ஹும், என்னோட அப்பா கிட்டே எல்லாம் என்ன பிடிவாதம் பிடிச்சாலும் நடக்காது. புத்தகங்களை எடுத்துச் செல்ல அப்பாவின் அநுமதி கிடைக்கவில்லை. (திவா, சந்தோஷமா இருக்குமே) புடைவையோ, நகையோ எத்தனை வேண்டுமானாலும் வாங்குவார். செலவு பண்ணமாட்டார்னு இல்லை. ஆனால் அவரோட எண்ணமே பெண்கள் என்றாலே புடைவை, நகை, பாத்திரம், பண்டங்கள் என்று தான் ஆசைப்படுவார்கள், படணும் என்று. அப்போப் பல பெண்களும் இப்படி ஒரு ஆசைக்கு அடிமையாகத் தான் இருந்தார்கள் என்பதும் உண்மையே. நாங்க குடி இருந்த வீட்டிலே கூடவே குடித்தனம் இருந்த மாமி எல்லாம் மாசம் ஒரு புதுப்புடைவையாவது வாங்குவாங்க. இல்லைனா வீட்டில் ரகளை நடக்கும், பார்த்திருக்கேன். ஹிஹி, நாம தான் அநியாயத்துக்கு விசித்திரப் பிறவியாய்ப்போயிட்டோமா! தீபாவளிப் பட்டாசில் இருந்து அண்ணா, தம்பியோட போட்டி போடுவோமில்ல! அதே போல் படிப்பிலும் போட்டிதான். ஆனால் எனக்குப் புத்தகங்கள் கிடைக்காது. மகளே உன் சமர்த்து! எப்படிப் புத்தகம் வாங்கிப்பியோ, எப்படிப் படிப்பியோ உன் பாடுனுடுவார் அப்பா. புத்தகங்கள் வாங்கித் தந்ததே இல்லைனு தான் சொல்லணும், பெரியப்பா வீட்டிலும், மாமா வீட்டிலும் உதவுவாங்க. என்றாலும் அக்கவுண்டன்சி புத்தகம் யாரிடமும் இல்லாமல் கஷ்டப்பட்டிருக்கேன். அப்பா படிச்சது சுப்ரமணிய ஐயர் என்பவர் போட்ட அக்கவுண்டன்சி புத்தகம். அதைத் தேடி எடுத்துக்கொடுத்துட்டு இதுவே ஜாஸ்தினு சொல்லிட்டார் அப்பா. அப்புறமா அப்பாவின் நண்பர் ஒருத்தர் தன்னுடைய பாட்லிபாய் புத்தகத்தைக் கொடுத்து உதவினார். படிச்சுட்டுத் திருப்பிக் கொடுக்கணும்னு நிபந்தனையோட. இப்போ நான் படிக்கிறதே நின்னு போச்சே! இன்னும் அழுகை வந்தது. பாட்லிபாய் புத்தகத்தை எடுத்துக்கொண்டு போக முடியாது. இன்னொருத்தரோடது. அதோட அங்கே போய்ப் படிக்க முடியாதே. அழுகையுடன் புத்தகங்களைப் பார்த்துக்கொண்டு தடவிக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். அப்பா ஒரு சத்தம் போட்டார். “அங்கே போய் மாமியார், மாமனாருக்கு ஒத்தாசையா இருக்காமப் புத்தகங்களை எடுத்துக்கொண்டு போய்ப் படிச்சுண்டா உட்காரப் போறே? இங்கே மாதிரி புத்தகமும் கையுமா அங்கே எல்லாம் இருக்க முடியாது. அதை நினைவில் வச்சுக்கோ!” என ஒரு அதட்டுப் போட்டார். அம்மா சமாதானத்துக்கு வந்து, “உன்னோட அலமாரியிலேயே வச்சுட்டுப் பூட்டிடு, நாங்க யாரும் எடுக்க மாட்டோம். நீ அப்புறமா வரும்போது, போகும்போதுகொஞ்சம் கொஞ்சமா எடுத்துக்கொண்டு போகலாம்.” என்று சொல்ல அரை மனசாப் புத்தகங்களை விட்டுவிட்டு, என்னோட எம்ப்ராய்டரி நோட்டுப் புத்தகம், ஆட்டோகிராஃப் நோட்டுப் புத்தகம்னு எல்லாத்தையும் எடுத்து வைச்சேன். ஆட்டோகிராஃபிலே டிடிகேயிடம் கையெழுத்துவாங்கியதில் இருந்து பல முக்கியமானவங்க கிட்டே வாங்கின கையெழுத்தெல்லாம் இருந்தது.
