உலகின் முதல் தொலைக்காட்சி ஒளிபரப்பாளர்: ஸ்ரீகிருஷ்ணன்.
உலகின் முதல் தொலைக்காட்சித் தொடர்: குருக்ஷேத்திர யுத்தம்.
உலகின் முதல் தொலைக்காட்சிப் பார்வையாளர்: சஞ்சயன்
உலகின் முதல் தொலைக்காட்சி நேர்முக வர்ணனையாளர்: சஞ்சயன்
உலகின் முதல் உடல் உறுப்பு தானம் செய்தவர்: ததீசி முனிவர். இந்திரனின் வஜ்ராயுதத்துக்குத் தன் முதுகெலும்பைத் தானம் செய்தவர்.
உலகின் முதல் கண் தானம் செய்தவர்: கண்ணப்ப நாயனார்.
உலகின் முதல் டெஸ்ட் ட்யூப் குழந்தை: அகஸ்திய மஹரிஷி. குடத்துக்குள் இடப்பட்டு வளர்ந்தவர்.
முதல் முதல் ஆராய்ச்சி செய்யும் எல்லாமே சற்றுக் கோணலாகவோ, அல்லது வளர்ச்சியின்மை இல்லாமலோ குறைபாட்டுடன் தான் பிறக்கும். அதனால் தானோ என்னவோ அகஸ்தியர் உருவம் சற்றுக் குட்டையாக இருந்திருக்குமோ என
எண்ணுகிறேன். இது மாதிரி நிறைய முதல் விஷயங்கள் நம்முடைய இதிகாசத்திலும்,
புராணங்களிலும் கொட்டிக் கிடக்கிறது.
************************************************
திரெளபதி மஹாபாரதத்தின் கதா நாயகி. 5 மஹா பதிவிரதைகளுள் ஒருத்தியாகப்
போற்றப் படுபவள். அவளுடைய பதிவிரதைத் தன்மை குறித்துக் கேள்விகள்
எல்லாருக்கும் உண்டு. இது புராணத்திலும், இதிகாசத்திலும் நம்பிக்கை
வைத்திருப்பவர்களுக்கும் இருக்கிறது. 5 கணவன்மார்களுடன் வாழ்ந்த ஒருத்தி
எப்படிப் பத்தினியருள் ஒருவராக ஆனாள்?அதற்கான விளக்கம் எனக்குத்
தெரிந்த வரையில், நான் கேட்டுத் தெரிந்து கொண்டதைத் தருகிறேன்.
5 கணவன்மாருடன் வாழவேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டு ஒண்ணும் திரெளபதி அர்ச்சுனனுக்கு மாலையிடவில்லை. என்றாலும் இதிலும் ஒரு அர்த்தமும், தாத்பரியமும் இருக்கிறது என்பதாலேயே இம்மாதிரியான ஒரு நிகழ்வு ஏற்பட்டிருக்கிறது. 5 கணவன்மாருடன் வாழ்ந்த திரெளபதி முறையே ஒருத்தருடன் ஒரு வருஷம்
என்ற கணக்கில் வாழ்ந்தாள். ஒரு வருஷம் முடிந்ததும் "அக்னிப் பிரவேசம்" செய்து
தன்னைத் தூய்மைப் படுத்திக் கொண்டுதான் அடுத்த கணவனுடன் வாழ்ந்தாள்.
இன்றைக்கும் கணவனைப் பிரிந்த மனைவியரும் சரி, இல்வாழ்க்கை நன்கு அமைய வேண்டுபவரும் சரி. திரெளபதி அம்மன் கோவிலில் "தீ மிதி" என்னும் பூக்குழியில் இறங்கித் தங்களைப் புனிதப் படுத்திக் கொள்வதைப் பார்க்க முடியும்.
