எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, October 28, 2012

ஊரைச் சுற்றிய ஒரு நாளில் முடிவு! (ஒரு வழியா)


ஒரு நாள் ஊர் சுற்றலில் கடைசியாக நாங்க போனது திருவெள்ளறை என்னும் பெருமாள் கோயிலாகும்.  ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் போனதுக்கு இப்போ அக்டோபரில் தான் எழுத முடிஞ்சிருக்கு.  நடுவிலே பல வேலைகள்; மின் தடைகள்.  இப்போவும் இங்கே மின் தடை முடிந்து இப்போத் தான் மின்சாரம் வந்ததுனு கணினிக்கு வந்தால் திடீர்னு இடியும், மின்னலுமாக மழை.  இடி இடிக்கையில் ப்ராட்பான்ட் கனெக்‌ஷனை வைச்சிருக்க முடியாதுனு கனெக்‌ஷனை மூடிட்டேன்.  பொதுவாக ஶ்ரீரங்கத்தில் மழை மற்ற இடங்களில் பெய்யறாப்போல கொட்டாது என்றும், அப்படிக் கொட்டினால் பெருமாள் ஏற்கெனவே தண்ணீரிலே, தண்ணீருக்கு நடுவே இருக்கிறதாலே ஜலதோஷம் பிடிச்சுக்குமாம்.  ஆகையால் மழை பெய்தாலும் சீக்கிரம் நின்னுடும்.  சென்ற வாரம் பெருமாளைப் பார்க்கப் போனோம்.  நவராத்திரி ஆரம்பத்தின் போது.  ஒருவழியா ஒரு மணி நேரக் காத்திருப்புக்குப் பின்னர் பெருமாளை ஐம்பது ரூபாய்ச் சீட்டிலே பார்க்க முடிந்தது என்றால் தாயாரைப் பார்க்க முடியலை.  நவராத்திரிக்கு அலங்காரம் செய்து கொண்டிருந்தாள்.  வரதுக்கு ஏழு மணியாகும்னு சொன்னாங்க. ஏகக் கூட்டம் வேறே.  அம்பாள் படிதாண்டாப் பத்தினி என்பதால் கர்பகிரஹத்தை அடுத்த அர்த்த மண்டபத்திலேயே உள்ள தங்கக் கொலு மண்டபத்தில் கொலு வீற்றிருப்பாள். பார்க்கப் போக முடியலை. கூட்டம், மழை எல்லாம் சேர்ந்து கொண்டது. :(

இப்போ திருவெள்ளறை குறித்துப் பார்க்கலாமா?  ஸ்ரீரங்கத்தைச் சுற்றியுள்ள பெருமாள் கோயில்களில் இது முக்கியமானது. முன் கோபுரம் ஶ்ரீரங்கத்தில் ஒரு காலத்தில் இருந்த தெற்கு கோபுரம் போலப் பூர்த்தி அடையாமல் காணப்படுகிறது., கோயில் சுமார் ஐம்பது அடி உயரத்தில் வெண்மையான பாறையால் ஆன ஒரு குன்றின் மீது அமைந்துள்ளது.  இதனால் இது "வெள்ளறை" என அழைக்கப் பட்டுப் பின்னர் "திருவெள்ளறை" என்று ஆனது எனக் கேள்விப் பட்டோம்.  108 வைணவத் திருப்பதிகளுள் இதுவும் ஒன்று..  கோயிலுக்கு உள்ளே செல்லப் பதினெட்டுப் படிகளைக் கடக்க வேண்டும்.  இவை கீதையின் பதினெட்டு அத்தியாயங்களைக் குறிப்பதாய்ச் சொல்கின்றனர்.  இன்னும் மேலே சென்றால் கோபுர வாயிலில் நான்கு வேதங்களைக் குறிக்கும் நான்கு படிகளைக் கடக்க வேண்டும்.  அதன் பின்னர் இங்கே முக்கியமாய்ச் சொல்லப் படும் பலிபீடத்தை வணங்கியபின்னர் மேலும் ஐந்து படிகளைக் கடக்க வேண்டும்.  இவை பஞ்ச பூதங்களைக் குறிக்கும்.  பிறகு பக்கவழியே சென்றால் பெருமாளைத் தரிசிக்க இரண்டு வழிகளைக் காணலாம்.  ஒன்று உத்தராயன வழி.  மற்றது தக்ஷிணாயன வழி.  முதல் வழியான தக்ஷிணாயன வழியானது ஆடி மாதம் முதல் மார்கழி வரையும், அடுத்த வழியான உத்தராயன வழி, தை மாதம் முதல் ஆனி மாதம் வரையும் திறந்திருக்கும்.

