என்னோட மாமனார் என்னை மருமகளாக ஏற்கத் தயங்கினாலும் செய்ய வேண்டிய சம்பிரதாயங்களில் குறை எதுவும் வைக்கவில்லை. திருமணம் ஆனதும், பெரிய அளவில் கிரஹப் பிரவேசத்துக்கு ஏற்பாடுகள் பண்ணப் போவதாய்த் தகவல் கிடைத்தது. என் மாமனாரின் கூட ஒரே அண்ணன் தான். அவருக்குப் பிள்ளை கிடையாது. ஆகவே என் கணவர் தான் மூத்தவர் என்பதால் குடும்பத்திற்கே முதல் மருமகள். அது அங்கே ஒரு புறம் இருக்க, இங்கே எல்லா பட்சணங்களும் செய்து கொண்டிருந்தார்கள். வீடு தனி வீடெல்லாம் இல்லை. ஒரு வீட்டின் போர்ஷன் தான். தேங்காய் எண்ணெயும், நெய்யுமாகக் கலவையாக வாசனை அடிக்க அங்கேயே உட்கார்ந்து ஒரு பக்கம் நான் தையல் மிஷினை ஓட்டித் தைக்க என்று பரபரப்பாக இருந்தன நாட்கள். இதற்கு நடுவில் பந்தக்கால் முஹூர்த்தம் பார்த்தாயிற்று. என்னோட இரண்டு பெரியப்பா பெண்களில் ஒருத்தருக்கு நாங்க குடி இருந்த வீட்டிலேயே திருமணம் நடந்தது. பக்கத்து வீட்டையும் சேர்த்து வாசலில் பந்தல் போட்டுக் கல்யாணம். கொஞ்சம் தள்ளி இருந்த ஓர் உறவினர் வீட்டில் பிள்ளை வீட்டுக்காரங்கள் தங்க ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. எதிரே இருந்த என் பெரியப்பா வீட்டில் கல்யாணத்திற்கு வேண்டிய மளிகை சாமான்கள், காய்கறிகள், பூ, பழங்கள் என அனைத்தையும் இறக்கிவிட்டுக் காவலுக்கு என்னோட பெரிய அண்ணா(பெரியப்பா பிள்ளை) இருந்தார். சமையல், சாப்பாடு அங்கேயே இன்னொருத்தர் வீட்டில்.
இன்னொரு பெரியப்பா பெண்ணிற்கு தானப்பமுதலி அக்ரஹாரத்தில் இருந்த மங்கள நிவாஸ் என்னும் கண் ஆஸ்பத்திரிக் கட்டிடத்தில் கல்யாணம். அது எல்லா விசேஷங்களுக்கும் குறைவான வாடகை வாங்கிக்கொண்டு கொடுப்பாங்க. பெரியப்பா அந்த அறக்கட்டளையில் உறுப்பினர்தான். அவர் சொன்னால் கிடைச்சுடும். பெரியப்பாவும் சொல்லத் தயாராய் இருந்தார். ஆனால் கூட்டம் நிறைய வந்தால் சமாளிக்க முடியாது என நினைத்த அப்பா, நகரத்தை விட்டுத் தள்ளி என் மாமா வீடு கட்டி இருந்த டிவிஎஸ் நகரில் திருமணம் நடத்தத் தீர்மானித்துவிட்டுப்பத்திரிகையிலும் அந்த விலாசத்தையே கொடுத்துவிட்டார். இது கொஞ்சம் பெரியப்பாவிற்கும், மற்ற உறவினர்களுக்கும் அதிருப்தியைக் கொடுத்தாலும் என் அப்பாவை மீறி எதுவும் யாரும் பேச முடியாது என்பதால் பேசாமல் இருந்துவிட்டார்கள். ஆகவே பந்தக் கால் முஹூர்த்தத்திற்கு என்னையும் அழைத்துச் செல்லவேண்டும் என்ற ஒரு முடிவு எடுக்கவே, அப்படியே அங்கேயே நான் தங்கிவிடவேண்டும், திரும்ப நாங்க இருக்கும் வீட்டுக்கு வந்து கொண்டிருக்க வேண்டாம் என அப்பா சொல்லி, என்னைப் பெட்டியைத் தயார் பண்ணச் சொன்னார். சுமங்கலிப் பிரார்த்தனை, சமாராதனை போன்றவற்றை நடத்த நாங்க இருந்த வீட்டில் இடம் போதாது என்பதால் பெரியப்பா வீட்டில் நடத்தத் தீர்மானித்திருந்தார்கள். அங்கே