எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, April 11, 2011

ஸ்ரீராம நவமிக்கு என்ன செய்யவேண்டும்?

நாளை ஸ்ரீராம நவமி. ஸ்ரீராம நவமி மர்யாதா புருஷோத்தம் எனப்படும் ஸ்ரீராமரின் அவதார தினத்தை ஒட்டிக் கொண்டாடப் படும் ஒரு பண்டிகை. ஸ்ரீராமர் அவதரித்த இந்த தினத்தில் விரதம் இருப்பவர்களும் உண்டு. அல்லது பங்குனி மாதம் அமாவாசையில் இருந்து ஆரம்பித்து ராம நவமி முடிய ஒன்பது நாட்கள் விரதம் இருப்போர்களும் உண்டு. வட இந்தியாவில் இந்த ஒன்பது நாட்களும் ராமாயணம் படிப்பார்கள். இங்கேயும் சிலர் சுந்தர காண்டம் படிப்பதுண்டு. சுந்தரகாண்டத்தில் ஒன்பது நாட்கள் பாராயணம் செய்கிறாப்போல் ஸர்க்கங்களைத் தொகுத்து அளித்திருக்கிறார்கள். அவற்றை அமாவாசையன்று ஆரம்பித்துப்படிக்கலாம். எது ஆரம்பித்தாலும் முதலில் விநாயகர் பூஜை ஆரம்பித்துவிட்டு ஆரம்பிக்க வேண்டும். பின்னர் முதல் நாளைக்குக் கொடுக்கப் பட்டிருக்கும் ஸர்க்கங்களைப் பாராயணம் செய்யவேண்டும்.

ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு நிவேதனமும் புத்தகத்திலேயே குறிக்கப் பட்டிருக்கும். சுந்தரகாண்டத்தை நாமே பாராயணம் செய்வதே உகந்தது. இயலாதவர்கள் வேறு எவரையாவது அழைத்துப் பாராயணம் சொல்லச் சொல்லிக் கேட்கலாம். ஒவ்வொரு நாளுக்கும் உரிய நிவேதனங்களைச் செய்து வைத்துக்கொண்டு பாராயணம் முடிந்ததும் வெற்றிலை, பாக்கு, பழம், பூ இவற்றோடு நிவேதனம் செய்ய வேண்டும். இதைத் தவிரவும் மஹா நைவேத்தியம் என்னும் சாதம் நிவேதனம் செய்யவேண்டும். கடைசி நாள் பாராயணம் முடியும் அன்று ஸ்ரீராம நவமியாக இருக்கும். அன்று சுந்தரகாண்டப் பாராயணம் முடிந்தாலும், கட்டாயமாக பட்டாபிஷேஹ ஸர்க்கத்தையும் பாராயணம் செய்யவேண்டும்.

அன்று சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, சுண்டல், வடைப்பருப்பு என்னும் பாசிப்பருப்பை நீரில் ஊற வைத்து வெள்ளரிக்காய், மாங்காய் சேர்த்தது, பானகம், நீர்மோர் போன்றவை கட்டாயம் இருக்கவேண்டும். காட்டில் ஸ்ரீராமர் இருந்தபோது அங்கே கிடைத்த பயறு, உளுந்து போன்ற பொருட்களையும், நீரையும் குடித்தேத் தவ வாழ்க்கை வாழ்ந்ததால் பச்சைப் பயறும் நீர் மோரும் கட்டாயமாக வைக்கவேண்டும் என்பது சிலரின் கருத்து. இது குறித்து நிச்சயமாய்த் தெரியாது. மேலும் வெயில்காலம் என்பதாலும் பானகம், நீர்மோர் போன்றவை கொடுத்திருக்கலாம். அன்றைய தினம் பாராயணத்தை நாமே முடித்திருந்தாலும், அல்லது வேறு யார் மூலமாவது பண்ணி இருந்தாலும் தக்ஷணை கொடுத்து விசிறி, குடை போன்றவை தானம் கொடுக்கவேண்டும். வெயிலின் தாக்கத்திலிருந்து தப்ப விசிறி, குடை போன்றவை. இப்போதெல்லாம் மின் விசிறி இல்லாத வீடே இல்லை என்பதால் இவை எல்லாம் கொடுப்பதில்லை. குறைந்த பக்ஷமாக அன்று நம் வீட்டிற்கு வருபவர்களுக்கு அல்லது அக்கம்பக்கம் இருப்போருக்குப் பானகம், நீர்மோர் கொடுத்தால் நல்லது. விரைவில் வடுவூர் ராமர் பத்தி எழுதறேன்.

இதைத் தவிர வேறு ஏதேனும் இருந்தால் எழுதுங்கப்பா, நானும் தெரிஞ்சுக்கறேன்.

26 comments:

  1. யுகாதியிலிருந்து ஆரம்பித்து 9 நாட்கள் வசந்த நவராத்திரியாக் கொண்டாடுறாங்க இங்க. ராமநவமியும் ரொம்ப பேமஸ். ஸ்கூல், ஆபீஸ் கூட லீவு. பத்ராசல ராமர் கல்யாணம் டீவியில் காட்டுவாங்க.

