எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, September 18, 2013

இதுக்கெல்லாமா அசந்துடுவோம்!

மொக்கைக்குத் தான் ஹிட்லிஸ்ட் எகிறுது! அநியாயமா இல்லையோ?


பிள்ளையார் சதுர்த்தி அன்று இரவுப் பேருந்தில் "பெண்"களூர் போனோம். 11--ஆம் தேதி கல்யாணம். முஹூர்த்த நேரம் கிட்டத்தட்ட மதிய நேரம்.  அபிஜித் முஹூர்த்தம்.  ஆகவே அன்னிக்கு தொட்டமளூர் போக முடியாது. 10 ஆம் தேதி விரதம் முடிந்ததும், உடனே காலையிலேயே நிச்சயதார்த்தம் வைத்துக் கொண்டிருந்தனர்.  பனிரண்டு மணிக்கு மேல் நிச்சயதார்த்தம் முடிஞ்சு கோயிலுக்குப் போக முடியாது.  மாலை போகலாம்னா ரிசப்ஷன் அன்னிக்கு வைச்சிருந்தாங்க.  நம்ம கொள்கைக்கு விரோதம் தான் என்றாலும் இது சொந்த அண்ணா பையர் கல்யாணம் இல்லை என்பதோடு ரிசப்ஷன் பெண் வீட்டு ஏற்பாடு என்பதும் கூட.  ஆகவே எதுவும் சொல்லலை.  ரிசப்ஷனுக்கு ப்யூட்டி பார்லரிலே இருந்து வந்து பெண், பிள்ளை அலங்காரம் செய்துக்க வசதியாகத் தான் நிச்சயத்தைக் காலையிலேயே முடிச்சுக்கறாங்க என்பதும் புரிந்தது.  பேருந்துப் பயணம் ஆரம்பத்தில் சிரமமாக இருந்தது.  கரூர் தாண்டி சேலம் வரையில் சாலை மோசம்.  அதுக்கப்புறமா வண்டி சாலையில் மிதந்ததுனே சொல்லலாம்.  சொகுசுப் பேருந்தின் சுகமே அப்போத் தான் தெரிஞ்சது.  நாங்க பயணித்த பேருந்தில் எல்லாம் பெண்"களூரில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் தம்பதிகள்.  நாங்க ரெண்டு பேரும் தான் அந்தப் பேருந்திலேயே வயசான தம்பதிகள்.  எல்லாரும் மூன்று நாள் சேர்ந்தாப்போல் விடுமுறைக்குச் சொந்த ஊர் வந்துட்டுத் திரும்பறாங்க. அவங்களுக்கு இது வாடிக்கை.  பேருந்தில் ஏறினதுமே இழுத்துப் போர்த்துட்டுத் தூங்கிட்டாங்க.  நான் கம்பளியை(பேருந்தில் கொடுத்தது தான்) எடுத்து மடிச்சு வைச்சுட்டேன். அரைத் தூக்கமும், விழிப்புமாகக் காவேரிக்கரையைக் கடக்கும் வரை இருந்துட்டு அப்புறமாக் கொஞ்சம் தூங்கினேன்.


