மொக்கை போட்டால் தான் வாசகர் வட்டம் அலை மோதுது. :P அநியாயமாய் இல்லையோ? பெண்களூர்க் கல்யாணத்தில் எனக்குப் பிடிச்சதாக இரண்டு விஷயங்கள் இருந்தது. ஒண்ணு கல்யாணத்தில் முதல்நாள் மத்தியானம் விரதம் முடிச்சுச் சாப்பிடறச்சேயே சாம்பார் சாதத்தின் போது அப்பளம் போட்டார்கள். சின்னதா வேறே இருந்ததா! மனசே வெடிச்சு துக்கம் தாங்காமல் போச்சு! இது ஒரு வாய்க்குக் கூட வராதேனு அழுவாச்சியா வந்தது. ஒரு துண்டை மிச்சம் வைச்சுண்டு ஒரு மாதிரியாச் சாப்பிட்டு முடிச்சேனா! அடுத்து ரசம் போட்டதும் என்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன ஆச்சரியம் பாருங்க. இரண்டாம் தரம் அப்பளம் வந்ததே! ஆஹா, இதுவன்றோ கல்யாணம்! என் இலைக்கு இரண்டாம் தரம் அப்பளம் போட்டவர் என்ன நினைச்சாரோ தெரியலை, ஒண்ணுக்கு இரண்டாப் போட்டுட்டார்.
சரி இது என்னமோ தப்பாப் பரிமாறிட்டாங்களோனு நினைச்சா, ம்ஹூம், அப்படி எல்லாம் இல்லை. எல்லா நேரம் அப்பளம் கேட்கிறவங்களுக்குக் கேட்கிறபோது போட்டாங்கன்னா பாருங்களேன். கேட்டவர்க்குக் கேட்டபடி அப்பளம் தந்தான்! அப்படினு பாடலாமோனு கூட நினைச்சுட்டேன். அடுத்த முக்கியமான விஷயம், சத்திரத்தில் போய் இறங்கினதுமே காஃபி கொடுத்தாங்களா! மயக்கமே வந்துச்சு.
சாதாரணமாகக் கல்யாணங்களிலே காஃபியை ஒரே ஒரு டீஸ்பூன் வழிய வழிய ஒரு சின்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன டிஸ்போஸபில் கிண்ணத்தில் தானே ஊத்தித் தருவாங்க. ஒரு வாய் கூட இருக்காது. இந்தக் கல்யாணத்தில் பிடிச்சுக்க வாகாக அழகான ஒரு கப்பில் கொடுத்தாங்க! அதை விட ஆச்சரியம் என்னன்னா, காஃபி ஒரு டீஸ்பூன் இல்லை; இல்லை; இல்லவே இல்லை. கிட்டத்தட்ட 150 மி.லி. இருக்கும் போல! அதோடு விடலை. இன்னும் வேணுமானு வேறே கேட்டாங்க. எல்லா நேரமும் அந்தக் கப்பில் தான் காஃபி கொடுத்தாங்க. நான், நம்ம ரங்க்ஸ், என் தம்பி, தம்பி மனைவி , கல்யாணப் பையரின் தந்தையான என் அண்ணா, மன்னி எல்லாருமாச் சேர்ந்து அந்தக் கப்பை எங்கே கிடைக்கும், எங்கே வாங்கலாம்னு ஆராய்ச்சி செய்து கேட்டுப் பார்த்தோம். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அது பெண்களூரில் கிடைக்காதாம். கோவையில் தான் கிடைக்குமாம். அதுவும் மொத்தமாக 1,000 வாங்கணுமாம். மன்னி விலாசம் கேட்டு வாங்கறேன்னு சொல்லி இருக்காங்க. பார்க்கலாம். :))))
தங்கி இருந்த அறையில் வைச்சு இதைப் படம் பிடிச்சு வைச்சுண்டேன். கோவை போனால் ஏடிஎம் கிட்டே சொல்லிக் கேட்டு வைச்சுக்கணும். வேறே யாருக்கானும் தெரிஞ்சால் கூடச் சொல்லுங்கப்பா/சொல்லுங்கம்மா!
அட பங்களூருக்குப் போய் வந்தீர்களா.அண்ணன் பையனுக்குக் கல்யாண்மா. சொல்லவே இல்லையே:)
ReplyDeleteகாஃபி கப் ரொம்ப அழகா இருக்கே. கோவை எப்பவுமே புது நாகரீகங்களைக் கொண்டுவரும்.