ஒரு மாதிரியா பாக்கிங் முடிச்சுட்டு ரிக்க்ஷா வந்ததும் அம்மா சாமி படத்துக்கு எதிரே உட்கார வைச்சு விபூதி, குங்குமம் இட்டுவிட்டு, வேப்பிலை சொருகி, வாசலில் சூரைத் தேங்காய் விட்டுவிட்டுத் தம்பியோட என்னை அனுப்பி வைச்சாங்க. மாமா வீட்டுக்கு வந்தாச்சு. மறுநாள் காலையிலே பந்தக்கால் முஹூர்த்தம். அப்பா, அம்மா காலையிலே வருவாங்க. அன்று மாலை வழக்கம் போல் குளிக்கப் போனேன். கல்யாணத்திற்கு என நகைகள் போட்டிருந்தேன். காதிலே தோடு வேறே புதுசா கனம், தாங்கலை. எல்லாத்தையும் கழட்டி விட்டு இருக்கணும் போல் ஒரு ஆசை. குளிக்கையில் நகைகளைக் கழட்டிட்டு அங்கேயே பாத்ரூமில் ஒரு பக்கமாய் சோப்புப் பெட்டியில் வைச்சேன். எப்போதுமே சோப்புப் பெட்டியைக் கையோடு எடுத்து வரது வழக்கம். குளிச்சுட்டும் கையோடு எடுத்துக்கொண்டு போவேன். அன்னிக்கு என்னமோ மறந்துட்டு வெளியே வந்துட்டேன். சுத்தமா நகைகள் நினைவே இல்லை. வெளியே வந்து மாமாக்களோட சிரிப்பு, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம். எங்க அப்பா இல்லைனாத் தான் எங்க வீட்டிலே நாங்க எல்லாம் குதியாட்டம் போடுவோம். அப்பாவுக்கு பயம். ஆனால் இங்கே மாமா வீட்டில் கொஞ்சம் கூட பயமோ, வெட்கமோ, தயக்கமோ இருக்காது. ஒரே சிரிப்பும், விளையாட்டுமாய்த் தான் இருப்போம். அதுவும் எல்லாருக்கும் பள்ளி விடுமுறை. கல்யாணத்துக்கு என என் சித்தி குழந்தைகள் எல்லாரும் வந்திருந்தாங்க. மாமா வீட்டில் தாத்தா, பாட்டி, மூன்று மாமாக்கள், மாமிகள், குழந்தைகள் எனக் கூட்டுக் குடும்பமாய்த் தான் இருந்தாங்க. அதனால் அவங்க வேறே. எல்லாருமாய் விளையாடினோம். ட்ரேட் விளையாட்டு, சீட்டுக்கட்டில் செட் சேர்க்கிறது, ஆஸ் விளையாட்டு, பரமபத சோபானம் என எல்லாரும் தனித்தனியாகவும், குழுவாகவும் விளையாடுவோம்.
