சின்ன வயசு நினைவுகளில் இந்த டூ விடறது ஒண்ணு இருக்கே! அப்பா! அதுக்கு நான் எவ்வளவெல்லாம் அழுதிருக்கேன் தெரியுமா?? கூடப் படிக்கும் பொண்ணுங்க, பையர்கள், (ஐந்து வகுப்பு வரைக்கும் இருபாலாரும் சேர்ந்து தான் படிச்சோம்) டூ விட்டுட்டா அன்னிக்குப் பூரா மனசே சரியா இருக்காது. நினைச்சு நினைச்சு துக்கம் பொங்கும். ஏற்கெனவே அப்பாவோட கண்டிப்பாலே அதிகமா நட்பை வெளிக்காட்டிக்க முடியாது. அந்த மாதிரி சமயத்தில் இந்த டூவும் சேர்ந்துடுத்துனா கேட்கவே வேண்டாம். மொத்த உலகமே நமக்கு எதிரா இருக்கிறாப்போல் இருக்கும். வீட்டுக்கு வந்து அம்மா கிட்டே மட்டும் தனியாச் சொல்லிட்டு அழறச்சே, அம்மா, போடி பைத்தியம்! இதுக்கெல்லாமா அழுவா? னு சொல்லுவா. தைரியமா இருக்கணும்னும் சொல்லுவா. ஆனால் அப்போ அதெல்லாம் புரியாது, தெரியாது.டூ விட்டவங்க நம்மளைப் பார்த்து, "டூ, டூ, டுப்பாக்கி, போலீஸ்காரன் பொண்டாட்டி"னு பாட்டு வேறே பாடுவாங்களா! துக்கம் இன்னும் ஜாஸ்தியாகும். ஒரு தரம் தாங்க முடியாம நான்,,"டூ விட்டா விட்டுக்கோ, டா, டா டப்பி, டப்பிக்காரன் டாண்டாட்டி"னு திருப்பிச் சொல்ல, அப்புறம் இது எங்க வீட்டுக் குடும்பப் பாட்டாய் மாறிடுச்சு.(முக்கியமாய் இதை எழுத நினைச்சுட்டு ஆன்லைனிலே எழுதினேனா?? விட்டுப் போயிருக்கு! இப்போத் தான் நினைப்பு வந்தது.)
சும்மா டூ மட்டும் விட்டாலே மனசுக்கு துக்கமா இருக்கும். அதிலும் சிலர் ஆனை மேலே, குதிரை மேலே டூ விடுவாங்க. அப்போ உலகமே வெறுத்துட்டாப்பல ரொம்பவே வேதனையா இருக்கும். அதிலும் மதுரை மீனாக்ஷிக்கு த.பி. சொக்கலால் ராம்சேட் ஒட்டகங்கள் பரிசளிச்சதுக்கு அப்புறம் ஒட்டகத்தின் மேலே கூட டூ விட்டிருக்கோம். பொதுவா நான் யாரோடயும் டூ விடறதில்லை. யாரானும் டூ விட்டால் கூட அவங்களைக் கெஞ்சி, கொஞ்சி சமாதானம் பண்ணிண்டுடுவேன். என்றாலும் சில சமயங்களில் இந்த டூ படுத்தின பாடு இருக்கே மறக்கவே முடியாது. என்னோட டூ விட்டு, பள்ளிப் பருவத்து நினைவுகளையும் , பல நண்பர்களையும், அவங்க விட்ட டூவையும் நினைக்க வைக்கச் செய்த இந்த டூவின் மகத்துவம் சொல்லி முடியாது.
வலை உலக நண்பர்கள் அனைவரோடும் டூ விடறதே இல்லை. சேத்திதான். சேர்த்தி தான், வழக்குச் சொல்லில் சேத்தினு வரும்னு நினைக்கிறேன். :)))))))))))))))) பிள்ளையார் கூட மட்டும் அப்போஅப்போ டூ விடுவேன். அதை இதிலே எழுத மறந்திருக்கேன். ஏன்னா, பிள்ளையார்தானே நாம டூவிட்டாக் கூடத் திருப்பி டூ விட்டு நம்மை அழ வைக்க மாட்டார்.