மாமிகள் அந்த விசேஷத்தில் பங்கெடுக்க வருகையில் என்னை அழைத்து வரலாம் எனவும், அல்லது முதல்நாளே என் தம்பி போய் அழைத்து வந்துகொள்ளலாம் எனவும் முடிவு செய்தாயிற்று. நாளைப் பந்தக்கால் முஹூர்த்தம். முதல் நாளே நான் மாமா வீட்டுக்குச் செல்ல நல்ல நேரம் குறித்தாயிற்று. நாங்க இருந்த மேலாவணி மூல வீதியில் இருந்து மாமா வீடு இருந்த டிவிஎஸ் நகருக்கு நடந்தே பலமுறை போயிருக்கேன். ரயில் பாதையோடு நடந்தால் குறுக்கு வழி. பேருந்திலும் போயிருக்கேன். அப்போ திருப்பரங்குன்றம் செல்லும் 19-ம் எண் பேருந்து அங்கே பழங்காநத்தத்தில் நிற்கும். பழங்காநத்தத்தில் இறங்கிக் கோவலன் பொட்டலைக் கடந்து தான் டிவிஎஸ் நகருக்குள் போகணும். கோவலன் பொட்டலைத் தாண்டுவதைச் சிலர் எதிர்த்தாலும், டிவிஎஸ் நகரும், அதன் எதிரே சத்யசாயி நகரும் வந்ததும், கோவலன் பொட்டல் பற்றிய ஒரு மூட நம்பிக்கை அறவே ஒழிந்தது என்றே சொல்லவேண்டும்.
ஆனால் இப்போ நான் போவது அப்படி எல்லாம் இல்லை. நானும், என் தம்பியுமாக டிவிஎஸ் நகர் வீட்டுக்குச் செல்ல ரிக்ஷாவுக்கும் சொல்லியாச்சு. நடந்தே போன எனக்கு வந்த வாழ்வு! ))) ஆனால் இம்முறை போனால் திரும்ப வீட்டுக்கு வர மாட்டேன். அங்கே இருந்து நேரே கும்பகோணம், அப்புறம் கிராமம். அதுக்கப்புறமா அவங்க அநுமதிச்சாத் தான். பெட்டியைத் திறந்து எல்லாவத்தையும் ஒரு முறை பார்த்தேன். இறை அருளால் எனக்கு உடைகளுக்கு எப்போவுமே குறை இருந்ததில்லை. கல்யாணத்துக்கு எடுத்த பட்டுப்புடைவையைத் தவிரவும் என்னிடம் ஐந்து பட்டுப்புடைவைகள் இருந்தன. உடை விஷயத்தில் எதை எடுத்துக்கிறது, எதை வைக்கிறது என்பதில் குழப்பம் எதுவும் இல்லை. ஆனால் புத்தகங்கள்?? அப்போவே என்னிடம் சின்ன அளவில் புத்தக சேமிப்பு உண்டு. உ.வே.சா. நினைவு மஞ்சரி, கூடக் குடி இருந்த திருநெல்வேலி மாமா கொடுத்த அன்பளிப்பு, பாரதியார் பற்றிய புத்தகங்கள், தனிப்பாடல் திரட்டு 1 பொன்னியின் செல்வன் அப்போ இரண்டாம் முறையாகக் கல்கியில் வெளி வந்த நேரம். அதன் பைண்டிங் புத்தகங்கள். சாண்டில்யனின் நாவல்கள். கணையாழியின் தொகுப்புகள், (சித்தப்பா அப்போக் கணையாழியின் பொறுப்பாசிரியராக இருந்ததால் ஒவ்வொரு இதழ்க் கணையாழியும் எங்களுக்கு வரும்) நா.பார்த்தசாரதியின் புத்தகங்கள் என ஒரு சின்ன நூலகமே இருந்தது. அதோடு நான் தையலுக்குப் பயன்படுத்தும் நூல்கண்டுகள், எம்ப்ராய்டரிக்குப் பயனாகும் நூல்கண்டுகள், (கடைகளுக்குத் தைச்சுக் கொடுப்பேன்) ஊசி வகைகள், தைக்கக் கொடுத்த துணிகள், தையல் மிஷின் என எல்லாத்தையும் இங்கேயே விட்டுட்டா போகணும்?? தையல் மிஷினையும், புத்தகங்களையும் மட்டும் கையோடு எடுத்துண்டு போயிடலாமா?? யோசனை, யோசனை, யோசனை. அம்மா அதை எல்லாம் இப்போ தூக்கிண்டு போக முடியாது. எல்லாம் நல்லபடியா