கடைசி மாமாவும் என் பெரியம்மா பிள்ளை(அண்ணா)யுமாகக் காரம் போர்ட் விளையாடினாங்க. மாமா வேணும்னே சீண்டுவார். அப்படி ஒருமுறை சீண்டும்போது காரம்போர்டின் காய்களை என் முகத்திலே வந்து விழ வைச்சார். வேணும்னு தான் பண்ணினார் என்பது புரிந்தது. கோபத்தோடு கையாலே அதை எடுக்கும்போது தான் கவனித்தேன், கைகளில் ஏதோ வெறுமை. ம்ம்ம்ம்?? என்ன ஆச்சு?? கல்யாணத்துக்கு எனப் போட்டுக்கொண்ட கண்ணாடி வளையல்கள் தங்க நிறம் கொண்டவை. அவை இருந்தன. ஆனால் தங்க வளையல்கள்?? அவசரம் அவசரமாய் இரண்டு கைகளையும் பார்த்தால் வளையல்களே இல்லை. என்னையும் அறியாமல் கழுத்தைத் தடவிப் பார்த்தேன். கழுத்திலும் எவையும் இல்லை. காது?? நல்லவேளை, வைரத்தோடு! கழட்டவில்லை. இருக்கு. மூக்கு?? ம்ம்ம்ம் மூக்குத்தியும் இருக்கு. அப்போ வளையல்கள், சங்கிலி, நெக்லஸ் போன்றவைதான் காணோமா? எங்கே வைச்சேன்?? ஆஹா, குளிக்கப் போனப்போக் கழட்டினோமே. சட்டுனு குளியலறைக்குப் போய்ப் பார்த்தேன். அங்கே என்னோட சோப்புப் பெட்டி மட்டுமே வைச்ச இடத்தில் இருந்தது. எனக்கப்புறம் யாரு குளிக்கப் போனாங்க?? ஒவ்வொருத்தரா விசாரிச்சேன். யாருமே நாங்க பார்க்கவே இல்லைனுட்டாங்க. அதிர்ச்சி அடைந்தேன். அப்பாவுக்கு என்ன பதில் சொல்றது??
அடக்கடவுளே இப்படி கூடவா ஒரு அசமஞ்சம் இருக்கும்(:D)!!! புஸ்தகம் எடுத்துக்கலையேன்னு அழுவாங்களாம், நகையை கழட்டி வெச்ச நினைவு கூட இல்லாமல் விளையாட்டாம்! நல்ல விளையாட்டா இருக்கே இது!
ReplyDeleteஅப்பா வந்து தோலை உரிச்சாரா? :D உரிச்ச அப்புறமா பின்னாடி இருந்து அந்த குட்டி பையன் கோபு நகை என் கிட்ட தான் இருக்குன்னு வெளில வந்துருப்பானே? :P
//ஒவ்வொருத்தரா விசாரிச்சேன்//
ReplyDeleteஓன்னு அழுது ஊரைக் கூட்டினதுக்கு பேரு உங்க ஊருல விசாரிப்பாக்கும்? :P
இந்த கல்யாணக் கதையை வெச்சு ஒரு மெகா சீரியல் எடுக்கலாம் போலருக்கே! எல்லா விதமான அம்சங்களும் ட்விஸ்டுகளும் நிரம்பி வழிகிறது! கொடிக்குட்டி லைக்ஸ் இட்!
ReplyDeleteகல்யாண நகைகளை இப்படி அஜாக்கிரதையா வெச்சுட்டீங்களே கீதாம்மா.. அப்றம் என்ன ஆச்சு??.
ReplyDeleteஹிஹி இவ்வளவு மறதி ஆகாது
ReplyDeleteபோர்க்கொடி, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், யாரைப் பார்த்து அசமஞ்சம்னு சொல்றீங்க?? தானைத் தலைவினு ஞாபகம் இருக்கட்டும், ஒரு காலத்தில் என்னோட பேரையோ, என்னோட கமெண்டையோ பார்த்தாலே அலறிட்டு ஓடினதெல்லாம் மறந்து போச்சாக்கும்??? :P:P:P:P:P
ReplyDeleteஅது வந்து போர்க்கொடி, நகை போடறதே வழக்கமில்லாமல் இருந்ததா? அதனால் நினைவில் இல்லை. ஒரு நாள், கிழமை, கல்யாணம், கார்த்தினு நகையைப் போட்டிருந்தால் நினைவில் இருந்திருக்குமோ என்னமோ. சொல்லப் போனால் எனக்குக் கல்யாணம் என்பதே அப்போ மறந்து போச்சுனு நினைக்கிறேன். வெளியே வந்தும் நினைவில் இல்லை. விளையாட்டிலே யாரோ கேலி செய்யறச்சே தான் நினைப்பே வந்தது! :)))))))))
ReplyDeleteஉரிச்ச அப்புறமா பின்னாடி இருந்து அந்த குட்டி பையன் கோபு நகை என் கிட்ட தான் இருக்குன்னு வெளில வந்துருப்பானே? :P//
ReplyDeletewho is that kutti paiyar Gopu???அதெல்லாம் அப்பா வரைக்கும் போக விடுவோமா? :P
ஓன்னு அழுது ஊரைக் கூட்டினதுக்கு பேரு உங்க ஊருல விசாரிப்பாக்கும்? :P//
ReplyDeleteஅழுகையா?? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்பயம் இருந்தது! இல்லைனு சொல்ல முடியாது.
