எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, September 22, 2013

ஆடாது, அசங்காது வா, கிருஷ்ணா!

குழந்தைப் பேறு இல்லாத குறை அது ஆத்திகரோ, நாத்திகரோ, அவர்களுக்கு மனதை மிகவும் பாதிக்கும்.  எல்லாத் தம்பதிகளுக்கு அப்படி இருப்பதில்லை எனினும் சிலருக்கு விரைவில் குழந்தை பிறக்காது.  அப்படிப் பட்ட குறை தீர இந்தத் தவழ்ந்த கிருஷ்ணனைப் பார்த்து தரிசித்து அவன் சந்நிதியில் தொட்டில் கட்டுவதாகப் பிரார்த்தித்துக் கொண்டால் மணிப்பயலோ, முத்துப் பெண்ணோ பிறக்கும் என்பது ஐதீகம்.

இங்கே இவன் மூலஸ்தானத்தில் இல்லை.  ஆனாலும் பெரும்பாலான மக்களுக்கு அம்பேகாலு கிருஷ்ணன் கோயில் என்றால் தான் புரிகிறது.  மூலவர் அப்ரமேயர்.  அப்ரமேய, ருஷிகேச, பத்மநாபோ, அமரப் ப்ரபு என்னும் விஷ்ணு சஹஸ்ரநாமாவளியில் வரும் அப்ரமேய என்னும் பெயரில் எல்லையில்லாமல் பரந்து விருந்திருக்கும் பெருமாள் ராம அப்ரமேயர் என்னும் காரணப் பெயரோடு இங்கே காட்சி அளிக்கிறார். ஶ்ரீராமர் இங்கே வந்து மஹாவிஷ்ணுவைப் பூஜித்த காரணத்தால் ராம அப்ரமேயர் என்னும் பெயர் பெற்றதாகச் சொல்கின்றனர். கோயில் மிகப் பழமையானது என்று சொல்கின்றனர்.  அதற்கேற்றாற்போல் கோயில் பராமரிப்பும் இன்றிப் பழமையானதாகவே காண்கின்றது.  3000 ஆண்டுகள் பழமையானதாக ஐதீகம் எனினும், கட்டிட அமைப்பு எல்லாம் சோழர் காலத்தை ஒட்டி இருப்பதால் குறைந்தது 1,500 ஆண்டுகள் ஆகி இருக்கலாம். ராஜராஜசோழன் காலத்துக் கல்வெட்டுக்கள் இருப்பதாக பட்டாசாரியார் கூறினார்.  இந்தக் கோயிலில் மூ.லவர் அப்ரமேயர் தவிர்த்து, ஶ்ரீராமர் மற்றும் அம்பேகாலு கிருஷ்ணா என்னும் தவழ்ந்த கிருஷ்ணரும் இருக்கிறார்.  இதில் யார், யாரைப் பிரதிஷ்டை செய்தார்கள் என்பது சரிவரத் தெரியவில்லை. ஆனால் அப்ரமேயரை இங்கே ராமர் வழிபட்டார் என்றும், அதன் பின்னரே ராம அப்ரமேயர் என்னும் பெயர் ஏற்பட்டதாகவும் சொல்கின்றனர்.  அதன் பின்னர் ராமர் சிலையைக் கிருஷ்ணர் பிரதிஷ்டை பண்ணி இருக்கலாம் என ஒரு யூகம் உள்ளது.

பல கல்வெட்டுச் செய்திகளும் அந்த இருளில் தெரிந்தன.  தாயார் சந்நிதி செல்லும் வழியிலும் மூலவர் சந்நிதி செல்லும் வழியிலும் கல்பாறைகளில் செதுக்கி இருக்கின்றனர்.  இந்தக் கோயிலின் தலபுராணம் வாய்மொழியாகவே சொல்லப்படுகிறது. அப்ரமேய என்றால் எல்லையற்ற என்ற பொருள் என்பதைப் பார்த்தோம். பகவானின் கருணை எல்லையற்றது என்ற பொருளிலும் கொள்ளலாம்;  அவன் சக்தி எல்லையற்றது, ரூபம் எல்லையற்றது என்றும் பொருள் கொள்ளலாம் இதை அவரவர் கருத்துக்கு ஏற்றாற்போல் புரிந்து கொள்ள விடுகிறேன்.  சாளக்கிராமக் கல்லில் வடிவமைக்கப்பட்டிருக்கும் மூலவர் நின்ற திருக்கோலத்தில் இருக்கிறார்.  கைகளில் சங்கு, சக்கரத்தோடு, அபய கரம் காட்டி நிற்கிறார்.  உற்சவர் ஶ்ரீதேவி, பூதேவி சஹிதமாகக் காட்சி அளிக்கிறார்.  மூலவர் சந்நிதியை விட்டு வெளியே வந்து இடப்பக்கம் உள்ள பிரகாரத்தில் சில படிகள் ஏறி மேலே சென்றால் தாயாரை தரிசிக்கலாம்.  அரவிந்தவல்லித் தாயார் என்பது திருநாமம்.  தாயார் இந்த ஆலயத்தின் வடமேற்குப் பக்கம் உள்ள விஷ்ணு தீர்த்தம் என்னும் குளத்திலே தானாகத் தோன்றியவராம்.  அவர் சக்தியும் அளவிட முடியாதது என்கின்றனர்.

