எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, June 24, 2011

உலை மட்டுமா கொதித்தது? கல்யாணமாம், கல்யாணம்!

ஒரு சில நண்பர்கள் கல்யாணத்தின் சம்பிரதாயங்களையும் அதன் அர்த்தங்களையும் விடாமல் கேட்டதாலும், பழைய பழக்க வழக்கங்கள் மறைந்து வருவதைப்பற்றிய சிலரின் மன வருத்தங்களாலும் அவற்றை நினைவு கூரவும் இளைய தலைமுறை புரிந்து கொள்ளவுமே கல்யாணமாம் கல்யாணம் என்று ஆரம்பித்து எழுதி வருகிறேன்.

இதில் விட்டுப் போனவை எதாவது இருந்தால் தெரிந்தவர்கள் குறிப்பிடும்படி வேண்டுகிறேன். இனி ஓரிரு பதிவுகளே இந்தத் தொடரில் வரும். அதன் பின்னர் சமீபத்திய கும்பாபிஷேஹத்தின் வர்ணனைகள் வரும். நன்றி.
***************************************************************************************

மறுநாள் காலையிலே எழுந்ததுமே இன்னிக்குச் சமையல் புது மருமகள் தான் என்ற குண்டைத் தூக்கிப் போட்டார்கள். எங்க வீட்டிலே சமைத்து அநுபவம் நிறைய இருந்தாலும், புது இடம், அடுப்பிலிருந்து துடுப்பு வரை எல்லாமும் புதுசு, மேலும் அவங்க ருசி எப்படினு தெரியாது. கொஞ்சம் கலக்கமாய்த் தான் இருந்தது. குளித்துவிட்டு வந்ததும், சின்ன நாத்தனார் துணைசெய்ய சமையலைத் துவங்கினேன். நல்லவேளையாய் அடுப்புப் பத்த வைக்கிறது எல்லாம் தெரிந்தே வைத்திருந்தேனோ பிழைத்தேன். :P முதலில் கொடி அடுப்பு என்னும் அடுப்பின் ஒரு சின்ன பாகத்தில் பருப்பைப் போட்டு விட்டுப் பின்னர் வெண்கலப் பானையில் உலை வைக்க நீர் நிரப்பி ஏற்றி வைத்தேன். உலை கொதிக்கும் முன்னர் அரிசி களைந்து தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். புளி கரைத்துக் கொண்டு ரசத்துக்கு எடுத்து ஈயச் செம்பில் வைத்துக் குமுட்டியில் அதை ஒருபக்கம் வைத்துவிட்டு அரிசியை எடுக்க அரிசிப் பானைக்குப் போனேன். அந்த வெண்கலப் பானை அரைப்படி வெண்கலப் பானை. அரைப்படி என்றால் நாலு ஆழாக்குகள் பிடிக்கும். கிட்டத்தட்ட எண்ணூறு கிராமுக்குக் குறையாமல் பிடிக்கும். ஆகவே அரைப்படி அரிசியை எடுத்தேன்.

அப்போத்தான் விதி சிரித்தது. என் நாத்தனார் எவ்வளவு அரிசி எடுக்கறீங்க என்று கேட்க, நான் அரைப்படி என்று சொல்ல, அது போதாது; இது ஒருபடி வெண்கலப் பானை என்று சொன்ன அவள் ஒரு படி அரிசி போடவேண்டும் என்றும் சொன்னாள். திரு திருவென முழித்தேன் நான். எங்க வீட்டிலே இதை அரைப்படினு தானே சொல்வாங்க. தினமும் எங்க எல்லாருக்கும் இந்த மாதிரியான ஒரு வெண்கலப் பானையில் தானே சாதம் வைப்போம். அது நாகர்கோவில் வெண்கலப் பானை; இது கோதாவரிக் குண்டு. அதனால் அரிசியின் அளவுமா மாறும்? என் சின்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன மூளைக்கு எட்டவே இல்லை. என்றாலும் முதல் நாள் தேர்வு. தேர்வு நடத்துவதோ சின்ன நாத்தனார். எல்லாருக்கும் கடைசி; என்னைவிட இரண்டு வயதே சின்னவள் என்றாலும் வீட்டில் எல்லாருக்கும் அருமையானவள்; செல்லமானவள்; அவள் சொல்வதே எல்லாரும் கேட்பார்கள். அதை நாங்கள் ரயிலில் வந்தபோதே புரிந்து கொண்டிருந்தேன். ஆகவே அவள் சொன்னாப்போலவே ஒரு படி அரிசியை எடுத்துக் களைந்தேன்.