இந்த கல்யாணக் கதையை வெச்சு ஒரு மெகா சீரியல் எடுக்கலாம் போலருக்கே! எல்லா விதமான அம்சங்களும் ட்விஸ்டுகளும் நிரம்பி வழிகிறது! கொடிக்குட்டி லைக்ஸ் இட்!//
ReplyDeleteக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இது கதையா உங்களுக்கு?? அநியாயமா இல்லை??
எத்தனை நாளைக்குக் கொடிக்குட்டி?? கொடிக்கொள்ளுப்பாட்டி! இதான் நிஜம். துர்கா இல்லைனா என்ன? நாங்க சொல்லுவோமே!
@அமைதி,
ReplyDeleteஅமைதி, அமைதி, அதெல்லாம் ஒண்ணும் ஆகலை. ஹிஹிஹி, இத்தனை பேர் கவலைப்படறீங்களே~ :D
வாங்க, எல்கே, இதை மறதினு சொல்ல முடியாது. (சமாளிப்பு) பழக்கமே இல்லையா?? நகையை எடுத்துப் போட்டுக்கணும்னு தோணலை. :))))))))
ReplyDeleteஅடடே ! ஆசை பட்டு சேர்த்து வைத்த புத்தகங்கள் கொண்டு போக முடியாதது சற்று வருத்தமான விஷயம் தான்......
ReplyDeleteஎங்க பக்கத்து வீட்டு செல்வியக்கா ,மகேஷ் எல்லாம் மாதம் புது புடைவைகள் நான்காவது வாங்கி விடுவார்கள் ;இதுக்கு அந்த மாமியே பரவா இல்லெ!
வாங்க ப்ரியா, நீங்க சொல்வது உண்மைதான். பல பெண்களும் அப்படித் தான் இருக்காங்க. :( என்ன செய்ய முடியும்???
ReplyDeleteஇதென்ன சஸ்பென்ஸ் ! அடடே அப்பாவுக்கு பதில் சொல்வது ஒரு புறம் இருக்கட்டும் ;உங்களுக்கு யார் மேலயும் சந்தேகம் வரலையா
ReplyDeleteகீதாம்மா!
இல்லெ ,கொடி,புவனா மாதிரி குறும்பு காரிங்க ஏதாவது எடுத்து வைத்து உங்களுக்கு விளையாட்டு காண்பிப்பதற்கு செய்து இருக்கலாம் தானே :)
//போர்க்கொடி, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், யாரைப் பார்த்து அசமஞ்சம்னு சொல்றீங்க?? தானைத் தலைவினு ஞாபகம் இருக்கட்டும், ஒரு காலத்தில் என்னோட பேரையோ, என்னோட கமெண்டையோ பார்த்தாலே அலறிட்டு ஓடினதெல்லாம் மறந்து போச்சாக்கும்??? :P:P:P:P:P//
ReplyDeleteஅது தானே ! உங்களுக்கு எவ்வளோ தைரியம் கொடி ! எங்க தலைவி தங்க தலைவி தெரியுமா
இந்த ஒரு தடவை தான் உங்களை மன்னிப்பார் !