************************************************
ஒருமுறை பஞ்ச பாண்டவரின் வனவாசத்தின் போது கிருஷ்ணர் அவர்களைச் சந்திக்க வந்தார். அன்று திரெளபதி பீமனுடன் சேர்ந்து வாழத் துவங்கும் நாளாக அமைந்தது. பீமனுக்கு ஏற்கெனவே சந்தேகம். இந்தப் பெண்மணி எப்படி எல்லாரையும் கணவனாக ஏற்றுக் கொண்டு குற்ற உணர்ச்சி இல்லாமல் இருக்கிறாள்.என்று. அதுவும் இப்போது
கிருஷ்ணர் வேறு வந்திருக்கிறார். திரெளபதிக்கு அண்ணன் முறை. அவர் முன்னால். பீமன் முகம் சுருங்கிக் கிடந்தது. கிருஷ்ணர் ஒருவாறு ஊகித்துக் கொண்டார். திரெளபதியைக் கண்களால் பார்த்துச் சிரித்தார். திரெளபதியும் கிருஷ்ணரைப் பார்த்துச் சிரித்தாள்.
பீமனுக்குக் கோபம் வந்தது. என்றாலும் தனிமைக்காகப் பொறுமையுடன் இருந்து,
தனிமையில் கிருஷ்ணரைச் சந்தித்து,. "கிருஷ்ணா, உனக்கே இது நியாயமா?
இவ்வளவு நாள் எனக்கு அண்ணியாக இருந்தவள், எனக்குத் தாய் ஸ்தானத்தில்
இருந்தவள் இன்று முதல் ஒரு வருஷத்திற்கு மனைவி, என்றால் என்னால் எப்படி ஏற்க முடியும்? நீயானால் சிரிக்கிறாய்! திரெளபதியும் சிரிக்கிறாளே!" என்று கேட்டான். கிருஷ்ணர்
சொன்னார்:"பீமா, நடப்பவை எல்லாம் உன்னைக் கேட்டு நடக்கவில்லை. ஏற்கெனவே இது இவ்வாறு நடக்கும் என்று சொல்லி இருப்பது தான் நடக்கிறது. இதில் நீ வருந்த ஒரு காரணமும் இல்லை. இருந்தாலும் உன் ஆறுதலுக்கு ஒரு விஷயம் சொல்கிறேன், கேள்! இன்றிரவு திரெளபதி நள்ளிரவில் தனியாக வெளியில் செல்வாள் அல்லவா?" என்று கேட்டார். "ஆம், பார்த்திருக்கிறேன். ஒரு வருஷம் முடிந்ததும் ஒவ்வொரு நள்ளிரவிலும்
வெளியே சென்று விட்டுப் பின் உதயத்தில் திரும்பி வருவாள்." என பீமன் சொல்ல,
"அப்போது திரெளபதி எப்படி இருப்பாள்?" என்று கிருஷ்ணர் கேட்க, பீமனோ,"புடம்
போடப் பட்ட புதுப் பொன்னைப் போல் ஜொலிப்பாள். அவள் முகத்தின் தேஜஸ் சுடர் விட்டுப் பிரகாசிக்கும்." என்று சொல்கிறான். "பீமா, இன்றிரவு அம்மாதிரித் திரெளபதி வெளியே போகும்போது நீயும் உடன் போய்ப் பார்." என்று கிருஷ்ணர் சொல்கிறார். அன்றிரவில் நள்ளிரவில் திரெளபதி வெளியே போக பீமனும், கிருஷ்ணனும் அவளுக்குத் தெரியாமல்
தொடர்ந்து போகிறார்கள். அவர்கள் இருவரும் மறைந்து இருந்து பார்க்கும் வேளையில் தீ மூட்டிய திரெளபதி, தானும் அந்தத் தீயில் விழுகிறாள். மனம் பதைத்த பீமன் அவளைக் காப்பாற்ற ஓட முயற்சிக்கத் தடுக்கிறார், பரந்தாமன். "அங்கே பார்!" என்கிறார். என்ன
ஆச்சரியம்! தீக்குள் திரெளபதியா தெரிந்தாள்? சாட்சாத் அந்த அகிலாண்டேஸ்வரி, சர்வ உலகத்தையும் காத்து அருளும் மஹா சக்தி, அன்னை தன் சுய உருவில் காட்சி அளிக்கிறாள். அவளைத் தீயும் சுடுமோ? அவளே தீ, அவளே, நீர், அவளே வாயு, அவளே
ஆகாயம், அவளே நிலம். சகலமும் அவளே அல்லவா? திகைத்துப் போன பீமனை அழைத்து வந்து புரியவைக்கிறார் அந்த வாசுதேவன்.
