங்க சொல்றதெல்லாமும் வரும் பொறுத்துக்கொள்ளுங்க கொஞ்ச நாள்! தாமதம் தவிர்க்கமுடியவில்லை, என்றாலும் தினம் ஒரு பதிவு போட்டாலும் படிக்கவும் நேரம் வேணுமே! :)))))))
ReplyDelete//வாங்க எல்கே, முன்னாலே இருந்த படம் நல்லா இருந்தது. அதைப் பார்த்துத் தான் சாதுவான பையர்னு சொல்லிட்டிருந்தேன். இந்தப் படம் வில்லர் மாதிரி இல்ல இருக்கு??? க்ர்ர்ர்ர்ர்ர்ர் நல்லாவே இல்லை, போங்க!//
ReplyDeleteஅது எடுத்து 3 வருஷம் ஆச்சு இது புதுசு நாலு மாசம் முன்னாடி எடுத்தேன்
//அது எடுத்து 3 வருஷம் ஆச்சு இது புதுசு நாலு மாசம் முன்னாடி எடுத்தேன்//
ReplyDeleteஅது சரி!! புரிஞ்சுது! அதான் கல்யாணம் ஆகி 3 வருஷம் ஆச்சுனு சொன்னீங்களே, அதிலே இருந்தே புரிஞ்சு போச்சுங்க! :P:P:P:P:P பாவம் உங்க த.ம. :)))))))))))) இப்போ இந்த போட்டோவைப் பார்த்திருந்தா????????????? ஹிஹிஹி, நினைச்சுப் பார்க்கவே ஜாலியா இருக்கே! :))))))))))
//வாங்க எல்கே, முன்னாலே இருந்த படம் நல்லா இருந்தது//
ReplyDeleteLK அண்ணா, நானும் சொல்லனும்னு நினைத்தேன் அதை நம்ப பாட்டி சொல்லிவிட்டார்கள். பழைய போட்டோதான் நன்னா இருந்தது.
//ஒண்ணுமே சொல்லாம பெரியவங்க சிரிச்சா எப்புடி?????????//
ReplyDeleteரசித்த வரிகள் அதான் எதுவுமே சொல்லவில்லை...:)
//LK அண்ணா, நானும் சொல்லனும்னு நினைத்தேன் அதை நம்ப பாட்டி சொல்லிவிட்டார்கள்.//
ReplyDeleteannava.. naan chinna payyan, marriage aiduchunu annalam poda vendam...:))))
@LK, haahahhaahhaaaaaa,,
ReplyDelete@thakkudu, ithu eppadi irukku????:P:P:P:P