எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, April 15, 2011

கடும் ஆக்கிரமிப்பு.

ஒரு வாரமாக் கணினி கடுமையான ஆக்கிரமிப்புக்குள்ளாகி விட்டது. அதோட ஓ.எஸ். வேறே மாத்தினதும் சேர்ந்துண்டாச்சு. அதிலே ஒரு மூணு மணி நேரம் போயிடுச்சு. அதுக்கு அப்புறமா கணினி கிடைக்கவே இல்லை. :P நேத்திக்குத் தான் கணினியிலே உட்காரவே முடிஞ்சது. இதிலே எங்கே போஸ்ட் போடறது?? ஏற்கெனவே எழுதி வைச்சதை ஆன்மீகப் பயணம் பக்கத்திலே போட்டாச்சு, இனி எழுதிட்டுத் தான் வரணும். கல்யாண நிகழ்ச்சி வரலையேனு எலலாரும் கேட்டுட்டு இருக்காங்க. வரும், வரும் பக்ஷணமெல்லாம் பண்ணி முடிக்கவேண்டாமா?? கல்யாணத்துக்கு என்னோட ப்ளவுஸெல்லாம் நானே தான் தைச்சேன். அதெல்லாம் முடியணும் இல்லை??

அப்புறம் சுமங்கலிப் பிரார்த்தனை, சமாராதனை எல்லாம் முடியணும். அதுக்கு முன்னாடி பந்தக்கால் நடணும். அதுக்கு முஹூர்த்தம் கிடைக்கணும், எவ்வளவு வேலை இருக்கு! கல்யாணம் என்னமோ பதினைந்தே நாட்களில் செய்யணும்னு நிச்சயம் பண்ணியாச்சு. ஆனால் வேலை நடக்கவேண்டாமோ? முறுக்கு, தேன்குழல், அதிரசம், மிக்சர், மைசூர்பாகு, பருப்புத் தேங்காய்கள்னு எவ்வளவு இருக்கு! கல்யாண வேலைனா சும்மாவா? பத்திரிகைகளைக் கொடுக்கணும், நேரமே இல்லையே, வெளியூர்க்காரங்களுக்குப் போய்ச் சேரணும். எல்லா விஷயங்களும் கொஞ்சம் கொஞ்சமாய் வரும். அதோட ஸ்ரீராமநவமி கொண்டாட்டம், புத்தாண்டுக் கொண்டாட்டம்னு எல்லாம் முடிஞ்சு இன்னிக்குத் தான் கொஞ்சம் நேரம் கிடைச்சிருக்கு.

18 comments:

 1. என்ன ஒ எஸ் போட்டு இருக்கீங்க இப்ப ??

  ReplyDelete
 2. my original xp professional, new computer change panninathum, windows 7 ultimate pirated version potu koduthar, 6 monthsa athoda ore pirachnai, athan annikku kuda ketene buzzile, computer boot akumpothe windows explorer has been stopped working nu sollidum. matha solliten. now it is original. parppom! :)))))))

  ReplyDelete
 3. some problem in e-kalappai, sometimes it is working, sometime it is not working. restart pannanum pola, sila samayam restart panninal work akuthu! :(

  ReplyDelete
 4. அப்புறம் ஜயஸ்ரீ க்கு இங்கே வந்து பத்திரிக்கை கொடுக்கணும் அதுக்கு நாழியாகாதா??:)))))) என்னொட ஈ கலப்பை என்னிக்கோ ட்ராக்டர் ஆகி ஓடி போயிடுத்து:(( எப்ப போனாலும் ஒரு மாசம் வாங்குங்கறது .தவிற அது போட்டா என்னால ஈமெயில் டைப் பண்ண முடியாது .எல்லாம் கோலி கோலி யா வரும்! அழகி இப்ப . இவர் அதை எடுத்துடு அது ஏதோ டாட்ஜினு சொல்லறார் . பாப்போம்.