ஆமா கீதாம்மா எப்போ கொடி புறமுதுகு காட்டி ஓடினார் ?
//அது வந்து போர்க்கொடி, நகை போடறதே வழக்கமில்லாமல் இருந்ததா? அதனால் நினைவில் இல்லை. ஒரு நாள், கிழமை, கல்யாணம், கார்த்தினு நகையைப் போட்டிருந்தால் நினைவில் இருந்திருக்குமோ என்னமோ. சொல்லப் போனால் எனக்குக் கல்யாணம் என்பதே அப்போ மறந்து போச்சுனு நினைக்கிறேன். வெளியே வந்தும் நினைவில் இல்லை. விளையாட்டிலே யாரோ கேலி செய்யறச்சே தான் நினைப்பே வந்தது! :)))))))))//
ReplyDeleteஅப்போ நீங்க ரொம்ப சுட்டி பொண்ணா ,அப்பாவியா இருந்து இருப்பீங்க போல இருக்கு ;படிக்க சுவையாக இருக்கு
//உரிச்ச அப்புறமா பின்னாடி இருந்து அந்த குட்டி பையன் கோபு நகை என் கிட்ட தான் இருக்குன்னு வெளில வந்துருப்பானே? :P//
who is that kutti paiyar Gopu???அதெல்லாம் அப்பா வரைக்கும் போக விடுவோமா? :ப//
கொடி உங்களுக்கு உறவா கீதாம்மா !
ஓன்னு அழுது ஊரைக் கூட்டினதுக்கு பேரு உங்க ஊருல விசாரிப்பாக்கும்? :P//
ReplyDeleteஅழுகையா?? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்பயம் இருந்தது! இல்லைனு சொல்ல முடியாது.//
அழுகையா ! எங்க தலைவிக்கா ! நெவெர் (அவங்களுக்கு அழ வைத்து தானே பழக்கம் ன்னு யார் சொல்றது :) )
இந்த கல்யாணக் கதையை வெச்சு ஒரு மெகா சீரியல் எடுக்கலாம் போலருக்கே! எல்லா விதமான அம்சங்களும் ட்விஸ்டுகளும் நிரம்பி வழிகிறது! கொடிக்குட்டி லைக்ஸ் இட்!//
ReplyDeleteக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இது கதையா உங்களுக்கு?? அநியாயமா இல்லை??
எத்தனை நாளைக்குக் கொடிக்குட்டி?? கொடிக்கொள்ளுப்பாட்டி! இதான் நிஜம். துர்கா இல்லைனா என்ன? நாங்க சொல்லுவோமே!//
கதையல்ல ! உண்மை சம்பவம் என்று ஒரு வரியையும் நீங்க சேர்த்து கொள்ள வேண்டியது தான்
கொடிக்கொள்ளுப்பாட்டி! கூப்பிட ரொம்ப கஷ்டமா இருக்கே ! கொடி அக்கானு வேணா கூப்பிட்டு கொள்ளட்டுமா !
துர்கா யார் கீதாம்மா ?! அவங்களுக்கும் கொடிக்கும் என்ன வாய்கால் தகராறு ?!
நகைகள் கிடைத்ததும் மகிழ்ந்தீர்களா ? இல்லையா?
ReplyDeleteவாங்க ப்ரியா, அப்போ ஆற்காட்டார் விசிட், அதோட வேலை செய்யற அம்மாவும் வந்துட்டாங்க, போயிட்டேன். :)))))
ReplyDeleteபுத்தகங்களை எடுத்துட்டுப்போக முடியாதது ரொம்பவே வருத்தம் தான் எனக்கு. :( பல புத்தகங்களை இரவல் கொடுத்திருக்காங்க. திரும்பி வரவே இல்லை! அதிலே பல நல்ல நாவல்கள், பல அருமையான புத்தகங்கள் அடக்கம்! :(
இந்த ஒரு தடவை தான் உங்களை மன்னிப்பார் !
