எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, April 03, 2011

எங்கே போகிறோம்????

//இதை தனி பதிலாக போடுகிறேன். விருப்பம் இருந்தால் வெளி இடுங்கள் controversial ஆகத் தோன்றினால் தயவு செய்து moderate/delete செய்து விடுங்கள்.

நீங்கள் பெண் பார்க்கும் போது உங்களுக்கு எதுவும் எதிர்பார்ப்புகள் இல்லை, மாமாவிடம் தனியாக பேசவில்லை. உங்கள் மற்றும் உங்கள் உறவினர்களிடம் கலந்து ஆலோசிக்காமலே திடீரென கல்யாணம் நிச்சயம் ஆனது என்று கூறினீர்கள். பொதுவாகவே உங்கள் தலைமுறையும் அதற்கு முன்பும் அப்படி தான் இல்லையா? ஆனால் இப்பொழுதோ பெண் பார்க்கும் போதும் சரி, திருமணம் வரையும் சரி பேசிக் கொள்கிறார்கள். இவ்ளோ செய்தும் கல்யாணத்திற்கு பிறகு compatibility problems. இப்போதைய பெண் தரப்பில் இருந்து அதிக எதிர்பார்ப்புகள், புக்ககத்து காராளை மதிக்காமை, verbally even physically abusive என்று இருக்கிறதே.
அந்த அளவிற்கு எது இந்த தலைமுறையை மாற்றியது? அகமுடையான் கெட்ட பழக்கத்துடன் இருந்தால் கூட பரவா இல்லை ஆனால் தன் பிடியில் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது போல உள்ளதே? மன்னிக்கவும் நான் generalise செய்யவில்லை. ஆனால் இந்த மாற்றத்தை போன தலைமுறைக்கும் தற்போதைய தலைமுறைக்கும் இடையில் நன்கு தெரிகின்றது. போக போக கல்யாணம் என்ற institution என்னாகுமோ?

தவறாக இருந்தால் மன்னிக்கவும். மீண்டும் விருப்பம் இருந்தால் வெளி இடுங்கள் controversial ஆகத் தோன்றினால் தயவு செய்து moderate/delete செய்து விடுங்கள். //


மேலே காண்பது இனிய இளைய நண்பர் ஒருவரின் சந்தேகம். வெளிநாட்டு வாசிதான். என்றாலும் இவரின் இந்த சந்தேகத்தைப் போலவே உள்நாட்டில் இருந்தும் சில இளம் நண்பர்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். சிலருடைய கேள்விகளையும், அவங்களோட பிரச்னைகளையும் படிச்சால் மனம் வேதனையில் ஆழ்கிறது. இதற்கு என்ன காரணம் என்றும் கேட்கின்றனர். பொதுவாகப் பெண்ணை அடக்கி வைத்து வளர்த்தது போல் ஒரு மனப்பான்மை உருவாக்கப் பட்டுவிட்டது. உருவாக்கியதும் ஆண்களில் பெரும்பான்மையினரே. இது ஒரு விதத்தில் அவர்களுக்கு செளகரியம் என்று நினைக்கிறார்களோ என்னமோ! என்றாலும் இப்போதைய ஊடகங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. சமீபத்தில் இரண்டு செய்திகள் மனதை மிகவும் பாதித்தது. ஒரு செய்தி என்ன சொல்கிறது என்றால்:

பிரபல தொலைக்காட்சி நிறுவனம் நடத்தும் போட்டி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கணவன் மனைவி ஜோடிகளில் ஒரு ஜோடியில் அந்தப் பெண்மணி தன் கணவனுடன் பார்களுக்குச் செல்வதாகவும், காக்டெயில் எனப்படும் மதுபானத்தையும் ருசிப்பதாகவும், இப்போதெல்லாம் நண்பர்களை வீட்டுக்கே வரவழைத்து காக்டெயிலைக் கலந்து கொடுக்கும் அளவுக்கு இதில் தேர்ச்சி பெற்றுவிட்டதாயும் சொல்லி இருக்கிறார். இதைச் சொல்லும்போது அவர் மிகவும் பெருமையுடனும் சந்தோஷமுடனும் இருந்திருக்கிறார். ஏதோ மகத்தான காரியத்தைச் சாதித்துவிட்ட பெருமையாம் அவருக்கு. இதை அந்த நிகழ்ச்சியைப் பார்த்த ஒருவரும் என்னிடம் கூறினார். அதோடு ஒரு பத்திரிகையிலும் இது குறித்து வருந்தி இன்னொரு பெண் எழுதி இருந்ததையும் படித்தேன். ஆண்கள் குடித்தாலே அது உடல் நலக்கேடு, பின்னால் பிறக்கப்போகும் குழந்தைகளைப் பாதிக்கும் என்னும்போது அந்தக் கருவைத் தாங்கும் பெண்ணுக்கு பாதிப்பு எந்த அளவில் இருக்கும் என்பதை நாமே யோசிக்க வேண்டியது தான். ஆனால் இதெல்லாம் தான் சுதந்திரம், நாகரீகம் என்று ஆகி இருக்கையில் நான் இதைக் குறித்துச் சொல்லுவதே பலருக்கும் பிடிக்காது. உணர்ந்து திருந்தினால் தான் உண்டு.

இன்னொன்று இந்த மாதம் மங்கையர் மலர் மாதப் பத்திரிகையில் படித்தது. அதில் ஹைதராபாத்தில் ஒரு பேக்கரியில் விவாகரத்து கேக் மிகவும் பிரபலமாம்.அதிர்ச்சி அடைந்து படித்தபோது, பெண்கள் எந்த அளவுக்கு விகாரமான மனநிலை படைத்துவிட்டார்கள் எனப் புரிந்ததில் இருந்து வேதனை உச்சத்துக்குப் போய்விட்டது. முதன் முதலில் ஒரு பெண் விவாகரத்து ஆனதைக் கொண்டாட கேக் ஆர்டர் செய்து சிநேகிதர்களையும், சிநேகிதிகளையும் வரவழைத்து காக்டெயில் பார்ட்டியோடு(?) கொண்டாடி இருக்கிறார். அதன் பின்னர் இதற்கெனவே அவருக்குத் தனி ஆர்டர்கள் வருகின்றனவாம். எல்லாப் பெண்களும் சுற்றி நின்று, கேக்கின் தலையில் விவாகரத்து செய்த கணவனின் தலையை வெட்டிப் போட்டிருப்பதாய்க்கற்பனை செய்து சிவப்பு நிற பெர்ரி சாஸோ என்னமோ ஊற்றி வழிய விடுவது போல் அலங்கரிக்கச் சொல்கின்றனராம். இது தான் பெண்கள் விரும்பும் கேக் டிசைனாம். இந்தப் பெண்களுக்குக் குழந்தைகள் பிறந்தால் அவர்கள் எப்படி வளருவார்கள்??? ஒரு சந்தோஷமான, ஆரோக்கியமான, நாட்டுக்குப் பயனளிக்கக் கூடிய குழந்தைகளைப் பெற்று நல்லதொரு குடிமகனை உருவாக்க முடியுமா இவர்களால்???


எங்கே போகிறோம்?? புரியவில்லை. இப்போதைக்கு இருண்டே கிடக்கிறது. நம்பிக்கையின் கீற்றுக் கூடத் தெரியவில்லை. :(((((((((((((

49 comments:

 1. ம் இதை ஒரு பதிவில் சொல்லமுடியுமா என்பதுக் கேள்வி . மாலைக்குள் விரிவானப் பின்னூட்டம் இடுகிறேன்

  ReplyDelete
 2. வாங்க எல்கே, உங்களைப் போன்ற இளைஞர்களின் புரிதலில் தான் இதற்கெல்லாம் ஒரு வழி பிறக்கவேண்டும். இன்னும் சில விஷயங்களும் தெரிய வந்தது. மனம் வேதனை அடைகிறது ரொம்பவே. :((((((((((

  ReplyDelete
 3. My general observations of your posts s that u look into social issues with 1 and the same scale. Same size doesn't fit all.

  Refer to the 'divorce cake'. Simple. When there s 'wedding cake', y cant there b 'divorce cake'?

  When a marriage can b celebrated, y cant b a divorce too?

  Ur marriage s a success, does it mean everyone else's so?

  The answers r obvious now to u.

  As u know, actor Prasanth was conned into a marriage with a cheat who was already married, and the man who married her, s living in chennai. The actor came to know all only after a child was born to him in the fraud marriage.

