எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, October 13, 2011

எண்ணங்களோடு நான்!

நேத்திக்குத் தான் ஒரு குழுமத்திலும் தொலைபேசியில் பேசுகையில் ஒருத்தரிடமும் இந்த முறை ஜெட்லாகே இல்லைனு பெருமை அடிச்சுண்டேன். திருஷ்டிப்பட்டிருக்கு. நேத்து மத்தியானத்தில் இருந்து, (இந்தியாவில் ராத்திரியாச்சே) உட்காரவே முடியலை. கணினியில் உட்கார்ந்தாலும் மனம் பதியவில்லை. சாயந்திரம் ஆறரை வரைக்கும் எப்படியோ தாக்குப் பிடிச்சேன். ஏழு, ஏழரை ஆச்சு; போய்ப் படுத்துவிட்டேன். தூங்கும் குழந்தையை எழுப்பிச் சாப்பாடு போடறாப்போல் சாப்பாடு போட்டாள் மருமகள். சாப்பிட்டுட்டு உடனே தூங்கியாச்சு. சரியாப் பனிரண்டரை மணிக்கு முழிச்சாச்சு. அப்போலே இருந்து கொட்டுக் கொட்டுனு உட்கார்ந்திருந்தேன். கணினியில் உட்காரலாமானு யோசிச்சேன். இங்கே விளக்கு எரியறதைப் பார்த்துட்டு எல்லாரும் முழிச்சுக்கப் போறாங்கனு வரலை. அதோட ஏதேதோ சிந்தனைகள் வேறே ஆக்கிரமிப்பு.

சிந்தனைகளே இல்லைனு யாரும் சொல்ல முடியாதுனு நம்பறேன். நமக்கு இப்போதைய தலைபோற சிந்தனை திரும்பிச் சென்னை போனதும் வீட்டை என்ன செய்யப் போறோம்னு தான். அதோடு அடுத்து எழுத வேண்டியவை என்ன என்ன என்று ஒரு சின்னப் பட்டியல்; செளந்தர்ய லஹரியைத் தொடரணும். ஆன்மீகப் பயணத்தில் சிவ வடிவங்கள் பாதியோடு நின்னிருக்கு. பக்தியிலே அனுமான் காத்துட்டு இருக்கார். பல பதிவுகளுக்குப் போய்ப் படிக்க முடியலை. இங்கே கொஞ்சம் நேரம் கிடைக்கும்னு நினைச்சேன்; இப்போதைக்கு நேரம் அட்ஜஸ்ட் பண்ண முடியலை; போகப் போகப் பார்க்கணும்.

தோழி வல்லி வரும் வாரத்தில் இருந்து/அல்லது இந்த வாரமா??? தமிழ்மணம் நக்ஷத்திரமாக இருக்காங்களாம். தமிழ் மணம் பக்கம் போயேப் பல மாசங்கள் ஆகின்றன. அங்கே அப்டேட்டும் செய்வதில்லை. வல்லிக்காகப் போய்ப்பார்க்கணும். இங்கே குளிர் ஆரம்பிச்சிருக்கு. பல வருடங்கள் கழித்துப் பையரோட தீபாவளி கொண்டாடப் போறோம். ஆறு மாசமும் ஆறு நாளா ஓடிடும்னு நினைக்கிறேன்.சென்னையில் இருந்து வரும்போதும் தூங்கி வழிஞ்சேன். துபாயில் விமானம் மாறுகையில் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் சிரமப்பட்டோம். பின்னர் விமானம் மாறி யு.எஸ்.விமானத்தில் ஏறினால் எங்க ஜோனில் மட்டுமில்லாமல் விமானம் முழுதுமே காலி. எங்களுக்கு இரட்டை சீட் கிடைச்சிருந்தது. அங்கிருந்து பக்கத்தில் உள்ள நாலு சீட்டரில் போய் நடுவில் உள்ள தடுப்பை எல்லாம் எடுத்துட்டு, தலையணை போட்டுக் கம்பளி போர்த்திப் படுத்துட்டேன். பின்னே! பதினாறு மணி நேரம் போகணுமே.

யு.எஸ்ஸில் இமிக்ரேஷனில் எத்தனை மாசம் தங்கப் போறேனு கேட்டதும், என்னோட வழக்கம்போல் ரொம்பவே யதார்த்தமா ஆறு மாசம்னு சொல்லிட்டேன். உடனே அந்த அம்மா, அது எப்படி நீ முடிவு பண்ணுவே? நாங்க அனுமதிக்க வேண்டாமானு கேக்கவும், ரொம்பக் கஷ்டமாப் போச்சு. மன்னிப்புக் கேட்டுட்டுப் பேசாமல் இருந்துட்டேன். அப்புறமா என்ன நினைச்சாங்களோ, திரும்பிப் போக டிக்கெட் வாங்கியாச்சானு கேட்டுட்டு, கடைசியா எப்போ வந்தேனு கேட்டுட்டு, நாலு வருஷம் ஆச்சுனதும் ஆறு மாசம் அனுமதி கொடுத்துட்டாங்க.



Love Lasts As Long As Life Exists
The Rest Is Only Memories Of Happy Times..!

16 comments:

  1. கீதாம்மா

    வந்தாச்சா? நேரம் கிடைக்கும் பொழுது போன் நம்பர் மெயிலுங்க. பேசலாம்.