//டூவின் மகத்துவம் //
ReplyDeleteநல்லாச் சொல்லியிருக்கீங்க:)! 'டூ'வுக்குப் பின்னான 'சேர்த்தி'யிலேதான் பாசமும் நேசமும் அதிகமாகும். சரிதானா? அதுக்காக டூ விடணும் என சொல்லல. சேர்த்தியாவே இருப்பதுதான் நிம்மதி. ஆஆ.. குழப்புறேனா:)? விடு ஜூட்!!
//வலை உலக நண்பர்கள் அனைவரோடும் டூ விடறதே இல்லை. சேத்திதான்// அப்ப அம்பி கூடயும் கிடையாதா பாட்டி??...:)
ReplyDeleteகண்டிப்பாக டூ விட முடியாது உங்ககிட்ட
ReplyDeleteஇது என்ன ஆனை மேல குதிரை மேல டூ!! தெரியாதே !! நல்லவேளை மத்த 4 கால் ப்ராணி மேலல்லாம் டூ இல்லை:))
ReplyDeleteடூ விட SIGN வேற உண்டே!INDEX FINGER , MIDDLE FINGER ஐ வில் மாதிரி வளைச்சு!!. பலவிதமான சேத்திக்கள்!!. சுண்டு விரல் ஆள்காட்டி விரல் காமிச்சு (டெவில் மாதிரியாம் என் பிள்ளை சொல்லறான்:))) அது தெரிஞ்ச வகை.
.த.பி சொக்கலால் ராம் சேட் - பீடி?!! ஹை!! ந்யாபகம் இருக்கே:))திருநெல்வேலி பக்கம் -பழம், சேக்கு - டூ க்கு opposite :)
டூவினா டூவு டூவாட்டி போவு :))))))))))
ReplyDeleteடூ விடலங்க
ReplyDeleteஹவ் டு யூ டூ?
ReplyDeleteவாங்க ரா.ல. குழப்பம் எல்லாம் இல்லை, தெளிவாத் தான் சொல்லி இருக்கீங்க! :)))))))
ReplyDeleteதக்குடு, டாமும், ஜெரியும் எப்போவோ ஒரு முறை சேர்ந்துக்கும் இல்லையா?? அந்த மாதிரினு வச்சுக்கோயேன். :P:P:P
ReplyDeleteஎல்கே, ரொம்ப நன்னிங்கோ, ஆனால் பாருங்க, சின்ன வயசிலே எல்லாரும் டூ விட்டுட்டு, ஆனைமேலே டூ, குதிரைமேலே டூனு எல்லாம் சொல்லி அழ வச்சிருக்காங்க. என்னமோ இந்த டூ வந்து ஆனைமேலே ஏறிண்டு தான் வருமாக்கும்னு ரொம்ப வருஷம் நினைச்சுண்டு இருந்தேன்! :))))))))))
ReplyDeleteடெவில் மாதிரியான சேத்திதான் பிரபலம் ஜெயஸ்ரீ, :)))))))) நாங்க சேத்தி விடறது ஆள்காட்டிவிரலும், சுண்டு விரலும் மட்டும் காட்டித்தான். மற்ற விரல்களை மடக்கிப்போம். :))))))
ReplyDeleteடூவினா டூவு டூவாட்டி போவு :))))))))))//
ReplyDeleteஇதைப் பார்த்ததும் தான் என்னோட குடும்ப டூ பாட்டை எழுதலையேனு நினைப்பு வந்தது! அப்புறம் எழுதிச் சேர்த்தேன். :)))))))))
புலி, எங்கே?? எல்லாரும் டூ தான் விட்டிருக்கீங்க போல! :((((((
ReplyDeleteவாங்க திவா,
ReplyDeleteஹிஹிஹி, டூ டூ டுப்பாக்கி,
போலீஸ்காரன் பொண்டாட்டி,
டாடா டப்பி,
டப்பிக்காரன் டாண்டாட்டி!"
