பல்லவி
ஆருக்கும் அடங்காத நீலி - பொன்
அம்பலத்தாடும் காளி
அனுபல்லவி
பாருள் பரபிரும்மத்தை அடக்கிய சாயை (ஜ்யாயை)
பாடும் வேதங்களாலும் அறியாத மாயை //
காளியைக் குறித்து இதுவரை எழுதியது இல்லை. அதிலும் ஆருக்கும் அடங்காத நீலியான அவளைக் குறித்து எழுதத் தான் முடியுமா? இந்த மாபெரும் பிரபஞ்சத்தில் எல்லையற்றுப் பரந்து விரிந்து கிடக்கும் சக்தி அவளே. காலங்களுக்கெல்லாம் அவளே பொறுப்பு. காலமாறுதல்களுக்கும் அவளே பொறுப்பு. காளி கறுப்பானவள். ஆனால் அதே சமயம் நிறமற்றவள். என்ன, குழப்பறேனா! இல்லை. கடல் நீர் நீலநிறம் என்று நினைக்கிறோம். ஆனால் கடல் அருகே சென்று ஒரு கை நீரை அள்ளிப் பாருங்கள். என்ன நிறம்?? நிறமற்றுத் தானே இருக்கும். காளியும் நம் அக்ஞானத்தால் கருமை நிறமாய்த் தெரிகிறாள். அக்ஞானம் தொலைந்தால் அவள் எல்லையற்ற தெய்வீக ஒளி பொருந்தியவளாகக் காட்சி தருவாள். அதே போல் அவள் ரூபமும் நாம் பார்க்கப் பயங்கர வடிவில் இருந்தாலும் அதுவும் நம் அக்ஞானத்தாலேயே அப்படித் தெரிகிறது. உண்மையில் ஆனந்த சொரூபிணி அவள்.
நான்கு கைகளை உடையவளாக இருக்கும் இந்தக்காளியின் நான்கு கைகளும் மனிதர்களைக் காட்டிலும் அவள் ஆற்றல் அதிகம் என்பதைக் காட்டுவதற்காக உள்ளன. இடுப்பிலோ கைகளை ஒட்டியாணமாக அணிந்திருப்பாள் காளி. இவ்வுலகத்து மாந்தரின் கரங்களை இயக்கி அவர்களின் செயல் அனைத்தையுமே காளியாகிய பராசக்தியே நடத்துவதால் இடுப்பில் கைகளால் ஆன ஒட்டியாணம் காணப்படுகிறது. நாலா திசைகளிலும் பரந்து விரிந்திருக்கும் அவள் சக்தியால் இவளுக்கு "திகம்பரி" என்னும் பெயர் உண்டு. திசைகளையே ஆடையாகக் கொண்டிருக்கிறாள் இவள். இவள் மாலையோ குழந்தைப் பருவத்திலிருந்து ஆரம்பித்து வெவ்வேறு பருவத்து மக்களின் மண்டையோடுகளாகக் காணப்படும். முண்டமாலினி என இதனால் இவளை அழைக்கின்றனர். குழந்தை பிறந்ததில் இருந்து எந்த வயதில் வேண்டுமானாலும் ஒருவருக்கு இறப்பு நேரிடும். வாழ்க்கை அநித்தியமானது. எனவே அரிதான இந்த மனித வாழ்க்கையில் ஆன்மிக வாழ்க்கை வாழவேண்டும் என்பதற்காகவே இப்படி மண்டை ஓட்டு மாலைகளைத் தரித்திருக்கிறாள்.
இவள் ஒரு கை வரம் தரும் நிலையிலும், இன்னொரு கை அபயம் காட்டியும் பக்தர்களுக்கு அனுகிரஹம் செய்து கொண்டும்,அவர்களைத் துன்பத்திலிருந்து நீக்கிப் பாதுகாத்தும் வருகிறது. வாள் ஏந்திய மற்றொரு கை தீமைகளை வெட்டிச் சாய்ப்பதில் வல்லவள் என்பதையும் வெட்டிய தலையைப் பிடித்திருக்கும் மற்றொரு கை தீயவர்களைச் சலனமே இல்லாமல் காளி வெட்டித் தள்ளுவாள் என்பதையும் காட்டுகிறது. சூரிய, சந்திர, அக்னிஸ்வரூபமான தன் கண்களால் இவ்வுலகைப் பகல், இரவு, பருவ மாற்றம் அக்னியின் சக்தியை மாந்தர்க்கு உணர்த்துவது எனக் காட்டி வருகிறாள். விரிந்த சடாமுடியுடைய காளனாகிய ஈசனின் மனைவியான காளியும் விரிந்த கரிய கூந்தலோடு காணப்படுவது எல்லையற்று அவள் வியாபித்து இருப்பதையும் அவள் ஆற்றல்களையும் காட்டும். அந்த ஈசனின் மார்பின் மீது காளி தன் கால்களை ஊன்றி நிற்பது போலப் பார்க்கிறோம். இது சிவனாகிய பரப்ரும்மம் சவம் போல் இருப்பதைக் காட்டும். சக்தியானவள் அவன் மார்பின் மீது ஏறி நடனம் புரிவது அவள் உட்புகுந்து சிவனை இயக்கினால் தான் நாம் சிவத்தையே அறிய இயலும் என்பதைச் சுட்டுகிறது.
