சரி, கீழே போய்க்காஃபி குடிச்சுட்டு, டிஃபன் கிடைச்சா வாங்கிட்டு நேரே ட்ராவல் ஆபீஸுக்கே போகலாம்னு ரங்க்ஸ் ஒத்துக்க, இரண்டு பேரும் கிளம்பினோம். அங்கே போனால் காடரிங்காரங்க எல்லாம் ஜாலியா ரெஸ்ட் எடுத்துட்டு இருந்தாங்க. காஃபி கேட்டால் நாலு மணி ஆகும்னு சொல்லிட்டாங்க. லேட் முஹூர்த்தம் என்பதால் சாப்பாடு முடியவே மூணு மணி ஆயிடுச்சாம். டிஃபன் ஐந்து மணி ஆகுமாம். இது சரியா வராதுனு ட்ராவல்ஸ் ஆஃபீஸுக்குக் கிளம்பிட்டோம். போற வழியிலே கண்ணிலே பட்ட ட்ராவல்ஸ் வண்டிகளை எல்லாம் நிறுத்தி, நிறுத்தி ரங்க்ஸ் கேட்க ஒவ்வொருத்தரும் அந்தக் காரோட விலையைச் சொல்லக் கட்டுப்படி ஆகாதுனு நான் தரதரனு அவரையும் இழுத்துண்டு ட்ராவல்ஸ் ஆஃபீஸுக்கே போனோம். எங்க கிட்டே பேசி ஒப்பந்தம் போட்டவங்க இல்லை. இன்னொருத்தர் இருந்தார். அவரிடம் விஷயத்தைச் சொல்லவும் எங்க கிட்டே பேசினவரை வரவழைத்தார். அவர் வரப் பத்து நிமிஷம் போல் ஆச்சு. நேரம் ஆக ஆக எனக்கோ பதைப்பு. ஏனெனில் இங்கே உள்ள போக்குவரத்தில் பெண்களூரைக் கடக்கவே ஒன்றரை மணி நேரம் ஆயிடுமே. அங்கே கோயில் திறந்திருக்குமா, மூடிடுவாங்களா? நரசிம்மரைப் பார்க்க முடியுமா என்றெல்லாம் கவலை. ஒரே கோபம் வேறே வந்தது. பத்து நிமிஷம் கழிச்சு வந்த மனிதர் எங்க கிட்டே ஒரு வார்த்தை கூடப் பேசாமல் யாரோ மாதிரிப் பார்த்துக் கொண்டு நேரே உள்ளே போய்க் கணினியிலே ஏதோ செய்துட்டு, தொலைபேசியிலே மலையாளத்தில் பறஞ்சுட்டு அங்கே இருந்த ஒரே ஒரு க்வாலிஸையும் எடுத்துக் கொண்டு போயே போயிட்டார்.
முதல்லே சின்ன வண்டி இல்லை; பெரிய வண்டி எடுத்துக்கோனு சொல்லிட்டு, இப்போ இதையும் எடுத்துட்டுப் போயிட்டாரேனு கவலை வந்தது. இன்னொரு வான் இருந்தது. அதையும் இரண்டு பேர் ஓட்டிட்டுப் போயாச்சு.
திரு திரு திரு திருனு முழிச்சுட்டு உட்கார்ந்திருந்தோம். கோபம் மீதூற நான் அங்கே இருந்த அந்த இன்னொருத்தரிடம் கோபமாய்ப் பேசினேன். வண்டி வருமா வராதானு சொல்லிடுங்க னு சொல்ல, அவரோ தான் டிரைவரோட பேசி இருப்பதாகவும், வண்டி வந்து கொண்டிருப்பதாகவும் அரை மணியில் வரும்னும் சொன்னார். மணி அதுக்குள்ளே நாலும் ஆயாச்சு. வண்டி வரலை. இனிமேலே அங்கே போய் என்னத்தைப் பார்க்கிறது? போய்ச் சேரவே ஏழு மணியாகும். கோயில் திறந்திருக்கணுமே/ நான் ரங்க்ஸிடம் காலையிலே நாள் பூரா இருக்கே. அதிகாலை கிளம்பிப் போய் எல்லாத்தையும் பார்த்துக்கலாம்னு சொன்னேன். அவரோ அன்னிக்குத் தான் போகணும், மறுநாள் அஷ்டமி, நவமி னு சொல்லிட்டு எழுந்திருக்க மாட்டேன்னு அடம் பிடிச்சார். அதுக்கு மேலே என்ன செய்யறதுனு புரியாம நான் கிளம்பிட்டேன். நீங்க இருந்து வண்டி வந்தாப் போங்க. நான் சத்திரத்துக்குப் போறேன். அல்லது வண்டிக்காரர் கிட்டே நாளைக்குப் போக ஏற்பாடு செய்யுங்கனு சொல்லிட்டுக் கிளம்பிட்டேன். மத்தியானம் சாப்பிடாதது அப்போத் தான் தெரிஞ்சது. நான் கிளம்பி வெளியே வந்து செருப்பைக் காலில் போடறேன். வண்டி வந்துவிட்டது. என்ன செய்யலாம்னு ஆலோசிச்சோம். டிரைவரோ உடனே கிளம்பத் தயார்னு சொல்லிட்டார். ஆனால் ஒரு சின்ன உதவி, டீ மட்டும் குடிச்சுட்டு வரேன்னு சொன்னார். நான் சத்திரத்துக்குப்போற வழியிலே தானே போயாகணும். அங்கேயே போய் நாமும் டீ குடிச்சுட்டு, டிரைவருக்கும் வாங்கிக் கொடுத்துடலாம்னு ஐடியா கொடுக்க அது அப்படியே நிறைவேற்றப்பட்டது. டிஃபன் ரெடியாகலை. சரி, இந்த மட்டும் வண்டி கிடைச்சதேனு ஏறி உட்கார்ந்தால், பெண்களூரைக் கடக்கவே ஆறு மணி ஆயிடுச்சு.