"பீமா, நீங்கள் ஐவரும் பஞ்ச பூதங்கள் என்றால் உங்களை ஆளும் மஹாசக்தி திரெளபதி ஆவாள். அவளுக்குள் நீங்கள் அடக்கமே அன்றி அவள் உங்களுக்குள் அடக்கம் இல்லை. எப்படி இந்தப் பிரபஞ்சமானது பஞ்சபூதத்தையும் வெளிக்காட்டி ஆளுமை செய்கிறதோ,
அதை ஆளுமை செய்யும் சக்தி இவளே! நீங்கள் ஐவரும் ஐம்புலன்கள் என்றால்
உங்கள் உடலில் உள்ள ஜீவாத்மா இந்தத் திரெளபதி ஆவாள். இந்த ஜீவாத்மா
எப்படிப் பரமாத்மாவிடம் ஐக்கியம் ஆகிறதோ அப்படி நீங்கள் அனைவரும் அவளுள் ஒடுங்குவீர்கள். உனக்கு இந்த உண்மை புரியவேண்டும் என்பதற்காக இந்தக் காட்சியைக் காட்டினேன். இந்த உண்மை உனக்குள் உறைந்து போகட்டும். இவளை விடக் கன்னியோ, அல்லது பத்தினியோ இவ்வுலகில் இல்லை. அனைத்தும் இவளே! இந்த உண்மைதான்
உங்கள் ஐவரையும் திரெளபதி மணம் புரிந்ததாகக் காட்டப் படும் காட்சி. இதன் உள்ளே உள்ள இந்தத் தத்துவத்தை உணர்ந்தவர்கள் என்னையே உணர்ந்தவர்கள் ஆவார்கள். நீ கவலை இல்லாமல் உன் கடமையைச் செய்." என்கிறார்.
மேற்குறிப்பிட்ட தத்துவம் நான் சின்ன வயசிலே கதை கேட்ட போது கேட்டது. இப்போ சமீப காலத்தில் ஒரு திரைப்படம் கூட சம்ஸ்கிருதத்தில் வந்தது,. அதிலும் இந்தத் தத்துவம் குறிப்பிடப் பட்டிருக்கிறது. "நீனா குப்தா" திரெளபதி என்று நினைக்கிறேன். படம் பார்க்கவில்லை. மற்றும் சிலத் தொலக்காட்சித் தொடர்களிலும் வந்தது. எத்தனை பேர் பார்த்தார்கள் தெரியவில்லை. இப்போது இதை எழுதக் காரணம் குருக்ஷேத்திரப் போர் நடந்தது ஒரு மார்கழி மாசம் தான். 2 நாள் முன்னாலே ஒரு புத்தகம் படிக்கும்போது
இது நினைவு வந்தது. இன்றைய தலைமுறையினருக்குத் தெரிய வேண்டும் என்பதற்காக எழுதி இருக்கிறேன்.
"தேவர்கள் பூச்சொரிந்தார்-ஓம்
ஜெய ஜெய பாரத சக்தி என்றே"
ஓமென்றுரைத்தனர் தேவர்,
ஓமென்று சொல்லி உறுமிற்று வானம்
பூமியதிர்ச்சி உண்டாச்சு-விண்ணை
பூழிப் படுத்தியதாம் சுழல் காற்று
சாமி தருமன் புவிக்கே-என்று
சாட்சியுரைத்தன பஞ்ச பூதங்கள் ஐந்தும்,
நாமும் கதையை முடித்தோம்- இந்த
நானில முற்றும் நல்லின்பத்தில் வாழ்க!"
மஹா கவி சுப்பிரமணிய பாரதியின் "பாஞ்சாலி சபதம்" கவிதையில் இருந்து கடைசியில் வரும் சில வரிகள்.
//இது மாதிரி நிறைய முதல் விஷயங்கள் நம்முடைய இதிகாசத்திலும்,
ReplyDeleteபுராணங்களிலும் கொட்டிக் கிடக்கிறது.
