எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, June 20, 2011

வந்தாச்சு, வந்தாச்சு.

எங்க வீட்டிற்கு விருந்தாளிகள் வரப்போறதை நான் என்னோட வலைப்பக்கத்திலே போட்டதிலே இருந்து அம்பத்தூர் நகராட்சிக்கு என்னமோ தெரியலை, ஒரே ஆத்திரம். :P அப்போத் தான் குடிநீருக்குப் பள்ளம் தோண்டினாங்க.  
Posted by Picasa
ஏற்கெனவே வீட்டிற்கு எதிரேயும், பக்கத்திலேயும் கட்டும் அடுக்குமாடிக்குடியிருப்புக்களால் வீட்டுவாசலில் கம்பிகள், ஜல்லி, செங்கல், வாட்ச் உமன், வாட்ச்மேன், அவங்க குடும்பத்தினரின் துணிகள் தோய்த்து உலர்த்துதல், சிமென்ட் மட்டும் பாதுகாப்புக்காகக் குடிசைக்கு உள்ளே வைச்சுப்பாங்க, கொஞ்சம் சலுகை அதிலே. வீட்டை விட்டு வெளியே வரணும்னா முதல்நாளில் இருந்தே அவங்க கிட்டே பெர்மிஷன் கேட்டுக்கணும். இப்படி இருக்கையிலே அம்பத்தூர் நரகாட்சி உங்களை என் பங்குக்கு விடறேனா பாருனு ஒரு கை இல்லை, எல்லாக் கையாலேயும் பார்த்தது.  
Posted by Picasa


குடிநீருக்குத் தோன்டிட்டுப் போனதை மூடலை, குழாய் இணைப்புக் கொடுக்கணும்னு விட்டு வச்சிருந்தாங்க. எல்லாரும் மறந்து போன பச்சைக்குதிரையை நினைப்புக்குக் கொண்டு வந்து விளையாடிட்டு இருந்தோம். இது பத்தாதுனு பாதாளச் சாக்கடைக்குத் தோண்டினாங்க பாருங்க, சரியா எங்க பொண்ணும், அவ குடும்பமும் யு.எஸ் கிளம்பறதுக்கு இரண்டு நாள் முந்தி தோண்டிப் போட்டாச்சு. அப்போப் பார்த்து அப்புவுக்கும் உடம்பு சரியில்லை. ஒரு நாளைக்கு இரண்டு தரம் அந்தப் பள்ளங்களைத் தாண்டிக்கொண்டு டாக்டர் கிட்டே விசிட். நல்லவேளையாக் குழந்தை இதை எல்லாம் அவளுக்குக் காட்டிய விளையாட்டுனு நினைச்சா போல. அவங்க ஊருக்குப் போற அன்னிக்கும், பள்ளங்கள் மூடப் படவில்லை. குழாய் இணைப்புக் கொடுக்கணும், அதுக்கு இந்தப் பள்ளத்தில் தோண்டி இருக்கும் கிணறுகள் பூச்சுக் காயணும். அதுக்குள்ளே மழை எல்லாம் பெய்து அது பங்குக்குச் செய்யவேண்டியதைச் செய்தாச்சு.

குண்டு குண்டா சூட்கேஸைத் தூக்கிட்டு எப்படிப் போறதுனு முழிச்சோம். வண்டி உள்ளே எந்தப் பக்கமிருந்தும் வர முடியாதபடிக்கு எச்சரிக்கைப் பலகை மாட்டி வைச்சாச்சு. வண்டியைத் தெரு முக்கில் நிறுத்திவிட்டு பக்கத்து அடுக்குமாடிக் குடியிருப்பின் வாட்ச்மேன், (அவங்களாலே கிடைச்ச ஒரு வசதி/லாபம், ) சாமான் எல்லாத்தையும் எடுத்துக்கொண்டு போய் வண்டியிலே வைக்க, எங்க பொண்ணு பச்சைக்குதிரை சொல்லிக் கொடுக்காததற்கு என்னைத் திட்டிக்கொண்டே லாங்க் ஜம்ப், பண்ணிக்கொண்டே ஒரு வழியாய் வண்டியில் ஏறிக்கொண்டாள்.

இதெல்லாம் போறாததுக்கு அன்னிக்குத் தான் கிரஹணம். பொண்ணை ஊருக்கு அனுப்பினது மட்டுமில்லாமல் கிரஹணமும் சேர்ந்துக்க அன்னிக்கு ராத்திரி சிவராத்திரி,. மறுநாள் காலையிலே குளிச்சுட்டுக் கும்பாபிஷேஹத்துக்கு ஊருக்குப் போகணும். கும்பாபிஷேஹம் இரண்டு வருஷமா நாள் பார்த்து, நாள் பார்த்துத் தள்ளிப் போய்க் கடைசியிலே ஒருவழியா எல்லாரும் ஒத்துக்கொண்ட தேதி. நல்லபடியாய் முடியணும். நாங்க ஊருக்குப் போறதுக்கும் சாமான்களை எடுத்துட்டு நடந்து போய்த் தான் வண்டியிலே ஏறணும். அப்பாடா, ஒரு வழியாய்க் காலம்பர மூணரை மணிக்குக் குளிச்சுட்டுச் சமைச்சு எடுத்து வைத்துக் கொண்டு, வீட்டைப் பூட்டிக்கொண்டு வண்டியிலே ஏறி உட்கார்ந்து ஸ்டேஷனுக்கும் போய்ச் சேர்ந்தாச்சு.