ராமநகரம் தாண்டி சென்னப்பட்டினம் வரைக்கும் வந்த டிரைவர் அதுக்கு அப்புறம் கோயில் எங்கே இருக்குனு கேட்டுக் கொண்டார். எல்லா ஊர்களீலும் அன்னிக்குப் பிள்ளையார் விஸர்ஜனம் வேறே. ஒரே கூட்டம், வாத்திய முழக்கம், பட்டாசு வெடிகள்னு அமர்க்களமா இருந்தது. ஆனால் களேபரம் எல்லாம் இல்லை. சென்னப்பட்டினத்தில் இருந்து மூன்றாவது கிலோ மீட்டரில் இடப்பக்கமாகக் கோயிலின் வளைவு வாசல் தெரியும்னு சொன்னாங்க. எங்களுக்கும் அது நினைவு இருந்தது. மைசூரில் இருந்து வந்தால் வலப்பக்கம். அதுக்கு நேரே தான் பேருந்துகள் முன்னால் நின்றன. இப்போ காரில் போனதால் பேருந்து நிலையம் இருக்கானு கவனிக்கலை. அந்த வளைவைத் தாண்டியதுமே கோயில் வந்துடும். இருட்டி விட்டது. ஆகையால் கோபுரம் எல்லாம் கூட அந்த மங்கலான வெளிச்சத்தில் சுமாராத் தான் தெரிஞ்சது. ஏற்கெனவே பழைய கோயில் அது. இப்போது இன்னமும் பராமரிப்பு மோசமாகிவிட்டதால் ரொம்பவே பழசாகக் காட்சி அளித்தது. அங்கே அர்ச்சனை டிக்கெட் கொடுக்க யாரும் இருக்காங்களானு பார்த்தால் யாரும் இல்லை. அதுக்குள்ளே மூலஸ்தானத்திலே இருந்து வந்த பட்டாசாரியார், தான் அம்பேகாலு கிருஷ்ணன் சந்நிதிக்குப் போவதாயும், முதலில் அங்கே வந்துவிடும்படியும், அதுக்கப்புறமா மூலவரைச் சேவிக்கலாம்னும் சொல்லிட்டு அங்கே போயிட்டார். இப்படியாகத் தானே கிருஷ்ணன் முதல்லே என்னை வந்து பாரு, நான்குழந்தை, ரொம்ப நாழியெல்லாம் முழிச்சுண்டு இருக்க முடியுமானு கூப்பிட்டுட்டான். அந்தக் கோயில்லே அப்போ இருந்தவங்களே அம்பேகாலு கிருஷ்ணன் சந்நிதியில் இருந்த தம்பதியர், நாங்க அப்புறம் உள்ளூர்க்காரர் ஒருத்தர், இரண்டு பட்டாசாரியார்கள் தான். கொஞ்சம் பயம்ம்மாக் கூட இருந்தது. படம் பிடிச்சுக்கவானு கேட்டதுக்கு பட்டாசாரியார் கூடாதுனு சொல்லிட்டார். ஏமாற்றமாப் போச்சு. அங்கே முன் மண்டபத்தில் இடப்பக்கம் மாட்டி இருந்த ஃபோட்டோவில் இருந்த கிருஷ்ணனையும், தாயாரையும் படம் பிடித்துக் கொண்டேன்.
நுழையற இடத்தில் இருக்கும் மண்டபமும் பந்தலும் கோபுரத்தைச் சரியாகப் படம் பிடிக்க விடலை. கொஞ்சம் தள்ளிப் போகணும். இருட்டு, போக யோசனை! இது போதும்னு விட்டுட்டேன்.

//நான் சத்திரத்துக்குப்போற வழியிலே தானே போயாகணும். அங்கேயே போய் நாமும் டீ குடிச்சுட்டு, டிரைவருக்கும் வாங்கிக் கொடுத்துடலாம்னு ஐடியா கொடுக்க அது அப்படியே நிறைவேற்றப்பட்டது. டிஃபன் ரெடியாகலை. சரி, இந்த மட்டும் வண்டி கிடைச்சதேனு ஏறி உட்கார்ந்தால், பெண்களூரைக் கடக்கவே ஆறு மணி ஆயிடுச்சு.//
ReplyDeleteநல்ல ஐடியா, நல்ல பயணம். சிரிப்பாக உள்ளது.