அதே பிராகாரத்தில் சற்று தூரத்திலேயே நாம் முதலில் தரிசித்த நவநீத கிருஷ்ணன்காணப்படுகின்றான்.  தவழ்ந்து வந்து கொண்டு, "என்னைத் தூக்கிக்கோ, தூக்காமல் என்ன பண்ணறே!" என்று கேட்காமல் கேட்கிறான்.  கையிலே தூக்கிக் கொஞ்சத் தான் ஆசை.  நன்கு சீவி, வாரி முடித்த தலையோடு கழுத்தில் புலிநகமாலையோடு, முத்துமாலை, மாங்காய்த் தோடு, வங்கி, வளை, மோதிரம், அரைஞாண் கயிறு ஆகியவற்றோடும் தவழ்கையில் சப்தம் கேட்கும் வண்ணம் கால்களில் கொலுசோடும் பாதங்களில் சங்கு, சக்கரரேகைகள் இருப்பதாகவும்(பட்டாசாரியார் சொன்னது) கையில் பெரிய உருண்டை வெண்ணெயோடும் காட்சி கொடுக்கிறான்.  இந்தக் கோலத்தில் கிருஷ்ணனை இந்தியாவிலே எங்குமே பார்க்கமுடியாது எனச் சொல்கின்றனர்.  ஆனால் மத்ரா, பிருந்தாவன், கோகுலம் ஆகிய இடங்களில் பார்க்கலாம்.  அங்கே எல்லாம் கிருஷ்ணனை நாமும் தவழ்ந்து சென்றே பார்த்தாகவேண்டும்.  தொட்டிலை ஆட்டிக் கிருஷ்ணனைத் தூங்கவும் வைக்கலாம்.  கருட பீடத்தில் இருப்பதாகவும் சொல்கின்றனர்.  இதைத் தவிரவும் இந்தக் கோயிலில்  ஶ்ரீராமர் குடும்ப சமேதராகக் காட்சி அளிக்கிறார்.  மற்றும் சுதர்சன நரசிம்மர், வேணுகோபாலர் ஆகியோருக்கும் சந்நிதிகள் காணப்படுகின்றன.   இந்த ஊரின் கதையையும், மற்ற விபரங்களையும் நாளை பார்ப்போம்.

23 comments:

  1. அவன் சக்தி எல்லையற்றது, ரூபம் எல்லையற்றது என்றும் பொருள் கொள்ளலாம்

    அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  2. // நவநீத கிருஷ்ணன் காணப்படுகின்றான். தவழ்ந்து வந்து கொண்டு, "என்னைத் தூக்கிக்கோ, தூக்காமல் என்ன பண்ணறே!" என்று கேட்காமல் கேட்கிறான். கையிலே தூக்கிக் கொஞ்சத் தான் ஆசை. //

    ஆஹா, அசத்தல்.

    மிகவும் பயனுள்ள பதிவு.

    http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_4556.html

    நேரமிருந்தால் இதைப்படியுங்கோ.

    ReplyDelete
  3. 1500 ஆண்டுகள் பழமையான கோவிலா... அட! பார்க்கவேண்டும் என்ற ஆசை வருகிறது. அப்ரமேயர் என்ற பெயர் வசீகரிக்கிறது.

    ReplyDelete
  4. வாங்க ராஜராஜேஸ்வரி, நன்றி.

    ReplyDelete
  5. வைகோ சார், எனக்கு மட்டும் என்னமோ நேரமே கிடைக்கிறதில்லை! :( இன்னக்கு இங்கே மின்வெட்டு வேறே. இப்போத் தான் மின்சாரம் வந்திருக்கு. படிக்கிறேன். :)))

    ReplyDelete
  6. வாங்க ஶ்ரீராம், ஒரு முறை போயிட்டு வாங்க. :)

    ReplyDelete
  7. கொள்ளை கொள்ளும் அழகுடைய கண்ணன். சீக்கிரமே தவம் இருப்பவர்களுக்கு அருள் புரிவான்.
    உங்களுடைய பகிர்வில் பார்க்கும்போதே நேராக வந்துவிடுவான் போலிருக்கே.மைசூரில் நிறையப் பேருக்கும் வீடுகளுக்கும் அப்ரமேயா எனும் பெயர் இருக்கும்.