  After a long court battle, the marriage was annuled with the grant of divorce to him. He s now happy.

  Men like him who were cheated by women have formed an assn in Ch and they invited him to celebrate his divorce. A cocktail party followed.

  A divorce that helps a woman or a man wriggle out of the cruel clutches of an animal ought to b celebrated.

  Such celebrations shd be appreciated.

  Geetha Sambasivam, u r lucky because Mr S is a gentleman.

  Not every woman s lucky because not every man s a gentleman

  ReplyDelete
 4. அன்றையக் காலங்களில் எதிர்பார்ப்பு என்பதுக் குறைவு. எதிர்பார்ப்பு இல்லாவிடில் ஏமாற்றங்கள் இருக்காது.

  அடுத்து ஒப்பீடு. தன் தோழியின் கணவன் /நண்பனின் மனைவி இவர்களைக் கொண்டு தங்கள் துணைகளை மதிப்பீடு செய்வது .

  கடமை/பொறுப்பு என்னவென்று யாருக்கும் தெரிவதில்லை . தெரிந்துகொள்ளவும் விரும்புவதில்லை.

  சில அரைகுறை பெண்ணுரிமைவாதிகளின் கட்டுரைகளை படிப்பது/ அல்லது பேச்சை கேட்பது. அதுதான் சரி என்று நினைத்துக் கொள்வது.

  ReplyDelete
 5. @joe

  its not good to compare with authors life to what she is writing.

  if you take example what you have cited, thats what happens in most of the cine stars isnt it?

  dont bring examples from cini field. the point here is why there is much divorce happening even if the ppl involved used to talk before marriage .

  ReplyDelete
 6. மொழ நீளம் பின்னூட்டம் எழுதி போட்டா ப்ளாகர் பூதம் விழுங்கிட்டு சாரி, அதை போட முடியாதுன்னு சொல்லறது. கற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்!

  ReplyDelete
 7. ம்ம்ம்ம்ம் திருப்பி..
  எல்கே சொன்ன எதிர்பார்ப்பு முக்கிய பிரச்சினை.

  அப்புறம் ஈகோ பெரிய பிரச்சினையா உருவெடுத்துக் கொண்டிருக்கு சமுதாயத்திலே. நீ என்ன சொல்லறது நான் என்ன கேட்கிறது என்பது பிரச்சினைகளை கிளரி விடுறதைத்தவிர வேறு ஒண்ணும் உருப்படியா செய்யாது.
  முன்னே பெண் அடங்கிப்போவாள் என்று பாரம்பரியம் இருந்த போது பிரச்சினை ஒரு மாதிரியான தீர்வு இருந்தது. சரியான மாற்று இல்லாமல் இதை பெண் உரிமைன்னு சொல்லி ஒழிச்சாச்சு.
  முன்னே கடவுள் நம்பிக்கை மூட நம்பிக்கை; பகுத்தறிவுதான் சரின்னு சொல்லி சமுதாயத்தை சீர் குலைச்சாப்போலத்தான் இதுவும். கடவுள் நம்பிக்கையும் இல்லை; பகுத்தறிவும் இல்லை. தவிக்கிறோம்.

  ReplyDelete
 8. ஜோ, வருகைக்கு நன்றி. முதல்லே இருந்தே உங்களுக்கு ஓர் அபிப்பிராயம் ஏற்பட்டிருப்பதால் அதை நான் மாற்ற முடியாது அல்லவா?? உங்கள் கருத்து உங்களுக்கு, என் கருத்து எனக்கு. ஆமாம், நீங்க சொல்றாப்போல் விவாகரத்தையும் கொண்டாடலாம்தான். யார் வேண்டாம்னு சொன்னது????? கேக் வெட்டிக் கொண்டாடலாமே. நல்லது. :))))))))

  பெண்களுக்கு மட்டுமே விவாகரத்தினால் பாதிப்பா?? இல்லை ஆண்களுக்கும் இருக்குத்தான், நான் எதுக்குப் பிரஷாந்த் பற்றி எல்லாம் எழுதணும்னு எதிர்பார்க்கிறீங்க?? என்னோட கருத்து எப்போவுமே இருபாலாருக்கும் பொதுவானதே. ஆண்களில் எவ்வாறு வக்கிரமானவர்கள் இருக்கிறார்களோ அவ்வாறே பெண்களிலும் இருக்கின்றனர் என்பதைக் காட்டி உள்ளேன்.

  ஆம், உண்மைதான், எனக்கு அதிர்ஷ்டம் என்றே வைத்துக்கொள்ளலாம். ஆனால் அதற்கும் நான் விலை கொடுத்திருக்கிறேன். எதுவுமே தக்க புரிதல் இல்லாமல் நடக்காது. நடக்கவும் முடியாது. நீ உயர்வா, நான் உயர்வா என்ற பிரச்னை இன்று பெரும்பாலான குடும்பங்களில். எனக்குத் தெரிந்து கணவனை அடித்த பெண்ணை இருபது வருடங்கள் முன்னரே பார்த்திருக்கிறேன். கணவன் பொறுத்துத் தான் போனார். இப்போதும் இன்றும் அந்தப் பெண்ணோடு தான் வாழ்கிறார். ஆகப் பொறுமையின் சின்னங்கள் ஆண்களிலும் உண்டு. என்னிடம் இளைய நண்பர் ஒருத்தர் கேட்டதுக்கு நான் என் கருத்தைக் கூறி உள்ளேன். நீங்க ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியம் ஏதும் இல்லை. நன்றி.

  ReplyDelete
 9. எல்கே, உண்மை தான் எதிர்பார்ப்பு என்பது கூடாதுதான். ஆனால் இன்றைய உலகில் பணம், பணம், மேலும் பணம், ஆளுக்கு ஒரு கார், குழந்தைகளுக்குத் தனிக் கார் என்றுதான் அனைவருக்கும் எண்ணம் வருகிறது. அதற்குத் தேவையான பணத்தின் பின்னே ஓடவே நேரம் இல்லை. இதிலே குடும்பத்தை எங்கே கவனிக்கிறது? குழந்தைகளை எங்கே கவனிக்கிறது?

  ReplyDelete
 10. @திவா, என்னிக்கோ வந்தால் ப்ளாகருக்கு அடையாளம் தெரிஞ்சிருக்காது! :P:P:P

  ReplyDelete
 11. @திவா, மீண்டும் கொடுத்தமைக்கு முதலில் நன்றி. பெண் அடங்கிப் போவாள் என்பதோ அடங்குவாள் என்பதோ அடக்குவாள் என்பதோ தனியாக இருக்கட்டும். எனக்குத் தெரிந்து பெண் ஆட்சி தான் செலுத்துகிறாள். பல குடும்பங்களிலும் அப்படித் தான் நடக்கிறது. அப்படி இருந்தும் குறைப்படும் பெண்களையும் பார்க்கிறேன்.

  முக்கியக் காரணம் மற்றவர்களோடு ஒப்பிடல், அவங்க கிட்டே இது இருக்கு, நம்ம குழந்தை பார்த்து ஏங்குதே, நமக்கும் அது வாங்கித் தரணும் நம்ம குழந்தைக்கு என்ற எண்ணம் இன்றைய தாய்மார்களிடம் நிறையவே இருக்கிறது. எந்தப் பொருளானாலும் நம் குழந்தைக்குத் தேவையா, நீண்டநாட்கள் அந்தப் பொருளின் பயன்பாடு இருக்குமா என்றெல்லாம் யோசிப்பதில்லை. வாங்கிடறாங்க. இது பொம்மைகள், துணிகள், விளையாட்டுப் பொருட்கள் என்று எதுவானாலும் இருக்கலாம். ஒரே குழந்தையிடம் ஏராளமான பொருட்கள் இருக்கும். பாதி விளையாட்டுப் பொருட்களைக் குழந்தை எடுத்துக்கூடப் பார்த்திருக்காது.

  ReplyDelete
 12. @திவா, நீங்க சொல்லுவது போல் பெண்களுக்கு ஆன்மீகம் என்பது குறைந்து வருகிறது. பெண்களை உயர்த்துவது இதுதான் எனப் புரிந்துகொள்ளாமல் தொலைக்காட்சி மோகத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். ஒரு தினசரிப் பத்திரிகையில் படித்த செய்தி:

  அம்மா குழந்தைக்குக் கணக்குச் சொல்லிக் கொடுக்கையில் 3 என்ற எண்ணை 3 என்ற எண்ணால் பெருக்கினால் ஒன்பது எனச் சொல்லிக் கொடுக்கையில் குழந்தை குறுக்கிட்டு இல்லை 3 தான் என்று சொன்னதாம். அம்மா எவ்வளவு விளக்கியும் புரிந்து கொள்ளாமல் அழ ஆரம்பிக்கவே, விட்டுட்டாங்க அந்த அம்மா.

