எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, October 03, 2011

இந்த மரம் இல்லைனா இன்னொரு மரம்!

அணிலாக இருந்தால் மரத்துக்கு மரம் தாண்டிக் கொண்டு சந்தோஷமாய் இருந்திருக்கலாம். எந்த மரத்தில் பொந்து இருக்கோ அங்கே இருக்கலாம். பறவைகளாய் இருந்தா விண்ணில் பறந்திருக்கலாம். இஷ்டத்துக்கு யார் இருக்காங்க இல்லைனு இல்லாமல் கத்திக்கூப்பாடு போடலாம். மத்தியான வேளையில் இங்கே வந்து பார்க்கணும், கூச்சலை! கூடு கட்டிக்கொள்வதும், குஞ்சு பொரிப்பதுமாக சந்தோஷமாய் நாட்களைக் கடத்தலாம். மழையோ, வெய்யிலோ எதானாலும் பாதிப்பு ஏற்படாது. மழையும், வெய்யிலும் பழகி இருக்கும். ஃபான் வேண்டாம்; ஏசி வேண்டாம்; லைட்கள் தேவை இல்லை; பாதி சமையலில் கரண்ட் போகாது. சமைக்கவே வேண்டாம். பவர் கட் பாதிப்பு இல்லை. தண்ணீருக்கு அலைய வேண்டாம். வீட்டைக் கட்டறதா; இடிக்கிறதானு குழம்ப வேண்டாம். நிச்சயமில்லாத வாழ்க்கை இல்லை. இந்த மரம் இல்லைனா இன்னொரு மரம்! இல்லைனா காட்டுக்குப் போயிடலாமோ! காட்டு மிருகங்களாக இருந்திருக்கலாமோ என்னமோ! நம்மை விட அதுங்க வாழ்க்கை பரவாயில்லைனு தோணுது.

ரோடு தேவையில்லை; ரோடு போடலையேனு சண்டை போட வேண்டாம். பக்கத்து குகை மிருகம் குப்பையைக் கொட்டாது. அது பாட்டுக்கு அது இருக்கும், நாம் பாட்டுக்கு இருக்கலாம். மனிதராய்ப் பிறந்தால் தான் பிரச்னையே! எவ்வளவு தேவைகள்! எதைக்குறைக்கிறது! எதை வைச்சுக்கிறது! மூளையே குழம்பிப்போகிறது.

4 comments:

  1. ))))) அப்படி சொல்லறத்துக்கு இல்லை இல்லையா மிஸஸ் ஷிவம் ? . எந்த experience ஐயுமே அதுஅதாக இருக்கும் போதுதானே முழுமையா அறிய முடியும்? . என் ஆஃபீஸ் ரூம்ல வெளில swallow 2, கூடுகட்டி தன் குஞ்சுகளோட இருக்கு . தப்பி தவறி நான் கதவை திறந்து வெளில போனேன்னா அது படற அவஸ்த்தை எங்க நான் அதோட கூட்டை கலைச்சிடுவேனொன்னு அது படற தவிப்பு பாக்க கஷ்டமா இருக்கும்.அதனால இப்ப கதவை திறக்கறதே இல்லை இந்த ஊரு மழை குளிர்ல தன் கூடு / இடம் தெரியாம confused ஆகி படபடக்கற /அழற பறவை / பூனையையும் பாத்திருக்கேன். இன்னிக்கு கார்த்தால கூட WORK க்கு போற அவதி . ஸ்வாமி ரூம்க்கு வெளில போறத்துக்குள்ள மழைல வெட வெடன்னு நனைஞ்சுணடு கிச் கிச் நு பேசற குருவி . என்னால இந்த குளிர்ல எப்படி போய் சாப்பாடு தேட முடியும் . நீ மட்டும் சூடா காஃபி குடிச்சியானு கேட்ட மாதிரி தோனித்து .வாஸ்தவம் தானே பாவம்னு தோனினப்பறம் அதை அலக்ஷியமும் செய்ய முடியாது நம்பளால இல்லையா ? வீட்டுக்கு உள்ளே போய் அவசரமா 2 ப்ரெட் ஸ்லைஸஸை போட்டுட்டு சாமிக்கு அள்ளி தெளிச்சு அவசர சலாம் வச்சுட்டு come along let us drive நு சாமிட்ட சொல்லிட்டு போகவேண்டி இருந்தது நம்பளை மாதிரிதான் மத்த உயிரும் . எல்லாவைக்கும் life challenging தான் இல்லையா. நல்லா வேண்டிக்கறேன் நீங்க வேணா பாருங்கோ இந்த uncertainty யும் சரியாயிடும் .அரிது அரிது மானுடராய் பிறப்பதரிது .:)) நீங்களே இப்படி வருத்தப்பட்டா எப்படிம்மா ??

