//ஒரு ஓட்டுக்கு ஒரு ஆடு, ஒரு ரெப்ரெஜிரேடர், ஏசி கார் இலவசம். இன்னும் நிறைய இலவசத் திட்டங்கள் வருகின்றன. சைனாவில் ஆர்டர் கொடுத்து செய்ய வேண்டியிருப்பதால் தாமதமாகிறது. அதற்காக ஓட்டு போடுவதை நிறுத்த வேண்டாம்.//
ஹாஹா, மேலே இருப்பது எங்கள் ப்ளாக் எனக்குக் கான்வாசிங்குக்குக் கொடுத்த அனுமதி. என்னடா தானைத் தலைவியா இருந்துட்டு அனுமதி எல்லாம் கேட்கறேன்னு பார்க்கறீங்களா? தேர்தல்னு வந்தால் எலக்ஷன் கமிஷனின் உத்தரவுகளை மதிக்கணுமே! அதான்! எலக்ஷன் கோட் அறிவிச்சுட்டாங்க. அதற்கு உட்பட்டு நானும் சில, பல பதிவுகளில் போய்க் கான்வாசிங் செய்திருக்கேன். மிச்சத்துக்குத் தேடிக் கண்டு பிடிச்சுட்டுப் போகணும். ஹிஹி, ஆனால் கான்வாசிங் செய்யாமலேயே கீதா சந்தானத்திற்கு மதிப்பெண்கள், சே,சே, வாக்குகள் கூடுதலாய் இருக்கிறதைப் பார்த்து கண், காது, மூக்கு, வாய்னு எல்லாத்திலேயும் புகை வந்துட்டு இருக்கு. (இங்கே மெம்பிஸில் உறைநிலைக்குப் போயிடுது ராத்திரி எல்லாம், வாயைத் திறந்தால் புகை வராமல் என்ன பண்ணும்?) சரி, சரி, இலவசம் அறிவிக்கச் சொல்லித் தேர்தல் கமிஷனே உத்தரவு கொடுத்து அதையும் எழுத்து வடிவத்தில் (ஒரு ஜாக்கிரதைக்குத் தான்) வாங்கி வச்சுட்டிருக்கிறதாலே நான் எனக்கு ஓட்டுப் போடறவங்களுக்கு என்னவெல்லாம் கொடுப்பேன் என்பதை இங்கே அடக்கத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
யாருங்க அது, உங்களுக்கு வாங்கித் தான் பழக்கம்னு முணுமுணுக்கிறது? வாங்கினதை பத்திரமா வச்சுப்போம் இல்ல? அதைப் பாருங்க! வழக்கமா நான் முப்பெரும் விழா நடத்தறச்சே தொண்டர்கள் தான் எடைக்கு எடை தங்கம், வெள்ளி, வைரம்னு கொடுப்பாங்க. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்ன பண்ணறது? நேரம், ஏழரைச் சனி இப்போ எனக்கு. கையை விட்டுச் செலவு பண்ண வேண்டி இருக்கு . இதோ பட்டியல் தயார்.
லேட்டஸ்ட் இன்டெல் கோர் லாப்டாப்காரிலே வைச்சுட்டுப் போற சகலவசதிகளோடு கூடிய பிசி.
அன்ட்ராய்ட் போன் ஆப்பிள் ஃபோன்
ஐ ஃபோன் 5ஜி ஐ பாட்
நோட் புக்
எல்லாத்தையும் பார்த்துக்குங்க. பார்த்துட்டு உங்கள் ஓட்டை எனக்கே போடுங்க! எனக்கே எனக்கு.
கீதா சாம்பசிவம்
இந்த எங்கள் ப்ளாக் எலக்ஷன் கோடைக்கண்டிப்பாய்ப் பின்பற்றுகிறது தெரியாமப் போச்சு. நான் பாட்டுக்கு ஓட்டுப் பெட்டி பக்கத்திலேயே என்னோட அறிவிப்பை எதிர்பார்த்தா ஹிஹிஹி, வாக்குச் சாவடியை விட்டுத் தள்ளி வைச்சிருக்காங்க நம்ம விளம்பரத்தை. போற போக்கைப் பார்த்தால் கள்ள ஓட்டு விழுந்தாக் கூட ஜெயிப்பேனா?? சந்தேகமா இருக்கே! :)))))))
வலை உலகத்திலே எல்லாரும் சத்தம் போடாம மீனாக்ஷியை ஆதரிக்கறாங்களே? ம்ஹும்!
இலவசங்கள் அறிவிச்சாச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்!"
ReplyDeleteவெற்றி பெற வாழ்த்துகள்..