//
அரிய, அறியா விஷயங்கள் அறிய வைத்ததற்கு நன்றிங்க மேடம்..
//இன்றைய தலைமுறையினருக்குத் தெரிய வேண்டும் என்பதற்காக எழுதி இருக்கிறேன்.
ReplyDelete//
புதிய விஷயங்கள் மேடம்.. இது மாதிரி நிறைய விஷயங்களை எழுதுங்கள்.. என்ன போன்றவருக்கு தெரியப்படுத்தும்.. மறைந்து போன கருத்துகள் சுடர் விடும்
கீதா,
ReplyDeleteதிரௌபதியை பற்றி அறியாதவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.
கோர்வையாகக் கதை சொல்லும் உத்தி உங்களுக்கு நன்றாக வருகிறது.
நன்றிமா.
WoW!Arumaith thagavalgaL.Two posts in a day.Kalkunga Thalaiviyae.JORE!
ReplyDelete--SKM
கார்த்திக், உண்மையில் நம்ம புராணங்களிலும், இதிகாசங்களிலும் உள்ள தத்துவங்களை யாருமே சரியாப் புரிந்து கொள்ள முடியாமல் ஒரு தலைமுறையே இருக்கிறது. உங்களைப் போன்ற வருங்காலச் சந்ததியினராவது தெரிந்து கொள்ளணும் என்கிற ஆசை தான்.
ReplyDeleteரொம்பவே நன்றி வல்லி, கொஞ்சம் ஆன்மீகம், கொஞ்சம் வம்பு, கொஞ்சம் அனுபவங்கள், கொஞ்சம் புலம்பல்னு தான் இந்தப் பக்கத்தில் நான் எழுதறேன். அதனால் தான் ஆன்மீகப் பக்கமே கார்த்திக் தனியாப் பிரிக்கச் சொன்னார். நீங்க என்னுடைய கைலை அனுபவத்தையும் நேரம் கிடைக்கும்போது படிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
ReplyDeleteஹிஹிஹி, எஸ்.கே.எம். டாங்ஸு, டாங்ஸு, என்னைத் தலைவியேன்னு கூப்பிட்டதுக்கு. ரொம்பவே சந்தோஷமா இருக்கு, அம்பி கிட்டே போய் நீங்களாவது சொல்லுங்க. நிரந்தரத் தலை(வலி)வி, நான் தான்னு.:D
ReplyDeleteMmm, nalla kathai! flow also so good!
ReplyDelete//கொஞ்சம் ஆன்மீகம், கொஞ்சம் வம்பு, கொஞ்சம் அனுபவங்கள், கொஞ்சம் புலம்பல்னு தான் இந்தப் பக்கத்தில் நான் எழுதறேன்//
ithu thaan comedy!
//அம்பி கிட்டே போய் நீங்களாவது சொல்லுங்க. நிரந்தரத் தலை(வலி)வி, நான் தான்னு//
thoda! ethuku? ethuku intha vilambaram? :p
paartha udanaiye kanna kattidichu!!!!!!!!!!!!!!!
ReplyDeleteMaami,Very happy pongal.
ReplyDeleteஅம்பி, அது சரி, கத்தரிக்காய் மெனு கொடுத்திருக்கேனே பார்க்கலையா? அதிலே கத்தரிக்காய் பஜ்ஜி விட்டுப்போச்சு. பண்ணிட்டு, "கோரமங்களா"வுக்கு அனுப்பவா? இல்லை "மடிப்பாக்கமா" இல்லை "மிச்சிகனா" இல்லை "கல்லிடைக்குறிச்சியா"னு சொல்லவும். என்னைக் கேட்டா 4 இடத்துக்கும் அனுப்பிடலாம்னு பார்க்கறேன். என்ன சொல்றீங்க? :p
ReplyDeleteமேடம் நெருடலான விஷயத்தை நையமாக்ச் சொல்லியிருக்கிறீர்கள்.கத்திமேல் நடக்கும்போன்ற விஷயம் இது.அருமையாகக் கையாண்டு இருக்கிறீர்கள்.பொங்கல் வாழ்த்துக்கள்
ReplyDeleteஅம்பிக்கு அனுப்ப வேண்டிய கத்திரிக்கா பார்சலில்"கிண்டி"யை எப்படி விட்டுவிட்டீர்கள் அம்பியைப் போலவே.