இங்கே பலிபீடத்தின் முன்னர் தமது கோரிக்கைகளை மக்கள் வைக்கின்றனர்.  கோரிக்கை நிறைவேற வேண்டிக் கொண்டு, நிறைவேறிய பின்னர் "பலிபீடத் திருமஞ்சனம்" செய்து பொங்கல் வைத்து பிரார்த்தனையை நிறைவேற்றுகின்றனர்.  குழந்தை இல்லாதவர்கள் கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடிப் பெருமாளுக்குத் திருவமுது செய்த பொங்கல் பிரசாதத்தை வாங்கி உண்டால் புத்ரபாக்கியம் நிச்சயம் என்பது ஐதீகம்.  இங்கே பெருமாள் புண்டரீகாக்ஷப் பெருமாள் என்ற பெயருடன் விளங்குகிறார்.   புண்டரீகன் என்ற யோகி இங்கே ஒரு நந்தவனம் அமைத்து அதில் வளர்ந்த துளசியால் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வந்தார்.  இதில் மகிழ்ந்த பெருமாள் இவருக்கு தரிசனம் கொடுத்து அருளினார்.  பெருமாள் ஆஜாநுபாகுவாக அத்தனைக்கித்தனை உசரமாக நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார்.  கிழக்குப் பார்த்து உள்ள பெருமாளின் விமானம் விமலாக்ருத விமானம் என அழைக்கப் படுகிறது.  இவரை கருடன், சிபிச் சக்கரவர்த்தி, மார்க்கண்டேயர், பிரம்மா, சிவன் ஆகியோர் வழிபட்டதாகக் கூறுகின்றனர்.

19 comments:

  1. ஏற்கெனவே கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். நவராத்திரி சமயத்தில் ஆண்டாள் நடனம் என்று பேப்பரில் படம் போட்டிருந்தார்கள். நீங்கள் பார்த்தீர்களோ?

    படத்தில் கோவில் அழகாக இருக்கிறது.

    ReplyDelete
  2. திருவெள்ளரை - மிகவும் சிறப்பாக இருக்கும் இத்தலம்.

    ReplyDelete
  3. இடிக்கும் ப்ராட்பேன்டுக்கும் என்ன சம்பந்தம்?
    திருவெள்ளறை திருச்சி பக்கமா?

    ReplyDelete
  4. ஸ்ரீரங்கம் பெருமாளுக்கும் தாயாருக்கும் கேக்கணுமா. என்னிக்குமே ராஜோபசாரம்தான். தங்க கொலு மண்டபம் பாக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு. மிஸ் பண்ணாம நிச்சயம் பாக்கணும்.

    திருவெள்ளறை கோவில் படம் ரொம்ப அழகா இருக்கு. கோவில் பற்றிய தகவல்கள் ரொம்ப சுவாரசியமா இருக்கு. நன்றி.

    ரெண்டு வருஷம் முன்னாடி திருவிடைமருதூர் கோவில் போயிட்டு எனக்கும் அம்மாவுக்கும் கோவில்விட்டு கிளம்பவே மனசு வரல. அந்த கோவிலும் தேரும் இன்னும் கண்ணுலேயே இருக்கு. உடம்புல தெம்பு இருக்கும்போதே ஓரளவுக்கு ஊர் சுத்தி பாத்திடணும்னு எண்ணம், ஆசை.

    ReplyDelete
  5. ஆண்டாள் என்பது யானையின் பெயர் ஸ்ரீராம். அதுதான் கொலுசுகள் போட்டுக் கொண்டு நொண்டியடித்து நடனம் செய்யும் என்று விஜய் டிவியில் பார்த்தேன். திருவெள்ளறைக் கோவில் தரிசனம் எங்கள் பாக்கியம். நன்றி கீதா.

    ReplyDelete
  6. திரு வெள்ளாறயை சுற்றிக்காட்டியதற்கு நன்றி

    ReplyDelete
  7. வெங்கட், வரவுக்கு நன்றி.