முடிஞ்சா தனிக்குடித்தனம் வைச்சா அப்போ நாங்க தூக்கிண்டு வந்து உன் கிட்டேயே கொடுப்போம். எங்கேயும் போகாது உன் சாமான்கள் எல்லாம் என்றாள். என் கணவர் கல்யாணம் முடிஞ்சதும் ஒரு வாரத்திலே புனா கிளம்புவதால் என்னையும் அழைத்துப் போகப் போகிறார் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதனால் நல்ல நாளும் குடித்தனம் வைக்கனு பார்த்துக்கொண்டிருந்தாங்க. அடக்கடவுளே!இப்போ என்ன பண்ணறது?? வெளியே போன அப்பா திரும்ப வந்து கிளம்ப நேரமாச்சு, இன்னுமா கிளம்பலை என அவசரப்படுத்த என்னோட கவலையை அம்மா சொல்ல, அப்பாவுக்குச் சிரிப்பு பொத்துக்கொண்டு வர எனக்கு இனம் புரியா அழுகை வந்தது. சும்மாவே தம்பிக்கும் எனக்கும் இந்தப் புத்தக விஷயத்தில் சண்டை வரும். இப்போ எல்லாத்தையும் அவன் எடுத்துக் கொண்டு விடுவானோ? கஷ்டப் பட்டு சேர்த்தது. பைண்டிங் செய்து கொண்டு வரது தம்பிதான். ஆனாலும்........ எப்போ வேணாலும் எடுத்துப் படிக்க முடியாதே. அழ ஆரம்பித்தேன்.
என் புத்தகங்களை விட்டுட்டுப் போகமாட்டேன்.
மதுரை tvs காலனில கல்யாணமா. எங்க மாமா ஒருத்தர் டிவிஎஸ் ல வேலை பண்ணிண்டு இருந்தார் அவர் அங்க இருந்தார் கொஞ்சநாள்.அட்ரெஸ் தெரியல்ல .
ReplyDeleteமாப்பிள்ளை இறங்குமிடம் பொண்வீட்டுக்காரர்கள் இருக்குமிடம் படிக்கறச்சே மாமா கல்யாணத்துக்கு கடையம் போனது - பாவம் பாட்டி தான் உயிரோட இல்லை தன் பிறந்த வீட்டை பாக்க , அக்காவோட வள்ளியூர் கல்யாணம் ஞ்யாபகம் வறது. எங்கவீட்டுல மத்த எல்லாரோடட கல்யாணமும் ஹேமமாலினில தான் . எங்க சித்தி விளையாட்டா சொல்லுவா ஒட்டு மொத்தம் குடும்ப குத்தகை வேறெங்க ஹேமமாலினி தான்னு :)) எங்க கல்யாணம் மட்டும் யோகலக்ஷ்மில . அது இன்னமும் இருக்கோ?.
ம்.. உள்ளூர்லியே நீங்களும் பொட்டி அடுக்கி வெச்சுண்டு அப்படியே போனதுதானா? நான் தான்னு நினைச்சேன். தூத்துக்குடிலேந்து மெடராஸ்க்கு பொட்டி, சட்டிபொட்டிகள். சட்டிபொட்டியெல்லாம் விட்டுட்டு (எங்கிட்ட இருக்கறது எல்லாம் அவளுக்குத்தானே நீங்க அடுத்த பொண்ணுக்கு வச்சுக்கோங்கோ எதுக்கு வேஸ்ட்டா ன்னுட்டார் என் மாடர்ன் மாமியார்!! ) டிரெஸ் பொட்டி மட்டும் டெல்லி!இப்ப 20 கிலோ கணக்கு மாதிரி லைட்டா ட்ராவல் பண்ணலாம் கல்யாணப் புடவைகள் மட்டும் போதும் , மத்தது அங்க வாங்கிக்கலாம் என்று விட்டார்:( என்னோட பாத்து பாத்து வாங்கி வச்சுண்டு இருந்த dcm, bombay dyeing, binny poachampalli venkatagiri சுங்கடி கடாவ் புடவைகளை தங்கைகளுக்கு வாரி வழங்கி விட்டு போனேன்:((சின்ன தங்கை அவ தன் முதல் சம்பளத்தில் வாங்கித்தந்த புடவையை மட்டும் கொண்டுபோய் விட்டேன் . இப்பவும் வச்சிருக்கேன் அதை . எடுத்து பாத்துட்டு அணைச்சுப்பேன் :(( ம்.. அப்புற்ம்?? புஸ்தகம் எல்லாம் எடுத்துண்டு போகவிட்டாளா?