எப்படி ஒரு விளக்கில் விளக்கில் எண்ணெய் ஊற்றும் பாகமும், எண்ணெயும் சும்மா இருக்கிறதோ, விளக்கின் திரிச் சுடர் மட்டும் பிரகாசமாய் எரிகிறதோ அப்படியே சிவனில் உறைந்த சக்தி தான் அப்படிச் சுடர் போலப் பிரகாசித்துக் கொண்டு நடனம் ஆடுகிறாள். சக்தி இயங்கினாலே நம்மால் சிவனை அறிய முடியும். இல்லை எனில் அறிய முடியாது. செயலற்று சிவன் படுத்திருப்பது நிர்க்குண பிரம்மத்தைச் சுட்டினால், சிவன் மீது நர்த்தனம் ஆடும் காளி செயலுள்ள சத்குணப்பிரம்மத்தைச் ச்ட்டுக்கிறாள். கடலின் மேலே அலைகள் ஆர்ப்பரிப்பது போல் தான் இவையும். ஆனால் கடல் உள்ளே அசைவற்று இருப்பது போல் கடலைத் தாங்கி நிற்கும் பூமிப் பகுதியைப் போல் சிவன் காணப்படுகிறான்.
சிவனும் சக்தியும் ஒன்றே. பெயர் அளவிலேயே வேறுபாடு. உண்மையில் ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை. நெருப்பு இருந்தால் உஷ்ணமும் இருக்கும். பால் என்பது வெண்மையாகவே இருக்கும். ரத்தினம் ஒளிவீசிப் பிரகாசிக்கும். அது போல் அசையாப் பாம்பின் நிலை சிவனுடையது எனில் ஓடும் பாம்பு சக்தியாகும். சிவசக்தி இணைந்தாலே பிரபஞ்ச இயக்கம் சாத்தியம்.
மற்ற வரிகளுக்கான விளக்கம் நாளை வரும்.
காளி பற்றிய தகவல்களுக்கு உதவி: ஶ்ரீராமகிருஷ்ண விஜயம்
http://www.rasikas.org/forum/viewtopic.php?f=11&t=21500&p=242982&hilit=arukkum+adangada#p242982
சுட்டி உதவி: திரு ஈரோடு நாகராஜன்.
சரிதான்.. பாடலுக்கு விளக்கம் இப்போ இல்லையா? முன்னுரை மட்டும்தானா? ம்.... :)))))
ReplyDeleteஎன்னிடம் காளி எப்போதும் சாந்தமாகவே /நண்பியாகவே
ReplyDeleteஇருக்கிறார் , ஏன் என்று தெரிய வில்லை
ஶ்ரீராம், போச்சு போங்க, முதலிரு வரிகளுக்குத் தானே விளக்கம் கொடுத்திருக்கேன். அவை காளியின் தத்துவத்தைக் குறிக்கின்றன. :)) புரிஞ்சுக்கறமாதிரி எனக்கு எழுதத் தெரியலைனு நினைக்கிறேன். :)))
ReplyDeleteவாங்க ராம்ஜி யாஹூ, ரொம்ப வருஷம் ஆச்சு பார்த்து. நீங்க ஞானியாக இருக்கலாம். அதான் காளி ஆனந்த ஸ்வரூபிணியா இருக்கா. :))))
ReplyDeleteஅருமையான ஆ ரம்பம் !
ReplyDeleteதொடரட்டும் .........
பகிர்வுக்கு நன்றிகள்.
வாங்க வைகோ சார், ரொம்ப நன்றி.
ReplyDeleteHappy Navarathri Mrs Shivam
ReplyDeleteமிரட்டும் காளியாக இருந்தாலும் அருள் செய்வதில் அவளைப் போல யார் இருக்க முடியும்.
ReplyDeleteஇதுவரை தெரியாத தகவல்கள்.மனம் நிறைந்த நன்றி கீதா.
அருமை
ReplyDeleteஜெயஶ்ரீ, பார்க்கவே முடியறதில்லையே? வருகைக்கு நன்றி. :))))
ReplyDeleteவாங்க வல்லி, காளி மிரட்டவில்லை; நாம் தான் மிரளுகிறோம். :)))) இவளைப் பார்த்துத் தானே தெனாலிராமன் சிரி சிரினு சிரிச்சான். :))))
ReplyDeleteஅட??? சா.கி.ந. வாங்க வாங்க, முதல் முதல் நம்ம வீட்டுக்கு வந்திருக்கீங்க. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி. :))))
ReplyDeleteஇப்போதுதான் படித்தேன், மிக்க மகிழ்ச்சி கீதாம்மா - எல்லாவற்றுக்கும்!
ReplyDeleteகாளி ஆட்டம் :))
ReplyDelete"ஆனந்த சொரூபிணி அவள்"
அன்பே சிவம் என்று சொல்லிவிட்டு, எதற்கு கடவுளைப் பார்த்து மிரள வேண்டும்?
ReplyDeleteதொடர்ந்து படிக்கிறேன்.
வருகைக்கு நன்றி ஜீவா.
ReplyDeleteவாங்க மாதேவி, நன்றிங்க.
ReplyDeleteவாங்க ரஞ்சனி, தொடர்ந்து படிப்பதற்கு நன்றி.
ReplyDelete