இது குடும்பப் பாட்டாக்கும்! :P:P:P:P
;-))
ReplyDeleteபடிச்சிட்டேன்
கீதா!
ReplyDeleteஅருமை!என்னுடைய பள்ளிநாள் ஞாபகத்தையும்
தூண்டிவிட்டது! உங்கள் "டூ"நினைவுகள்!வாழ்த்துகள்!
உங்கள் உணர்வுகளே என் உணர்வுகளாய் இருந்தன!
ஆனைமேலே குதிரைமேலே டூ டூ! .ன்னு தான்
டூ விடப்படும்.சேத்தி!பழம்! என்று
ஆள்காட்டி விரலையும்,நடு விரலையும் விரித்துக் காட்டிப்
பழம் விடுவோம்.ஆள்காட்டி விரலும்
நடுவிரலும் சேர்ந்து வில்லாய் வளைந்து காட்டினால் அது"டூ'
"என்கூட காயா பழமா?ன்னு கெஞ்சும் நட்பும் உண்டு!
அன்புடன்,
தங்கமணி.
போங்க, உங்க கூட நான் டூ டூ. சரியாக கண்ணன் சவுக்கில் அடிவாங்கும் நேரம் பார்த்து தொடரை நிறுத்தி விட்டீர்கள். கண்ணன் என்ன மாயஜாலம் அல்லது அற்புதம் நிகழ்த்தினான் என்று திங்கள் வரை தெரியாமல் இருக்க வேண்டும். என்ன கொடுமை சரவணா?.
ReplyDeleteஇதுக்காக நான் டயனேசர் மேல வந்து டூ விட்டுக்கிறேன். நல்ல கதை, மற்றும் நல்ல நினைவுகள். நன்றி அம்மா.
கோபி, இதுக்கும் இதே பின்னூட்டம்தானா??? :P:P:P
ReplyDelete@தங்கமணி அம்மா, ரொம்பவே சந்தோஷமா இருக்கு நீங்க என்னோடபதிவுகளைப் படிக்கிறது. நாங்க ஆள்காட்டிவிரலும் சுண்டு விரலும் நீட்டித் தான் சேத்தி சொல்லுவோம். நல்ல அருமையான நாட்கள் அவை எல்லாம். எல்லாருக்குமே மலரும் நினைவுகள் தான் இவை. நன்றிம்மா.
ReplyDeleteவாங்க பித்தனின் வாக்கு, ஹிஹிஹி, டைனோசர் மேலே டூவா?? ஓகே, இதுவும் நல்லாத் தான் இருக்குங்க. அடுத்த வாரம் பத்தாம் தேதியில் இருந்து 23-ம் தேதி வரையில் பதிவுகளே இருக்காதே! அப்போ என்ன சொல்லுவீங்க?? ஊருக்குப் போறேனே! :)))))))))
ReplyDelete//அடுத்த வாரம் பத்தாம் தேதியில் இருந்து 23-ம் தேதி வரையில் பதிவுகளே இருக்காதே!/
ReplyDeletesari illa. nan ennoda magazine release panra time out of stationa grrrrrrr
வாங்க எல்கே, மூணு நாளா கூகிள் பண்ணற அமர்க்களத்திலே பதிவு போடமுடியலை, கமெண்டும் கொடுக்க முடியலை, உங்க பதிவைப் பார்த்தேன். வாழ்த்துகள்.என்னோட ப்ரோகிராம் எல்லாம் நம்ம பிரதமரோடதை விட பிசி ஷெட்யூலாக்கும்! ஹிஹிஹி, வலை உலகின் ஒரே தலைவி இல்லை??? உங்க பத்திரிகை பத்தித் தெரியும் முன்னரே நாங்க முன்பதிவு செய்தாச்சு. எப்போவோ போயிருக்க வேண்டியது. அவர் கீழே விழுந்து, எழுந்து, எனக்கும் முடியலைனு எல்லாம் ஆகி இப்போக் கொஞ்சம் லேட்டாப் போறோம். :)))))))))
ReplyDelete//உங்க பத்திரிகை பத்தித் தெரியும் முன்னரே நாங்க முன்பதிவு செய்தாச்சு//
ReplyDeleteயாரு சொன்னது ? அம்பியா இல்ல அம்பியோட தம்பியா?