சேலம் தாண்டி வந்த சுங்கச் சாவடியில் பணம் கட்டப் பேருந்து நின்றது.  வெளிமாநிலப் பேருந்துகளுக்குப் பணம் வசூலிக்கிறாங்க போல.  நாங்க போனது கர்நாடக அரசுப் பேருந்து தான். ஆனாலும் தமிழ்நாட்டுக்குள்ளே பேருந்து ஓடப் பணம் கட்டணும். காலை ஐந்தே முக்காலுக்கே "பெண்"களூர் போயாச்சு.  சாந்தி நகர் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டாங்க. முன்னெல்லாம் மெஜஸ்டிக்கா மெஜஸ்டிக் சர்க்கிளில் இறங்குவோம்.  இப்போ சர்க்கிளே இல்லைபோல பெண்களூரில். மெலிதான தூறல்கள், மேலே இருந்து பன்னீர்ச் சிதறல்கள் போல விழுந்துட்டு இருந்தது.  சூரியன் இன்னைக்கு நான் லீவுனு சொல்லிட்டு, மேகப் போர்வையை எடுத்துப் போர்த்திட்டு ஹாயாப் படுத்துட்டார். அங்கே இருந்த ஆட்டோக்காரங்களைக் கூப்பிட வேண்டாம்னு ப்ரீ-பெய்ட் ஆட்டோவைப் பார்க்கலாம்னு போனால் உள்ளூர்க் காரங்க, எதுக்கு அநாவசியமா ஆட்டோவுக்குப் பணம் கொடுக்கறீங்க!  பேசாம, (பேசிட்டே) பேருந்திலே போங்கனு புத்திமதி சொன்னாங்க.  எல்லாத்தையும் ஒரே தள்ளாத் தள்ளிட்டோம். கையிலே சூட்கேஸ் பயமுறுத்தியது. அதைத் தூக்கிட்டு ஏறிடலாம்; இறங்கிடலாம்.  இறங்கற இடத்திலே இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் இதைத் தூக்கிண்டு யாரு நடக்கிறது?

ஒரு ஆட்டோக்காரர் ஆட்டோவின் விலையைச் சொல்ல, வாங்கப் பணம் கொண்டு வரலைனு வேறே ஒருத்தரைத் தேடிப் போனோம். அப்போ ஒரு ஆட்டோக்காரர் வந்து எங்கே போகணும்னு கேட்டுத் தான் கொண்டு விடுவதாயும் ரூ 150 கொடுக்கவும் சொல்ல, எங்களுக்குக் கொஞ்சம் சந்தேகம்.  அவருக்கு எங்க சந்தேகம் புரிஞ்சு தமிழில் பேச ஆரம்பித்தார்.  "பெண்"களூர், மங்களூர், உடுப்பி, கொல்லூர் போன்ற ஊர்களில் ஆட்டோக்காரர்கள் தமிழ், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம், கொங்கணி போன்ற மொழிகளில் பேசறாங்க. அதுவும் சர்வ சரளமாக. இதை நம்ம ஊர் ஆட்டோக்காரங்களும் கத்துக்கணும். எங்கே! :( அப்புறமா தைரியமா சாமானை எடுத்து வைச்சுட்டு ஆட்டோவில் உட்கார்ந்தோம். அரை மணி நேரத்தில் நாங்க போக வேண்டிய சத்திரம் சந்திரோதயம் வந்து சேர்ந்தது.  அங்கே போட்டிருந்த ஃப்ளெக்ஸ் பானரில் பையர், பெண் பேரையும், அப்பா, அம்மா, பேரையும் பார்த்து நிச்சயம் செய்து கொண்டு கீழே இறங்கினேன்.  படிகள், படிகள், படிகள்.  சத்திரத்துக்குத் தரைத்தளம் போகவே இருபது படிகள். கடவுளே!