ஒரு வேளை மீனாக்ஷி அவர்களின் இலவச திட்ட அறிக்கை அமெரிக்காவில் மட்டுமே வெளியாகி இருக்குமோ? விழுகின்ற வோட்டுகளில் பெரும்பான்மையான வோட்டுகள் அங்கிருந்து விழுவதாக ஒரு வதந்தி அச்சரப்பாக்கம் வரை பரவியுள்ளது!
ReplyDeleteகள்ள வோட்டு எப்படி போடுறது? பரிசுகள் சூப்பர்..நிஜமா சொல்லுங்க அதோட படம் மட்டும்தான கொடுப்பீங்க?
ReplyDeleteonnum puriyalai
ReplyDeleteஎன்ன ஒட்டு? என்ன சமாசாரம்?
ReplyDeleteசரியா சொன்னீங்க கே.ஜீ.
ReplyDeleteகீதா மேடம், வலை உலகத்துல எனக்கு அவ்வளவா நண்பர்கள் கிடையாது. இங்க இருக்கற நண்பர்கள்தான். சும்மா படிக்க சொல்லி லிங்க் அனுப்பி வெச்சேன். அதெல்லாம் ஓட்டா விழுந்துடுச்சு. :) போட்டியில இருக்கற எல்லோருக்குமே நான் ஓட்டு போட்டேன். கு.கு. அவர்களுக்கு விழுந்த முதல் ஓட்டு என்னுடயுதுதான். :)
மீனாக்ஷி அவர்களுக்கு வலைப்பூ இல்லாவிட்டாலும் நிறைய ரசிகர்கள் உண்டு. அவர்கள் ஆதரவாயிருக்கும். உங்கள் ஆர்வத்துக்கே எங்கள் ப்ளாக் சிறப்புப் பரிசு கொடுக்கலாம்.
ReplyDeleteவாங்க ராஜராஜேஸ்வரி, இன்னும் ஒரு வாரம் இருக்கு, பார்ப்போம்! :)))))
ReplyDeleteகேஜி சார், க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அநியாயமா இல்லை? ஒருத்தர் எத்தனை ஓட்டு வேணாலும் போடலாம்னு சொல்லிட்டு, ஒரு ஓட்டுக்கு மறு ஓட்டுப் போடமுடியாமல் வாக்குப்பெட்டியை முடக்கியதற்கு வன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்மையாகக் கண்டிக்கிறேன். :P :P :P
ReplyDeleteவிச்சு, விச்சு, ஆஹா, ஆஹா, நீங்க தான் உண்மையான தொண்டர். தலைவியின் மனசிலே இருக்கிறதைப் படம் பிடிச்சுக் காட்டிட்டீங்க. ஒருவேளை வழக்கு அது, இதுனு வந்து நான் பதவி விலகினேன்னு வச்சுக்குங்க, (ஒருவேளை தான், கவனம் இருக்கட்டும்) நீங்க தான் நிழல் தலைவர்; தயாரா இருங்க. :))))))))
ReplyDeleteஎல்கே, அதுக்கு ஆரம்பம் முதல்லே வரணும். நீங்க எதுக்கும் எங்கள் ப்ளாக் பக்கம் போய் எட்ட்ட்ட்ட்டிப் பாருங்க; புரியும்.
ReplyDeleteஆஹா, வா.தி. தம்பி, தங்கக் கம்பி, எல்லாருக்கும் ஓட்டுப் போடலாமே? போட்டீங்களா? :))))))) மத்தவங்க மனசை எதுக்கு நோகடிக்கணும்? நான் முதல் ஓட்டை எனக்குப் போட்டுட்டு, மிச்ச ஓட்டை மத்தவங்களுக்குப் போட்டேன். அதுக்கப்புறம் போடணும்னு தலைகீழா நின்னு பார்க்கிறேன். எங்கே! ம்ஹும்! :))))))))
ReplyDeleteமீனாக்ஷி, மீனாக்ஷி, என்ன போங்க. வலை உலகில் நண்பர்கள் இல்லாததுக்கே இவ்வளவு ஓட்டுன்னா இருந்துட்டா!ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் பெருமூச்சுங்க! :)))))))
ReplyDeleteஅட? வலைப்பூ இல்லாமலே ரசிகர் பட்டாளமா????????? சரி, சரி, சொல்லாதீங்க. ஏற்கெனவே காதிலே புகை! :)))))) என்னவோ போங்க. மனசே உடைஞ்சு போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்! :)))))
ReplyDelete@மீனாக்ஷி, நானும் எல்லாருக்கும் ஓட்டுப் போட்டேன். ஹிஹிஹிஹி, ஆனால் ஒருதரம் தான் போடமுடிஞ்சது! அதான் பிரச்னையே! :)))))))))))
ReplyDelete