எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, January 11, 2012

தாத்தா எங்கேயானும் அழறாரா! :)

அப்புவோட அம்மாவுக்கு அவசரமா வெளியே போயாகணும்; அப்புவைக் கூடக் கூட்டிக் கொண்டு போக முடியாது. அதனால் தாத்தா, பாட்டி கிட்டே விட்டுட்டுப் போனாள். அப்புவுக்கு இஷ்டமே இல்லை. அழ ஆரம்பித்தது. முதல்லே சின்னதாக ஆரம்பித்த அழுகை கொஞ்சம் கொஞ்சமாப் பெரிசானது. பாட்டி சமாதானம் செய்தும் சமாதானம் ஆகலை. அழுகையோ நிக்கலை. தாத்தா கூப்பிட்டார். போகமாட்டேன்னு பிடிவாதம் பிடித்தது அப்பு.

தாத்தா அப்புவுக்குக் கதை சொன்னார்.

"நீ சமத்துப் பாப்பா இல்லை? தாத்தா உன்னாட்டம் குட்டிப் பையனா இருக்கிறச்சே என்னாச்சு தெரியுமா?

you were a baby boy? when?

லாங் லாங் அகோ, தாத்தா தொடர்ந்தார். என்னதான் ஆங்கிலம் பேசமுடிஞ்சாலும் சட்டுனு தமிழ் தான் வசதியா இருக்கு. தாத்தா தமிழிலேயே பேச அப்பு ஆங்கிலத்தில் கேட்கனு சம்பாஷணை தொடர்ந்தது.

நான் உன்னை மாதிரிக் குட்டியா இருக்கிறச்சே இருந்து என்னோட பாட்டி கிட்டத் தான் வளர்ந்தேன்.

what is it thatha vayanthen?

Oh, I lived with my grandmother.

are you not scared?

No, I was not. அப்புறம் என்னாச்சு தெரியுமா? என்னைப் பாட்டி தான் ஸ்கூல்லே சேர்த்தா; படிக்க வைச்சா. 5வது கிரேட் வரை அங்கே தான் படிச்சேன்.

then? you never cried for your mommy?

No, I used to see my mommy on Holidays only.

அப்புவோட சின்ன மூளையிலே என்ன யோசனை தோணித்தோ! அப்புறம்னு கேட்டது. அப்புறமா என்னோட பெரியம்மா சிதம்பரம்னு வேறே ஊருக்கு அழைச்சுக்கொண்டு போய் வைச்சுப் படிக்க வைச்சாங்க.

what is periyamma?

My mommy's sister. like your sister Pooja. She is my mommy's big sister.

then your mommy is her baby sister like me?

Yes.

இப்போத் தான் வேடிக்கையே. அப்பு கேட்டது, உன்னோட அம்மா இப்போ எங்கே இருக்காங்க தாத்தானு.

தாத்தா சொல்றார். என்னோட அம்மா என் தம்பியோட டெல்லியிலே இருக்காங்க. பாரு, தாத்தா யு.எஸ்ஸிலே இருக்கேன் உன்னோட, என்னோட அம்மாவோ டெல்லியிலே. நான் எங்கேயானும் அழறேனா பாரு!

ஒரு நிமிஷம் திகைத்த அப்பு என்ன நினைத்ததோ கடகடவெனச் சிரித்தது.

அப்பாடா!

21 comments:

  1. தாத்தாவும் பேரனும் பேசிக்கொள்வது சுவாரசியமா இருக்கு.

    ReplyDelete
  2. :)))

    குழந்தை உள்ளம். இந்த முறை ஏற்றுக் கொண்டு விட்டது. அடுத்த முறை என்ன கேள்வி கேட்குமோ...தயாராய் இருங்கள்!

    ReplyDelete
  3. நீங்க எப்படி அப்பு போலவா !! இல்லை பூஜா போலவா :))

    ReplyDelete
  4. இரண்டு குழந்தைகளின் உரையாடலை பதிவு அழகாக பதிவு செய்த குழந்தைக்கு நன்றி ;-))

    வாழ்க தலைவி ;-))

    +லையும் போட்டாச்சி ;-))

    ReplyDelete
  5. ஆஹா, அனுபவித்துப் படித்தேன். அதுகளுடன் சேர்ந்து கொண்டு இந்த தாத்தா-பாட்டிகளும் குழந்தைகளாவது தான் வேடிக்கை.

    தாத்தா, பாட்டிகளிலும், இரண்டு தாத்தா- இரண்டு பாட்டி உண்டலல்லவோ?.. அதை எப்படி வித்தியாசம் காட்டி தெளிய வைக்கீறீர்கள்?.. அம்மம்மா மாதிரியா இல்லை பெயர் சொல்லியேவா?..

    என் பேரனுக்கும் நான் ஜீவி தாத்தா தான்!.. இதே மாதிரி தான்; தமிழில் சொல்றது புரியலைன்னா, அந்த தமிழ் வார்த்தையை அப்படியே சொல்லி, மீன்ஸ்? என்று கேட்பான்.
    'என்ன ரகளை பண்றான் பார்!' என்று முதல் தடவையாக அந்த 'ரகளை' என்கிற வார்த்தையை உபயோகப்படுத்திய பொழுது,
    'ரகளை means?' என்று ஆர்வத்துடன் கேட்டுத் தெரிந்து கொண்டான்.