    ReplyDelete
  8. "என்னைத் தூக்கிக்கோ, தூக்காமல் என்ன பண்ணறே!" என்று கேட்காமல் கேட்கிறான். கையிலே தூக்கிக் கொஞ்சத் தான் ஆசை.//
    ஆஹா! தவழும் நவநீத கிருஷ்ணனைப் பார்க்க ஆசை.
    அவன் அழைக்கும் போது பார்த்து வரவேண்டும்.

    ReplyDelete
  9. வாங்க வல்லி, அப்ரமேயன்னு பெயர் வைக்கிறது தெரியாது. நன்றி.

    ReplyDelete
  10. வாங்க கோமதி அரசு, ஒரு முறை போங்க. ஆனால் காலை வேளையில் போங்க. அப்போத் தான் நதி நரசிம்மர், சிவன் எல்லாரையும் பார்க்க முடியும். இந்தக் கோயில் காலை எட்டு மணிக்குத் தான் திறப்பாங்க.

    ReplyDelete

  11. பளபளவென்று கறுப்பு கல்லில் முகம் மலரச் சிரிக்கும் மிகவும் அழகான குழந்தைக் கண்ணன். ஒவ்வொருமுறை மைசூர் போகும் போதும் முதல் நிறுத்தம் இங்கு தான்.
    உங்களுடன் சேர்ந்து இன்னொருமுறை அம்பேகாலு கிருஷ்ணனை சேவித்தாயிற்று. அப்ரமேயப் பெருமாள், தனிக் கோவில் நாச்சியார் எல்லோருமே அழகாக இருப்பார்களே!

    ReplyDelete
  12. வாங்க ரஞ்சனி, பார்க்கப் பார்க்க அழகு தான். :)))

    ReplyDelete
  13. இந்த கோவிலின் சக்தி ரொம்பவும் சந்தேஹமில்லாதது. செப்டம்பர் 2010 இந்த கோவிலுக்கு சென்று வந்தோம்.
    முழுக்க ஒரே சாளக்ராம கல்லால் ஆன கிருஷ்ணர். மனதார "நீ என் கூடவே வீட்டுக்கு வந்துடு" னு வேண்டினேன்.

    ஜூலை 2011 அவன் பிறந்தே விட்டான்.

    ReplyDelete
  14. Great post. I really loved reading it. Only after visiting this temple we were blessed with children. Planning to go there for annaprasanam of our daughter. this post reminds me of my earlier visits to this temple.

    ReplyDelete
  15. உங்களின் உணர்வுபூர்வமான வரிகளிலும் காணக்கிடைத்த கண்ணனைக் கண்டு களித்தேன்.

    ReplyDelete
  16. Maammi, can u pls let me know about how reach this temple - Balaji

    ReplyDelete
  17. Maammi, let me know the place n how to reach this temple

    ReplyDelete
  18. வாங்க ஜெமினி, கண்ணன் செளக்கியமா இருக்கானா? அதே குறும்புகளோடு ஆரோக்கியமாக இருக்கப் பிரார்த்தனைகள்.

    முதல் வரவுக்கு நன்றி.

    ReplyDelete
  19. @fieryblaster,வாங்க, பலருக்கும் இவன் கண்கண்ட தெய்வமாய் இருந்திருக்கான். :))) மிக்க மகிழ்ச்சி. வருகைக்கும் நன்றி.

    ReplyDelete
  20. வாங்க ஜீவி சார், வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  21. பாலாஜி, பதிவை ஒழுங்காப் படிக்கிறதில்லையா? சரி, போகட்டும் அடுத்த பதிவையானும் படிங்க. பெண்களூர்--மைசூர் ஸ்டேட் ஹைவேயில் சென்னப்பட்டினத்திலிருந்து மூன்றாவது கிலோ மீட்டரில் இடப்பக்கமாய் வரும். அம்பேகாலு கிருஷ்ணன் கோயில்னு கேளுங்க. :))) அடுத்த வருஷம் வீட்டுக்கே வந்துடுவான். :))))

    ReplyDelete
  22. கீதா மாமி, ரொம்ப நாளா உங்க blogs படிக்கறேன். ஆனா comments இப்போ தான் போடறேன்.

    குட்டி கண்ணன் அதே விஷம சேஷ்டைகள் எல்லாம் பிரமாதமா பண்றான். மயில் பீலி ஒண்ணு தான் குறைச்சல். :)

    ReplyDelete
  23. "பழமையும் சக்தியும் வாய்ந்தகோயில்"

    தவழும் குட்டிக்கிருஸ்ணா அழகு.

    ReplyDelete