மிச்ச கல்யண சமாசரங்களை ,அத்தையான நீங்கதான் சொல்லணும்.
ஹும்!
ReplyDeleteக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அ....ஆஅ....
ReplyDeleteகாஃபி கப் அழகா இருக்கு... பிடிச்சுக்க வாகா! :)
ReplyDeleteellaam ennoda erpaadu. Naan thaan ungalai specialaa kavanikka sonnen.:)
ReplyDeleteயோசிச்சு யோசிச்சு புதுசா ஏதேனும் கண்டு பிடிக்கறாங்கப்பா. நல்லாத்தான் இருக்கு.
ReplyDeleteஇந்த காபி/டீ கொடுப்பதில் ஏன் இத்தனை கஞ்சத்தனம்னு எனக்கும் மனசு கஷ்டமா இருக்கும். எங்க அம்மம்மா சொல்வாங்க காபி/டீ குடிக்க கொடுத்தா அதுலயும் அவங்க பசி கொஞ்சமேனும் அடங்கறமாதிரி இருக்கணும்னு.
வாங்க வல்லி, சொந்த அண்ணன் பையர் கல்யாணம் போன வருஷம் ஆயிடுச்சு. அதான் பாதாம் புடைவையும், முந்திரி வேஷ்டியும் கூடப் பதிவாப் போட்டிருந்தேனே. இது பெரியப்பா பேரன். நான் ஆக்டிங் அத்தை. சொந்த அத்தைக்கு ஆஞ்சியோ ஆகிக் கல்யாணத்துக்கு வர முடியலை!:( மிச்சக் கல்யாண சமாசாரங்கள் தான் எழுதிட்டு இருக்கேனே! :))))
ReplyDeleteவாங்க வா.தி. எதுக்கு ஹூம், ஏன் ஹூம், எப்படி ஹூம் எங்கே ஹூம்? காஃபி சாப்பிடலைனா? கல்யாணச் சாப்பாடு சாப்பிடலைனா? :)) நீங்க தான் சாப்பிட மாட்டீங்களே! :))))
ReplyDeleteடிடி, உங்களைக் காணோமேனு நான் "க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்"ர நினைச்சா நீங்க முந்திட்டீங்க! :))))
ReplyDeleteவாங்க வெங்கட், ஆமாம், முக்கியமாப் பிடிச்சுக்க வசதியா இருந்தது. எல்லாரும் இப்படிக் கொடுத்தா நல்லா இருக்கும். ஆனால் நாங்க எங்க தம்ளரை எடுத்துண்டு போயிடுவோம். :)))
ReplyDeleteஹை அப்பாதுரை, அப்படியா? ஓகே,சரி, சரி! :))) தாங்கீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
ReplyDeleteவாங்க புதுகை, வெ.பா. பார்க்கக் கூப்பிட்டீங்க. நினைவு வைச்சிருக்கேன். வர முடியலை. சீக்கிரம் வரேன். அதுக்குள்ளேக் கல்யாணமும் ஆகிக் குழந்தையும் பிறந்துடும்னு நினைக்கிறேன். :))))
ReplyDelete
ReplyDeleteஅப்பளம் பல முறை போடப்பட்டதே ஆச்சரியமா.? கலர் கலராக வாழ்த்து வாசகங்களுடன் அப்பளமெல்லாம் கொடுக்கக் வில்லையா.?
ஆஹா, அதிர்ஷ்டவசமாக உங்களுக்கு ஒரே இலையில் ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று அப்பளங்கள்.
ReplyDeleteகொடுத்து வைத்த மகராஜி தான்.
எனக்கென்னவோ உளுந்து அப்பளத்தைவிட அரிசி அப்பளமே மிகவும் பிடிக்கும்.
அதுபோல காஃபின்னா, நுரை ததும்ப ஸ்ட்ராங் ஆக நல்ல தரமான பாலில், புதிய காஃபிப்பொடியை பில்டரில் இறக்கிய, திக்கான முதல் தர டிகாக்ஷன் கலந்து, லேஸாக அரைச்சக்கரை போட்டு, மிகப்பெரிய டவரா டம்ளரில் மோத மொழங்க கொடுக்க வேண்டும். அதை ஒரு ஆத்து ஆத்தி, சொட்டுச்சொட்டாக ரஸித்து, ருஸித்துக் குடிப்பதில் தான் இன்பம் + பேரின்பம்.
அழகான பதிவுக்கு நன்றிகள்.
