ஒரு நாலு நாளைக்கு வரலைனா மக்கள்லாம் மறந்தே போயிடறாங்கப்பா. அநியாயமா இல்லையோ! வீட்டிலே கொஞ்சம் அதிக வேலை. விருந்தாளிகள் வரவு. மஹாளயம், வெளியே போக வேண்டி வந்தது, அலைச்சல்னு கணினி கிட்டே மெயில் பார்க்க மட்டுமே உட்கார முடிஞ்சது. சரி, நம்மளைக் காணோமேனு எல்லாரும் தேடப் போறாங்கனு பார்த்தால் இங்கே ஹிட் லிஸ்டே கீகீகீகீகீகீகீகீகீகீகீழே போயிருக்கு. மொத்தம் நூறு பேருக்குள்ளே தான் இரண்டு, மூணு நாளா விசிடிங்க். இப்படி இருந்தால் அப்புறமா நம்மளை மறந்தே போயிடுவாங்கனு தோணிச்சு. அதான் ஒரு மொக்கை கொடுத்து ரீ என்ட்ரி போட்டுக்கறேன். இனி தொடர்ந்து அறுவை போடுவேன். தயாரா இருங்க. (இல்லாட்டி மட்டும் எல்லாரும் வராங்களா என்ன?) அடைப்புக்குறிக்குள் என்னோட ம.சா. சொல்லுது. அதுக்கு வேறே வேலையே இல்லை. தேவையில்லாமல் முன்னுக்கு வரும். இப்போ வெங்கட் போட்ட பதிவைப் பார்த்ததும், ஏற்கெனவே நான் போட்டிருந்த பாரிஜாதம் படமும், பிரம்மகமலம் படம், அடுக்கு நந்தியாவட்டைப் படம், பவளமல்லிப் படம் ஆகியன பகிர்ந்துக்கறேன். முன்னாடி பார்க்காதவங்க பார்க்கலாமே!
இதான் எங்க வீட்டிலே பூத்த பாரிஜாதம் வகைப் பூக்களும், அதன் மொட்டுக்களும்.
இதுவும் அதான், இன்னொரு செடியில் பூத்திருந்தது.
இது கூகிளாண்டவர் கொடுத்தது. இதான் பிரம்மகமலம்னு சொல்லுது. ஹரிகி கொடுத்தது வேறே மாதிரி இருந்தது. குழுமத்திலே அந்த இழையைத் தேடணும். இல்லைனா ஹரிகி கிட்டே கேட்டு வாங்கிப் போடறேன். :)))
இது நம்ம எல்லாருக்கும் தெரிஞ்சது. பவளமல்லி. சாயந்திரம் ஏழு மணி ஆச்சுன்னா எங்க வீட்டிலே கணினி வைச்சிருந்த ஜன்னல் அருகே இருந்த இந்த மரத்திலிருந்து பூக்கள் கொட்ட ஆரம்பிக்கும். காற்றிலே மணம் கணினி முன்னாடி உட்கார்ந்திருக்கும் என் மூக்கை வந்து நிறைக்கும். மனமே அந்த மணத்தில் ஆழ்ந்து போகும். ஆனால் இந்தப் பூக்கள் கூகிளாண்டவர் கொடுத்தது தான். இதைக் காலையிலே நிறையப் பொறுக்கி மாலை கோர்த்து எங்க வீட்டு ராமருக்குப் போடுவேன். இங்கே இல்லை. :( இப்போ அம்பத்தூர் வீட்டிலேயும் பவளமல்லி மரம் இல்லை. :( இந்தப் பாரிஜாதச் செடியையும் வெட்டிட்டாங்க. அதுவும் இப்போ இல்லை. குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே இந்தப் பாரிஜாதம் வகைப் பூக்கள் பூக்கும்.