கிரஹப்ரவேசத்துக்கு அப்புறம் தொடர முடியாமல் வேலை அதிகம். தனி மடலில் கேட்டவர்களுக்கும், பதிவுகளின் பின்னூட்டங்களில் கேட்டவங்களுக்கும் நன்றி. நாளை தொடரும். நாங்க நேற்று ஊரில் இருந்து வரும்போதே சந்தேகத்தோடு வந்தாலும் குழாய் இணைப்பு வேலை முடிஞ்சிருக்கும்னு நினைச்சோம். ஆனால் நேற்றுத் தான் ஜேசிபி வந்து இணைப்புக்கான பள்ளத்தைத் தோண்டிக்கொண்டு இருந்தது. எல்லாம் நேரம்! வேறே என்ன சொல்ல! :)))))) சரி, வீட்டுக்குப் போகாமல் தெருவிலேயே குடித்தனம் பண்ண வேண்டியது தான் அப்படினு நினைச்சேன். அதுக்குள்ளே அந்தப் பக்கமிருந்து வந்தவங்க பயமுறுத்தல் வேறே. தெருவின் கிழக்குப் பக்கமாகவும் நுழைய முடியாதாம். அங்கே பள்ளத்தை வெட்டியதோடு கிணறு எடுக்கவும் இல்லையாம். ஜல்லி, மணல் எல்லாமும் கொட்டி இருக்கு. நடப்பதே கஷ்டம்னாங்க.
நரகாட்சி எவ்வளவு பொறுப்பா மக்கள் ஒருபக்கமிருந்தும் வெளியே போகாமல் அவங்க அவங்க வீட்டிலேயே இருந்து வீட்டு வேலைகளை மட்டும் பார்த்தால் போதும்னு நினைச்சிருக்கு. வெயில் ஜாஸ்தியா, மக்கள் அலைந்து திரிந்து கஷ்டப் படப் போறாங்கனு தெருவின் இருபக்கமும் எச்சரிக்கைக் கொடி கட்டித் தெருவை மூடி வைச்சாச்சு. சாமானோடு எத்தனை நாழி நிக்கறது?? மெல்ல மெல்ல நம்ம ரங்க்ஸ் ஒரு பையைத் தூக்கிக் கொண்டு ஜேசிபி வேலை செய்யும் பக்கம் போனார். வேகம் வேகமாகப் பள்ளத்திலிருந்து மண் வெளியே வாரி வீசிக்கொண்டிருந்தது. அந்தச் சத்தத்திலே பேசினாலும் காதிலே விழுமா? ஆனாலும் விடாமல் ஜாடை காட்டி நாங்க வரணும் என்பதால் மணலை நிரவும்படி சொல்லி இருக்கார் போல. கொஞ்சம் போல் நிரவினதும், மெதுவாக அவர் மலையைத் தாண்டினார். அந்தப் பக்கம் போனாரானு எனக்குத் தெரியலை. போயிருக்கணும்.
ஒரு யுகமாய்த் தோன்றின பத்து முழு நிமிடங்கள் சென்றதும், பக்கத்து அடுக்குமாடிக் குடியிருப்பு வாட்ச்மேனை அழைத்துக்கொண்டு வந்தார். மீண்டும் ஜேசிபி ஓட்டுநரிடம் வேண்டிக் கொள்ள அவர் நிற்கும் என்னைப் பார்த்துவிட்டு மணலைச் சமமாகப் பரப்பினார். அப்பாடா! மலை கரைந்தது. ஓரளவுக்கு மேடு என்றாலும் நடக்க முடியும். ஆள் வந்து சாமானைத் தூக்கிக் கொள்ள மெல்ல மெல்ல அவர் கையை நானும், என் கையை அவரும் பிடித்துக்கொண்டு எங்க வீட்டிற்கு கிரஹப் பிரவேசம் செய்தோம். இதல்லவோ உண்மையான கிரஹப் பிரவேசம்! அப்பாடா! வீட்டுக்கு வந்தாச்சு.
ஹ்ஹஹா சூப்பர் கிரகப் பிரவேஷம்தான் .. உங்களுக்குன்னு எல்லாம் நடக்குது பாருங்க
ReplyDeleteகலக்கல் பிரவேசம் தலைவி ;)
ReplyDeleteகஷ்டம் தான். ஒரு வழியா க்ருஹப்ரவேசம் பண்ண முடிந்ததே.
ReplyDelete'அதனை அடுத்தூர்வது அஃதொப்பதில்' --என்கிற விஷயத்தை நன்றாகத் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்!
ReplyDeletenew house nice
ReplyDeleteஇந்தமாதிரி திரில்லிங்கா கிருஹப்பிரவேசம் பண்ணீனாதான்
ReplyDeleteஆயுசு பூரா நினைவில் இருக்கும்
ஸ்வீட் மெமொரீஸ்/
வாங்க எல்கே, கிரஹப்ரவேசம்னா அது எப்படி இருந்தா என்ன?? இதுவும் கிரஹப்ரவேசம் தானே! :))))))
ReplyDeleteவீட்டுக்கு வந்தோமே, அதுவே பெரிய விஷயம் கோபி. :D
ReplyDeleteகஷ்டத்தைத் தாங்கிக்க முடியறவங்களுக்குத் தான் கஷ்டமே வரும் என்பாங்க இல்லையா ஸ்ரீநி?? அந்த வகையில் இது கடவுள் எங்களோட பொறுமைக்குக் கொடுத்த சோதனை. நான் பட்டது எல்லாமும் எழுதினால் நிச்சயமாய் த்ரில்லரை விட சுவாரசியமாய் இருக்கும்.
ReplyDeleteஜீவி சார், ஹிஹிஹிஹி.
ReplyDeleteராம்ஜி புது வீடெல்லாம் ஒண்ணுமில்லை. பழசு தான். :))))))
ReplyDeleteகஷ்டம் தான்...அப்பாடா எப்படியே வீட்டிற்கு வந்தாச்சு....
ReplyDeleteஆமா இதுதான் கிரஹப்ரவேசம் கையோடு கைகோத்து.... அடிமேல்அடிவைத்து... :))
ReplyDeleteவாங்க கீதா அசல், எப்படியோ வீட்டுக்கு வந்தாச்சு தான். என்றாலும் சில நிமிடங்கள் ஒண்ணும் புரியலை தான். :))))))
ReplyDeleteமாதேவி, உண்மைதான், இதானே அசல் க்ரஹப்ரவேசம். :))))))
ReplyDelete//நரகாட்சி எவ்வளவு பொறுப்பா மக்கள் ஒருபக்கமிருந்தும் வெளியே போகாமல் அவங்க அவங்க வீட்டிலேயே இருந்து வீட்டு வேலைகளை மட்டும் பார்த்தால் போதும்னு நினைச்சிருக்கு. வெயில் ஜாஸ்தியா, மக்கள் அலைந்து திரிந்து கஷ்டப் படப் போறாங்கனு தெருவின் இருபக்கமும் எச்சரிக்கைக் கொடி கட்டித் தெருவை மூடி வைச்சாச்சு//
ReplyDeleteஆஹா! இது தான் வஞ்ச புகழ்ச்சி அணி என்பதோ !
நகராட்சியை நரகாட்சி என்று சொன்ன விதமும் உங்கள் நிலையை எங்களுக்கு தெளிவாக புரிய வைத்தன ;
பிரசனை தீரும் வரை ஏதாவதொரு கேசரி கட்சி காரங்க வீட்டுக்கு (அழையா!) விருந்தாளியா போய் ஜாம் ஜாமுன்னு தங்கி இருக்க வேண்டியது தானே :))))))))