ReplyDeleteஆமா கீதாம்மா எப்போ கொடி புறமுதுகு காட்டி ஓடினார் ?//
இது என்ன சேம்சைட் கோல்??? பஸ்ஸுக்குவாங்க பேசிக்கிறேன். :P
அப்போ நீங்க ரொம்ப சுட்டி பொண்ணா ,அப்பாவியா இருந்து இருப்பீங்க போல இருக்கு ;படிக்க சுவையாக இருக்கு//
ReplyDeleteஹிஹிஹி, அப்பாவின்னா ஏடிஎம் சொல்ற அப்பாவி இல்லைதானே?? அப்போ சரி! :))))))))) வெளியே கிளம்பும்போது நல்லா கிராண்டா டிரஸ் பண்ணிக்கறதுங்கறது இப்போவும் என் கிட்டே கிடையாது. இதனாலே என் குழந்தைங்களுக்குக் கோபம் கூட வரும்! :)))))) பல சமயங்களிலும் புடைவை மாற்றாமல் வீட்டில் கட்டினதோடேயே கிளம்புவேன்! மாத்திக்கணும்னு தோணாது! ஏன்னு தெரியலை!
கொடி உங்களுக்கு உறவா கீதாம்மா !//
ReplyDeleteஎல்லாருமே எனக்கு உறவு தான், நீங்களும் சேர்த்து உறவே.:)
ஆமா கீதாம்மா எப்போ கொடி புறமுதுகு காட்டி ஓடினார் ?//
ReplyDeleteஹிஹிஹி, அ.வ.சி. இதுக்குத் தப்பாப் பின்னூட்டிட்டேன். இதோட சேர்த்து ஒரு பஸ்ஸையும் ஓட்டிட்டு இருந்தேனா? அதிலே போடவேண்டியது இங்கே வந்திருக்கு! :P
கொடி தானே?? ஆரம்பகாலத்திலே நம்மளைக் கண்டாலே காத தூரம் ஓடுவாங்க இல்லை?? தலைவி வந்தாச்சுன்னா போதும், உடனே இடத்தைக் காலி செய்வாங்க, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வள்ளவு மரியாதை! :))))))))
அழுகையா ! எங்க தலைவிக்கா ! நெவெர் (அவங்களுக்கு அழ வைத்து தானே பழக்கம் ன்னு யார் சொல்றது :) )//
ReplyDeleteக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தப்பாப்போட்ட பின்னூட்டத்தை இங்கே போட்டுக்கறேன். வாபஸ் எல்லாம் வாங்கலை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
கொ.கொ.பா. னு கூப்பிடலாமே ப்ரியா?? துர்காவா?? அவங்க சிங்கையிலே படிச்சுட்டுஇருந்தாங்க. அவங்க தான் போர்க்கொடிக்கு கொ.பா.னு பேரு வச்சது. சாட்டிங்கிலே சொல்லுவாங்க. இப்போ ஆளையே காணோம். :(
ReplyDeletevaanga Maadevi, marupadiyum ARCOT visit. innaikku thonthiravu thanakalai. Yes, jewels ellaam kidaichathum santhoshama irunthathu enbathai vida nimmathiya irunthathunu sollalaam. sorry for thanglish. fonts problem. :(
ReplyDeleteபுவனாவையும் கொடியையும் நம்ம கட்சியிலே சேர்த்து கொள்ளலாம் கீதாம்மா
ReplyDeleteகொஞ்சம் பெரிய மனசு பண்ணி மறுபரிசீலனை செய்யலாமே .............
எல்லோரும் உறவு காரர் ன்னு நீங்க தானே சொன்னிங்க!
போர்க்கொடியை சேர்த்துக்கலாம் ஆனால் புவானவை முடியவே முடியாது
ReplyDeleteப்ரியா, அதெல்லாம் ரெண்டு பேரும் வேண்டாம்! :)))))) அவங்க எதிர்க்கட்சிக்காக உளவு பார்ப்பாங்க! நீங்க அப்பாவி உங்களுக்கு ஒண்ணும் தெரியலை! :))))))))))))))
ReplyDeleteஎல்கே, ரெண்டுபேருமே வேண்டாம். எதிர்க்கட்சியிலேயே இருக்கட்டும்.:P
ReplyDeleteநமக்கு கூட எதிர் கட்சி இருக்கா டீச்சர் !