  அப்புறமாத் தொலைக்காட்சி பார்க்கையில் ஒரு விளம்பரம் ஷாம்பூவுக்காக வருகிறது. அதிலேயும் ஷில்பா என்ற பெயர் கொண்ட மாத்ஸ் டீச்சர் (விளம்பர மாடல்) ஒரு பெண் குழந்தையிடம், (இதுவும் மாடல்) மூன்றை மூன்றால் பெருக்கினால் மூன்று எனவும் அந்தக் குறிப்பிட்ட ஷாம்புவை உபயோகித்தால் மூன்று இஞ்ச் கூந்தல் வளரும்னு சொல்லிக் கொடுக்கிறார். அதற்கு முன்னர் அந்த விளம்பரக் குழந்தை ஒன்பது எனச் சரியான பதிலைக் கொடுக்கையில் இல்லை தப்புனும் சொல்கிறார். இந்த விளம்பரத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் இந்தக் குழந்தைக்கு அது மனதில் பதிய உண்மையான கணக்கை ஏற்க மாட்டேன் என்கிறது. குழந்தையிடம் எப்படிச் சொல்லிப் புரிய வைக்க என அந்தத் தாய் கேட்டிருந்தார். :(((((((((((((

  ReplyDelete
 13. “”Refer to the 'divorce cake'. Simple. When there s 'wedding cake', y cant there b 'divorce cake'?””

  With all due respect I beg to differ ! கேக் , செலிப்ரேஷன் எல்லாம் ஒரு fassard கூட இருக்கலாம் ..False sence of an inflated EGO and selfesteem is a possibility . வெளில இப்ப தான் ரொம்ப happyனு காண்பித்துக்கொள்ளும் பெண்களில் / ஆண்களில் முக்கால் வாசி பேர்கள் divorce இனால் சுகப்பட்டும் விடுவதில்லை வெஸ்டெர்னைஸ்ட் ஆறேன் பேர்வழின்னு தன் சந்தோஷத்தை குறைத்துக்கொள்ளவும் தவறியதில்லை

  ReplyDelete
 14. Realistic ஆ பாத்தா Economical independence ஒரு reason . அந்த காலத்துலயும் சேர்ந்து இருந்தவா எல்லாரும் சந்தோஷமா தான் இருந்தாளானு தெரிஞ்சுக்கறது கஷ்ட்டம் . அப்போ பெண்களுக்கு அந்த தைரியம்,உரிமை கொடுக்கப்படவில்லை , இல்லை. ஏன்னா Economically dependent . Divorce பண்ணிட்டு எங்க போக எங்கிற பயம் பெரும்பான்மை. Hindu law 4 ரீசன் இருந்தா டிவோர்ஸ் ஐ அனுமதித்தது.1) Adultery, 2)கொடுமைபடுத்தறது, (sadism , cruelty) 3) Impotence 4) கைவிடப்பட்டு கணவன் ஓடிப்போய் 3 வருஷத்துக்கு மேல ஆயிட்டா. காசு பணம்ங்கறது ஒரு பக்கம் ஒரு காரணமா இருந்தாலும் Social norms ஒரு ஸ்ட்ராங்க் influence பெண்களுக்கு . மானம் மரியாதை போய்டும் . புல்லானாலும் புருஷன் சென்டிமென்ட் ஒரு BRAINWASH STATUS க்கு இருந்ததும்/ திணிக்கப்பட்டதும் ஒருபக்க உண்மை !! அதையும் நாம பாக்காம விடமுடியாது.. அந்த எண்ணம் இயல்பா இருந்தா தானே acceptance ங்கறது வரும் அப்புறம் சமாதானம் !! எத்தனை அன்றைய வழக்கத்தில் வளர்க்கப்பட்ட பெண்கள் தங்கள் அந்தரங்கத்தை பிறத்தியாரிடம் சொல்லியிருப்பார்கள்னு எனக்கு தோனும் .அந்த சமுதாயத்திலும் SADIST கனவன் கிட்டே இருந்து விவாகரத்து செய்துகொண்டு வீட்டிற்க்கு வந்தவர்களையும் அவர்கள் குழந்தைகளையும் புறம் பேசியே கொல்லும் சுபாவம் சமூகத்துக்கும் இருந்தது . பெண் உரிமைகள் ஒரு பக்கம் ஒடுக்கப்பட்டதுன்னு உரிமை கொடுத்து அவர்கள் பெண்கள் என்னும் மஹா சக்தியாக தன் VALUES ஓட இருப்பார்கள் நு கல்வி சுதந்திரம் தந்தால் சிலர் வாழ்க்கையில் அது MISPLACED VALUES ஓட குடும்பங்கள் உடைந்து போகவும் காரணமாகிறது. இந்த கால எல்லா பெண்களும் அப்படினு GENERALISE பண்ண முடியாது . அந்த மாதிரி நடக்கையில் 2 தரப்பு உண்மைகள் பெரும்பாலும் வெளிவரதில்லை
  போன வாரம் என் closest friend is in personal stress.. 2 பேரும் நல்லவா . கருத்து வேறுபாடு . “”எனக்கு உன் feelings புரியறது னு சொல்லிட்டு அவளோட behaviour ஐ நான் reflect பண்ணறச்சே கண்ணில் அழுகையோட அவ கேட்ட கேள்வி என்னை சிந்திக்க வைச்சது “”I agree that you are my best friend whom I confide in. I know you know me well and understand me . But yet Jay how much what best percentage could you understand me when you are not really me !!”” உண்மைதான் ஏதோ ஒரளவுக்கு புரிஞ்சுக்க முடியுமே தவிற அவர்களாக முடியாது. கோபத்திலும் உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் முடிவுகள் balanced ஆதான் இருக்கறதில்லை Time heals hurt . . unfortunately in most of the cases they don’t wait for that time neither the timewait for them !!
  எதையும் எந்த context ல னும் நாமLum பாக்க தவறக்கூடாது
  Cultured behaviour , Maturity, Discrimination, Intergrity Foresight and forebearance ஒவ்வொரு INDIVIDUAL ஐயும் பொருத்தது.

  ReplyDelete
 15. கணவன் - மனைவி என்ற உறவு என்பது ஒரு பதவிதான் , அது உறவாக மாறவைப்பதில் உறவுகளுக்கு பங்கு உள்ளது. சமீபத்திய கசப்பான உண்மை என்னவெனில் பெண்ணை பெற்றவர்கள் , பெண்ணுக்கு விட்டுக்கொடுத்து வாழ கற்றுத்தருவதில்லை. ஆனால் பெண்தான் விட்டுத்தரவேண்டுமா என்ற கேள்விக்கு, இரு முக்கிய காரணங்கள் இருந்தது.

  திருமணம் என்பது சமுதாயத்தின் ஒரு அங்கீகரிப்பு. பல்வேறு நரகப்பார்வையில் இருந்து தப்பிக்க இது போன்ற பாதுகாப்பு தேவைப்படுகிறது. அங்கீகாரம் இல்லாத உலகத்தில் தனித்து நின்று போராட வேண்டும். ஒருவேளை , இப்போதெல்லாம் யாரும் பக்கத்து வீட்டை பார்த்துக் கொண்டே கண்விழிப்பதும் இல்லை தூங்குவதும் இல்லை.

  மற்றொன்று மிக முக்கிய காரணம் குழந்தைகள். அம்மா, பிள்ளை உறவு ,எல்லோரையும் விட முன்னூறு நாட்கள் அதிகம் நெருக்கமாக பின்னப்பட்டது. ஒரு குழந்தைக்காக எல்லாவற்றையும் விட்டுத்தர முடிவெடுக்கும் தாய், கணவனையும் விட்டுவிட முடிவெடுத்தது , அவன் நல்ல அப்பாவாகவும் இல்லையென்றால் மட்டுமே. இப்போது.....

  ஒரு உண்மையென்னவெனில் மன அழுத்ததின் காரணம் , முப்பது வருடங்களுக்கு முன் உறவு சார்ந்து இருந்தது, தற்போது சுய நலம் சார்ந்து உள்ளது. விவாகரத்திற்கு சுயநலமும் காரணமோ?

