எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, March 06, 2010

கிடைத்தது அதிக பவர்!

அப்பாடா! ஒருவழியாய் அதிக பவர் இன்னிக்குக் கிடைச்சுடுச்சு. ஒரு இரண்டு மாசமப் பட்ட கஷ்டம் இருக்கே சொல்லி முடியாது. என்ன இருந்தாலும் பவர் இருந்தாலும் கஷ்டம் தான், இல்லாட்டியும் கஷ்டம் தானே! அதுவும் அதிக பவர்னால் கேட்கவே வேண்டாம். வலை உலகத் தலைவியாச்சே. பவர் இல்லைனாத் தான் கஷ்டம். அம்பி, மெளலி, திராச, தக்குடு எல்லாம் என்ன விஷயம் அதிக பவர்னு குழம்பிண்டு இருந்தாங்க. இப்போப் புரிஞ்சிருக்குமே!

இரண்டு மாசத்துக்கும் மேலாக "ந" "த" மாதிரியும் "ண" "ன" என்றும் "ற" "ந" மாதிரியும், தெரிஞ்சுட்டு இருந்தது. சில சமயம் கூறு என்பது கூகூறுறு என்று இரட்டையாவும் தெரியும். "ம' போட்டால் "ழ"வோனு சந்தேகம் வரும். "க" போட்டால் கேட்கவேண்டாம். "ச" மாதிரித் தெரியும். சிலசமயம் இரண்டிரண்டு தரம் எழுதிட்டேனோனு கூட நினைச்சுப்பேன். எல்லாத் தொல்லையும் கொஞ்ச மாசங்களுக்கு இருக்காது.

புதுக்கண்ணாடி அதிகப் பவருடன் இன்னிக்குத் தான் வந்தது.

25 comments:

  1. அப்ப இனி ஒழுங்கா படிச்சு பார்த்து பின்னூட்டம் போடுவீங்க :D

    ReplyDelete
  2. power 'full' ஆக இருக்க வாழ்த்துகின்றேன்:-)

    ReplyDelete
  3. இன்னும் அதிக பவர் வந்தடைய வாழ்த்துகிறேன்னு சொல்ல முடியாது:)!

    'இல்லை இனி தொல்லை'யென மகிழ வாழ்த்துக்கிறேன்:))!

    ReplyDelete
  4. //அப்ப இனி ஒழுங்கா படிச்சு பார்த்து பின்னூட்டம் போடுவீங்க//

    ரிப்பீட்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஎ!!!!!!!

    ReplyDelete
  5. எல்கே, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :P:P

    ReplyDelete
  6. துளசி, எங்கே? பவர் ஃபுல் னு போடத் தான் நினைச்சேன் முதல்லே, ம்ஹும், நடக்கலையே? :P:P:P:P

    ReplyDelete
  7. வடுவூர், என்ன அர்த்தம் இந்தச் சிரிப்புக்கு???

    ReplyDelete
  8. மெளலி, நீங்களா எப்போ பின்னூட்டம் எழுதப் போறீங்க? :P:P:P:P:P:P

    ReplyDelete
  9. பவர் கிடைத்ததற்கு வாழ்த்துக்கள்.. பஸ்ல லிங்க் பாத்துட்டு இங்கே வந்தேன்.

    ReplyDelete
  10. அப்போ இத்தனை நாளா பவர் இல்லமால் தான் இருந்திங்களா தலைவி ;-)

    ReplyDelete
  11. என்ன இவ்வளவு லேட்டாவா பவர்? எனக்கு கொறஞ்சிகிட்டே போவுது..

    இப்போ எல்லாம் கண்ணாடி கழட்டி வச்சாதான் ஒழுங்கா தெரியுது.

    சில பேருக்கு எல்லாமே தலைகீழ் தானோ!!!

    ReplyDelete
  12. //அப்ப இனி ஒழுங்கா படிச்சு பார்த்து பின்னூட்டம் போடுவீங்க //
    ரொம்ப ஒண்னும் வித்தியாசம் இருக்காதுன்னு நினைக்கிறேன்! :-))

    ReplyDelete
  13. வாங்க கபீரன்பன், அதிசயமாய் வருகைக்கு முதல்லே நன்றி :P

    அப்புறமா நீங்க சொல்றது சாளேஸ்வரம் எனப்படும் வெள்ளெழுத்துனு நினைக்கிறேன். நாளாவட்டத்தில் சரியாகும், 87 வயசாகும் என் மாமியார் தொலைக்காட்சியில் உள்ள எழுத்துக்களைப் பதினைந்தடி தூரத்திலே இருந்து படிப்பாங்கன்னா பார்த்துக்குங்க, நீங்க ஒண்ணுமே இல்லை! :P:P:P:P