நேற்று ஒரு கல்யாண ரிசப்ஷனுக்குப் போயிருந்தேன். ரிசப்ஷனிலேயே மாலை மாற்றிக் கொண்டார்கள். வீடியோ எடுத்துத் தள்ளினார்கள். அருகில் ஒருவர் 'இன்றே மாலை மாற்றுவது எல்லாம் கூடாது... என்ன காலம்டா... ' என்றார். நானும் உங்கள் கல்யாணப் பதிவுகள் படித்த அனுபவத்தில் 'அதானே' என்றேன்!
ReplyDeleteரிசப்ஷன்ல ஒரு ச்வீட் போட்டாங்களே... ஆஹா... என்ன ருசி... என்ன ருசி!
வாங்க ஜிஎம்பி சார், அப்பளம் இங்கே எல்லாம் ஒரே தரம் கண்ணிலே காட்டறதோடு சரி! :)))) அதான் எனக்கு மயக்கமே வந்தது!:))) வாழ்த்து அட்டை எல்லாம் கொடுக்கலை. ஆனால் திருமாங்கல்ய தாரணம் ஆனதும் காட்ஃபரீஸ் பெர்க் கொடுத்தாங்க. :))))
ReplyDeleteவாங்க வைகோ சார், அரிசி அப்பளம்னா தணல்லே சுடணும். இந்த காஸிலே சுட்டுச் சாப்பிட்டாலும், தணலிலே சுடறாப்போல் வராது. அதன் மேலே நெய்யைக் கொட்டி, ரசம் சாதத்தோட அதுவும் ஜீரகம், மிளகு ரசம் சாதத்தோட சாப்பிட்டால் சொர்க்கம் பக்கத்தில்! :)))))
ReplyDeleteஎங்க வீட்டுக்கு வந்து ஒரு தரம் காஃபி குடிச்சுப் பாருங்க. எப்போவுமே ஃப்ரெஷ் பால் தான். டிகாக்ஷனும் தேவைக்கு ஏற்ப அப்போ அப்போ தான் போடுவோம். :)))
வாங்க ஶ்ரீராம், இப்போல்லாம் சொன்னாலும் யாரும் கேட்கறதில்லை. இதனோட புனிதமோ, அர்த்தமோ தெரியாமல் ஒரு சடங்காக ஆகிவிட்டது. தெரிஞ்சவங்களும் சொல்றது இல்லை. ஆனால் எங்க வீட்டுக் கல்யாணங்களில் நாங்க கல்யாணம் முடிஞ்சு தான் ரிசப்ஷனே வைச்சுப்போம். எங்க பொண்ணு கல்யாணத்திலே அவளே சொல்லிட்டா. கல்யாணத்தன்னிக்கு சாயந்திரமாத் தான் ரிசப்ஷன் வைக்கணும்னு. பையர் கல்யாணத்திலேயும் அப்படியே! :))))
ReplyDeleteGeetha Sambasivam said...
ReplyDelete//வாங்க வைகோ சார், அரிசி அப்பளம்னா தணல்லே சுடணும். இந்த காஸிலே சுட்டுச் சாப்பிட்டாலும், தணலிலே சுடறாப்போல் வராது. அதன் மேலே நெய்யைக் கொட்டி, ரசம் சாதத்தோட அதுவும் ஜீரகம், மிளகு ரசம் சாதத்தோட சாப்பிட்டால் சொர்க்கம் பக்கத்தில்! :)))))//
நன்னா வக்கணையாகவே சொல்லுகிறீர்கள். சந்தோஷமாக உள்ளது.
//எங்க வீட்டுக்கு வந்து ஒரு தரம் காஃபி குடிச்சுப் பாருங்க. எப்போவுமே ஃப்ரெஷ் பால் தான். டிகாக்ஷனும் தேவைக்கு ஏற்ப அப்போ அப்போ தான் போடுவோம். :)))//
அக்டோபர் 6 அன்பின் திரு. சீனா ஐயா தன் மனைவியுடன் திருச்சிக்கு விஜயம் செய்கிறார்.
நாமும் அப்போது தான் ஒருவரையொருவர் முதன்முதலாக சந்திப்போம் என நினைக்கிறேன்.
உங்களையும், என்னையும், திரு. தி. தமிழ் இளங்கோவையும், திரு. ரிஷபன் சார் அவர்களையும், திரு ஆரண்யநிவாஸ் இராமமூர்த்தியையும், திரு. வெங்கட் நாகராஜ் தம்பதியினர் இருவரையுமோ அல்லது ஒருவரை மட்டுமோ சந்திக்கணும் என்று சொல்லி உள்ளார்கள்.