/கோவலன் பொட்டல் பற்றிய ஒரு மூட நம்பிக்கை அறவே ஒழிந்தது என்றே சொல்லவேண்டும். //
ReplyDeleteஅதென்ன சமாசாரம்?
//என் புத்தகங்களை விட்டுட்டுப் போகமாட்டேன்.// அப்பவே ஆரம்பிச்சாச்சா பிடிவாதம்? ம்ம்ம்ம் என்ன பண்ணிங்க? கல்யாணத்தை கேன்சல் பண்ணிட்டீங்களா? :P:P
ம்ம்...ரைட்டு ;) அடுத்த பதிவுக்கு வெயிட்டிங் தலைவி ;)
ReplyDelete"என் புத்தகங்களை விட்டுட்டுப் போகமாட்டேன்".
ReplyDeleteஅப்புறம் என்ன நடந்தது ?
எங்கள் வழக்கம் வேறு. எங்க ஊரில் ஆண்கள் தான் பெண் வீட்டுக்கு வருவாங்க :)
நாங்கள் அம்மா அப்பா கூடவே இருந்துகொள்வோம்.
பழைய நினைவுகள் என்றுமே பசுமையாகத்தான் இருக்கு. இன்று படிக்கும்போதும்கூட.
ReplyDeleteபடிக்க சுவையாக இருக்கு தொடருங்கள் !
ReplyDeleteஅம்மா அப்பாவை பிரிந்து புனா போகணுமே என்று நினைக்கும் போது அழுகை வரலையா ?!
வாங்க ஜெயஸ்ரீ, என்னோட இரண்டு மாமாக்கள் டிவிஎஸ் தான். அதனாலே தான் அங்கே வீடு கட்டினாங்க. யோகலக்ஷ்மி பத்தித் தெரியலை எனக்கு. விசாரிக்கணும். அப்போவே நான் அதிகம் காட்டன் புடைவைகளே கட்டினதாலே என் கிட்டே அர்விந்த், கடாவ், லக்ஷ்மி மில்ஸ், கோவை நெகமம்னு தான் வச்சிருந்தேன். கல்யாணத்துக்கு அப்புறமாத் தான் பாம்பே டையிங், காலிகோ, டிசிஎம் எல்லாம்! :))))) இப்போ மறுபடி பதினைந்து வருஷமா காட்டனுக்கே மாறியாச்சு. சிந்தெடிக் கிட்டே கூடப் போறதில்லை. யாரானும் வச்சுக்கொடுக்கிறது தான் சிந்தெடிக்கா வரும்! :))))))
ReplyDeleteஇந்தக் காட்டன் புடைவை எடுத்துக்கறதுக்கும் எனக்கும் அப்பாவுக்கும் சண்டை வரும். நான் பிடிவாதமா காட்டன் எடுத்தால் கட்டிக்கிறேன் இல்லைனா புடைவையே வேண்டாம்னுடுவேன். வேறே வழியில்லாம ஒத்துப்பார்! :)))))
ReplyDeleteவாங்க திவா, கோவலனுக்கு அந்த இடத்திலேதான் கொலைத் தண்டனை நிறைவேத்தினதாச் சொல்லுவாங்க. அதனால் மக்கள் பல வருடங்களா அந்த மரத்தடிப் பக்கம் போகக் கூட மாட்டாங்க. போறவங்களும் பயப்படுவாங்க. அழுகை சத்தம், கூக்குரல் எல்லாம் கேட்கிறதுனு எல்லாம் சொல்லிட்டு இருப்பாங்க. டிவிஎஸ் நகர் வந்தது. இப்போக் கோவலன் பொட்டலைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டி இருக்கு. மூணு வருஷம் முன்னாடி பார்த்தப்போ எங்கே இருக்குனு கூடத் தெரியலை! :)))))))
ReplyDeleteஅப்பவே ஆரம்பிச்சாச்சா பிடிவாதம்? ம்ம்ம்ம் என்ன பண்ணிங்க? கல்யாணத்தை கேன்சல் பண்ணிட்டீங்களா? :P:P//
ஹிஹிஹி, அதான் கல்யாணம் பண்ணிண்டாச்சுனு தெரியுமே! அப்புறம் என்ன?? :P:P:P:P
வாங்க கோபி, படிக்கிறதுக்கு நன்றிப்பா.
