நேற்று சித்தப்பாவின் சதாபிஷேஹம். எங்களால் நேற்றுச் செல்ல முடியவில்லை; வேறு வேலைகள் இருந்தன. முந்தா நாள் ருத்ர ஏகாதசிக்குச் சென்று வந்தோம். அப்போது எடுத்த படங்களில் சிலவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன். செல்லில் எடுத்தவை.
ருத்ர ஏகாதசிப் படங்களும் காமிராவில் இருக்கின்றன. ஆனால் என்னமோ தெரியலை காமிராவில் இருந்து பிகாசாவுக்கு அப்லோட் பண்ணினா காமிராவில் உள்ள எல்லாமும் தானே டெலீட் ஆகிறது. ரிக்வெஸ்ட் விண்டோ வருது. கான்சல் கொடுக்கிறேன். அதை கான்சல் கொடுத்தும் கான்சல் ஆவதில்லை. அதை என்னனு அப்புறமாத் தான் பார்க்கணும். நேரம் இல்லை.
இவங்க மூன்று பேரும் தம்பிகள். மூன்று பையர்கள் தான் சித்தப்பாவுக்கு. கடைசியிலே நிற்கிறவரை அடிக்கடி தொலைக்காட்சியில் காணலாம். விவிஐபிக்களிடம் ஹிந்துவுக்காகப் பேட்டிகள் எடுக்க வருவார். மீட்டிங்குகளில் காணப்படுவார்.
ஆச்சு, நாளை ஒரு நாள் தான். பாக்கிங் வேலை மும்முரம். அதோட இங்கே முடிக்க வேண்டிய வேலைகள்னு ஒரு மாசமா ஒரே அலைச்சல். கடந்த மூன்று நாட்களாக இன்னும் அலைச்சல்; நாளைக்குப் பறக்கப் போகிறோம். அப்புறமா அங்கே போனதும் ஜெட்லாக் எல்லாம் சரியாகிக் கணினிக்கு வரணும்; நடுராத்திரி தூக்கம் வரலைன்னா கணினிலே உட்காருவேன். அப்போ யார் மாட்டறீங்கனு பார்க்கணும்! எல்லாருக்கும் போயிட்டு வரேன். யு.எஸ்ஸில் இருந்து பார்க்கலாம்.
Bon Voyage!
ReplyDeleteநேரில் பார்க்கிற மாதிரி படங்கள் தெளிவாக இருக்கின்றன. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
ReplyDeleteயு.எஸ்.ஸா?.. எங்கு போனால் என்ன, 'எண்ணங்கள்' மனத்தில் முகிழ்க்க முகிழ்க்க அவற்றை இன்னொருத்தரிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியாது என்பது சர்வ நிச்சயம். ராசி அப்படி.
செளகரியமான, மகிழ்ச்சியான பயணத்திற்கு வாழ்த்துக்கள்!
@திவாஜி, நன்றி.
ReplyDeleteஜீவி, சார், நன்றி. படங்கள் நல்லா வந்திருக்குனு சொன்னதுக்கும் நன்றி. செல்லில் எடுத்ததை மட்டும் போட்டிருக்கேன், மத்தது யு.எஸ். போய்த் தான் பார்க்கணும்.
ReplyDeleteசித்தப்பாவின் சதாபிஷேக படங்கள் சிறப்பாக இருக்கு.
ReplyDeleteஉங்களோட பயணம் சிறந்த முறையில் அமைய வாழ்த்துக்கள்,மாமி.
ஆஹா சதாபிஷேகம் பாத்தவங்களை இன்னிக்கி அம்பத்தூர் போய் பாத்தோமே அப்ப எங்களுக்கும் பாதி புண்ணீயம் வந்துடும்
ReplyDeleteபயணம் சிறக்க வாழ்த்துகள். இங்க இருந்தே நமஸ்காரம் பண்ணிக்கறேன்
ReplyDelete//ஆஹா சதாபிஷேகம் பாத்தவங்களை இன்னிக்கி அம்பத்தூர் போய் பாத்தோமே//
ReplyDeleteஎன்னடா சென்னையில் மழை ன்னு பாத்தேன்.....