நாம் எங்கே கூடி சந்திப்பது என்பதைப்பற்றி சற்றே யோசித்து வையுங்கள். பிறகு அக்டோபர் மாதம் 3-4 தேதி வாக்கில் உங்கள் எல்லோரையும் நான் தொடர்பு கொள்கிறேன்.
சந்திப்பு உங்காத்தில் என்றால் எனக்கு டிகிரி காஃபி கட்டாயம் கிடைக்கக்கூடும்.
பிராப்தம் எப்படியோ பார்ப்போம். இது சம்பந்தமாக நாம் பேசி இறுதி முடிவு எடுப்போம்.
அன்புடன் கோபு
காப்பிக் கப் புதிதாகத்தான் இருக்கின்றது.
ReplyDeleteஎங்களூருக்கு வந்திருக்கிறீர்களே! சந்திக்கும் வாய்ப்பு போய்விட்டதே!
ReplyDeleteஅடுத்த முறை கட்டாயம் சொல்லுங்கள். சந்திக்கலாம்.
எங்கள் ஊரில் இத்தனை பெரிய........கப்பில் காபி கொடுத்தார்களா? அதிசயம்தான். இங்கு சின்னஸ்ட் கப்பில் தான் காபி சாப்பிடுவார்கள். அதிலும் பை டூ என்று பாதிப்பாதி சாப்பிடும் வழக்கமும் உண்டு.
வாங்க மாதேவி, அதான் ஒரு நூறு கப்பாவது வாங்கிட்டு வர நினைச்சா ஆர்டர் கொடுக்கணும்னு சொல்லிட்டாங்க. :(
ReplyDeleteவாங்க ரஞ்சனி, உங்க ஊருக்கு வரப் போறேங்கறதைத் திட்டமிட்டே தான் சொல்லலை. அங்கே நிறையப் பேர் நண்பர்கள் எல்லாம் வலை உலக நண்பர்கள் இருக்காங்க. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு இடத்திலே. இதிலே யாரைப் பார்க்க முடியும்? யாரை விட முடியும்? அதான் மின் தமிழிலே மட்டும் லீவு சொல்லிட்டு சத்தம் போடாமப் போயிட்டு வந்தாச்சு! :)))))
ReplyDeleteஎல்லாரையும் சந்திக்கவென்றே ஒரு முறை வரணும். பார்க்கலாம். :)
கடைசியா 2006 ஆம் வருஷம் வந்தேன். அப்போ அம்பி, த(தா)க்குடு ரெண்டு பேரும் ஸ்டேஷனுக்கு வந்தாங்க. கிட்டத்தட்ட போஸ்டர் அடிச்சு ஒட்டாத குறையா வலை உலக நண்பர்கள் விளம்பரம் கொடுத்தாங்க. அதெல்லாம் இப்போ நினைவுக்கு வந்தது. :))) இப்போ அம்பியும் அங்கே இல்லை; த(தா)க்குடுவும் இல்லை. :(
ReplyDeleteஅப்படி எல்லாம் பை2 சாப்பிடற மாதிரிப் பெரிய கப்பெல்லாம் இல்லை; அதே சமயம் எப்போவும் கொடுக்கிற உத்தரணி சைஸும் இல்லை. நிதானமானது. :))))
ReplyDeleteஅடுத்தமுறை எனக்கு மட்டும் சொல்லுங்கள் நான் (மட்டும்) வந்து பார்க்கிறேன்.
ReplyDeleteவைகோ சார், அக்டோபர் மாசம் உறுதி செய்துக்கலாம். எங்க வீட்டில் சந்திப்பு என்றால் எனக்கு சந்தோஷமே. உங்க வீட்டில் என்றாலும் அன்று நிலைமை எப்படி இருக்கோனு பார்த்துட்டுக் கட்டாயமா வர முயல்கிறேன். அக்டோபர் மாசம் மாபெரும் விருந்தினர் கூட்டமே வரப் போகுது! அதான்! :))))
ReplyDeleteவாங்க ரஞ்சனி, இப்படியே ஒரு பத்துப் பேர் சொல்லி இருக்காங்க. :)))) ஹிஹிஹிஹி, அடுத்தமுறை அங்கே இல்லாட்டியும் நீங்க ஶ்ரீரங்கம் வந்தால் கூடப் பார்க்கலாமே. :)))))
ReplyDelete