ReplyDeleteவாங்க மாதேவி, இங்கே பெண்ணும் சரி, பிள்ளையும் சரி கல்யாணம் நடக்கும் சத்திரம்,அல்லது வேறு வீடுகள்னு வரணும். பெண் வீடே பெரியதாக இருந்தால் அங்கேயே கல்யாணம் நடக்கும். எங்க வீடு சின்னது தான். குடித்தனமாய்த் தான் இருந்தோம். அதனால் எங்க மாமா வீட்டிலே நடந்தது. அங்கேயும் வீட்டுக்குள்ளே இடம் இல்லை. மூன்று வீடுகளைச் சேர்த்துப் பந்தல் போட்டு, ஜோடனைகள் செய்து மேடை கட்டி மணல் பரப்பினு மீனாக்ஷி கல்யாணத்துக்கு நடக்கிறாப்போல் எல்லாம் என்னோட மாமாக்கள் ஏற்பாடு பண்ணினாங்க. :)))))
ReplyDeleteவாங்க லக்ஷ்மி, நினைவுகள் இனிமையானவைதான். இல்லையா? அதிலும் அப்போ இருந்த மாதிரி தனிதான்! இது ரொம்பவே அவசர யுகம்!:(
ReplyDeleteவாங்க ப்ரியா, புனாவுக்கு நான் போகலை. ஆனாலும் கல்யாணம் ஆகிப் போறச்சே அம்மா, அப்பாவை விட்டுட்டுப் போறேன்னு அழலை. என்ன காரணம்னு புரியலை. எல்லாருமே எதிர்பார்த்தாங்க அழுவேன்னு. ஆனால் எல்லாரையும் ஏமாத்திட்டேன்! :))))) ஏக்கம் உண்டு, அதுவும் மதுரையை விட்டுப் போறோமேனு இருக்கும் அப்போல்லாம்.
ReplyDeleteஇப்போ மதுரைக்கே போகவேண்டாம் போல ஆயிடுச்சு. :(( மதுரை அவ்வளவு மோசமா இருக்கு.
என் பாட்டி (அப்பாவின் அம்மா) மதுரைக்காரங்க. ஜெய்ஹிந்த்புரம். சித்தி வாக்கப்பட்டிருப்பதும் மதுரைதான். அதானால் ஏதோ ஒரு பந்தம் மதுரைக்கும் எனக்கும். சொந்த வீடு அங்கேதான் வாங்கியிருக்கேன்.
ReplyDeleteதொடர்ந்து படிக்கிறேன்
வாங்க புதுகைத் தென்றல், எங்க அம்மாவோட அம்மா வீடும் கொஞ்ச நாட்கள் ஜெய்ஹிந்த்புரத்தில் இருந்தது. அப்புறமா வீடு மாத்திட்டாங்க. ஆனால் அங்கே இருந்து தான் டிவிஎஸ் நகர் வீடு கட்டிப்போனாங்க. வீட்டுக்கு எதிரே ஒரு பார்க்கும், மசூதியும் இருக்கும். மீனாக்ஷி தியேட்டர் வழியா நடந்து வரலாம். கான்சாமேட்டுத் தெரு?? ஆமாம்னு நினைக்கிறேன்.
ReplyDeleteஎங்கே வீடு வாங்கி இருக்கீங்க?? நகரத்துக்குள்ளே இப்போ இடமே இல்லை! :( நெரிசல் தாங்கலைனு சொன்னாங்க. என்னோட அண்ணா, (பெரியப்பா பையர்)பைபாஸ் ரோடிலே நேரு நகரிலே இருக்கார். போனால் அங்கே தான் தங்குவோம்.
பிறந்த வீட்டை விட்டு கிளம்பும் போது இருக்கும் மனநிலையை அழகா சொல்லி இருக்கீங்க... நானும் ரெம்ப அழுது ரகளை பண்ணினேன்... என்னை விட என் அப்பா தான் ரெம்பவும்..... ஹ்ம்ம்... பாவம்...;((
ReplyDeleteஎன்னமோ கலாய்க்க வரலை இன்னிக்கி... சீக்கரம் மிச்சம் கதைய போடுங்க மாமி...;)))
ReplyDelete//என்னோட இரண்டு மாமாக்கள் டிவிஎஸ் தான்.//
ReplyDeleteஇன்னும் கொஞ்ச நாள் போகட்டும். ரெண்டு பேரும் ரிலேடிவ்ஸ் ன்னு தெரிஞ்சுடும்! :-)))
//இப்போ மதுரைக்கே போகவேண்டாம் போல ஆயிடுச்சு. :(( மதுரை அவ்வளவு மோசமா இருக்கு.//
ReplyDelete50 வயசு தாண்டினவங்க எல்லாருமே இப்படித்தான் இருப்பாங்க. அவங்க அவங்க சின்ன வயசில வாழ்ந்த ஊர் மோசமாயிடுத்துன்னு புலம்புவாங்க!