யாரோ ஒரு மஹானுபாவர் வந்து பெட்டியைத் தூக்கி மேலே கொண்டு போய்த் தளத்தில் வைத்தார்.  அதுக்கப்புறமாப் பெட்டியை உருட்டிக் கொண்டு போயாச்சு.  மணமேடை(ஆடிட்டோரியம்)க்கு ஏறவும் ஐந்தாறு படிகள். அங்கேயும் நாங்க பிள்ளை வீடுனு தெரிஞ்சுண்ட பெண்ணின் அப்பா யாரையோ அழைத்துப் பெட்டியைத் தூக்கித் தரச் சொல்ல, நாங்க படியேறினோம்.  உள்ளே போய்த் தான் காஃபி கப்பைப் பார்த்து மயக்கம் போட்டு விழுந்ததெல்லாம். அதுக்கப்புறமா அடுத்த மயக்கம் மத்தியானம் சாப்பிடறச்சே அப்பளம் போட்டப்போ! நம்ம ஊருக் கல்யாணங்களிலே இப்படி எல்லாம் போடறதே இல்லை.  க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! :( ரசம் சாதத்துக்கு அப்பளாம் இல்லாமல் எப்படிச் சாப்பிடறதாம்? அதுவும் கல்யாணத்திலே.)   அன்றே மதியம் நிச்சயம் முடிந்து சாப்பிட ஒன்றரை மணி ஆகிவிட்டது.  அதுக்கப்புறமாக் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டு மாலைக் காஃபி சாப்பிட்டதும், அந்தத் தெருவில் ஏதேனும் ட்ராவல்ஸ் காரங்க இருக்காங்களானு பார்க்கப் போனோம்.  கொஞ்ச தூரம் போனதும் ஒரு ட்ராவல்ஸ் காரர் கிடைச்சார்.  அவர் மலையாளத்தில் சம்சாரிக்க, நாங்க தமிழிலும், ஆங்கிலத்திலும் பேசி டாக்கினோம்.  ஒரு மாதிரியாப் புரிஞ்சுண்டு வண்டியும் தரேன்னு சொன்னார்.  ஆனால் நாங்க சொன்ன ஊர் அவருக்குப் புரியலை.  தொட்டமளூர்னு சொன்னால் அங்கே யாருக்கும் புரியறதே இல்லை.  நல்லவேளையா ஆபத்பாந்தவனாக ஒரு தமிழ்க்காரர் அங்கே டிரைவராக இருந்தவர் உதவிக்கு வந்தார்.  சென்னப்பட்டினத்துக்குப் பக்கம்னு சொன்னதும் அவன் கன்னடத்தில் மாட்லாடி, மலையாளத்தில் பறஞ்சு புரிய வைச்சார்.  வண்டியும் கிடைச்சது.  கல்யாணத்தன்னிக்கு மதியம் மூணரைக்குப் போக வண்டியை ஏற்பாடு பண்ணிக் கொண்டோம். எங்களோட தொலைபேசி எண், சத்திரத்தின் அறை எண், பெயர் எல்லாம் கொடுத்துட்டு வந்தோம்.  மறுநாள் கல்யாணம் முடிஞ்சது.


ரங்க்ஸ் மட்டும் சாப்பிட்டு வந்தார்.  நான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகச் சாப்பிடவில்லை.  வெளியே சென்றால் இரண்டு நாட்களுக்கு மேல் தங்கும்படி வந்தால் மதியம் சாப்பிட மாட்டேன்.  ஏதேனும் ஜூஸ்(ஃப்ரெஷ்) குடிச்சுட்டு இருந்துடுவேன்.  இரவிலும் இட்லி, தோசை, சப்பாத்தி ஏதேனும் ஒன்று மட்டும் சாப்பிட்டுப் பால் கிடைச்சால் குடிப்பேன்.  காலை ஆஹாரம்னா தமிழ்நாட்டில் பொங்கல் மட்டும்.  வயித்தை எதுவும் செய்யாத ஆகாரம். வேறே எதுவும் நோ நோ தான்.  சர்வ ஜாக்கிரதையாக இருப்பேன். அப்படியும் தொந்திரவுகள் வரது தான்.  அவர் சாப்பிட்டு வந்ததுமே ட்ராவல்ஸுக்குத் தொலைபேசிப் பயணத்தை உறுதி செய்யச் சொன்னேன்.  நம்ம சொல்லி ரங்க்ஸ் உடனே கேட்டதாகச் சரித்திரமே இல்லை.  எல்லாம் நேரம் இருக்கு! நான் கொஞ்சம் தூங்கறேன்னு சொல்லிட்டுத் தூங்கப் போயிட்டார்.  ஒருவழியா மூணு மணியும் ஆச்சு. ரங்க்ஸை எழுப்பினேன்.  வண்டிக்குத் தொலைபேசச் சொன்னால் இன்னும் மூணரை ஆகலையேனு கடுப்படிச்சுட்டு ஒருவழியா ஒரு மஹாயுத்தம் நடந்து முடிஞ்சதும் மூணேகாலுக்குத் தொலைபேசினார்.  வந்தது அதிர்ச்சித் தகவல்.  வண்டி இல்லையாம்.  பெரிய வண்டி தான் இருக்காம். சின்ன வண்டி நாங்க கேட்டது இன்டிகா. அது வெளியே போயிருக்காம்.  ஐந்துக்கோ, ஐந்தரைக்கோ தான் வருமாம். கடவுளே! இப்போ என்ன செய்யறதாம்?