கும்பாபிஷேஹம் நேற்று நல்லபடியா நடந்தது. இன்று காலை கிளம்பி வந்து சேரலாம்னு வந்து பார்த்தா ஆட்டோ தெருவிலேயே நுழைய முடியலை. எதிரே திடீர்னு கைலை மலையாட்டமா இருக்கே?? இங்கே எப்படி இவ்வளவு பெரிய மலை வந்தது??வீட்டுக்கு எப்படிப் போறது?? சாமான் வேறே நிறைய. :( சாமானை வைத்துக்கொண்டு தெருவிலேயே நின்றோம். எதிரே ஜேசிபி குழாய் இணைப்புக்குத் தோண்டிய குழிகளில் இருந்து மண் தெருவின் இரண்டு பக்கமும் மலையாய்க் குமிந்து கிடந்தது.

14 comments:

  1. வந்தாச்சு, வந்தாச்சு."கயிலை தரிசன்த்தை வீட்டருகிலேயே காண்பிக்க செயத திட்டம். பட்ட வலிகளை நகைசுவையுடன் கூறிய பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. \\எதிரே ஜேசிபி குழாய் இணைப்புக்குத் தோண்டிய குழிகளில் இருந்து மண் தெருவின் இரண்டு பக்கமும் மலையாய்க் குமிந்து கிடந்தது.\\

    தலைவி மீதி பதிவு எங்க....எப்படி வந்திங்க அப்புறம்...;))

    ReplyDelete
  3. வாங்கோ மாமி, welcome back. அடுத்த ஒலிம்பிக்ஸ் ல இந்தியாவுக்கு லாங் ஜம்ப் ல மெடல் கிடைச்சுடும் :)
    கும்பாபிஷேகம் நன்றாக நடந்ததா?

    ReplyDelete
  4. வணக்கம் கீதா மாமி. நான் வலைபதிவுகளுக்கு புதியவள். கொஞம் நாட்களாக உங்கள் பதிவுகளை படித்து வருகிறேன். ரொம்ப சிறப்பாகவும் நகைச்சுவையகவும் இருக்கிறது. உஙகள் கல்யாண கதையை நான் விரும்பி படிக்கிறேன். கிருஹப்பிரவேசம் அழைப்பதோடு நிற்கிறதே. பிறகு என்னவாயிற்று? ஆவலோடு காத்திருக்கிரேன்.

    ReplyDelete
  5. அதையேன் கேட்கறீங்க இராஜராஜேஸ்வரி, ஊரிலே சாரத்திலே ஏறமாட்டேன்னு தவிர்த்தேனா! இங்கே வந்து பார்த்தால் மணல் மலை!

    ReplyDelete
  6. கோபி, அப்பாடி, உங்களைக் கமென்ட் எழுத வைக்கணும்னா என்னென்ன செய்ய வேண்டி இருக்கு! :P

    அதான் வந்துட்டோமுல்ல!, அதானே பதிவு! :)))) மிச்சம் வரும், பொறுங்க கொஞ்சம்.

    ReplyDelete
  7. வாங்க ஸ்ரீநி, மெடல் கிடைச்சா நல்லது தானே, அதுக்குத் தான் இப்படி எல்லாம் பயிற்சி கொடுக்கிறாங்க போல! :P கும்பாபிஷேஹம் விமரிசையாக நடைபெற்றது.

    ReplyDelete
  8. வாங்க ராம்வி, என்ன பேரு இது புதுசா?? காரணம் என்ன?? நல்வரவு, முதல்வரவுக்கும் பாராட்டுக்கும் நன்றி. ஊரிலே இல்லை, அதோட விருந்தாளிங்கனு ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப பிசி, எழுதி வைச்சதைக் கூடப் போட முடியலை. :))))))

    ReplyDelete
  9. என் பெயர் ரமா, கணவர் பெயர் ரவி
    blog ஆரம்பிக்கும் போது சரியாக type சையாததால் ரமாரவி-- ராம்வி ஆகிவிட்டது. இப்பொழுது அதுவே பழகிவிட்டதால்,பெயரை மாற்றி குழப்பம் வேண்டாம் என்று இருந்து விட்டேன்.

    ReplyDelete
  10. ராம்...ராம்..ஹனுமானை அழைக்காமல் விட்டுவிட்டீர்களே..
    ஒரே நொடியில் மண் மலை அம்போஆகி இருக்கும் :)

    ReplyDelete
  11. ராம்வி, பெயர் விளக்கத்துக்கு நன்றிம்மா. :D புதிய பெயர்.

    ReplyDelete
  12. மாதேவி, எப்போதும் உள்ளூக்குள்ளே சொல்லிக்கொண்டிருக்கும் ராமஜயம் கூட அந்த நிமிடங்களில் திகைத்துத் திணறிப்போனது என்பதே உண்மை! :))))))

    ReplyDelete
  13. "காலம்பற மூணு மணிக்கு குளிச்சு.." இருந்தாலும் இப்படி பயமுறுத்தலாமா?

    "ஆட்டோ நுழையமுடியவில்லை" - ஏனோ சட்டென்று வந்த சிரிப்பு நிற்கவில்லை.

    ReplyDelete
  14. படும் கஷ்டங்களை கூட நகைச்சுவையோடு சொல்லும் பாங்கு இருக்கிறதே சூப்பர் மேடம் :)

    ReplyDelete