    ReplyDelete
  2. கீதா,
    இங்கே மாங்காயும், வெள்ளரியும் கிடைத்துவிட்டது. ஸ்ரீராமநவமி வாழ்த்துகள்.
    இராமனோட ராஜ்யம் சீக்கிரம் நம் ஊருக்கு வரட்டும்.
    மிக நல்ல பதிவுப்பா. நானும் சுந்தரகாண்டம் கொண்டு வந்திருக்கிறேன்.
    ஸ்ரீராம ஜனனம் படிப்பதும், அவர் ஜாதகத்துக்குப் பூஜை செய்வதும் வீட்டு வழக்கம்.

    ReplyDelete
  3. வடக்கில் இந்த ஒன்பது நாட்களையும் நவ்ராத்ரா என்று விரதம் இருப்பதைக் கண்டிருக்கிறேன்.அங்கெல்லாம் இருக்கும் அளவு நம்பிக்கை தமிழ்நாட்டில் இல்லையென்றே நினைக்கிறேன்.

    ReplyDelete
  4. வாங்க புதுகை, வசந்த நவராத்திரி என மதுரைப்பக்கம் உண்டு. இங்கே சென்னையிலே ரொம்பப் பேருக்குப் புரியலை. வட இந்தியாவிலே மிகவும் விமரிசையாக இருக்கும். ஸ்ரீராமநவமிக்கு அங்கேயும் விடுமுறை உண்டு. இங்கே! :)))))))))

    ReplyDelete
  5. வாங்க வல்லி, ஸ்ரீராமநவமி நல்லபடியாய்க்கொண்டாடிட்டு ஸ்விட்சர்லாண்ட் போய்ப் பேரனைப் பார்க்க வாழ்த்துகள். மருந்துகள் பத்திரம். :)))))))

    ReplyDelete
  6. எங்க தாத்தா(அம்மா வழி) வீட்டிலே ராமர் ஜாதகம் வைத்துப் பூஜை செய்த நினைவு. சரியாய் நினைவில் இல்லை. ஆனால் வீட்டுக்கு வீடு ராமாயணப் பாராயணம் மதுரையில் நடந்தது நினைவில் இருக்கு. பட்டாபிஷேஹம் அன்று தெருவை அடைத்துப் பந்தல் போட்டு சீதாராம கல்யாண உற்சவம் நடத்திப் பெரிய வித்வான்களைக் கச்சேரி செய்யச் சொல்லுவாங்க. மதுரை காக்காத்தோப்புத் தெருவில் அப்படி ஒருமுறை கச்சேரிக்கு மதுரை மணி ஐயர், வசந்த குமாரி போன்றவர்கள் வந்ததும், நாங்க எல்லாம் அங்கே போனதும் நினைவில் இருக்கு.

    ReplyDelete
  7. சென்னை பித்தன், முதல் வருகை?? ஏற்கெனவே வந்த நினைவும் இருக்கு. வட இந்தியாவில் வசந்த நவராத்திரியாகக் கொண்டாடப்படும், நன்றிங்க.

    ReplyDelete
  8. சமுத்ரா, நன்றிங்க.

    ReplyDelete
  9. நல்ல பகிர்வு. நன்றி மேடம்.

    ReplyDelete
  10. ராமர் பிறந்தார் என்று ராமநவமியும் கிருஷ்ணர் பிறந்தார் என்று கோகுலாஷ்டமியும்கொண்டாடுகிறோம்.
    ஆனால் ஒரு நல்ல காரியம் தொடங்க நாள் கேட்டால் ஜோஸியர் இன்னிக்கு அஷ்டமி நவமி.. ரெண்டு நாள் கழியட்டும் என்கிறாரே ஏன்?

    காரணம் //ஏதேனும் இருந்தால் எழுதுங்கப்பா, நானும் தெரிஞ்சுக்கறேன்//
    சகாதேவன்

    ReplyDelete
  11. ராமர் பிறந்தார் என்று ராமநவமியும் கிருஷ்ணர் பிறந்தார் என்று கோகுலாஷ்டமியும்கொண்டாடுகிறோம்.
    ஆனால் ஒரு நல்ல காரியம் தொடங்க நாள் கேட்டால் ஜோஸியர் இன்னிக்கு அஷ்டமி நவமி.. ரெண்டு நாள் கழியட்டும் என்கிறாரே ஏன்?

    காரணம் //ஏதேனும் இருந்தால் எழுதுங்கப்பா, நானும் தெரிஞ்சுக்கறேன்.

    சகாதேவன்

    ReplyDelete
  12. அன்று சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, சுண்டல், வடைப்பருப்பு என்னும் பாசிப்பருப்பை நீரில் ஊற வைத்து வெள்ளரிக்காய், மாங்காய் சேர்த்தது, பானகம், நீர்மோர் போன்றவை கட்டாயம் இருக்கவேண்டும். ...

    இருந்தாலும் தக்ஷணை கொடுத்து விசிறி, குடை போன்றவை தானம் கொடுக்கவேண்டும்.

    Mami..kaasukku engee poorathu? Send me MO please so that I can please Ramar with all that in your list.