  ReplyDelete
 16. dont bring examples from cini field. the point here is why there is much divorce happening even if the ppl involved used to talk before marriage .  LK

  The point in her blog is also her aversion to the fact that women celebrate their divorces.

  Pl read the part on cake again.

  I referred to the author's life coz her outlook wd b deftly + if she had had the bitter exp of living with a bohemian.

  Even taking the sub of divorce alone, her attitude s unrealistic.

  Life s not ideal, but practical. People suffer.

  ReplyDelete
 17. நீங்க ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியம் ஏதும் இல்லை. நன்றி.

  Geetha S

  But u need to accept one thing.

  That s,

  There r many many marriages wherein living together may lead to homicides and, more often, suicides.

  Lives can b saved only thro divorces or separatons for the victim.

  Divorce is not to b caviled at. Lets not do that ever.

  Disagreement with me on the above pt will make u a very unrealistic person.

  ReplyDelete
 18. மொத்தத்தில் பொறுமை சகிப்புத் தன்மை இரு பக்கமும் இல்லை.

  எத்தனை கோணங்களில் எத்த்தனை விதங்களில் எத்தனை நபர்கள் கஷ்டப் படுகிறார்களோ.

  ReplyDelete
 19. ஜெயஸ்ரீ, இந்த விவாகரத்து என்பது இன்றுதான் புதுசா வந்தாப்போல் எல்லாரும் பேசறாங்க. ஆனால் பழைய காலங்களிலேயே, சரித்திர காலத்திலேயே விவாகரத்துச் செய்யப் பெண்ணுக்கு உரிமை இருந்திருக்கிறது. பொதுவாய் எந்தப் பெண்ணும் அவ்வளவு சீக்கிரம் பந்தத்தை விடுவித்துக்கொள்ள மாட்டாள் என்றே கூறுவார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் அப்படி எல்லாம் சொல்ல முடியலை. நாகரீகம், முற்போக்கு என்று சொல்லிச் சின்னச் சின்ன விஷயத்திற்கெல்லாம் விவாகரத்துக் கேட்கும் பெண்களைப்பற்றி எல்லாப் பத்திரிகைகளிலும் வந்து கொண்டே இருக்கிறது. எழுதுபவர்களும் கவுன்சலிங் செய்பவர்கள், மநோநல மருத்துவர்கள், வக்கீல்கள் போன்ற பிரபலங்களே. எல்லாருமே பொதுவான குற்றச்சாட்டாக வைப்பது சகிப்புத் தன்மை குறைந்து வருவதைத் தான்.

  ReplyDelete
 20. வசதி படைச்சவங்க அந்தக் காலங்களிலேயும் பெண்களுக்குச் சொத்துக் கொடுத்தாங்க. எங்க வீட்டிலேயே என் அத்தைக்குக் கடல் தாண்டிக் கன்னிகாதானம் என்று செய்த என் தாத்தா, பூமிதானம், கோதானம் என்று எல்லாத் தானங்களும் மாப்பிள்ளைக்குக் கொடுத்திருக்கார். இப்போ என்னுடைய அத்தையின் ஒரு பிள்ளை எங்க கிராமம் மேல்மங்கலத்தில் அத்தையின் மஞ்சள்காணி வீட்டில் தான் வசித்து வருகிறார். வசதி இல்லைனாக் கஷ்டம் தான்! :(((

  ReplyDelete
 21. Time heals hurt . . unfortunately in most of the cases they don’t wait for that time neither the timewait for them !! //

  முழுக்க முழுக்க உண்மை. காலம் எந்த மனப்புண்ணையும் ஆற்றும் என்பது சரியே. ஆனால் இன்றைய குழந்தைகளுக்குக் காத்திருப்பு என்பது ஒரு தண்டனையாக உள்ளது. :(

  ReplyDelete
 22. சாகம்பரி, வரவுக்கும்,கருத்துக்கும் நன்றிங்க. சுயநலமும் காரணம்தான் என்றாலும் எல்லாத்தையும் விட தான் என்ற எண்ணமே ஆக்கிரமிக்கிறது. இன்றைய பெண்களுக்குப் பணத்துக்கோ, உடைக்கோ, நகைகளுக்கோ, ஆடம்பர வாழ்க்கைக்கோ பஞ்சமில்லை. என்றாலும் அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்றே தெரியத்தான் இல்லை.

  ReplyDelete
 23. Even taking the sub of divorce alone, her attitude s unrealistic.//

  சிரிப்பே வருது ஜோ. எனக்குத் தெரிந்த பலர் வீடுகளிலேயே அவங்க பொண்ணுங்க விவாகரத்து பெற்று மறுமணம் செய்தவங்க இருக்காங்க. ஒவ்வொரு விவாகமும் ஏன் ரத்து செய்யப் பட்டது என்பதும் தெரியும். இப்போதைக்கு இவ்வளவு சொன்னால் போதும்னு நினைக்கிறேன். இங்கே என்னுடைய வருத்தம் வக்கிரமான கொண்டாட்டத்துக்கு மட்டுமே. :(

  ReplyDelete
 24. Lives can b saved only thro divorces or separatons for the victim.

  Divorce is not to b caviled at. Lets not do that ever.//

  இதுக்கு பதில் தேவையில்லைனு நினைக்கிறேன். கணவன் சரியில்லைனாலோ, அல்லது மனைவி சரியில்லைனாலோ விவாகரத்துத் தேவை என்பதும், அப்படி ரத்தானவங்களையும் நன்றாகத் தெரியும், பார்த்துப் பழகிக்கொண்டிருக்கிறேன். ஆகவே இங்கே நான் எழுதுவதை வைத்து முடிவு கட்டவேண்டாம். கூடியவரை சின்னச் சின்னக் காரணங்களுக்காகவும், தான் என்ற ஈகோவுக்காகவும் வாழ்க்கையைத் தொலைக்கிறவங்களைப் பத்தியும் கணவனையும், கணவன் வீட்டாரையும் அலக்ஷியம் செய்து வெறுக்கும் பெண்களையும் மட்டுமே இங்கு பேசுகிறேன்.

  Disagreement with me on the above pt will make u a very unrealistic person.//

  Oh, Thank You, Thank You, No problem. Me least bothered! :)))))))))))))))