சந்தோசமாப் போய்ட்டு வாங்க, ஆனா தொடரை சஸ்பென்ஸில் நிறுத்தாம, குறிப்பிட்ட பாகத்தில் முடித்து விட்டால் நலம். இனிய பிராயாணம் அமைய வாழ்த்துக்கள். நன்றி.
ReplyDeleteஎல்கே, அம்பியும் இல்லை, அம்பியோட தம்பியும் இல்லை, எங்களை என்னனு நினைச்சீங்க??? சுந்தரசோழரின் மகாமந்திரி அநிருத்தர் மாதிரி எங்கேயும் நமக்கு ஆட்கள் இருக்கின்றனர்! :P
ReplyDeleteவாங்க பித்தனின் வாக்கு, முடிஞ்சவரை போடறேன். இந்த சஸ்பென்ஸ் இதோட முடிஞ்சுடும்னு நினைக்கறீங்க?? :P எவ்வளவு அப்பாவியாய் இருக்கீங்க???:P:P:P
ReplyDeleteஹ்ம்ம் ஓகே . நல்ல படியாக சுற்றுப்பயணம் சென்று வர என் வாழ்த்துகள் .
ReplyDeleteமலரும் நினைவுகளை கிளறிய பதிவு. நன்றி.
ReplyDeleteஊருக்கு போயிட்டு வாங்க. பதிவுக்கு நிறைய சேதிகளோடு.
சூப்பர் போஸ்டு. ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் ஆப்போசிட் டைரக்ஷன்ல வெச்சுண்டு ’டூ’ விடுவா. ஒரு பத்து நிமிஷத்துலேயே, அதே ஆள்காட்டி விரலையும் சுண்டு விரலையும் பாபா ‘கதம் கதம்’ முத்ரா காட்டி ‘பழம்’ விட்டுடுவாங்க. ஆச்சு.. அப்புறம் ஹாப்பிலி எவர் ஆஃப்டர் தான். மதுரை பக்கம் இப்படீன்னா மற்ற இடங்கள்ல க்கா விட்டுடுவா. கட்டை விரலை மேல் பக்க பல் வரிசையில தொட்டு(எச்சல் பண்ணினா அம்மா திட்டுவா) விடணும். ஆனா பழம் விடுற ப்ராஸஸ் அதே பாபா முத்திரை தான்! அருமையான நினைவுகள்.
ReplyDeleteடூ டூ டுப்பாக்கி, போலீஸ்காரன் பொண்டாட்டி, வந்தா வாடீ, வராட்டி போடீ என்று பையன்கள் குரூப்பாக நின்று பாடுவார்கள். இதுக்கெல்லாம் நான் பீல் பண்ணவே மாட்டேன்!
வாங்க அநன்யா அக்கா, நீங்க ஃபீலலை, நான் ரொம்ப ஃபீலி இருக்கேன், இப்போ சும்மாவானும் யாரோடயானும் டூ போடறதுக்கு ஆசையா இருக்கு, அதான் உங்களோட டூ விட்டேன், ஆனால் நீங்க அழுதுட்டீங்களே?? :P:P:P:P
ReplyDelete