//இன்றைய தலைமுறையினருக்குத் தெரிய வேண்டும் என்பதற்காக எழுதி இருக்கிறேன்//
ReplyDeleteஆம் தெரிந்து கொண்டேன் அரிய விசயத்தை..
நன்றி தலைவி அவர்களே...
இனிய தமிழர் திரு நாள் வாழ்த்துகள்..
Maami, Pongal Vazhththukkal.--SKM
ReplyDeletesuper. sila peru draupadhi pathi kindal panni pesarapo idhu enakku teriama muzhichu irukken. unga vilakkam romba arumai madam :)
ReplyDeleteoru vazhiyaa unga vitta ella padhivayum padichu mudichutten. ippo pongal saptadhuku nalla thookam aatudhu kanna :)
ReplyDeleteதி.ரா.ச. சார், அம்பியையும், தங்கமணியையும் கேரளாவில் உள்ள ஒரு கோயிலில் கத்தரிக்காய்ப் பிரசாதம் தராங்களாம். அங்கே கல்யாணம் முடிஞ்சதும் அனுப்பி வச்சுடுங்க. கத்தரிக்காய் சாப்பிட. பிரசாதம் வேறேட். வேணாம்னு சொல்ல முடியாது.
ReplyDelete@நாயகரே, அக்கா விளம்பரம் கொடுக்கிறாங்க செலவில்லாமலே, அடிச்சு நொறுக்குங்க.
@மலர், புது வரவுக்கு நன்றி.
@வேதா, கருத்தில் ஆழத்தைக் காணோமே? அவசரமா வந்துட்டுப் போயிட்டீங்க போல் இருக்கு.
@போர்க்கொடி, இப்போத் தான் ஒரு மூணு நாள் முன்னாலே வடிவேலு மின்னலைப் பெண்பார்க்கும் நிகழ்ச்சியைப் பார்த்து உங்களை நினைச்சுக்கிட்டேன். அந்த மின்னல் போலவே வந்திருக்கீங்க. அது என்ன கண்ணா? மூக்கா எல்லாம்? ரங்கமணி நினைப்பா? ரங்கமணியைக் கேட்டதாய்ச் சொல்லுங்க.
@எஸ்.கே.எம். பொங்கல் வாழ்த்து யாருக்கும் அனுப்ப முடியாம எதிர்க்கட்சி சதி செய்துட்டாங்க. இப்போ பொதுக்குழு கூட்டப் போறேன். அப்போ இது பத்தி விவாதிப்போம். முடிவு பதிவிலே(வந்தால்)தெரிவிக்கப் படும்.
அனைவருக்கும் மனமார்ந்த பொங்கல் வாழ்த்துக்கள்.
தலைவியே என்னய விட்டுடீங்க.. நீங்கள் பொங்கல் வாழ்த்தாவது எனக்கு சொல்லியிருக்கலாம்(அதுதான் அனைவருக்கும் வாழ்த்து சொல்லியிருக்கேன்னு நீங்க சொல்றது கேட்கிறது.) இருந்தாலும் என் தனியா என் பெயர நீங்க கூப்பிடைலைனு வருத்தம்ம்ம்ம்ம்ம்ம்ம்..
ReplyDeleteஹிஹிஹி, மணிப்ரகாஷ், நான் அ.வ.சி. வேறே என்ன செய்யறது? உங்க பேரை வேணும்னு விடலை. நீங்க கட்-அவுட் வைக்கிறதிலே பிசின்னு தான் தொந்திரவு செய்யாம இருந்துட்டேன். இன்னும் ஸ்ரீகாந்தும், மதுரையம்பதியும் வேறே வந்து கேட்கப் போறாங்க. எல்லாருக்கும் பொங்கல் பார்சல் அனுப்பி இருக்கேன். பொங்கல் வாழ்த்துக்கள்.
ReplyDelete