  ReplyDelete
 5. Better u can install XP professinal or windows vista. Machine change pannitinga ok. Are you using the same old Hard disk? or new?. Microsoft OS la restart than default solution. :-) . Antivirus enna vachu irukeenga? Pls let me know if you need more details doubts. :-)

  ReplyDelete
 6. இ கலப்பை பழைய பதிப்பு இலவசமாய்த் தான் இருந்தது. இப்போச் சில பதிப்புகளுக்குக் காசு கேட்குது. உங்களுக்குச் சரியான சுட்டியைத் தேடி எடுத்து அனுப்பறேன் ஜெயஸ்ரீ. நன்றி. விண்டோஸ் 7க்கான இ கலப்பை பதிப்பும் இலவசம் தான். ஆனால் அது சரியா வரலை. முயன்று பார்த்தேன். :)))) இப்போ இன்ஸ்டால் பண்ணி இருக்கும் இ கலப்பை பதிப்புத் தான் போன வருஷம் இருந்த ஓ.எஸ்ஸிலும் போட்டிருந்தேன். அதிலே எப்போவுமே திறக்கும், அதுக்கப்புறமா புதுக்கணினியில் விண்டோஸ் 7 பதிஞ்ச்சப்போவும் இதைப் போட்டால் வேலை செய்யலை. முழிச்சிட்டு இருந்தப்போ கூகிள் ஐஎம் ஈ போடச்சொன்னார் திவா. அதைப் போட்டு அதோட கீ போர்டைத் திறந்து அப்புறமா என்னவோ பண்ணினேன். ரீஸ்டார்ட் பண்ணினதும் இ கலப்பையின் கீ போர்டேவேலை செய்ய ஆரம்பிச்சது! ஆனால் சில சமயம் பிடிவாதமா வராது. எக்ஸ்பியில் அப்படி இருக்காதுனு நினைச்சா இதிலும் அப்படித் தான் வருது. :))))))

  ReplyDelete
 7. பப்லு, கணினியில் எல்லாமே புதுசு தான் ,ஹார்ட் டிஸ்க், மதர் போர்ட், ப்ராசெசர், டிரைவர் என எல்லாமே புதுசு. பார்க்கப் போனால் முற்றிலும் புதுக்கணினி. ஈ ஸ்கான் தான் ஆண்டி வைரஸ் போட்டிருக்கு. என்னோட கணினியின் மருத்துவர் இது நல்லதுதான் அப்படினு சொல்லிட்டுப் போட்டிருக்கார். காஸ்பர்ஸ்கை தான் முயன்றார். அது என்னமோ ரிஜிஸ்டரே ஆகலை. அப்புறமா இதைப் போட்டார். போட்டுக் கிட்டத்தட்ட ஆறு மாசத்துக்கு மேலே ஆகுது, ஒண்ணும் பிரச்னை இல்லை.

  இப்போ ஓ.எஸ். மாத்தினதுக்குக் காரணம் பைரேடட் வெர்ஷன் விண்டோஸ் 7 லே அடிக்கடி வேலை நிறுத்தம் வந்துட்டு இருந்தது. அதான் வேண்டாம்னு சொல்லிட்டு, என்னோட எக்ஸ்பி ஒரிஜினலையே போடச் சொல்லியாச்சு. எல்லாமே அவர் வந்து செய்து கொடுத்துடுவார். ஒண்ணும் பிரச்னை இல்லை! :))))))))

  ReplyDelete
 8. எல்கே, என்ன வருத்தம்னு புரியலையே?? ????????

  ReplyDelete
 9. தையல் வேலையில் இருந்து கம்ப்யூட்டர் வேலை வரைக்கும் தெரிந்து வைத்திருக்கும் கல்யாண பொண்ணை
  கட்டிக்க போகும் மாப்பிள்ளை கொடுத்து வைத்து இருக்க வேண்டும் !

  ReplyDelete
 10. ஒரு வேளை நீங்க கல்யாணத்துக்கு அழைக்கலையோ ன்னு வருத்தமா கூட இருக்கலாம் !