மாமி
ReplyDeleteகையில் காப்பு கட்டின பிறகு தானே வெளில போகக் கூடாது நு சொல்லுவா. அது முந்தின நாள் நாந்தி பூஜை போது தானே? நீங்க பந்தக் கால் நட்டப் பிறகு திரும்பப் போகக் கூடாதுன்னு அங்கேயே தங்கிட்டேளே? ஒரு வேளை அப்போ அப்படி இருந்தது தான் சுருங்கி இப்போ ஒரு நாள் ஆயிடுத்தா?
of course இப்போ மண்டபத்துக்கு முந்தின நாள் தானே பொண்ணு மாப்பிள்ளை எல்லாரும் போறா. முன்னாடியே ரெண்டு பெரும் போய் இறங்கினா மண்டப வாடகை என்னாகறது? :)
அப்பா அம்மாவை விட்டுட்டு போறோமேன்னு அழலையாம் . புத்தகம் அதுவும் தம்பி எடுதுப்பான்னு
ReplyDeleteஇந்த அக்காக்கள் எல்லோருமே இப்படிதானா ???
கிர்ர்.. தொடர முயற்சி செய்தால் பாஸ்வோர்ட் கேக்குது
ReplyDeletehttp://lksthoughts.blogspot.com/2011/04/blog-post_17.html
ReplyDeleteதொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன்
வாங்க ஏடிஎம், ஹோம்சிக்??? என்ன பண்ணறது?? வெளிநாட்டிலே வேறே இருக்கீங்க! சரியாகிடும். கவலைப்படாதீங்க!
ReplyDeleteஇன்னும் கொஞ்ச நாள் போகட்டும். ரெண்டு பேரும் ரிலேடிவ்ஸ் ன்னு தெரிஞ்சுடும்! :-)))//
ReplyDeleteஹிஹிஹி, அதெல்லாம் ஜெயஸ்ரீ வீட்டுக்கு வந்தப்போவே கண்டு பிடிச்சாச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச், ஒரே ஊர்தானே! :))))))சரியான உறவு முறை சொல்ற பெரியவங்க இல்லை! :(
50 வயசு தாண்டினவங்க எல்லாருமே இப்படித்தான் இருப்பாங்க. அவங்க அவங்க சின்ன வயசில வாழ்ந்த ஊர் மோசமாயிடுத்துன்னு புலம்புவாங்க!//
ReplyDeleteக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அப்படிப் பார்த்தா எங்க கிராமத்தையும், கும்பகோணம், தஞ்சை, திருச்சி போன்ற ஊர்களையும் சொல்லி இருக்கணும். அதெல்லாம் கொஞ்சம் பரவாயில்லை, மதுரையை நீங்க 70களின் கடைசி வரை பார்த்திருக்கணும். எண்பதுகள் ஆரம்பிச்சதுக்கப்புறமா மதுரை மதுரையா இல்லை! அங்கேயே இருக்கும் என் உறவினர்கள் கூடச் சொல்றாங்க! :((((((
மாமி
ReplyDeleteகையில் காப்பு கட்டின பிறகு தானே வெளில போகக் கூடாது நு சொல்லுவா. அது முந்தின நாள் நாந்தி பூஜை போது தானே? //
சரி தான் ஸ்ரீநி. பந்தக் கால் நட்டப்புறம் ஏன் வரவேண்டாம்னு சொன்னாங்கனா, சும்மாச் சும்மா இங்கேயும் அங்கேயும் அலையவேண்டாம்னு ஒரு காரணம். அக்னி நக்ஷத்திரம் வேறே. சும்மாவே எனக்கு வெயில் தாங்காது. அதோட ஏற்கெனவே கோடைக் கட்டிகள் வந்து கொண்டும் போய்க்கொண்டும் இருந்தன. திடீர்னு ஏதாவது உடம்பு வந்துட்டால்?? சில சமயம் அதிக அலைச்சலில் அப்படியும் நடக்கும் இல்லையா? ஒரு முன் ஜாக்கிரதைக்குத் தான். கூடியவரை தனியாவும் அனுப்ப மாட்டாங்க. என்னோட அப்பா சாதாரணமாவே நான் சிநேகிதி வீட்டுக்குப் போறதுனா தம்பியைக் கூட்டிண்டுதான் போகணும்பார். தனியா எல்லாம் போக முடியாது! :))))))) அப்புறமா நான் தன்னந்தனியாச் சென்னையை வலம் வந்ததெல்லாம் தனிக்கதை!