    The poor live in fear of festivals; and
    the rich welcome them.

    Could u tell ur Ramar the above 2 lines?

    ReplyDelete
  13. நல்ல பதிவு ;கண்ணன் கதைகளை எழுதுவது போல ஸ்ரீ ராமரை பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறீர்களா கீதாம்மா ?

    ReplyDelete
  14. தொடர்ந்து எழுதுங்கள் .....

    ReplyDelete
  15. வாங்க ரா.ல. நன்றி வரவுக்கு/ :))))

    ReplyDelete
  16. சகாதேவன், இது குறித்துத் தனியா எழுதறேன். :)))))

    ReplyDelete
  17. Mami..kaasukku engee poorathu? Send me MO please so that I can please Ramar with all that in your list.

    The poor live in fear of festivals; and
    the rich welcome them.

    Could u tell ur Ramar the above 2 lines?//

    நிச்சயமா ஜோ, ஏனெனில் ஸ்பெக்டரம் பணம் தவிர மற்ற காமன்வெல்த் பணம், ஆதர்ஷ் பணம் எல்லாமுமே என்னிடம் தானே இருக்கு?? அதனால் நிச்சயமா நான் தான் சொல்லணும் இல்லையா?? நன்றி வரவுக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete
  18. வாங்க ப்ரியா, ராமாயணம் ஏற்கெனவே எழுதி இருக்கேன் பாருங்க, ஏப்ரல் 2008 ஸ்ரீராமநவமிக்கு முன்னாடி ஆரம்பிச்சிருப்பேன். ஏப்ரல் 2008ல் இருந்து பாருங்க. நன்றிம்மா.

    ReplyDelete
  19. கரீட்டா சுந்தர காண்டம் என்னமோ படிச்சு முடிச்சாசு. மாங்கா க்யுகம்பர் தேங்கா எல்லாம் பேப்பர்ல தான் எழுதிவச்சு இன்னிக்கு காட்டணும்:))) லாங்க் டே ப்பா:(( அர்த ராத்திரி 12 மணிக்கு திரும்பி வரும்போதே அனந்தராம தீக்ஷதரின் தூதோ தாஸரதே 11 தடவை சொல்லிட்டு வந்து நமஸ்காரம் பண்ணிட்டு கட்டையை சாய்க்கத்தான் முடிந்தது! ஆனா ராமனை மனசார நினைச்சேன். முஹ் மே) ராம் ஹாத் மே காம் தான்.
    HAPPY RAMNAVAMI EVERYONE
    !!

    ReplyDelete
  20. I havent been understood.

    Whatever you write giving tips/info/advice to ur readers, the last line of ur post shd b reserved for the desolate who cant afford.

    The line shd be like this.

    "For those who are unfortunate to b on the fringe of society, I would say: Worship Ram in the way you can afford and like. No rules apply to u"

    Because the religion is also for Thinnappar, isn't ?

    ReplyDelete
  21. எல்லோரும் வெறுத்து ஒதுக்கும்,அஷ்டமி
    நவமி திதிக்கு மஹிமை தரவே, கிருஷ்ணராக அஷ்டமி திதியிலும் ராமராக நவமி திதியிலும் பிறந்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன்.
    சரியா கீதாம்மா?

    ReplyDelete
  22. பப்லூ, இந்த அஷ்டமி, நவமி பற்றி நிறையப் பேர் கேட்டிருக்காங்க. பாலக்காட்டுத் தமிழர்கள், கேரளத் தமிழர்கள், கேரளாவின் மலையாளம் பேசும் மலையாளிகள், திருநெல்வேலி, நாகர்கோவில் மாவட்டத்தின் சிலர் அஷ்டமியில் திருமணம் செய்வதுண்டு. அதிலும் தேய்பிறை அஷ்டமி முஹூர்த்தம் சிறப்பாகச் சொல்லுவார்கள். இது குறித்துத் தனியாகப் பதிவு போடுகிறேன். எல்லாத்துக்கும் அஷ்டமி, நவமி பார்க்கணும்னு சாஸ்திரத்தில் இல்லை! :)))))))

    ReplyDelete
  23. ஜெயஸ்ரீ, உங்க சேவைகள் எல்லாமுமே இறைவனுக்குச் செய்வது தானே! ஆகவே தனியாய் நீங்க பண்டிகை நிவேதனம் பண்ணணும்னு எல்லாம் இல்லை. எங்களைப் போன்ற சாமானியர்களுக்கு இதெல்லாம் வச்சுக்கலாம். நன்றிங்க, புத்தாண்டு வாழ்த்துகள் தாமதமாய்.

    ReplyDelete
  24. ஜோ, உங்க கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  25. "கேரளாவின் மலையாளம் பேசும் மலையாளிகள்."

    ???

    ReplyDelete
  26. சாமியை எந்த நேரமும் நினைச்சுண்டு அந்த கைங்கர்யம் செய்பவர்கள் என்னிக்கு சாமான்யர்கள் ஆனா ?? நீங்களே இப்படி சொன்னா நாங்கள்லாம் ரொம்பவே சாதாரணம்ப்பா!

    ReplyDelete