  ReplyDelete
 11. ப்ரியா, நான் தைக்கிறதை எல்லாம் அவர் ரசிச்சதே இல்லை. பேசாம டெய்லர் கிட்டே மூன்று ரூபாயைக் கொடுத்துட்டுத் தைக்காம உயிரை விட்டுக்கறயேனு சொல்வார். :( அப்போல்லாம் மூன்று ரூபாய் தான் ப்ளவுஸ் தைக்க. நான் தைச்சுக் கொடுக்கும்போது 2 ரூ, 21/2 ரூபாய் னு வாங்கி இருக்கேன். ஒரு ப்ளவுஸிற்கு எம்ப்ராய்டரி டிசைன் செய்ய டிசைனுக்கு ஏத்தாப் போல் ஒன்றரை ரூபாயில் இருந்து மூன்று ரூவரை தருவாங்க. மொத்தமா ஒரு டஜன் ப்ளவுஸ் என்றால் இன்னும் குறைப்பாங்க! புடைவைக்குப் பத்து ரூபாய். ஒரு புடைவைக்கு முழுதும் முடிக்க மூன்று நாட்கள் பிடிக்கும். :))))))))

  ReplyDelete
 12. அப்படியா எல்கே, கல்யாணத்துக்கு அழைக்கலைனா வருத்தம்?? :)))))))

  ReplyDelete
 13. விண்டோஸ் 7 உங்களுக்குப் பிரச்சனை பன்னுதேன்னு வருத்தம். என் வீட்டிலும் பைரேட்டேட் தான். பிரச்சனை இல்லாமல் ஓடுது

  ReplyDelete
 14. தெரியலை எல்கே, முதல்முதல் விண்டோஸ் 7 போட்டதுமே சில நாட்களில் மைக்ரோசாப்ட் காரங்க ஆப்லைனிலே வேர்ட் டாகுமெண்ட் எழுதும்போதே தடுத்துட்டாங்க. :( அப்புறமா வேறே ஏதோ கீ கொடுத்து அதை ஆக்டிவேட் பண்ணினார் அப்போ இருந்த மெகானிக். ஆனால் கணினி ரீ ஸ்டார்ட் ஆச்சு பாருங்க. உங்களாலே கற்பனை கூடப் பண்ண முடியாது. கணினியைத் திறந்தாலே ரீ ஸ்டார்ட் ஒண்ணுதான் நடக்கும். அதிலேயும் இயன்ற அளவு போஸ்ட் போட்டேன். :(

  அதுக்கும் அப்புறம் தான் மெகானிக்கை மாத்தி கணினியை மாத்தி இவர் இந்த விண்டோஸ் 7 உங்களுக்கு மட்டும் தான் போடறேன்னு சொல்லிட்டுத் தான் போட்டார். அப்டேட் எல்லாம் கொடுக்கலை. ஆனாலும் வாரத்தில் ஏழு நாட்கள் :P கணினி பூட் ஆகும்போதே the host windows has been stopped working / find the solutions online/ restart அப்படினு வரும். ரீஸ்டார்ட் கொடுத்து கணினியைத் திறந்து ப்ரவுஸ் பண்ணும்போது விக்கிபீடியாவுக்கோ மரபு விக்கிக்கோ போக முடியாது. mozilla firefox, ie எல்லாமே வேலை நிறுத்தம் செய்யும். தாங்க முடியலை! அதான் எஞ்சினியரைக் கூப்பிட்டு மாத்தச் சொல்லிட்டேன். இதிலே என்னன்னா ஸ்கைபிலே சாட்டும்போது தமிழ் எழுத முடியாது. கட்டம் கட்டமா வரும். என்னோட ப்ளாக் பேரும் கட்டமாய்த் தான் தெரியும். ஆனால் தமிழ் படிக்க எழுத முடியும். ஜி சாட்டில் சரியா இருக்கும். இ கலப்பை பழைய வெர்ஷன் வேலை செய்யும். வேர்ட் டாகுமெண்டில் அடிக்கும்போது புள்ளிகள் விழாது. ஆனால் நோட்பேடில் அடிக்கும்போது ஒத்தைக்கொம்பு ரெட்டைக் கொம்பெல்லாம் விசித்திரமாய் வரும். அதனாலே நோட்பேடையே பயன்படுத்தறதில்லை. :(

  ReplyDelete