டீ காஃபி குடித்ததைப்பற்றி ஒரு பாரா எழுதியிருக்கலாம். படிக்கும் எங்களுக்கும் ஒருவித களைப்பு இல்லாமல் இருந்திருக்கும். ;)
//இரண்டு பட்டாசாரியார்கள் தான். கொஞ்சம் பயம்ம்மாக் கூட இருந்தது. படம் பிடிச்சுக்கவானு கேட்டதுக்கு பட்டாசாரியார் கூடாதுனு சொல்லிட்டார். ஏமாற்றமாப் போச்சு.//
ReplyDeleteஉங்கள் தரிஸனம் + பயணத்தின் அடிப்படை நோக்கமே, இப்படி அநியாயமாக அடிபட்டிப்போய் விட்டதே!
//அங்கே முன் மண்டபத்தில் இடப்பக்கம் மாட்டி இருந்த ஃபோட்டோவில் இருந்த கிருஷ்ணனையும், தாயாரையும் படம் பிடித்துக் கொண்டேன். //
அதானே பார்த்தேன். நீங்க விடுவீங்களா என்ன? சபாஷ்!
பகிர்வுக்கு நன்றிகள்.
கிருஷ்ணன் முதல்லே என்னை வந்து பாரு, நான்குழந்தை, ரொம்ப நாழியெல்லாம் முழிச்சுண்டு இருக்க முடியுமானு கூப்பிட்டுட்டான்.//
ReplyDeleteஆஹா! அருமை. அதைவிட வேறு என்ன வேண்டும்!
அவரை நன்கு பார்த்து தரிசனம் செய்து விட்டீர்கள் அல்லாவா!
மறுநாள் வேண்டாம் இன்றே என்னை வந்து பார்த்து விடுங்கள் என்று தரிசனம் தந்து விட்டான் சின்னக் கண்ணன்! பட்ட அவ்வளவு சிரமங்களும் சன்னதிக்குள் நுழைந்ததும் மறந்து போகும்.
ReplyDeleteதொடர..
ReplyDeleteசரியாகத் திட்டமிடாமலோ அவசரப்பட்டோ போய் நிற்கும் போது பல நேரங்களில் கோயில் நடை சாத்தியிருக்கும். கடந்த வருடம் என் மனைவியின் குலதெய்வக் கோயில் ஒத்தப் பாலம் அருகே” பரியாம் பத்துக் காவு” காண மகன் மருமகள் பேரக் குழந்தைகளுடன் போனோம். பாலக்காட்டில் இருந்து 35 கி.மீ தூரம் கார் ட்ரைவர் வழி தெரியும் என்று கூறிக் கொண்டே தவறான ரோட்டில் போய் பின் வழி கேட்டு வழி கேட்டுப் போய்ச் சேருவதற்குள் இரவு ஏழரை மணியாகிவிட்டது. பின் என்ன வழிபாடு மட்டும் செய்தோம். வேறு எதையும் பார்க்கவோதெரிந்து கொள்ளவோ இயலவில்லை.
வாங்க வைகோ சார், நான் டீயை வாங்கிண்டு (Togo)காரிலே போறச்சே குடிச்சேன். :)))
ReplyDeleteபயணத்தின் அடிப்படை நோக்கம் படம் எடுப்பது இல்லை. தவழ்ந்த கிருஷ்ணனைப் பார்த்து எப்படி இருக்கேனு கேட்பது தான். அதான் போலிருக்கு முதல்லே என்னைத் தான் பார்க்கணும்னு குழந்தை அடம் பிடிச்சுட்டான். :))))
ReplyDeleteவாங்க கோமதி அரசு, நன்கு பார்த்தோம். நாங்க நாலு பேர் தானே அங்கே இருந்ததே. உள்ளூர்க்காரர் கூடப் போயிட்டார். :))))
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், அது என்னமோ உண்மை. கிருஷ்ணனைப் பார்த்ததும் மனம் சாந்தி அடைந்தது தான். ஆனால் நரசிம்மரையும், சிவன் கோயில் போகமுடியாததும் கொஞ்சம் உறுத்தல் தான். :)) அது இரண்டும் நதிக்கரையில் இருப்பதால் காலை வேளை தான் சரியா இருக்கும்னு சொல்றாங்க. எங்கே! நம்மவர் கேட்டாத் தானே! :(
ReplyDeleteவாங்க ஜிஎம்பி சார், திட்டமெல்லாம் போட்டது தான். என்னிக்குனு தான் இரண்டு பேருக்கும் மாறுபட்ட கருத்து. கடைசியில் அவர் விருப்பப்படி கிருஷ்ணனை மட்டுமே பார்த்துட்டு வந்தாச்சு! நரசிம்மரும், சிவனும் கூப்பிடலை போல! :(
ReplyDeleteஆனந்தமாக கூட்டம் இல்லாமல் சேவித்துவிட்டு வந்திருக்கிறீர்கள், பாராட்டுக்கள்!
ReplyDeleteசிரமத்தின்பின் தர்சனம் கிடைத்துவிட்டது.
ReplyDelete