கீதா சாம்பசிவம்
Channel: புத்தாண்டு இதழ்
கட்டுரை
Date: Thursday, January 5th, 2012
ராமலக்ஷ்மி அவர்கள் முதலில் அழைத்தபோது யோசித்தேன். ஏனெனில் கடந்த சிலநாட்களாக இங்கே கொஞ்சம் வேலைகள். மகனும், மருமகளும் அவங்களுடைய பச்சை அட்டைக்காகச் சிலவேலைகள், மருத்துவ சோதனை என அலைச்சல். ஆகவே வீட்டில் வேலை. கணினியில் அமர்ந்தாலும் எழுத முடியவில்லை. மகனின் பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாததால் நாங்க இரண்டு பேரும் சென்று இவர் எங்க பையர் தான் என உறுதி மொழி கொடுக்கவேண்டும். :)) அதற்காக ஒருநாள் செல்ல வேண்டி இருந்தது. அதோடு தம்பி வீட்டில் இத்தனை நாட்கள் இங்கே இருந்தாச்சுனு எங்க பொண்ணு வேறே குடும்பத்தோடு இங்கே வந்து எங்களை அவங்க ஊரான மெம்பிஸுக்கு அழைத்துச் செல்ல வந்திருக்கிறாள். 26-ம் தேதி பயணம் செய்யவேண்டும். முழுதும் காரிலேயே போகிறோம். மறுநாள் ஓய்வு தேவைப்படும். ஆகவே படைப்புகள் கிடைத்தாலும் அனுப்ப தாமதம் ஆகும். இதை எல்லாம் குறித்துப் பல்வேறு யோசனைகள். பின்னர் வந்தவற்றை மட்டும் அனுப்பி வைப்போம் எனக் கொடுத்தவர்களுடையதை மட்டும் அனுப்பி வைத்தேன். ஆகவே என் பங்கு என்பது எதுவும் இதில் இல்லை. பார்க்கப் போனால் சிநேகிதிகளைப் படுத்தி எடுத்தேன். முக்கியமாய்க் கவிநயாவை. எல்லாருக்கும் வேலை;பிசி; குழந்தைகள் படிப்பு. ஆகவே அதிகமான அளவில் பங்கு பெற முடியாத சூழ்நிலையைப் பொறுத்துக்கொண்டு அனைவரும் ஆதரவு கொடுத்தமைக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். முக்கியமாய் இந்தச் சந்தர்ப்பத்தை உண்டாக்கிக் கொடுத்த அதீதம் குழுவினருக்கு என் நன்றி.
பார்க்க அதீதம்
மெம்பிஸ் வரும் முன்னர் எழுதிக் கொடுத்தது.
சிறப்பான தங்கள் பங்களிப்புடன் துரிதமாகச் செயல்பட்டு வாங்கித் தந்த அத்தனை பேரின் படைப்புகளும் அருமையானவை.அதீதம் குழுவினர் சார்பில் அவர்களுக்கும் தங்களுக்கும் மனமார்ந்த நன்றி:)!
ReplyDelete//பார்க்கப் போனால் சிநேகிதிகளைப் படுத்தி எடுத்தேன். முக்கியமாய்க் கவிநயாவை.//
ReplyDelete:) அப்படியெல்லாம் இல்லையேம்மா... என்னையும் நினைவு வச்சு கேட்டதற்கு மனமார்ந்த நன்றிகள். (இப்போ புத்தாண்டு கவிதையும் வந்திருக்கு அம்மா).
அதீதம் புதிய தோற்றம் அருமையா இருக்கு, ராமலக்ஷ்மி!