    ReplyDelete
  8. அப்பாதுரை, இடி இடிச்சால் மோடம் அவுட் ஆகிடும். :))))) அப்புறமாப் புது மோடம் பிஎஸ் என் எல் கிட்டே ஸ்டாக் இருந்தாத் தான் கிடைக்கும். மோடம் வாங்கறதுக்குள்ளே விடிஞ்சுடும். :)))))

    திருவெள்ளறை திருச்சிக்கு அருகே தான். டோல் கேட்டில் இருந்து கிட்டக்க.

    ReplyDelete
  9. வாங்க மீனாக்ஷி, கட்டாயமா வாங்க. போன மாசம் நிறையப் பேர் ஸ்ரீரங்கம் வந்தாங்க. ஆனால் நாங்க இல்லை. :(

    ReplyDelete
  10. ஸ்ரீராம், உங்க கேள்விக்கு பதில் வல்லி சொல்லிட்டாங்க. ஒரே கூட்டமாக இருக்குனு எங்க குடியிருப்பிலே போயிட்டு வந்தவங்க சொன்னாங்க. அதனால் நாங்க போகலை. அதோடு ராத்திரி ஒன்பதரை மணிக்கும் மேலாகிறதாம். ஒரு காலத்தில் மதுரையிலே ராத்திரி பனிரண்டு வரைக்கும் கோயில்கோயிலாச் சுத்தினதை நினைச்சுட்டு வீட்டிலே உட்கார்ந்திருக்கேன். :(

    ReplyDelete
  11. நன்றி வல்லி.

    ReplyDelete
  12. நன்றி லக்ஷ்மி.

    ReplyDelete
  13. திருவெள்ளறை கோவில் பற்றிய பதிவுக்கு நன்றி.ரொம்ப வருஷங்களுக்கு முன் சென்றது இப்பொழுது ஞாபகம் வந்தது.

    ReplyDelete
  14. வல்லிம்மா, கீதா மேடம்... ஆண்டாள் யானை என்பது நன்றாகவே தெரியும்! அதுதான் செய்தித்தாளில் படமாகவே போட்டிருந்தார்கள் என்றேனே! அந்த அற்புத நடனத்தை நீங்கள் பார்ஹ்தீர்களா என்பதே என் கேள்வி! :)))))

    ReplyDelete
  15. வாங்க ராம்வி, பலரும் இந்தக் கோயிலை ஏற்கெனவே பார்த்திருப்பது கொஞ்சம் ஆச்சரியமாத் தான் இருக்கு.வரவுக்கு ரொம்ப நன்றிங்க.

    ReplyDelete
  16. ஸ்ரீராம், ஹிஹிஹிஹி, அ.வ.சி. :)))))

    ReplyDelete
  17. ஆண்டாள் யானை மவுத் ஆர்கான் கூட வாசிக்கும். தாயாருக்கு வெண்சாமரம் வீசும். நொண்டியடிக்கும். சென்ற முறை பார்த்திருக்கிறேன். இம்முறை போகமுடியாமல் ஜூரம் வந்து விட்டது.

    திருவெள்ளறையில் ஸவஸ்திக் வடிவில் குளம் இருக்கும் என மாமியார் சொன்னதாக ஞாபகம்.

    ReplyDelete
  18. கோவை2தில்லியின் பின்னூட்டத்தையும் இப்போத் தான் பார்க்கிறேன். ஸ்வஸ்திக் வடிவக் கிணறு பற்றி முன்பே தெரியாததால் போய்ப் பார்க்கவில்லை. இன்று தான் எங்கள் குழுமம் மூலம் அறிந்து கொண்டேன்.:)

    ReplyDelete
  19. கடந்தவாரம் குமுதம் ஜோதிடம் இதழில் திருவெள்ளறைத் திருத்தலம் பற்றிக் கட்டுரை வெளியாகி யிருந்தது. நாங்களும், எங்களது மகள் குடும்பத்தினரும், எனது தங்கையின் குடும்பத்தினருமாகக் கடந்த 5 மார்ச் 2014 அன்று சென்று வணங்கி வந்தோம். அருமையான பெரியதொரு கோயில். கோயிலின் சுற்றுச் சுவர்களில் இருந்த கல்வெட்டுகள் அழிக்கப்பட்டிந்தன. காண்பதற்கு வருத்தமாக இருந்தது.

    ReplyDelete