28 comments:

  1. அது என்ன பையர் ?
    பையன் என்று பெத்த பிள்ளையை அழைப்பட்து வழக்கம்.
    பையர் என்றால், எப்பவுமே கையிலே ஒரு பையை வைத்திருப்பவா ?

    பையன் என்பதற்கு மரியாதை நிமித்தமாக பையர் என்று இருக்குமோ ?

    மனசுலே ஒரு fear இருக்கரதுனல்லே பையன் பையர் ஆகிவிட்டாரோ ?

    ரொம்ப நாளா சந்தேஹம். கேட்டுட்டேன். நீங்க தப்பா எடுத்ததுக்க கூடாது.

    இது ஒரு மொக்கை பின்னூட்டம். ஹி ஹீ

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  2. // நம்ம சொல்லி ரங்க்ஸ் உடனே கேட்டதாகச் சரித்திரமே இல்லை. எல்லாம் நேரம் இருக்கு! நான் கொஞ்சம் தூங்கறேன்னு சொல்லிட்டுத் தூங்கப் போயிட்டார். ஒருவழியா மூணு மணியும் ஆச்சு. ரங்க்ஸை எழுப்பினேன். வண்டிக்குத் தொலைபேசச் சொன்னால் இன்னும் மூணரை ஆகலையேனு கடுப்படிச்சுட்டு ஒருவழியா ஒரு மஹாயுத்தம் நடந்து முடிஞ்சதும் மூணேகாலுக்குத் தொலைபேசினார்.//

    அவரை நினைக்க எனக்கு மிகவும் பாவமாக உள்ளது.

    இந்த ஒரு பதிவிலேயே எனக்குப்பல விஷயங்கள் புரிகிறதே !

    ஒவ்வொரு நாளும் அந்த மனுஷர் உங்களுடன் எவ்ளோ கஷ்டப்படறாரோ ! ;)))))

    >>>>>

    ReplyDelete
  3. //சொகுசுப் பேருந்தின் சுகமே அப்போத் தான் தெரிஞ்சது. நாங்க பயணித்த பேருந்தில் எல்லாம் பெண்"களூரில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் தம்பதிகள்.//

    சின்னஞ்சிறுசுகள் ... ‘பெண்’களூர்ப் பெண்கள் வேறு. ஒரே ஜாலியாக இருந்திருப்பார்கள்.

    //நாங்க ரெண்டு பேரும் தான் அந்தப் பேருந்திலேயே வயசான தம்பதிகள். //

    அடப்பாவமே !

    ஆனாலும் உங்களின் அனுபவம் அலாதியானது அல்லவா!

    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததோ ! ;)

    >>>>>



    ReplyDelete
  4. //படிகள், படிகள், படிகள். சத்திரத்துக்குத் தரைத்தளம் போகவே இருபது படிகள். கடவுளே!//

    எங்கே போனாலும் இதுதான் மிகப்பெரிய தொல்லையாக உள்ளது.

    //அவர் மலையாளத்தில் சம்சாரிக்க, நாங்க தமிழிலும், ஆங்கிலத்திலும் பேசி டாக்கினோம். //

    அச்சா, பஹூத் அச்சா. மிகவும் ரஸித்தேன்.

    மலையாளத்தில் பறைந்தாரா, சம்சாரித்தாரா? ஏதோ ஒண்ணு செய்தார், ஓக்கே.