ReplyDeleteஆமாம் கீதாம்மா
ReplyDeleteநான் ரொம்ப அப்பாவி ! உலகமே தெரியலை
எனக்கு உங்க அமைச்சரவையில நிதி அமைச்சர் போஸ்ட் இருந்தா கொடுத்து உதவுங்களேன்
கீதாம்மா ! இன்னொரு விஷயம்
ReplyDeleteஎன்னையே அக்கா போஸ்ட் ல இருந்து அப்பாவி தள்ளி வைச்சுட்டா !
இது நாலாவது தடவை :)
அன்புள்ள கீது பாட்டி,
ReplyDeleteநான் இங்கு நலம். நீங்களும் சாம்பு தாத்தாவும் நலமா? அப்புறம் உங்களுக்கு வர மறதி எக்கச்சக்கமாக ஆகிவிட்டது (ஆமாம், கல்யாணம் போது இருந்ததை விட பல மடங்கே தான்!) எனக்கு எப்படி தெரியுமா? பின்னே நான் புறமுதுகிட்டு ஓடினேன்னு நடக்காததை எல்லாம் நடந்ததாய் சொல்லிக் கொண்டு இருக்கேளே.. சீக்கிரமா டாக்டரை பார்க்கவும்! அதுக்கு அப்புறம், இந்த பஸ்ல சொன்னா ட்ரெயின்ல சொன்னானு எதையாவது அனத்தாம, சீக்கிரமா கல்யாணத்தை பண்ணுங்கோ. அப்புறம் நான் கொள்ளுப்பாட்டி ஆகி நீங்க கொள்ளுவின் எள்ளு ஆகிடுவேள். டாடா பை!
அன்புடன்,
கொடிக்குட்டி.
பி.கு: எல்லா வாக்கியத்துக்கு பின்னும் மறக்காமல் ஸ்மைலி போட்டுக் கொள்ளவும்.
தாம் சொல்வது இன்னது தான் என்று தெரியாமல் சொல்லும் இவர்களை மன்னித்து ஏற்று கொள்ளுங்கள் தலைவேயே
ReplyDelete(கருணை கடலே).....
கல்யாண கலாட்டா க்கு போட்டியா பதில்கள்ள இன்னொரு கலாட்டா நடக்கறதே? :)
ReplyDeleteசில சமயம் இப்படி தான் கவனம் இல்லாம இருக்கறோம் இல்லையா? எனக்கு இப்படித்தான் ஆத்து வாசலில் காரை நிறத்திவிட்டு டிக்கியில் இருந்து சாமானை எடுத்து விட்டு சாவியை அதிலேயே விட்டு விட்டு உள்ளே வந்து விட்டேன். ரொம்ப நேரம் கழித்து தான் சாவி நினைப்பு வந்துது அது இடத்துல இல்லைன உடனே. நல்ல வேளை காரும் சாவியும் அங்கேயே இருந்தது. வெளி இடங்களில் இப்படி விட்டுருந்தால் கார் கோவிந்தா ஆகியிருக்கும். இப்படி ரொம்பவே absent minded நான்.
சே! இந்த ரகளையை எல்லாம் மிஸ் பண்ணிட்டேனே!
ReplyDeleteவாங்க திவா, ஆனாலும் ரொம்ப லேட்! :P ம்ம்ம்ம்ம் எந்த கலாட்டாவைச் சொல்றீங்க?? கல்யாண கலாட்டாவிலே நேரிலே கலந்துக்க முடியலைனு சொல்றீங்களா? :)))))) இணைய கலாட்டாவிலேயா?? ஹிஹிஹி, எங்கே நீங்க இணையத்துக்கு வரதே பெரிய விஷயம். கலாட்டாவெல்லாம் முடிஞ்சதும் சாவகாசமா வந்து குசலம் விசாரிக்கிறீங்க! :P
ReplyDelete