இந்த அக்காக்கள் எல்லோருமே இப்படிதானா ???//
ReplyDeleteஹிஹிஹி, வாங்க எல்கே, தம்பிக்குப் பாடங்கள் எழுதி எல்லாம் கொடுத்திருக்கேன் இல்லை?? அதுவும் கவிதை, கட்டுரைன்னா நம்ம கிட்டே தானே வந்தாகணும்! அதுக்கு இது கூட விட்டுக் கொடுக்கலைனா எப்புடீ??? :))))))
கிர்ர்.. தொடர முயற்சி செய்தால் பாஸ்வோர்ட் கேக்குது//
ReplyDeleteஹெஹெஹே,
உங்க பதிவைப் பார்க்கிறேன். எல்கே, அழைப்புக்கு நன்றி.
Mr திவா:)) !! சும்மா சொல்லக்கூடாது ! மதுரை நல்ல நாளிலேயே (கூட்டத்திலும் புழிதியிலும்) நாழிப்பால்தான் :( செட்டிகுளம் தல்லாகுளமெல்லாமே ரோட், கூட்டம் வாகனம் யம பயம் தான்!! தங்க தங்க பல்லாக்கிலே தல்லா குளத்திலே அழகரு ப(வ)ந்தாருனு ஆடிண்டேதான் போணும் பள்ளம் குள்ளம் லாம் தாண்டி குதிச்சு!!! யப்பா டவுனா!! மாட வீதியா கேக்கவே வேண்டாம்!! கடவுளே வெள்ளிக்கிழமை சாயந்தரம் போயிட்டு அந்த கூட்டத்தை !!:(( எங்கப்பா போச்சு அந்த மல்லிகையும் வாசனையும் . மருல கூட வாசனை இல்லை . என்ன திவா!! இப்ப 50 க்கு மேல போனா anosmia தான் ங்கப்போறேளா:)))))))
ReplyDeleteமஜுரா மில்ஸை இடிச்சிட்டு ஒரு கேட்டட் கம்யூனிட்டி வந்திருக்கே அங்கே தான். :)) வீட்டுபால்கனியிலேர்ந்து மீனாட்சி கோபுரத்தை தரிசிக்கலாம். இந்தப் பக்கம் திருப்பரங்குன்றம்.
ReplyDelete:-))
ReplyDeleteஉலகம் மாறிக்கொண்டே இருக்கு! ஒரே மாதிரி இருக்கணும்ன்னு நினைக்கறதுதான் பிரச்சினை. இதே மாறுதல்கள் தினசரி கொஞ்சம் கொஞ்சமா நடக்கிறப்ப தெரியறதில்லை! ஒரு இடைவெளி விட்டு பாத்தா பளிச் ன்னு தெரியும். நாம் இப்ப கொஞ்ச வருஷமா இருக்கிற ஊரும் மாறித்தான் போச்சு. ஆனா தெரியறதில்லை. அதான் விஷயம்.
@புதுகை, முன்னாலே ஹார்வி நகர்னு இருந்தது. கேப்ரன் ஹால் ஸ்கூல் பக்கமோ? ம்ம்ம்ம்ம்???
ReplyDeleteகீதா பாட்ட்ட்ட்டீ.. இது சூப்பரான கதையா இருக்கே.. லவ் இட்!
ReplyDelete@போர்க்கொடி, கதையா இது?? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அக்கிரமமா இல்லை?? :P:P:P
ReplyDelete||எண்பதுகள் ஆரம்பிச்சதுக்கப்புறமா மதுரை மதுரையா இல்லை! அங்கேயே இருக்கும் என் உறவினர்கள் கூடச் சொல்றாங்க! :((((((||
ReplyDeleteஒருவேளை அண்ணன் அஞ்சாநெஞ்சன் காரணமா இருக்குமோ?!
கல்யாணக் கதை நல்லாத்தான் போயிட்டு இருக்கு..
ஆனா...ஒரு பாட்டு இருக்கு முந்நாளில் தான் கண்டு முகிழ்ந்திருந்த..அப்படின்னு ஆரம்பிக்கும்..
அத தெரிஞ்சுகிட்டுத்தான் பொற்கேடி(தப்பெல்லாம் இல்லை,டுபுக்கு அப்பிடித்தான் அழைக்கிறாரு)பாட்டீடீடீடீடீஈஈஈஈஈ'ன்னு கூப்பிட்டாங்களோ..
எத்தன சந்தேகம் !!!!