  ReplyDelete
 25. வாங்க வல்லி, சமூகம் இதைத் தான் முன்னேற்றம் என்று சொல்கிறது. :(

  ReplyDelete
 26. வணக்கம்..நான் ராம்.. From Texas .
  //அன்றையக் காலங்களில் எதிர்பார்ப்பு என்பதுக் குறைவு. எதிர்பார்ப்பு இல்லாவிடில் ஏமாற்றங்கள் இருக்காது.
  அடுத்து ஒப்பீடு. தன் தோழியின் கணவன் /நண்பனின் மனைவி இவர்களைக் கொண்டு தங்கள் துணைகளை மதிப்பீடு செய்வது .
  கடமை/பொறுப்பு என்னவென்று யாருக்கும் தெரிவதில்லை . தெரிந்துகொள்ளவும் விரும்புவதில்லை.
  சில அரைகுறை பெண்ணுரிமைவாதிகளின் கட்டுரைகளை படிப்பது/ அல்லது பேச்சை கேட்பது. அதுதான் சரி என்று நினைத்துக் கொள்வது.//
  100% உண்மை. நான் முன்பு இருந்த இடத்தில் எதிர் பிளாட்டில் தமிழ்நாட்டு பெண்கள் 5 ,6 தங்கி இருந்தார்கள். Weekend ஆனால் வெள்ளைகாரிகள் கூட போட்டிபோட முடியாது. அந்த அளவுக்கு ரகளை-a இருக்கும். பால்கனி-இல் dum அடிக்குற ஸ்டைல் ல ரஜினிகூட தோற்றுவிடுவார். 1 முறை அளவுக்கு அதிகமாக குடித்து apartment மேனேஜர் இடம் warning வாங்கியது, இன்னும் எழுத முடியாதவைகள். உண்மையில் சொல்கிறேன் என் அம்மா அவ்வளவாக படித்து கிடையாது. ஆனால் 1 பெண் என்றால் எப்படி இருக்கவேண்டுமோ அப்படி இருந்தவர். இன்னும் இருக்கிறார். கீதா அம்மா, எனக்கு சின்ன வயதில் ராமாயணம்,மகாபாரதம் சொல்லி குடுத்து, வாழ்கையில் ராமர் மாதிரி,ஆஞ்சநேயர் மாதிரியும் ஒழுக்கமா வாழனும் என்று சொல்லி சொல்லி பெரியவர்களை மதிக்க வேண்டும் என்று வளர்த்து இருக்கிறார்கள். அவர்களையும் அப்படித்தான் வளர்ந்திருப்பார்கள். நான் என்னவேனாலும் செய்யலாம். ஆனால் நமக்கென்று சில சுய கட்டுபாடுகள் வைத்துக்கொள்ளவேண்டும். ஆனால் இப்படி கூத்தடிதால் தான் உண்மையான சுதந்திரம், பெண்ணுரிமை என்று எதனால் நினைக்க ஆரம்பித்தார்கள்? நான் எல்லா பெண்களையும் சொல்லவில்லை. இப்படி இருப்பவர்களை தான் சொல்கிறேன். நம்ம நாட்டிற்கு போனால் நங்கள் இப்படி பண்ணமுடியாது. இங்கு என்ஜாய் பண்றதுல என்ன தப்பு? என்பதற்கு பதில் தெரியவில்லை. லைப் la என்ஜாய் பண்றதுல தப்பில்லை. ஆனால் அளவுக்கு மீறி போகும் போது பிரச்சனை தான். அதில் ஒரு பெண், கல்யாணம் ஆனபின்பும் வேலைக்கு போகவேண்டும். pocket money கு கணவனை எதிர்பார்க்க வேண்டி இருக்கும். அவன் கிட்டலாம் பொய் செலவுக்கு கை நீட்டி கிட்டு இருக்க முடியாது. அவருக்கு நம்ம 100 % tobacco சிகரெட் அடித்தால் தான் பிடிக்கும்(அவர் ரிங் மாதிரி விடும் புகைக்கு நாங்கள் ரசிகர்கள்). அந்த மாதிரி எண்ணம் கொண்ட பெண்ணகளை கல்யாணம் செய்ய போகும் பையனின் நிலைமை? பையனை விடுங்கள். பையனின் மாமனார்,மாமியார்,குடும்பத்தாரின் நிலைமை? பிறக்கபோகும் குழந்தை? தனிக்குடித்தனம்...! இந்த மாதிரி பெண்களால் கல்யாணம் என்றாலே தானாகவே பயம் வந்துவிடுகிறது. இது நண்பர்களோடு நாங்கள் பேசும் போது வந்த வார்த்தை(வீட்டில் இப்போ தான் பெண் பார்க்கும் படலம் ஆரம்பித்து இருக்கிறார்கள்.) அதனால் தான் இன்றைய தலை முறையினருக்கு கூட்டுகுடும்பம் பற்றி தெரிவதில்லை. நாங்கள் வாழ்ந்த அந்த நாட்களை நினைத்தால் எங்களுக்கே எங்கள் மேல் பொறாமையை இருக்கிறது. பாவம் இன்றைய தலைமுறையினர் குடுத்து வைத்தது அவ்வளவே. Attitude is Everything .

  டெயில் பீஸ்:
  Apartment மீட்டிங்கில் அவர்களை பார்த்து எங்கள் காது பட சிலர் சொன்னது, "Some Asian Girls fully drunk and disturbing us . They looks like indians ". எப்புபுடிய்ய்ய்ய்....!

  ReplyDelete
 27. //அப்புறம் ஈகோ பெரிய பிரச்சினையா உருவெடுத்துக் கொண்டிருக்கு சமுதாயத்திலே. நீ என்ன சொல்லறது நான் என்ன கேட்கிறது என்பது பிரச்சினைகளை கிளரி விடுறதைத்தவிர வேறு ஒண்ணும் உருப்படியா செய்யாது.
  முன்னே பெண் அடங்கிப்போவாள் என்று பாரம்பரியம் இருந்த போது பிரச்சினை ஒரு மாதிரியான தீர்வு இருந்தது. சரியான மாற்று இல்லாமல் இதை பெண் உரிமைன்னு சொல்லி ஒழிச்சாச்சு.//

  'சிலரை மற்றும் சிலரை விட இறைவன் சிறப்பித்திருப்பதாலும் ஆண்கள் தமது பொருட்களை குடும்பத்திற்கு செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள்.'
  குர்ஆன்: 4:34

  ஏதோ ஒரு தரப்பு விட்டுக் கொடுத்தால்தான் சுமூக தீர்வு கிடைக்கும். பெண் விடுதலை என்று வேலைக்குச் செல்லும் பெண்கள் குடும்பம் குழந்தைகளையும் பராமரித்து தங்களுக்குத் தாங்களே சிரமங்களை அதிகப்படுத்திக் கொண்டார்கள். இதனால் குடும்பத்தில் பல பிரச்னைகள். குடும்ப வறுமையை காரணமாக வைத்து பெண்மைக்கு பாதுகாப்பும் கிடைக்கும் பட்சத்தில் அந்த பெண்கள் வேலைக்குச் செல்வதில் தவறில்லை. ஆனால் ஒட்டு மொத்த பெண்களும் வேலைக்கு கிளம்பினால் குடும்ப கட்டுக் கோப்பு கேள்விக் குறியாகும் அல்லவா? மேலை நாடுகள் இதற்கு சிறந்த உதாரணம்.

  //முன்னே கடவுள் நம்பிக்கை மூட நம்பிக்கை; பகுத்தறிவுதான் சரின்னு சொல்லி சமுதாயத்தை சீர் குலைச்சாப்போலத்தான் இதுவும். கடவுள் நம்பிக்கையும் இல்லை; பகுத்தறிவும் இல்லை. தவிக்கிறோம்.//

  இரண்டையும் ஒன்றாக கொண்டு செல்லும் முஸ்லிம்களை மறந்து விட்டீர்களே!

  ReplyDelete
 28. jo.amalan needs to understand how to play. play the ball, not the player.

  ReplyDelete
 29. வாங்க பப்லு, ப்ளாக் ஒண்ணும் வச்சுக்கலையா?? இல்லாட்டி அழைப்பு அனுப்பிக் கூப்பிடுவீங்களா? தெரியலை. அது எப்படியோ போகட்டும்!

  நீங்க சொல்லும் மாதிரியான பெண்கள் அதிகமாய்க் கண்களில் படுகிறார்கள். நான் குறிப்பிடுவதும் இப்படிப் பட்ட பெண்களையே. அவங்களுக்குப் பெண்ணுரிமை என்பதன் எல்லை எதுவெனத் தெரியவில்லை. அநேகமாய் தினம் ஒரு தனி மடலாவது வருது எனக்கு இப்படிக் குறை கூறிக்கொண்டும், என்ன செய்யறது? எப்படி மாறுவாங்க என்றெல்லாம் கேட்டுக்கொண்டும்.

  தமிழ் ஹிந்துவில் இதைக் குறித்து நான் எழுதினப்போ இந்த ஐடி யுகத்துப் பெண்கள் மேல் எனக்குப் பொறாமை என்ற பெயர் சூட்டினாங்க. :))))) என்ன செய்யறது?? பணம் இருந்தால் எல்லாம் கிடைக்கும் என்ற நினைப்பு இருக்கும்போது நாம் சொல்வதெல்லாம் எடுபடாது! ஆனாலும் ஊதற சங்கை ஊதியே ஆகவேண்டும்.

  ReplyDelete
 30. @சுவனப்ரியன், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 31. @அப்பாதுரை, ஜோ அமலன் சொல்றாப்போல் பெண்களும் என்னைக் குறித்து இப்படித் தான் நினைக்கின்றனர். அதனால் என்ன?? அவரோட கருத்து அது! நம்மோட கருத்து வேறுவிதம்! :))))))))))

  ReplyDelete
 32. நிறைய சிந்திக்க வைத்த நல்ல பதிவு கீதாம்மா

  பின்நூட்டங்களும் பதில்களும் கூட கருத்து செறிவோடு இருந்தது

  எனது கருத்து பெண்களின் அறிவு சலன படுத்தாமல் அவர்களை சமன படுத்த வேண்டும் என்பது தான்

  பதிவுக்கு நன்றி கீதாம்மா

  ReplyDelete
 33. வாங்க ப்ரியா, உங்களைப் போன்ற இளைய தலைமுறைதான் இதைப் புரிந்து கொள்ளவேண்டும். புரிந்து கொள்ளும் நபர்களும் இருப்பது சந்தோஷமாயும், நம்பிக்கை தருவதாயும் உள்ளது. நன்றிம்மா.