உலை நீர் கொதித்துக்கொண்டிருந்தது. பருப்பும் வெந்துவிட்டது; கொதிக்கும் உலையில் அரிசியைப் போட்டுவிட்டுக் கிளறிவிட்டுப் பருப்பில் கொஞ்சம் ரசத்துக்கும், யாருக்கானும் பருப்பு சாதம் சாப்பிடணும்னா அதுக்கு எனவும் எடுத்து வைத்துவிட்டுக் குழம்புக்குக் கரைத்த புளி நீரை ஊற்றிப் பொடி எல்லாம் போட்டு சாம்பாரை வைத்தேன். வைத்துவிட்டுத் திரும்பி சாதம் என்னாச்சு என்று பார்த்தால்?? கடவுளே! அரிசி பொங்கி வழிந்து கொண்டிருந்தது. பானையிலிருந்து வழிந்து கொண்டே இருந்தது. மிளுந்து வருது என்று மதுரைப் பக்கம் வழக்குச் சொல்லில் சொல்வார்கள். அப்படி வந்து கொண்டே இருந்தது. கிளறினால் அகப்பை உள்ள்ள்ள்ள்ள்ளே போய் விட்டது. தண்ணீரே இல்லாமல் பானை முழுதும் அரிசி. இத்தனை அரிசியும் கொதிக்கணும்னா இன்னும் ஜலம் வேண்டும். அரிசியோ பொங்கிக் கொண்டிருந்தது. அதைப்பார்த்துச் செய்வதறியாது திகைத்துப் போனேன். வெண்கலப் பானை, இரும்பு அடுப்பு, குமுட்டி எல்லாமும் படம் எடுத்து அப்புறமாச் சேர்க்கிறேன்.

27 comments:

  1. கீதா

    பழைய நாட்களுக் kondu



    சென்று விட்டீர்கள்.ஒரு ச்சின்னப் பொன்னை இப்படியா சோதிப்பது

    :(

    ReplyDelete
  2. வல்லி, வாங்க, காரணம் புரிஞ்சதும் சிரிப்பீங்க. சோதனை எல்லாம் எதுவும் இல்லை. :))))))

    ReplyDelete
  3. முதல் நாளே ரொம்பத்தான் பொங்கிவிட்டீர்கள்.

    ReplyDelete
  4. கீதா மாமி..கொடி அடுப்பு எல்லாம் நாஙகள் பார்த்ததே இல்லை. என் மாமனார் சொல்லி கேள்விபட்டிருக்கிறேன். பதிவுகள் மிகவும் நன்றாக இருக்கின்ற்ன. அடுத்த பதிவை ஆவலோடு எதிர்ப்பார்க்கிறேன், என்ன நடந்தது என்பதை தெரிந்துகொள்ள....

    ReplyDelete
  5. //இனி ஓரிரு பதிவுகளே இந்தத் தொடரில் வரும்./

    rejected. pls continue this

    ReplyDelete
  6. நானும் இந்தக்கரி அடுப்பு கொடி அடுப்பு சமையலில் இருந்து தான் ஆரம்பிச்சேன்

    ReplyDelete
  7. நான் ரெண்டு ப்ளாக் எழுதரேனே. குறையுன்றுமில்லயில் மலரும் நினைவுகளில் கரி அடுப்பு சமையல் பத்தி சொல்லி இருக்கேன் 2, 3, 4 பகுதிகளில்
    ஒரே நாளில் நிரைய கமெண்ட் போட்டதுக்கு நன்றி

    ReplyDelete
  8. \\அரிசியோ பொங்கிக் கொண்டிருந்தது. அதைப்பார்த்துச் செய்வதறியாது திகைத்துப் போனேன். \\

    ஓ...!! அப்புறம் என்ன ஆச்சுன்னு சொல்லிட்டு படத்தை போடுங்க தலைவி ;)

    ReplyDelete
  9. குமுட்டி அடுப்பில் ஈயச் சொம்பு காணாமல் போயிருக்கணுமே...!!

    ReplyDelete
  10. வாங்க ராஜராஜேஸ்வரி, ஹிஹிஹி, பொங்கலை; பயந்து போயிட்டோமுல்ல! :D

    ReplyDelete
  11. ராம்வி, கொடி அடுப்பு என்பது மண்ணால் அடுப்புப்போடுகையில் கூடவே பக்கத்தில் துணை அடுப்புப் போடுவாங்க. அந்தப் பக்கம் நெருப்பு எரிவது கொஞ்சம் கம்மியாக வரும், என்பதால் காய்கள் வேக விடுவது, பருப்பு வேக வைப்பது போன்றவை செய்து கொள்ளுவாங்க. மெயின் அடுப்பில் தான் விறகு வைப்பாங்க. அது கொடி அடுப்பு வரை எரியும் வரை விறகை நீட்டி வைப்பாங்க.