    ReplyDelete
  2. உண்மைதான். தனிமடலில் கூட இன்னொரு சிநேகிதி சொல்லி இருக்கார். மானிட ஜன்மம் எடுத்ததால்தானே பிள்ளையாரை ஃபிரண்டா வச்சுக்க முடியுதுனு கேட்டிருக்கார். நேத்திக்கு சமையலறையில் லூட்டி அடித்துக்கொண்டிருந்த அணில்களைப் பார்த்தால் கொஞ்சம் பொறாமையாய்த் தான் இருந்தது. ஆனால் அதுங்களுக்கும் பிரச்னைகள் உண்டுதான்.

    ஒவ்வொரு முறை குயில் குஞ்சுகளுக்கு உணவளிக்க மறுக்கும் காக்கைகளைப் பார்த்துப் பரிதவித்திருக்கிறேன். அதுக்காகவே கூடவே பயறுகளையோ, தேங்காய் துருவலையோ, சாதமோ, கையிலே கிடைக்கிறதைப் போடுவேன். அதுக்குக் கொத்தித் தின்ன முடிஞ்சா சந்தோஷமாவும் இருக்கும்.

    ஆனால் நிச்சயமற்ற இந்த நிலைமையும், இங்கே எல்லாத் தெருக்களையும் சர்வநாசம் செய்து வரும் நகராட்சி நிர்வாகமும், எத்தனை சொன்னாலும் மீண்டும் மீண்டும் நட்ட நடுவே கட்டுமான சாமான்களைக் கொட்டு அனைவரையும் அவதிப்பட வைக்கும் கட்டிடக் காண்ட்ராக்டர்களையும், தைரியமாய்ப் புகார் கொடுக்க முன்வராத தெருமக்களையும், எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு புழுவைப் போல் தாழ்ந்து போவதையும் நினைத்தால் மனம் பதைக்கிறது.

    அதே சமயம் இன்றைய தினசரியில் பெண்களாகச் சேர்ந்து கொண்டு மேலும் மேலும் அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்ட எதிர்ப்புத் தெரிவித்திருப்பதைக் கண்டாலும் ஆறுதலாக இருக்கிறது. எங்க நகராட்சியின் நிலையையும், அசட்டையான நிர்வாகத்தையும் முதல்மந்திரியின் தனிப்பட்ட செல்லுக்குக் கூடக் கொண்டு போயாகிவிட்டது.

    ஒரு நடவடிக்கையும் இல்லை. மழைக்காலமும் வரப் போகிறது. நாங்க வேணா அமெரிக்கா போயிடறதாலே இந்த மழைக்காலத்துக்குத் தப்பினோம்னு சொல்லிக்கலாம். எதிரே ஒரு வீட்டில் மாற்றுத் திறனாளியான ஒரு பெண் குழந்தை பள்ளிக்குச் செல்ல எவ்வளவு சிரமப் படுகிறாள். பள்ளிக்குழந்தைகளுக்கு பஸ் வர முடியாது. ஆட்டோ, கார் வரமுடியாது. அவ்வளவு ஏன்? சமையல் எரிவாயு வராது. பால்காரர் வரச் சிரமப் படுகிறார். எல்லாம் பார்த்தால் எதை நொந்துக்கறது!