  ReplyDelete
 34. பொது பிலாக் என்ற பிறகு, பிலாகில் எழுதியதைப் பத்தி சொல்ல படிப்பவருக்கு உரிமை உண்டு; ஆனால் எழுதினவரைப் பத்தி சொல்ல உரிமை கிடையாது. இது என்னோட தா. அபிப்பிராயம்.

  "சிலருக்கு திருமணம்/கணவன்/மனைவி அதிர்ஷடமாக அமைகிறது - எல்லோருக்கும் அப்படியல்ல. பதிவில் குறிப்பிடப்பட்டவரின் உறவு நிலையை அறியாமல் தீர்மானமாக எழுதுவது சரியா கீதா சாம்பசிவம்?" என்று கேட்பதற்கும் "உங்கள் கணவர் இப்படி அமைந்தது உங்கள் அதிர்ஷ்டம். அதனால் லொட்டு லொசுக்கு.." என்பதற்கும் நி. வித்தியாசம் இருப்பதாக நினைக்கிறேன். மற்றபடி ஜோ. அமலனின் கருத்துரிமையை மதிக்கிறேன். கருத்தை மதிக்க முடியவில்லை.

  ReplyDelete
 35. அப்பாதுரை, என்ன செய்யமுடியும்?? அவரோட எண்ணம் அப்படி! பெரும்பாலான பெண்களுமே அப்படித் தான் நினைச்சுக் கேள்வி கேட்பாங்க. கேட்கிறாங்க. பெண்கள் உடை அணிதல் பற்றிய பேச்சில் ஒரு இளம்பெண் எனக்குப் பெண்ணே இல்லை அதனால் அப்படி எல்லாம் எழுதறேன்னு சொன்னாங்க.

  ReplyDelete
 36. "சிலருக்கு திருமணம்/கணவன்/மனைவி அதிர்ஷடமாக அமைகிறது - எல்லோருக்கும் அப்படியல்ல. பதிவில் குறிப்பிடப்பட்டவரின் உறவு நிலையை அறியாமல் தீர்மானமாக எழுதுவது சரியா கீதா சாம்பசிவம்?" என்று கேட்பதற்கும் "உங்கள் கணவர் இப்படி அமைந்தது உங்கள் அதிர்ஷ்டம். அதனால் லொட்டு லொசுக்கு.." என்பதற்கும் நி. வித்தியாசம் இருப்பதாக நினைக்கிறேன்.//

  உண்மையைச் சொல்லப் போனால் மேலே நீங்க சொல்லி இருக்கிறாப் போல் தான் எனக்கும் ஒரு நிமிடம் கோபம் வந்தது. அப்புறமா சுதாரிச்சுக்கொண்டு அந்தக் குறிப்பிட்ட இடத்தையே அலக்ஷியம் செய்தேன். இப்போ அதை மனசிலேருந்தும் தூக்கிப் போட்டுடணும். போட்டுடுவேன். நன்றி. உங்கள் கனிவான கருத்துக்கும், பின்னூட்டத்துக்கும்.

  ReplyDelete
 37. //My general observations of your posts s that u look into social issues with 1 and the same scale. Same size doesn't fit all.//
  நீங்க நல்லா observe பண்ணி இருக்கீங்க . but சொல்ல வந்ததை நீங்க கரெக்ட்-a understand பண்ணிக்கலைன்னு நல்லா தெரியுது.
  //When a marriage can b celebrated, y cant b a divorce too?//
  உங்களுக்காக பரிதாபப்படுகிறேன்.
  Ur marriage s a success, does it mean everyone else's so?
  // success னு easy -a சொல்லிடீங்க. think how come?.
  Here success is the "Key word". "எண்ணம் போல் வாழ்வு"..!
  metropolitan city la எவ்ளோ divorce case file ஆகுதுன்னு போய்பாருங்க. ஏன்? காரணம் கேளுங்க. அப்போ தெரியும். இப்போல்லாம் divorce பண்றது பேஷன் மாதிரி ஆயிட்டு வருது. ஆபீஸ்ல "I "னு மெயில் அனுப்பினால் attitude problem னு சொல்லிடுவாங்க."We " னு தான் போடணும். லைப்லயும் அப்படித்தான். Mutual understanding . give and take .Team work .honesty ,loyalty .
  //Geetha Sambasivam, u r lucky because Mr S is a gentleman.//
  "மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்." //
  கீதாம்மா சொல்ற மாதிரி, நான் பார்த்த சில பொண்ணுங்க அமைந்தால் சாபம் தான். அந்த பெண்ணுக்கு அப்படிப்பட்ட பெண் தான் எதிரி. சார், ஆபீஸ்ல யாரோ உயரதிகாரிகாக பொறுமையாக சகித்துக்கொண்டு இருந்தாலும் இருக்கலாம். ஆனால் கணவருடன் பொறுமையாக சகித்துக்கொண்டு இருக்க முடியாது என்பது எப்படி சார்? expectations r too high .
  என்னுடைய அம்மா நாங்க பிறக்கும் வரை ரேடியோ ஸ்டேஷன் ku நாடகங்கள்,விமர்சனங்கள் என்று busy -a இருந்தார்கள். ஏகப்பட்ட ரசிகர்கள். என் அண்ணா, பின் நானும் பிறந்த பிறகு எல்லாவற்றியும் எங்களுக்காக விட்டுவிட்டார். அம்மாவின் சுய முடிவு. இப்போ நான் என் அம்மாவை குழந்தை மாதிரி பார்த்துகிறேன். என் கடமை. அம்மாவின் அருமையை உணர்ந்தவன். இப்போ என் close friend ஒருத்தி குழந்தையை அம்மா,அப்பாவிடம் விட்டுவிட்டு வேலைக்கு செல்கிறார். என் கஷ்டபடனும்? கொஞ்ச நாள் குழந்தைகளை பார்த்துவிட்டு பின் வேலைக்கு போலாமே என் கேட்டதுக்கு"வேலைக்கு போகாமல் இருக்க முடியாது" i need privacy " want to என்ஜாய் my life . இப்போ அந்த குழந்தை அவளை அம்மான்னு கூப்பிடலை. பாட்டி, தாத்தா-வை அம்மா,அப்பா nu சொல்றா. பின்னாடி அந்த குழந்தை அம்மாவை பார்த்துகொள்வாள் னு எப்படி சொல்லமுடியும்?. நான் எல்லா working women -யும் சொல்லல. இந்த மாதிரி விதண்டாவாதத்திற்காக செய்பவர்களை மட்டும் solgirein . house wife -ரோல் தான் சார் கஷ்டம்.அடுத்த தலைமுறையினருக்கு role மாடல். no pain no gain.

  ReplyDelete
 38. பப்லு, நிறையப் பாதிக்கப் பட்டிருக்கீங்கனு புரியுது. விடுங்க, கூல் டவுன். அநுபவத்தாலே பேசறோம்னு புரிஞ்சுக்கறவங்க சில பேர்தான். என்னைப் பொறுத்தவரையில் ஒரு ரோல் மாடலாக இருக்காவிட்டாலும் வழிகாட்டியாகவாவது இருக்கிறோம் என்பதே போதுமானது.

  ReplyDelete
 39. !!! சிரிப்பு தான் வருது.. கஷ்டம்!
  >>>இளம்பெண் எனக்குப் பெண்ணே இல்லை அதனால் அப்படி எல்லாம் எழுதறேன்