    நமக்குப் பதினைந்து வருஷத்துக்கும் மேலே பவர் அதிகம்! இந்த அழகிலே ஒரு கண்- ஒரு கண்+ இது இன்னும் கூடிட்டே தான் போகுது. குழந்தைங்களுக்குத் தான் பவர் இருக்குமாமே?? அதானோ??? :)))))))

    ReplyDelete
  14. ரொம்ப ஒண்னும் வித்தியாசம் இருக்காதுன்னு நினைக்கிறேன்! :-))//

    @திவா, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  15. @கீதா

    நான் 15 வயசுல இருந்து கண்ணாடி உபயோகித்தேன் இப்ப 3 வருசமா போடறது இல்ல. தெளிவா இருக்கு

    ReplyDelete
  16. @எல்கே, போட்டிருக்கணும், நானும் பதினைந்து வயசுக்கு முன்னாடியே! அப்பா பிடிவாதமா மறுத்துட்டார். அப்படியே ஓடிப் போச்சு வருஷங்கள், பதினைந்து வருஷம் முன்னாடி, நம்ம ம.பா.வையே அடையாளம் தெரியாமப் போனதும் தான் (அவரைப் பார்த்து யாரு நீங்க? எப்போவோ பார்த்திருக்கேனானு கேட்டுடப் போறேன்னு நினைச்சாரோ என்னமோ?)அவர் பயந்துட்டு மாட்டி விட்டுட்டார்! :)))))))))))

    ReplyDelete
  17. hahaha... nan ippa kannadi use panratha niruthi acchu.carrot nerya spatadhan palan

    ReplyDelete
  18. உங்க பவரைப்பத்திதான் எங்களுக்கு நல்லா தெரியுமே!இனிமே புல் ஸ்பீடுதான்1 ஜமாயுங்கோ

    ReplyDelete
  19. எல்கே, இந்தப் புதுப்படத்திலே அச்சு அசல் நம்பியார் தான் நீங்க, அதானா, சிரிப்புக் கூட நம்பியார் குரல்லே காதிலே விழுந்தது! சகிக்கலை படம், மாத்துங்க, முதல் படமே தேவலை, அதை மாத்தினீங்க, அப்புறமா ஒரு வில்லன் படம், அப்புறமா யாருனே கண்டுபிடிக்க முடியாம ஒரு படம், இப்போ மறுபடி எம்ஜிஆர் படத்து நம்பியார் மாதிரி முழிக்கிறீங்க?? :P:P:P:P

    ReplyDelete
  20. வாங்க சார், ரொம்ப நாள் கழிச்சு வந்ததுக்கு நல்வரவு, ஹிஹிஹி, நீங்க யாருக்குப் பவர் கொடுத்திருக்கீங்கங்கறது தெரிஞ்ச விஷயம் தானே??? :P:P:P:P

    ReplyDelete
  21. @paatti
    athu enkitta irunthu powera pudingina naal..(ennoda engagement day)

    ReplyDelete
  22. நான் என்னவோ 33% டோன்னு நெனச்சேன்.

    இனிமே கர்ர்ர்ர்புர்ர்ர்ர்ர்ர்ர்ர் போக, பவர்ஃபுல் கண்ணாடி வழியா உர்ர்ர்ர்ர்ர்ர்ன்னும் பாப்பீங்களோ?

    எல்லாத்துக்கும் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  23. எல்கே தாத்தா, என்னடா, எங்கவீட்டுப் பிள்ளையிலே எம்ஜிஆர் கிட்டே அடி வாங்கின நம்பியாராட்டம் பயந்துட்டு இருக்கீங்களேனு நினைச்சேன், இப்போ இல்லை புரியுது விஷயம், த.ம.வுக்கு வாழ்த்துகள். 100% பவரும் பிடுங்கப்பட்டதா??? ஆஹா, என்ன ஒரு குளிர்ச்சியான செய்தி?? அதான் மூணு வருஷமாக் கண்ணாடி இல்லையா???:P:P:P:P

    ReplyDelete
  24. வாங்க நானானி, எப்போவானும் தான் பார்க்க முடியுது, வரவுக்கு நன்றி. 33% எல்லாம் நமக்குப் பத்தாதுங்க. 100% வேணும் இல்லை?? :))))))))

    ReplyDelete