    ReplyDelete
  3. எவ்வளவு தேவைகள்! எதைக்குறைக்கிறது! எதை வைச்சுக்கிறது! மூளையே குழம்பிப்போகிறது.//

    தேவைகள் குறைய குறைய இறைவனுக்கும் நமக்கும் உள்ள தூரம் குறையும் என்று படித்து இருக்கிறேன்.

    தேவைகளை குறைத்துக் கொள்ளும் எண்ணம் வந்து விட்டது உங்களுக்கு ஏனென்றால் எப்போதும் நீங்கள் இறைவன் நினைப்பிலே இருப்பதால்.
    இறைவன் உங்கள் பக்கத்தில் வந்து விட்டார்.

    பறவைகள் படும் பாடு சொல்லி முடியாது. குளிர் காலத்தில் முட்டையிட்டு குஞ்சு பொரிக்க தன் நாடு சரியில்லை என வெகுதூரம் பறந்து மிதவெப்பம் உள்ள நம் தமிழநாட்டுக்கு வந்து குஞ்சு பொரித்து செல்லும் பறவைகள் எத்தனை!

    தன் குஞ்சை மற்ற எதிரிகளிடமிருந்து பாதுகாக்க படும் பாடு எத்தனை?

    எல்லா பிறப்பும் இன்பம் துன்பம் நிறைந்தது தான். எறும்பு கூட மழைகாலத்தில் உணவு கிடைக்காது என அரிசியை சேமித்து வைக்கும் அதையும் மனிதன் பஞ்சகாலத்தில் எறும்பு புற்றை தோண்டி அரிசியை எடுத்து தன் பசியை தீர்த்ததை பாடத்தில் படித்து இருப்போம்.புறநானூரு பாடலில் வரும் என நினைக்கிறேன்.

    எனக்கும் சில நேரம் இப்படி எண்ணம் தோன்றும் நம் குழந்தைகளுக்கு நம் பொருள் ஒன்றும் தேவை இல்லை. நாம் வைத்து இருக்கும் பொருட்களை என்ன செய்வது தேவை படுவோர்க்கு கொடுத்து விடுங்கள் என எழுதி வைத்து விடலாம், இருக்கும் போதே
    நமக்கு போக மற்றதை கொடுத்து விடலாம், இப்படி எல்லாம் எண்ணம் தோன்றும்.

    ReplyDelete
  4. நன்றி கோமதி அரசு. தேவையில்லாமல் சாமான்களைச் சேர்த்து வைப்பது எப்போதுமே எனக்குப் பிடிக்காத ஒன்று. இப்போக் குறைத்து வருகிறேன். இன்னமும் குறைக்க ஆசைதான்.

    பறவைகள் படும் பாட்டையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கேன். நேற்றுக் கூடக் கிளி ஒண்ணு தன்னந்தனியா மைனாக்கூட்டத்திடம் மாட்டிக்கொண்டது. ஆனால் அதுக்குப் பறக்க முடியுமே! அதை நினைச்சால் இன்னமும் கொஞ்சூண்டாவது பொறாமை எட்டித் தான் பார்க்கிறது.

    ஜெயஸ்ரீ சொல்றாப்போல் இடம் தெரியாமல் அவதிப் படும் பறவைகளையும் பார்த்து மனம் பதைச்சிருக்கேன். சிட்டுக்குருவிகள் இருந்த ஒரு பொற்காலத்திலே ஒன்று இன்னொன்று வர வரைக்கும் கூட்டின் வெளியேவே காத்திருப்பதையும் பார்த்து வியந்திருக்கிறேன். இந்த நண்பர்களைப்பார்த்துப் பொறாமையா என்றால் ஆமாம்!

    ReplyDelete