@திவா, நன்றி.
ReplyDelete@ராம்வி, நன்றிங்க.
ReplyDeleteவாங்க சார், இன்னிக்கு வருகை புரிந்தமைக்கு நன்றி.
ReplyDeleteஎல்கே, நன்றி. வரேன்னு சொல்லிட்டு வராமல் இருந்ததுக்கு நோ நன்றி.
ReplyDeleteஎன்னடா சென்னையில் மழை ன்னு பாத்தேன்.....//
ReplyDeleteஅவர் என்னை/எங்களைப் பார்க்கத் தான் ஒவ்வொரு முறையும் வரார். வந்துட்டும் இருக்கார். அதனால் வந்த மழை நின்னே போச்சு. வெயில் தான் அம்பத்தூரிலே.
""Bon Voyage!""
ReplyDeleteadhe !!adhe !!
நல்லபடியாகப் போய் வாருங்கள் கீதா.
ReplyDeleteபயணம் சௌகரியமாக அமைய மனம் நிறைந்த வாழ்த்துகள்.
Bon Voyage Geethaji.
ReplyDeleteஇந்தியாவுக்கு நடு ராத்திரின்னா நான் முழிச்சிண்டு இருப்பேன் இணையத் தொடர்பில் இருப்பேன். யு.எஸ்சில் நடு ராத்திரின்னா நான் ஆபீசில் இருப்பேன்.
இங்கே வந்த பிறகு கூப்பிடுங்க அம்மா.
ReplyDeleteசதாபிஷேகத் தம்பதியரை வணங்கிக் கொள்கிறேன்.
US-ku vanthacha geethamma? Mudinthal ungal number kudunga. Pesalam. Neenga Texas than vareenga-nu ninaikiren..! Take care of u r health..!
ReplyDeleteஜெயஶ்ரீ, நன்றிங்க. செளகரியமா வந்து சேர்ந்தோம்,
ReplyDeleteவாங்க வல்லி, நன்றி.
ReplyDeleteநன்றி, அஷ்வின் ஜி, பார்க்கலாம், நேரம் ஒத்து வருதானு.
ReplyDeleteஇங்கே வந்த பிறகு கூப்பிடுங்க அம்மா.
ReplyDeleteஅது சரி, எந்த நம்பருக்கு?? கூப்பிட்டாலும் பேசப் போறது நான் மட்டுமே. நாளைக்கு வீட்டு நம்பர் அனுப்பறேன். சனி, ஞாயிறுகளில் கூப்பிட்டால் தான் உங்களால் பேச முடியும், இல்லையா??
பப்லு, மெயில் பண்ணறேன்.
ReplyDeleteஅம்மா,
ReplyDeleteவணக்கம்.நீண்ட நாட்களாயிற்று உங்களுடன் பேசி(?). ஒரே
பூஜைவிஷயமாக இருந்த்தால் தளத்தைப்பார்த்துவிட்டுப் போய்விடுவேன்
இன்று அப்படி முடியுமா?அபிமான
எழுத்தாள்ர் தம்பதிகளுக்கு நமஸ்காரம்
செய்து கொள்கிறேன்.படங்கள் நன்றாக
உள்ளன.பயணத்திற்கு வாழ்த்துக்கள்.
அப்பா எங்கிருக்கிரார்?மதுரை வந்தால்
தெரிவியுங்கள்.
வாங்க ராதாகிருஷ்ணன் சார், அம்மாவெல்லாம் எதுக்கு? நீங்க என்னைவிட ரொம்பப் பெரியவர்.
ReplyDeleteஒரே
பூஜைவிஷயமாக இருந்த்தால் தளத்தைப்பார்த்துவிட்டுப் போய்விடுவேன்
//
பலரும் என் பதிவுகளைப் பார்த்துட்டு ஓடிடறாங்க. நீங்களுமா?? படிச்சுட்டுக் கருத்துச் சொல்லலாமே!
அப்பா இப்போ இல்லை.
பப்லு, உங்க மெயில் ஐடி கொடுங்க.
ReplyDeleteமகிழ்ச்சி.
ReplyDeleteபயணம் இனிதாய் அமையட்டும் வாழ்த்துக்கள்.