    ReplyDelete
  2. \\யு.எஸ்ஸில் இமிக்ரேஷனில் எத்தனை மாசம் தங்கப் போறேனு கேட்டதும், என்னோட வழக்கம்போல் ரொம்பவே யதார்த்தமா ஆறு மாசம்னு சொல்லிட்டேன். உடனே அந்த அம்மா, அது எப்படி நீ முடிவு பண்ணுவே? நாங்க அனுமதிக்க வேண்டாமானு கேக்கவும்,\\

    அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒழிக..! தலைவி வாழ்க ! ;-)

    ReplyDelete
  3. நடுவில் உள்ள தடுப்பை எல்லாம் எடுத்துட்டு, தலையணை போட்டுக் கம்பளி போர்த்திப் படுத்துட்டேன். பின்னே! பதினாறு மணி நேரம் போகணுமே.//


    நாங்கள் பதினாறு மணி நேரம் உட்கார்ந்தும், சினிமா பார்த்தும், நடந்தும் பொழுதை கழித்தோம்.

    நீங்கள் நல்ல ரெஸ்ட் எடுத்து விட்டீர்கள்.

    குடும்பத்துடன் தீபாவளியை நன்றாக கொண்டாடுங்கள்.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. நல்லபடியா ஊருக்கு போயாச்சா? நல்லது.நன்றாக ரெஸ்ட் எடுத்துண்டு அப்புறமா பதிவு பக்கம் வாங்க..

    //பல வருடங்கள் கழித்துப் பையரோட தீபாவளி கொண்டாடப் போறோம். //


    ரொம்ப சந்தோஷம் மாமி, உங்க குடும்பத்தினர் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  5. நானும்கூட வெளி நாடு போகும்போது ஃப்ளைட்டில் கூட்டம் இல்லைனா நாலு சீட்களில் இருக்கும் தடுப்பை எடுத்துட்டு படுத்துவிடுவேன்.

    ReplyDelete
  6. இதுவரை எண்ணங்களோடு நாங்கள் தான் இருந்தோம்.. நீங்கள் வேறே போட்டிக்கு வந்து விட்டீர்களா? :)

    ReplyDelete
  7. இம்முறை தீபாவளிக்கு டபுள் இனிப்புத்தான் :)
    மகிழ்ந்திருங்கள்.

    ReplyDelete
  8. வாங்க கொத்தனாரே, யு.எஸ். வந்தாத் தான் கண்டுப்பீங்க போல.

    ReplyDelete
  9. அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒழிக..! தலைவி வாழ்க ! ;-)

    அதான் பாருங்க கோபி, அவங்களுக்குத் தெரியலை.

    ReplyDelete
  10. நாங்கள் பதினாறு மணி நேரம் உட்கார்ந்தும், சினிமா பார்த்தும், நடந்தும் பொழுதை கழித்தோம்.

    சீட் நிரம்பி இருந்தால் அதான் செய்திருக்கணும். இங்கே ஒரு வரிசைக்கு நாலு, ஐந்து பேர் தான். மூணு வரிசையிலுமா சேர்த்துப் பதினைந்து பேர் இருந்தால் பெரிய விஷயம்.

    ReplyDelete
  11. நன்றி ராம்வி. தீபாவளி என்ன இருந்தாலும் இந்தியாவில் மாதிரி இங்கெல்லாம் இருக்காது. ஆனாலும் பண்டிகை அன்று பையரோடு இருப்போம். அவ்வளவு தான். இந்தியாவிலேயே இப்போல்லாம் தொலைக்காட்சி ஆக்கிரமிப்பில் பண்டிகைக் கொண்டாட்டங்கள் போன இடம் தெரியலை.

    ReplyDelete
  12. லக்ஷ்மி, வரவுக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  13. இதுவரை எண்ணங்களோடு நாங்கள் தான் இருந்தோம்.. நீங்கள் வேறே போட்டிக்கு வந்து விட்டீர்களா? :)

    வாங்க ஜீவி சார், அவரவர் எண்ணங்களோடு அவரவர் இருப்பாங்க இல்லையா? நன்றிங்க தொடர் வரவுக்கு.

    ReplyDelete
  14. வாங்க மாதேவி, நன்றிங்க.

    ReplyDelete
  15. கீதாம்மா, அந்த இமிக்ரேஷன் ஆப்பீசர் பேர், நம்பர் எல்லாம் குடுங்க. நம்ம வட்டச்செயலர் வண்டு முருகன் கிட்டே சொல்லி தண்ணி இல்லாத காட்டுக்கு மாத்திடுவோம்.

    (அமரிக்கா போயாச்சா? அதான் ராத்திரி 2 மணிக்கு எல்லாம் ஆன்லைன்ல இருக்கீங்களா? ரைட்டு)

    ReplyDelete
  16. அபி அப்பா, எங்கே இந்தப் பக்கம் அதிசயமா?

    கீதாம்மா, அந்த இமிக்ரேஷன் ஆப்பீசர் பேர், நம்பர் எல்லாம் குடுங்க. நம்ம வட்டச்செயலர் வண்டு முருகன் கிட்டே சொல்லி தண்ணி இல்லாத காட்டுக்கு மாத்திடுவோம்.//

    முதல்லே உங்களைத் தான் தொலைபேசியிலே கான்டாக்ட் பண்ணினேன். எங்கே?? நம்பரை மறுபடி மறுபடி மாத்திட்டே இருப்பீங்க போல.

    உங்களுக்கு ராத்திரி இரண்டு மணி இங்கே பகல் மூன்றரை மணி. நவம்பரில் வின்டர் நேரம் மாறுகையில் ராத்திரி இந்தியாவில் இரண்டு மணின்னா இங்கே பகல் இரண்டு மணி. சென்ட்ரல் டைம் இங்கே.

    ReplyDelete