    ReplyDelete
  12. எல்கே, பார்க்கலாம். ரொம்பவே எழுதினாலும் போர் அடிக்குமுல்ல! :))))

    ReplyDelete
  13. வாங்க லக்ஷ்மி, அந்தக் காலத்தில் எரிவாயு அப்போத் தான் வர ஆரம்பிச்சது இல்லையா? எங்க சொந்தக்காரங்க ஒருத்தர் வீட்டிலே மட்டும் அப்போ எரிவாயு அடுப்பும், சிலிண்டரும் இருந்தது. பயந்து பயந்து அடுப்பை மூட்டுவாங்க. எப்போவானும் காப்பி போடவும், அப்பளம் பொரிக்கவும் மட்டுமே பயன்படுத்துவாங்க. எங்க குடும்பத்தில் நான் தான் முதல்முதல் சமையலில் எரிவாயுவைப்பயன்படுத்த ஆரம்பித்தேன். :))))))

    ReplyDelete
  14. @லக்ஷ்மி, இன்னொண்ணிலே இருக்கா? அதைப்பார்க்கவில்லை. பார்க்கிறேன். நன்றிங்க.

    ReplyDelete
  15. கோபி,வெயிட்டீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

    ReplyDelete
  16. ஸ்ரீராம், கல்யாணப்பதிவுகளுக்கு முதல் வருகைக்கு நன்றி. குமுட்டியில் எல்லாம் ஏமாறலை. ரசம் நல்லாக் கொதிச்சு பருப்பு ஜலம் விட்டு விளாவி வைச்சாச்சு. சாம்பாரும் பண்ணியாச்ச்ச்ச்/ சாதம் தான்! காலை வாரினது. :))))))

    ReplyDelete
  17. சோதனைமேல் சோதனை...

    நமக்கு இந்தத் தொல்லை எல்லாம் வரலை எங்கள் ஊரில் கலியாணத்துக்கு அப்புறமும் பெண்கள் அம்மாவுடன்தான் இருப்போம்.:)

    ReplyDelete
  18. அன்பு கீதா!
    உங்க "கல்யாணமாம் கல்யாணம்" அனுபவத் தொடரைப்
    படிக்கும்( மகிழும்!)உங்கள் ரசிகை.
    பாவம்!இவ்வளவு சிறுவயதில் எத்தனை சோதனைகள்!
    பெண்ணாய் நின்று வென்றதும் அனுபவமே.
    அருமை!(உங்கள் புகைப்படத்தைப் பெரியதாய்ப் பார்க்க ஆவல்)இடலாமே.

    அன்புடன்,
    தங்கமணி.

    ReplyDelete
  19. வாங்க மாதேவி, கொழும்பில் அப்படி இருப்பீங்க போல, இங்கெல்லாம் கல்யாணம் ஆனால் பெண் மாமியார்வீடு தான் போகணும், இந்தியா முழுக்க இப்படித் தான் கர்நாடகாவில் குடகு மலைப்பக்கம் கூர்கில் இப்படி இல்லைனு சொல்வாங்க, அது குறித்துச் சரியாத் தெரியாது. :)))))))

    ReplyDelete
  20. வாங்க தங்கமணி அம்மா, நீங்கள் வந்தது குறித்து ரொம்ப சந்தோஷமா இருக்கு. உங்கள் பாடல்களைப் படிக்கிறேன், ஆனால் பின்னூட்டம் கொடுக்க முடியலை! :)))

    இதை சோதனைனு அப்போ நினைக்கலை; உண்மையைச் சொல்லணும்னா தப்புப் பண்ணிட்டோம்னு தான் இருந்தது; மற்றபடி சோதனைகள் வேறே விதமா எத்தனையோ இருக்கே! படம் இப்போ அவ்வளவா நல்லா இல்லை அம்மா; எல்லாரையும் பயமுறுத்த வேண்டாம்னு பார்க்கிறேன். :D நீங்க சென்னையிலே இருந்தால் நேரிலேயே சந்திப்போம். :))))))

    ReplyDelete
  21. புக்கக முதல் சமையல் அனுபவம் மறக்க முடியாததா இருக்கே. எப்படி சமாளித்தீர்கள்?

    ReplyDelete
  22. சாதம் செய்யச்சொன்னா பொங்கல் பண்ணியிருக்கீங்க.. தேர்வில் வெற்றி கிடைச்சுதா இல்லியா :-))

    ReplyDelete
  23. வாங்க அமைதி, தேர்வில் பாஸ். இரண்டு வெண்கலப் பானையில் அரிசியை மாற்றிப்போட்டுசாதமாகவே பண்ணிட்டேன். சமாளிப்போம் இல்ல?? :)))) பெரும்பாலும் குடும்ப வாழ்க்கையில் சங்கடங்களைச் சமாளிப்பதிலேயே போய்க் கொண்டிருக்கிறது. அப்போப் பார்த்து விசித்திரமான யோசனைகளும் வரும், வெற்றியும் கிட்டும். நன்றிங்க.