    >>>>>

    ReplyDelete
  5. //மொக்கைக்குத் தான் ஹிட்லிஸ்ட் எகிறுது! அநியாயமா இல்லையோ?//

    இதிலிருந்து ஒன்று நிச்சயம் தெரிந்துகொள்ள முடிகிறதே!

    அதாவது ஹிட்லிஸ்ட் எகிறுவதெல்லாம் மொக்கையன்றி வேறு எதுவும் இல்லை என்று அடித்துச்சொல்லியுள்ளீர்கள்.

    சந்தோஷம். எனக்கு எதற்கு ஊர் வம்ப்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.

    நான் இத்துடன் எஸ்கேப்.

    -oOo-

    ReplyDelete
  6. உங்களுக்குனு பிரச்சினை வரதே கீதா. ஆமாம் தெலுங்குலதானே மாட்லாடணும். அவரோ கன்னடக் காரர். புரியலையோ என்னவோ. அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்:)

    ReplyDelete

  7. சூரி சிவா அவர்கள் இப்பொழுது கேட்கிறார். நான் அன்றே கேட்டுவிட்டேன். .....!

    ReplyDelete
  8. நான் பல வருடங்களாக இங்கே இருக்கிறேன். அப்ரமேயர் கோயில் கேள்விப்பட்டதில்லை. பெங்களூர் மைசூர் சாலையில் ஸ்ரீரங்கப் பட்டினத்துக்கு அருகே நிமிஷாம்பாள் கோயில் ஓரளவு பிரசித்தம். இப்படித்தான் சிலர் ஏதாவது கோயில் பேரைச் சொல்லி நாம் பார்க்கவி ல்லைய்யெ என்று எண்ண வைத்துவிடுவார்கள்.

    ReplyDelete
  9. வாங்க சூரி சார், ஏற்கெனவே பதில் சொன்னேன். விளையாட்டாச் சொல்லப் போக அது நிலைச்சுடுச்சு. அதோட பையர்களும் மரியாதை இல்லாமல் பேசறதா ஒரு பேச்சு சொல்லக் கூடாது பாருங்க! அதான். பதிவு மொக்கைன்னா பின்னூட்டமும் மொக்கை தானே! :))))

    ReplyDelete
  10. வைகோ சார், சரியான ஆணாதிக்கப் பேர்வழியா இருக்கீங்களே! :))))))

    ReplyDelete
  11. அதெல்லாம் ஒண்ணும் ஞாபகம் வரலை வைகோ சார், சீக்கிரம் "பெண்களூர் போனாப் போறும்னு இருந்தது. :))))

    ReplyDelete
  12. மலையாளத்தில் பறைஞ்சு, கன்னடத்தில் சம்சாரிச்சு, சீச்சீ, தெலுங்கில் மாட்லாடி, சரியாவே வரலையே! :))))

    ReplyDelete
  13. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இன்னம்பூரார் பத்தின பதிவுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு ஹிட்லிஸ்ட் எகிறியதாக்கும். :)))))

    ReplyDelete
  14. //உங்களுக்குனு பிரச்சினை வரதே கீதா.//

    ஹிஹிஹி, பிரச்னை எங்கேயோ அங்கே நாம்! :)))

    // ஆமாம் தெலுங்குலதானே மாட்லாடணும்.//

    ஆமா இல்ல?? அப்போ அவர் பேசினது கன்னடத் தெலுங்குனு வைச்சுப்போமே. இதை நாம தனியாப் பேசிக்கலாம். :))))


    //அவரோ கன்னடக் காரர். புரியலையோ என்னவோ. அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்:)//

    ஹிஹிஹி, அதெல்லாம் விடுவோமா? நாங்க பீட்டர் விடமாட்டோம்? பீட்டர் விட்டுப் புரிய வைச்சாச்சு இல்ல! :))))