  ReplyDelete
 40. எனக்கு இப்போதான் பெண் பார்க்கும் படலம் ஆரம்பித்து இருக்கிறார்கள். :-) கல்யாணம் என்றாலே வீட்டில் ஒரு கலகலப்பு வரும் பாருங்க... அதுக்காக, எங்களை நம்பி இருக்கும் அம்மாவுக்காக, மறைந்த என் அப்பாவிற்காக நான் arranged marriage தான் பண்ணிக்கணும்னு ஆசை. நான் சந்தோசமா இருக்கணும்னு ஆசைபட்டவங்களை நானும் சந்தோசமா வச்சுக்கணும்னு ஆசை. அம்மா, அப்பா விற்கு நான் செய்யும் சின்ன கைமாறு. நாம் பார்க்கும் மனிதர்கள்,நண்பர்கள்,சொந்தங்கள்,அலுவலக பழக்கம், அவர்கள் வாழ்கையில் நடந்த சம்பவங்கள், நம்மை பாதித்த சம்பவங்களை நாம் எடுத்துகொள்ளும் விதம், நாம் வாழ்கையை அணுகும் முறை,எதிர்பார்ப்பு இவை எல்லாம் தான் நம் எண்ணங்களை உருவாக்குகின்றன என்பது என் தா.கருத்து. என் கண் முன்னே பல பெண்கள் வாழ்க்கையை பறி கொடுத்து இருக்கிறார்கள். நான் பார்த்தவரையில் இந்த காலத்துல 80 % லவ் marriage பண்றாங்க. ஆனால் அவுங்க எத்தனாவது lover, லவ் பண்றவங்கலையே கல்யாணம் பண்ணிகிறாங்கலானு அவுங்க அவுங்க மனசாட்சிக்கு தான் தெரியும். நான் பார்த்தவரையில். நமக்கு நம்மள பிடிக்கணும்.மனசை கோவில் மாதிரி வச்சுக்கணும். அதை விட்டுட்டு மனசை சாக்கடை-யா வச்சுக்கிட்டு கடவுளை கோவில் ல தேடினா? ஏன் சொல்றேன்னா அப்போ தான் நம்முடைய எண்ணங்கள் அழகாகும். வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கும். எதை எடுத்தாலும் விதண்டாவாதம், நான் இப்படி தான் இருப்பேன், என்னை மாற்ற முடியாதுனு பேசுறது இவங்களுக்கு ஒரு சந்தோசம். எதையுமே சொல்லவரவங்களோட நோக்கம்,என்ன சொல்லவராங்கனு 1st புரிஞ்சிக்கணும். என்ன சொல்லவறீங்கன்னு தெரியாம பேசுறது கோவம் வரல.பரிதாபம் தான் வருது. நமக்குன்னு சுய ஒழுக்கம், கட்டுப்பாடு வேணும். மனசாட்சிக்கு பயந்து வாழனும்.யாரும் இல்லைன்னு ஆட்டம் போட்டால் வடக்கு பட்டி ராமசாமி தான். நீ ரொம்ப ஒழுங்கா? னு கேட்கலாம். நான் ஒழுங்கா இருக்கிறதை பற்றி மட்டும் தான் இங்கே பதிவு செய்து இருக்கேன். few hours travel பண்றதுக்கு, 1 movie ல entertainment venumnu expect பண்றோம். காலம் full -a சேர்ந்து வாழப்போறதுக்கு அப்படியே expect பண்றதுனால தான் problem . சில பேர் தப்பிச்சிடுறாங்க. பல பேர் பணால் ஆயிடுறாங்க. :-) :-). தவறாகவோ, மனதை புண்படியாகவோ இருந்தால் மன்னிக்கவும். ஏன் நோக்கம் அதுவல்ல.Life is Beautiful...

  ReplyDelete
 41. //எனக்குப் பெண்ணே இல்லை அதனால் அப்படி எல்லாம் எழுதறேன்னு சொன்னாங்க.//

  நல்ல வேலை அதோட விட்டாங்களே. நீங்களே பெண் இல்லை என்று சொல்லவில்லை. அதுவரைக்கும் சந்தோஷப் படனும் :))

  ReplyDelete
 42. எனக்கு இப்போதான் பெண் பார்க்கும் படலம் ஆரம்பித்து இருக்கிறார்கள். :-)//

  வாழ்த்துகள் பப்லு, அருமையான பெண் கிடைத்து மண வாழ்வில் மகிழ்வோடு இருக்கவும் வாழ்த்துகிறோம்.


  few hours travel பண்றதுக்கு, 1 movie ல entertainment venumnu expect பண்றோம். காலம் full -a சேர்ந்து வாழப்போறதுக்கு அப்படியே expect பண்றதுனால தான் problem . சில பேர் தப்பிச்சிடுறாங்க. பல பேர் பணால் ஆயிடுறாங்க. :-) :-). தவறாகவோ, மனதை புண்படியாகவோ இருந்தால் மன்னிக்கவும். ஏன் நோக்கம் அதுவல்ல.Life is Beautiful...//

  உண்மை, வாழ்க்கை அழகான ரோஜாப்பூவை விட மென்மையும் அழகும் பொருந்தியது. அதை அநுபவிப்பது நம் கைகளிலே. நானும் சொல்லுவது என்னவென்றால் நீங்க சம்பாதிச்சுத் தான் குடும்பத்தைக் காக்கணும்னா தாராளமாப் போகலாம். ஆனால் அப்படி இல்லைங்கிற பக்ஷத்திலே வீட்டிலே இருக்கலாமே? குறைந்த பக்ஷம் உங்க குழந்தைகள் நலனுக்காவது! இதே என்னுடைய கருத்தும்.

  முதல் குழந்தை பிறந்ததுமே நான் வேலையை விட்டேன் என்றால் என் ஓரகத்திக் கொஞ்ச நாட்கள் தாக்குப் பிடித்தாள். எங்களோட மாமியார், மாமனார் கூட இருந்தாங்க. ஆனாலும் தவிப்புத் தான் . அப்புறமா வேலையை விட்டுட்டாங்க. பையருக்கும் படிப்பு அதிகம் ஆக ஆகக் கண்காணிப்பும் தேவைப்பட்டது. பாடங்களைச் சொல்லிக் கொடுக்கவும், தெரியாதனவற்றைப் பார்த்து வைக்க, அவங்க ப்ராஜெக்டுக்கு உதவி செய்யனு, அவங்களுக்காக நோட்ஸ் எடுத்து வைக்கனு எத்தனை தேவைப்படுகிறது!

  எங்க குழந்தைகளோட ப்ராஜெக்ட் வேலைனா நாங்க குடும்பமே அதிலே மூழ்கி உதவி செய்வோம். வேலைக்குப் போனால் குழந்தைகள் இதை எல்லாம் எப்படித் தெரிஞ்சுக்கும்?? பணத்தேவை என்னமோ அதிகமாவே இருந்தது தான் எங்களுக்கு. ஆனாலும் சமாளிச்சோம். :)))))

  ReplyDelete
 43. ஆமாம் எல்கே, சிலர் சந்தேகமாக் கேட்கவும் கேட்டிருக்காங்க தான்! :))))))))

  ReplyDelete
 44. Babloo
  I admire your line of thoughts. Don't worry - for your opinion you will have a blissful marital life. All the best and good luck.