    ReplyDelete
  24. அப்பாடி, கமெண்டுக்குப் பதில் கொடுக்க முடியுது/ :P

    ReplyDelete
  25. கீதாம்மா,
    நான் எழுத முயற்சி செய்திருக்கிறேன். உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன் ..

    http://hiitsmuthu.blogspot.com

    ReplyDelete
  26. இனி ஓரிரு பதிவுகளே இந்தத் தொடரில் வரும்.//
    இதென்ன !!!!!!!!!

    செல்லாது செல்லாது தலைவி இப்படி குண்டை போடறீங்களே .................

    அப்புறம் பசி எடுக்கும் வரை உண்ணாவிரதம் இருக்க வேண்டி இருக்கும் என்று எச்சரிக்கை செய்ய கடமை பட்டு இருக்கிறேன் :))

    ReplyDelete
  27. புது இடத்தில சரியாக தூக்கம் வந்ததா? எத்தனை மணிக்கு எழ வேண்டும்? .,கிராம புறங்களில் எல்லாம் 4 மணிக்கே எழுந்து கொள்ள வேண்டுமாமே !!





    எங்க வீட்டிலே சமைத்து அநுபவம் நிறைய இருந்தாலும், புது இடம், அடுப்பிலிருந்து துடுப்பு வரை எல்லாமும் புதுசு,//

    நீங்க சொல்லி இருக்கலாம் ;நான் புது பொண்ணு ;கொஞ்சம் trial இருந்தா நல்லது ன்னு :))))

    ஜஸ்ட் கிட்டிங் கீதாம்மா ;உங்களுக்கு ஒன்னும் டென்ஷன் னே இல்லையா ?!


    //மேலும் அவங்க ருசி எப்படினு தெரியாது. கொஞ்சம் கலக்கமாய்த் தான் இருந்தது. குளித்துவிட்டு வந்ததும், சின்ன நாத்தனார் துணைசெய்ய சமையலைத் துவங்கினேன். நல்லவேளையாய் அடுப்புப் பத்த வைக்கிறது எல்லாம் தெரிந்தே வைத்திருந்தேனோ பிழைத்தேன்//

    போன இடத்தில உங்க வயது காரர் உங்களுக்கு அமைந்தது ரெம்ப நல்லது தான் ;முக்கியமா பேச்சு துணை

    இல்லன்னா சில சமயம் செம போர்றா இருந்து இருக்கும் இல்லே !

    பொதுவாக சொல்றேன்

    பெண்கள் வாழ்கையில் மட்டும் என்ன ஒரு மாற்றம் ,விசித்திரம் பாருங்கள்

    ஒரு இடத்தில் பிறக்கிறோம்

    பின் வளர்ந்து திருமண வயது வந்தவுடன் இன்னொரு இடத்தில வாழ்க்கை படுகிறோம்

    புது ஊர் ,புது இடம் , புது மனிதர்கள் ,புதிய சூழ்நிலை ,நீங்கள் குறிப்பிட்டு இருப்பது போல அடுப்பில் இருந்து துடுப்பு வரை எல்லாமே புதுசு

    அதையும் சமாளித்து தனது திறமையால் ,அன்பால் ,பாசத்தால் எல்லோரையும் அரவணைத்து செல்வதில் தான் குடும்பத்தின் வெற்றி

    அடங்கி இருக்கிறது ! !

    ஒரு காலத்தில் கூட்டு குடும்பமாக உறவிலே பெண் எடுத்து, கொடுத்த காலத்தில் திருமணமான புது பொண்ணுக்கு இந்த அளவு பதட்டமோ மனக்குறையோ இருந்து இருக்காது என்றே தோன்றுகிறது.,

    இன்றைய காலத்தில் ஏன் எங்கள் காலத்தில் கூட கல்யாணம் முடிந்ததும் தனி குடித்தனம் தான் (ஏன் என் மாமியார் கூட மாமனார் அரசு உத்தியோகத்தில் இருந்ததால் தனி குடித்தனம் தான்!) இதனால் சற்று உறவுகளின் அருமையே தெரியாமல் போய் விட்டது என்று கூட நினைப்பது உண்டு .,பகிர்வுக்கு நன்றி கீதாம்மா

    தொடர்ந்து எழுத வேண்டுகிறேன் !

    ReplyDelete