தொடருங்க சீக்கிரம்.
வாங்க அறிவன், ஹிஹி,பொற்கேடிங்கற பேரு ரொம்பப் பழசாச்சே, உங்களுக்கு இப்போத் தான் தெரியுமாக்கும். அப்புறமா அம்பியோட சொந்தத் தம்பி தக்குடு. பெரியப்பா பையர் டுபுக்கு. குடும்பமே ப்ளாகிட்டு இருக்காங்க. :P
ReplyDeleteபொற்கேடி தப்பில்லைதான், ஆனால் நீங்க ஆதரிக்கிறதும், சந்தேகப் படறதும் தான் தப்பு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)))))
ஒருவேளை அண்ணன் அஞ்சாநெஞ்சன் காரணமா இருக்குமோ?!//
ReplyDeleteஹிஹிஹி, நான் வரலை இந்த விளையாட்டுக்கு! ஜூட்! :D
கல்யாணக் கதை நல்லாத்தான் போயிட்டு இருக்கு..//
தாங்கீஸ், தாங்கீஸ்!
கீது பாட்ஸ், அடுத்த பார்ட் சீக்கிரம் போடவும்!
ReplyDeleteஅறிவன் சார், ஏன் ஏன் ஏன் இப்புடி? எதுவா இருந்தாலும் நாம தனியா பேசி தீர்த்துக்கலாம், பாட்டி முன்னாடி சண்டை போட்டா அவங்க மனசு கஷ்டப்படும்! ஒற்றுமையே வலிமை (எதுக்குன்னு புரிஞ்சா சரி)!
உங்களின் ஆசீர்வாதங்களினாலும், கடவுளின் கருணையினாலும், அண்ணா, அண்ணிக்கு பையன் பிறந்திருக்கிறான். புதன் கிழமை அதிகாலை 12 :30 மணிக்கு. சுகப் பிரசவம். தாயும் சேயும் நலம். :-)
ReplyDeleteஅறிவன் சார், ஏன் ஏன் ஏன் இப்புடி? எதுவா இருந்தாலும் நாம தனியா பேசி தீர்த்துக்கலாம், பாட்டி முன்னாடி சண்டை போட்டா அவங்க மனசு கஷ்டப்படும்! ஒற்றுமையே வலிமை (எதுக்குன்னு புரிஞ்சா சரி)!//
ReplyDeleteபோர்க்கொடி, அதெல்லாம் அறிவன் ஒண்ணும் உங்க கட்சியிலே சேர மாட்டார். அவர் என் கட்சி தான் எப்போவுமே.
வாங்க பப்லு, உங்க அண்ணாவுக்கும், அண்ணிக்கும் எங்களோட மனப்பூர்வமான ஆசிகள், வாழ்த்துகள். குழந்தையும், தாயும் பூரண ஆரோக்கியத்துடன் இருக்கவும் பிரார்த்தனைகள்.
ReplyDeleteவாழ்த்துக்கள் பப்லு
ReplyDelete||ஹிஹிஹி, நான் வரலை இந்த விளையாட்டுக்கு! ஜூட்! :D
ReplyDelete||
கீதா,கவலைப்படாதீங்க..அண்ணனை மே 13 க்குப் பிறகு அடக்கி வச்சுருவாங்கன்னுதான் தோணுது..சே..அரசியல்லாம் பேசல.
||அறிவன் சார், ஏன் ஏன் ஏன் இப்புடி? எதுவா இருந்தாலும் நாம தனியா பேசி தீர்த்துக்கலாம்,||
ஒகே..டீல்..ஆனா பாட்ஸ் மனசு நோகப்படாது இல்லியா..கீப் இட் சீக்ரெட்லி.
||போர்க்கொடி, அதெல்லாம் அறிவன் ஒண்ணும் உங்க கட்சியிலே சேர மாட்டார். அவர் என் கட்சி தான் எப்போவுமே.||
கீதா,சந்தடி சாக்குல வேற ஏதோ கட்சில சேக்குற மாதிரி இருக்கே..
இன்னிக்கெல்லாம் இருந்தா அம்பிக்கு ரெண்டு வயசு கூட இருக்கற அண்ணாதான் நானு..நான் உங்க கட்சியா ?! டூ,டூ,டூ மச்...
இன்னிக்கெல்லாம் இருந்தா அம்பிக்கு ரெண்டு வயசு கூட இருக்கற அண்ணாதான் நானு..நான் உங்க கட்சியா ?! டூ,டூ,டூ மச்
ReplyDelete@அறிவன், நம்பிட்டோமுல்ல! :P:P:P