  ReplyDelete
 45. உங்கள் ஆசீர்வாதங்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி. அதிக எதிர் பார்பினால் வாழ்கையை தொலைத்த நான் சந்தித்த என் நண்பர்கள்,நபர்கள் அதிகம். எதிர்பார்ப்பு இருந்தாலே ஏமாற்றங்களுக்கும் இருக்கும். சில உண்மைகள் நமக்குபுரிய வாழ்கைக்கு மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டி இருக்கும்.என் தந்தை மறைந்தது என்னை மிகவும் பாதித்தது. அப்போது தான் வாழ்கையின் நிதர்சனம் புரிந்தது. கடன் திருப்பி குடுக்க வேண்டியவர்கள் குடுக்கவில்லை. அப்போ தான் பணத்துக்கும் மனிதனுக்கும் எவ்வளவு மதிப்பு குடுக்க வேணும் என்று புரிந்தது. என்ன கஷ்டம் வந்தாலும் பெற்றவங்களை கடைசி வரை காப்பற்றவேண்டும். நாம நல்லா இருக்கவேண்டும் என்று அம்மா, அப்பாவை விட நினைபவர்கள் யாருமே இல்லை. உதவுவார்கள் என எதிர்பார்த்தவர்கள் எங்களை ஏமாற்றினார்கள். நண்பர்கள் கை கொடுத்தார்கள். சில சமயம் வாழ்கை கற்பனையை விட பயங்கரமானது. நிலைமைகேற்ற படி மாறவேண்டும். அம்மா, அண்ணா நம்பி இருகிறார்கள். அப்போதெல்லாம் என் வாழ்கையை விட அவர்கள் தான் முக்கியமாக பட்டார்கள்.அம்மா கஷ்டத்தையே அறியாமல் அப்பா பார்த்துகிட்டாங்க. நாங்கள் தான் அவுங்க உலகம். என் அண்ணாவும் அப்படிதான். அந்த காலகட்டத்தில் தான் வாழ்கை பற்றி நிறைய விஷயங்கள் என் வயதுக்கேற்ற அனுபவ பூர்வமாக அறிந்து கொண்டேன். Almost 90 % பணத்தினால் தான் பிரச்சனையே வருகிறது. அந்த பணத்தினால் நமக்குள் எந்த மனஸ்தாபமும் வரக்கூடாது. வந்தாலும் விட்டு குடுத்து போய்டலாம் என நானும் என் அண்ணாவும் செய்து கொண்ட mutual understanding . அப்போல்லாம் பணகஷ்டம். ஆனால் அண்ணா போட்ட பிளான் படி வாழ்கை நடத்தினோம். வேலை, படிப்பு என வாழ்கை மனசு வேகத்தில் போனது. பெற்றோர்கள் ஆசீர்வாதங்களோடும், கடவுள் கருணையினாலும் இப்போ சொல்லிக்கிற மாதிரி 1 நிலைமையில் இருக்கிறோம். அண்ணாவிற்கு கல்யாணம் பண்ணி வச்சாச்சு. அதுக்காக தான் என் US சோப் resign பண்ணிட்டேன். அண்ணியும் இன்னொரு அம்மா அம்மா தானே. அம்மாவும் கொஞ்ச நாள்ல டெலிவரி ஆகப்போற பேரக்குழந்தைக்காக வெயிட் பண்றாங்க :-) . எனகென்னவோ கடமை முடித்த மாதிரி feeling . So US வந்துவிட்டேன்.எதிர் பார்ப்பு இல்லாமல் என்ன வந்தாலும் அதுவும் ஒரு அனுபவம். கஷ்டமெல்லாம் இப்பவே அனுபவிச்சுகனும் . பின்னாடி கஷ்டமே இல்லாம இருப்போம். அப்போ நாமலே நெனைச்சாலும் கஷ்டத்தை அனுபவிக்க முடியாது. எனக்கு ரொம்ப நாலா கைலாஷ் டூர் போகணும்னு ஆசை. அப்போ நெட் ல கைலாஷ் டூர் search போட்டப்போ உங்கள் பயணக்கட்டுரை படிக்க நேர்ந்தது. அற்புதமான அனுபவம். எல்லா கட்டுரையையும் 2 நாட்களில் படித்தேன். வாழ்கையில் நாமளே சிலரை சந்திக்கனும்னு எதிர்பார்த்தாலும்,நெனைச்சாலும் சந்திக்கவே முடியாது. உறவுகள், நண்பர்கள் அதுவாக அமைந்தால் தான் கடைசி வரைக்கும் நீடிக்கும். ஏன் என்றால் எதிர்பார்ப்பில்லாமல் பழகுவோம். உங்கள் அறிமுகம் எனக்கு அப்படிதான் அமைந்தது. அப்பாவுக்கு கடவுள் நம்பிக்கை ரொம்ப அதிகம்(என் அப்பா திருவண்ணாமலை கோயிலில் தான் இறந்தார்). அவருடைய ஆசீர்வாதம் தான் என்னையும் ஆன்மீகத்திற்கு அழைத்துவந்தது. தடுமாறும் போதெல்லாம் மனதை பக்குவ படுத்திக்கொள்ள உதவியது. இந்த நீளமான பதிவு அப்படி யாரும் தாடுமாறாமல் இருக்கவேண்டும். என் சிறிய அனுபவத்தை மாற்றவர்களிடம் ஷேர் பண்ணிக்கலாம் என தோன்றியது. வாழ்கையில் எல்லாருக்கும் அவரவருடைய வயது, சூழ்நிலை பொறுத்து கஷ்டங்கள் இருக்கும்.கஷ்டத்தையும் அனுபவிப்போமே. வாழ்கையில் இனி மேல் தான் அடுத்த கட்டத்திற்கு செல்ல போகிறேன். மனைவி எப்படி வந்தாலும் அப்படியே ஏற்றுக்கொள்ளும் எண்ணம் வந்த பின்புதான் பெண் பார்க்க சொன்னேன். முடிந்தால் அவருடைய பெற்றோரையும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று ஆசை. என்னை போல சக மனுஷி தானே.எதுமே இருக்கும் போது அதனுடைய அருமை தெரியாது. நம்மை விட்டு போனபின்பு தான் அதனுடைய அருமையெல்லாம் நினைத்து வருந்துவோம்.கொஞ்ச நாளில் அப்பா பெயரில் டிரஸ்ட் ஆரம்பிக்கணும். "Children education " " Home Age". அவுங்களுக்கு நான் செய்வது என் அப்பாவிற்கே செய்யும் ஒரு ஆத்மா திருப்தி. என் சொந்த உழைப்பில் வரும் பணத்தில் மட்டும். நாளைக்கு எனக்கும் வயதாகும். வாழ்கை அனுபவிக்க தானே... மற்றவர்களையும் நம்மள போல நேசிப்போமே. நம்மள நாம தான் பார்த்துக்கணும். சந்தோசமா வச்சுக்கணும். மற்றவர்களுக்கு இம்சை குடுக்காமல். வாழ்கையில் இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கு. வாழ்த்துங்கள். தட்டிகொடுங்கள். தவறுகளை திருத்திகொள்கிறேன். நல்லதையே நினைப்போம். நல்ல மண்ணுலதான் செடி நல்லா வரும். மனசு, எண்ணங்கள் நல்லா இருந்தா நம்மள சுத்தி இருக்கிறவங்க நல்லவங்கலாகவே அமைவாங்க. உண்மை. நமக்கே நம்மை பிடிக்கும். நாமளும் கண்டிப்பா நல்லாவே இருப்போம். bore அடித்தால் மன்னிக்கவும். :-) Life is beautiful :-)

  ReplyDelete
 46. வாங்க பப்லு, நீங்க நினைக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றிகரமாய் நடந்தேற எல்லாம் வல்ல ஈசன் துணை இருப்பான். கவலை வேண்டாம். இரண்டு கையைத் தட்டினால் தான் சப்தம். பொதுவாக நாங்க அப்படித் தான். யாரானும் ஒருத்தர் கோவிச்சுண்டால் இன்னொருத்தர் மெளனம் தான். சில சமயங்களில் பேச்சே இருக்காது. மெளனமும் சிறந்த முறையில் உணர்வுகளை வெளிக்காட்டுமே.

  உங்க கைலை யாத்திரை இனிமையாகவும், செளகரியாமாகவும் நடக்கப் பிரார்த்தனைகள். கூடுமான வரையிலும் இந்தச் சின்ன வயசிலேயே போயிட்டு வந்துடுங்க. அதான் நல்லது. எங்களுக்கு முக்கியமாப் பணம் ஒரு பிரச்னையாய் இருந்தது. அதோடு குடும்பம் நிர்வாகம் பண்ண வேண்டி இருந்தது. எங்க கல்யாணம் ஆகி எட்டு வருஷங்கள் வரையிலும் என் கணவர் மட்டுமே சம்பாதிச்சிண்டு இருந்தார். தேவைகள் அதிகம். ஆகவே இதை எல்லாம் நினைக்க முடியலை. இப்போவும் இது நடந்தது என்னளவில் ஒரு அற்புதமே. எல்லாம் நன்றாக நடக்க ஆசிகளும், பிரார்த்தனைகளும், உங்க கல்யாணம் எங்கே நடந்தாலும் எனக்கு அழைப்பு வரும்னு நம்பறேன். :))))))

  ReplyDelete
 47. பப்லு உங்களுக்கு விரைவில் திருமணம் நடக்க வாழ்த்துக்கள். நல்ல மனைவி அமைய வாழ்த்துக்கள்

  ReplyDelete
 48. நீங்களும் என்னோட அம்மா மாதிரி தான். பெற்றால் தான் பிள்ளையா? :-) :-) :-) So கண்டிப்பா உங்களுக்கும் கண்டிப்பாக அழைப்பு உண்டு. உங்கள் உடல் நிலை கருத்தில் கொண்டு உங்களுக்கு சிரமம் இல்லாம கண்டிப்பா உங்களை நானே என் கல்யாணத்துக்கு அழைச்சிண்டு போவேன். :-) . need all u 'r blessings always . . அப்பா திருவண்ணாமலை கோயில் கிரிவலம் முடிச்சிட்டு அங்கேயே இறந்ததால என் கைலாஷ் trip ku அம்மா இன்னும் ஓகே சொல்லல. இன்னும் அந்த ஷாக் ல இருந்து மீளவில்லை. but சீக்கிரம் போய்ட்டு வருவேன்னு நம்பிக்கை. :-) எனக்கும் வாய்ப்பு குடுத்து என் பதிவுகளை பதிவு செய்ததற்கும், அதை படித்த அனைவருக்கும் நன்றி. எல்.கே சார், ஸ்ரீனிவாசன் கோபாலன் சார் உங்களுக்கும் நன்றி.

  ReplyDelete