    ReplyDelete
  15. வாங்க ஜிஎம்பி சார், உங்களுக்கும் அன்னிக்கே பதில் சொன்னேன். சும்மா விளையாட்டுக்குத் தான் எழுத ஆரம்பிச்சு இப்போ வழக்கமா ஆயிடுத்து. :)))

    ReplyDelete
  16. ஜிஎம்பி சார், இந்தக்கோயில் சோழர்காலத்துக் கோயில். மிக மிகப் பழமையான கோயில். நீங்க சொல்லும் நிமிஷாம்பாள் பத்தி எனக்குத் தெரியாது. ஆனால் இது அப்படி இல்லை. சென்னப்பட்டினத்திலிருந்து சரியா மூன்றாவது கிலோ மீட்டரில் இருக்கு. கோயிலைப் பார்த்தாலே அதன் பழமை நன்கு புரியும். இங்கே கண்வ நதிக்கரையில் ஒரு நரசிம்மர் கோயிலும், ஈசன் கோயிலும் கூட இருக்கு. சீக்கிரம் போக நினைச்சதே அந்தக் கோயில்களுக்கும் போக நினைச்சுத் தான். கடைசியில் நாங்க இந்தக் கோயில் போறச்சேயே ஏழு மணி ஆயிடுச்சு. நரசிம்மர் கோயில், சிவன் கோயிலெல்லாம் நதிக்கரையில் இருப்பதால் மூடிட்டாங்களாம். :( பகலில் தான் போகலாம்னு சொல்லிட்டாங்க.

    ReplyDelete
  17. ஶ்ரீரங்கப்பட்டினம் எண்பதுகளில் போனது தான். அப்புறம் பலமுறை பங்களூர் வந்தும் 2007--2008 ஆம் வருஷம் மைசூருக்கே போயும் கூட ஶ்ரீரங்கப்பட்டினம் போகலை, சாமுண்டி ஹில்ஸ் மட்டும் போனோம்.

    ReplyDelete
  18. நந்தி ஹில்ஸ் போனோம்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
  19. காலாகாலத்துல கன்பர்ம் செய்யலைன்னா வண்டி கிடைப்பது கஷ்டம்தான். அவ்வளவு பெரிய விருந்தில் எதுவும் சாப்பிடாமலிருக்க அசாத்திய மனக் கட்டுப்பாடு வேண்டும்.

    ReplyDelete
  20. வாங்க ஶ்ரீராம், கொஞ்சம் அலக்ஷியம் தான் வேறே என்ன? கொடுக்காமலா இருப்பாங்கனு நினைப்பு. :)))

    பல கல்யாணங்களிலும் நான் மதியச் சாப்பாட்டைத் தவிர்த்துவிடுவேன். சில கல்யாணங்களில் முதல்நாளில் இருந்து தங்கும்படி நேர்ந்தால் ரிசப்ஷன் விருந்தைக் கூடத் தவிர்த்திருக்கேன். அப்புறமா அவஸ்தைப் படறதுக்கு முன்னாலேயே கவனமா இருந்துடலாமே. அவ்வளவு ஏன்? என் பொண்ணு, பிள்ளை கல்யாணங்களிலும் அப்படித் தான் இருந்திருக்கேன். பிள்ளை கல்யாணத்தில் பெண்ணின் பெற்றோர், உறவினரெல்லாம் ஏதோ கோபமாக்கும்னு பயந்துட்டு வந்து கேட்டுட்டே இருந்தாங்க. :))))) உடல்நிலையும் அப்போ மோசமா இருந்தது. அதைக் காரணம் காட்ட முடிஞ்சது.

    ReplyDelete
  21. தொட்ட மளூர் தரிசனம் நன்றாக ஆகியிருக்கும் என்று நினைக்கிறேன். அம்பேகாலு (தவழும்) கிருஷ்ணனை சேவித்தீர்களா? நிதானமாக வந்தால் தான் எல்லாவற்றையும் தரிசிக்கலாம்.

    ReplyDelete
  22. "மஹாயுத்தம் நடந்து முடிந்தது" ஹா...ஹா...