    மழலையர் உலகம் என்று தனி உலகம் ஒன்றிருக்கிறது. அந்த உலகத்தில் குழந்தைகளுக்கு மட்டுமே அனுமதி; பெரியவர்களும் அந்த உலகத்தில் நுழைய வேண்டுமானால் அவர்களும் மனசளவில் குழந்தைகளாக வேண்டும் என்பதே எழுதப்படாத விதி!

    ReplyDelete
  6. ஆகா தாத்தா பேரனை மடக்கிவிட்டார் :)))

    பேரன் படு சூட்டியாக இருக்கிறார்.

    இக்காலக் குழந்தைகள் நல்ல புத்திசாலிகள்.

    ReplyDelete
  7. அப்புங்கறது பேத்திப்பா. :)
    சாம்ப் மாமாவை நன்னா மடக்கறதே. சம்த்துச் செல்லம்.
    எஞ்சாய் மாடி கீதாமா.

    ReplyDelete
  8. வாங்க லக்ஷ்மி, பேத்தி, பேரன் இல்லை! :))))))

    ReplyDelete
  9. வாங்க வா.தி. என்ன சிரிப்பு??? உங்க பேத்தி நினைப்பு வந்துடுத்தா? :))))

    ReplyDelete
  10. வாங்க ஶ்ரீராம், அதிகமா விட்டுட்டுப் போகிறதில்லை. இங்கே என்ன ஒரு செளகரியம்னா குழந்தையைப் பார்த்துக்கணும்; இன்னிக்கு வீட்டிலே இருந்து வேலை செய்யறேன்னு சொல்லிட்டு வீட்டிலே இருந்து வேலை செய்து கொண்டே கூடவே குழந்தையைப் பார்த்துக்க முடியும்.

    பேபி சிட்டரெல்லாம் நினைச்சுக் கூடப் பார்க்க முடியாது; அதனால் பொண்ணு வேலைக்குப் போக வேண்டிய நேரத்தையே குழந்தையின் டே கேர் நேரத்துக்கு மாற்றிக் கொண்டிருக்கிறாள். தவிர்க்க முடியலைனா அன்னிக்கு அவங்க அப்பா வீட்டிலே இருந்து வேலை செய்வார். :))))))

    ReplyDelete
  11. வாங்க ப்ரியா, அப்பு தான் என்னை மாதிரிச் சமத்து. க்யூட்! :)))))

    ReplyDelete
  12. பூஜாவும் சமத்து தான். ஆனால் அவள் இன்னும் வயசு கூடவே! அதனால் அப்புவோட சேர்த்துச் சொல்ல முடியாது. ரெண்டு பேருக்கும் கிட்டத்தட்டப் பத்து வயசு வித்தியாசம். :))))))

    ReplyDelete
  13. வாங்க கோபி, பார்த்தேன், நன்றிப்பா.

    ReplyDelete
  14. வாங்க ஜீவி சார்,

    அது அவங்க அப்பாவோட அம்மாவை கல்யாணிப் பாட்டினு சொல்லுவா. இல்லைனா மும்பை இந்தியாவிலே இருக்கிற பாட்டினு சொல்லணும். நாங்க சென்னை இந்தியா. :))))

    ஜூன் மாசம் வந்தப்போ அவளை நாங்க அமெரிக்கன்னு சொல்லிட்டேன்னு கோபம்! நாங்க அமெரிக்கன் இந்தியன் அப்படினு சொல்றா. விபரம் தெரியத் தெரிய இனிமேல் மாறலாம். :(

    ReplyDelete
  15. அம்மம்மா மாதிரியா இல்லை பெயர் சொல்லியேவா?..


    பாட்டி தான், தாத்தா தான், யாரானும் பெயர் கேட்டால் கூட தாத்தா, பாட்டி தான் பெயர்னு சொல்லிடறா. :)))))

    ReplyDelete
  16. மாதேவி, பேத்தி, பேரன் இல்லை. உங்கள் வாய் முஹூர்த்தமும், லக்ஷ்மி வாய் முஹூர்த்தமும் பேரனும் பிறக்கட்டுமே

    ReplyDelete
  17. வாங்க வல்லி, அப்பு பேத்தி தான். எல்லாரும் பேரைப் பார்த்துட்டுப் பையர்னு நினைக்கிறாங்க போல.

    நான் தினம் ஒரு பெயர் வைப்பேன்; தினம் ஒரு பெயரால் கூப்பிடவும் செய்வேன். குழந்தை திரும்பியும் பார்க்கும். :))))))))))

    இப்போ லேட்டஸ்ட் பெயர் டில்ஸா. சில சமயம் சின்னச் சிட்டு.

    ReplyDelete
  18. அப்புவைப் பார்க்கணும் போல இருக்கு!

    பேரன் வரார், பேரன் வரார்... பராக்... பராக்...

    ReplyDelete
  19. இது போன்ற சில ஆசிகளால் நம் வாழ்வு சிறக்கிறது. very nice.

    ReplyDelete