    அப்புறம் என்ன வண்டி கிடைத்தது?

    ReplyDelete
  23. வாங்க ரஞ்சனி, அம்பேகாலு (ஹாலு?) கிருஷ்ணரை ஏற்கெனவே பார்த்தேன். இப்போ இரண்டாம் முறையாப் பார்க்கிறேன். :)))) நல்லா கொழு, கொழுனு இருக்கார். போறாதுக்குக் கையிலே நிறைய வெண்ணெய் வேறே! :)))

    ReplyDelete
  24. வாங்க மாதேவி, எங்கே போனாலும் நம்ம யுத்தம் தொடருமே! :)))))

    ReplyDelete
  25. அம்பே காலு (முட்டி போட்டிருக்கும் கால்) (ambegaalu) என்று அர்த்தம். ஹாலு இல்லை.
    பெங்களூரிலும் மல்லேஸ்வரத்தில் வேணுகோபாலசுவாமி சந்நிதியில் தவழும் கிருஷ்ணன் இருக்கிறார். அவரும் கொழு கொழு தான். சிரிப்பில் நம்மை அப்படியே அள்ளுவார்!

    ReplyDelete
  26. கீதா மேடம்,
    நிறைய பேருடைய சந்தேகத்தை எல்லாம் தீர்த்து வைத்திருக்கிறீர்கள். எனக்கும் ஒரு சந்தேகம்.
    இந்த ரங்கமணி, தங்கமணி பற்றித் தான். முதன் முதலில் யாருடைய பதிவிலோ திரு' வெங்கட்ஜியின் தங்கமணி' என்று எழுதியிருந்தார்கள். நான் அவர் மனைவியின் பெயரே தங்கமணி என்று நினைத்திருந்தேன். அப்புறம் தான் புரிந்தது மனிவியை தங்கமணி என்று சொல்கிறார்கள் என்று. ரங்கமணி என்றால் கணவர் என்றும், தங்கமணி என்றும் மெல்ல மெல்ல புரிய ஆரம்பித்தது. ஆனால் ஏன் அப்படி சொகிறார்கள் என்று இதுவரை புரியவில்லை. யாரையாவது கேட்டுத் தெரிந்து கொள்ளாவிட்டால் தலை வெடித்து விடும் ஆபத்தான நிலையில் உள்ளது. விளக்குவீர்களா?

    பி.கு. கோபப்படாதீர்கள். எல்லைப் பிரச்சினை படிக்க சொன்னால் இந்தப் பதிவைப் படித்து விட்டு அத்வுமில்லாமல், இதுவுமில்லாமல்
    ஒரு சந்தேகம் வேறு கேட்கிறாளே என்று கோபப்பட வேண்டாம். என் தலையின் நிலை அப்படியிருக்கிறது. அதற்குத் தான்.

    ReplyDelete
  27. ஹிஹிஹி, ராஜலக்ஷ்மி, தலைப்பைப் பார்த்தீங்க இல்ல?? இதுக்கெல்லாமா அசந்துடுவோம்???

    ரங்கமணி, தங்கமணி என்பது கவுண்டமணி, செந்தில் இருவருடைய காமெடியில்(எந்தப்படம்னு எல்லாம் கேட்காதீங்க, வகுப்பு எடுத்தப்போ அதைச் சொல்லித் தரலை) வந்த வார்த்தைகள்.

    அதை நம்ம மானசீக குருவான டுபுக்கு என்பவர் தன்னோட பதிவுகளிலே 2005- ஆம் வருஷமே பயன்படுத்த ஆரம்பிக்க அது சூடு பிடிச்சு, அவர் தம்பியான அம்பி என்ற அம்மாஞ்சி மூலம் பிரபலம் ஆகி

    யம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாடி, கை வலிக்குது. இதான் ரங்கமணி, தங்கமணியின் மு.க.சு.

    சொல்லிடுங்க உங்க ரங்க்ஸ்கிட்டே. :)))))

    ReplyDelete