இந்த வருடம் நவராத்திரிப் பதிவுகள் எழுதறதா நினைக்கலை. எந்தக் குறிப்புக்களும் எடுத்தும் வைச்சுக்கலை. அதோடு பண்டிகை வேறே கொண்டாட முடியாது என்பதால் சுவாரசியம் இல்லை. ஆனால் ஆருக்கும் அடங்காத நீலி எழுத வைத்துவிட்டாள். இளைய நண்பர் திரு ஜீவா வின் பதிவில் http://jeevagv.blogspot.in/2013/10/blog-post.html இங்கே சென்று பார்க்கவும். சிப்பியில் விளையும் அபூர்வ முத்துக்களைப் போல எப்போதேனும் ஒரு அபூர்வ முத்தாகப் பதிவுகள் வரும். ஜீவாவின் பதிவில் கொடுத்த பாடலுக்கு அவர் என்னை அந்தப் பாடலின் சரணத்தில் வரும் வரிகளின் அர்த்தத்தைச் சொல்லும்படியும், அல்லது பதிவாக எழுதும்படியும் கேட்டிருந்தார். முதல், மூன்றாம் வாக்கியங்களின் பொருள் புரிந்தாலும் இரண்டாம் வாக்கியத்தின் பொருள் புரியவில்லை. இரண்டு நாட்களாக இதே நினைவு. கடைசியில் நண்பர் ஈரோடு நாகராஜன்(மிருதங்க வித்வான்) http://erodenagaraj.blogspot.in/2013/09/blog-post.html அவர்களைக் கேட்டிருந்தேன். அருமையான விளக்கத்தை அனுப்பி விட்டார். மதியம் அதைப் பகிர்ந்து கொள்கிறேன்.
பல்லவி
ஆருக்கும் அடங்காத நீலி - பொன்
அம்பலத்தாடும் காளி
அனுபல்லவி
பாருள் பரபிரும்மத்தை அடக்கிய சாயை (ஜ்யாயை)
பாடும் வேதங்களாலும் அறியாத மாயை
சரணம்
பரமநாதன்தனைப் பாதியாய் மாற்றினாள்
பரந்தாமன் முகமதில் பல்விலங்கேற்றினாள்
சிரமதறுபடவே விதிதனைத் தூற்றினாள்
ஹரிகேச நகர் வாழும் எம்மைக் காப்பாற்றினாள்
பி.கு: சுட்டியெல்லாம் போகிறதில்லை என்பதால் அப்படியே கொடுத்துட்டேன். வாய்ப்புக் கொடுத்த நண்பர்கள்
நன்றி: திரு ஈரோடு நாகராஜன், மிருதங்க வித்வான்
நன்றி: திரு ஜீவா
எந்த ராகத்தில் அமைந்த பாடல் என்று சொல்லவில்லையே...
ReplyDelete:))
ஓ... ஜீவா அங்கு பேகடா என்று சொல்லியிருக்கிறார்.
ReplyDeleteரொம்ப உள்ளர்த்தங்கள் இருக்குமோ தெரியவில்லை. மாதொரு பாகர் முதல் வரி? இரண்டாவது வரி நரசிம்மாவதாரம்? மூன்றாவது வரி விநாயகர் முகம் அமையும் கதை?
ReplyDeleteஆருக்கும் அடங்காத நீலி - மதியம் வெளியிடப் போகும் பதிவினை எதிர்பார்த்து.....
ReplyDeletehttp://www.youtube.com/watch?v=33ccTZdCh3M
ReplyDeleteஎஞ்சாய்!
மூன்று நாட்களாக தொலைபேசி இணைப்பு வேலை செய்யாததினால் இணையமும் இல்லாது போயிற்று.
ReplyDeleteஇப்பொழுது தான் இந்தப் பதிவைப் பார்க்க முடிந்தது.
வாங்க ஶ்ரீராம், பாடலை மட்டுமே காப்பி, பேஸ்ட் செய்துண்டேன். :)))
ReplyDeleteஅங்கே போய்ப் பார்த்தாச்சு போல! உள்ளர்த்தங்கள் உள்ளவை தான். ஒவ்வொன்றாக எழுதலாம்னு எண்ணம். இந்த வருஷம் பிள்ளையார், கிருஷ்ணன் ஆகியோருக்குப் பதிவுகள் போடலை. நவராத்திரிக்கும் வேண்டாம்னு வைச்சேன். காளி விடலை. :))))
ReplyDeleteவாங்க வெங்கட், பதிவு போட்டாச்சு, பாருங்க. :)))
ReplyDeleteஇ.கொ. ஏற்கெனவே ஜீவாவோட பதிவிலே எஞ்சாயிட்டு இப்போ மறுபடியும் எஞ்சாயினேன்.தாங்கீஸு!:)
ReplyDeleteவாங்க ஜீவி சார், சென்னையில் தெரிஞ்சவங்களுக்கு எல்லாம் இணையத் தொந்திரவு இருக்கிறதாச் சொல்றாங்க. இப்போ நீங்க! :(
ReplyDelete//ஆருக்கும் அடங்காத நீலியின் விளையாடல்!//
ReplyDeleteதலைப்பையும், படத்தையும் பார்த்ததுமே தலை தெரிக்க ஓடிட்டேன். படிக்கவில்லை.
படிங்க வைகோ சார், இதுக்கே பயந்தா எப்படி? ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் பாருங்க, சாவகாசமா உட்கார்ந்து சாப்பிட வைச்சிட்டிருக்கார் காளியை. அவள் பவதாரிணி இல்லையோ! பயப்படலாமா? அதுவும் நவராத்திரியில்! :)))))
ReplyDeleteநவராத்திரிக்கு தன்னை சிறப்பிக்கும் பக்தையை நாடி வந்து விட்டாள் நீலி.
ReplyDeleteபடப் பகிர்வு அருமை.
நீலியின் திருவிளையாடல்கள். நவராத்திரி காலத்தில் படிக்கக் கிடைத்தது. நன்றி.
ReplyDeleteநாமொன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும், இல்லையா? பதிவு வேண்டாம் என்று நீங்கள் தீர்மானம் செய்தால்....விடுவாளா நீலி?
ReplyDeleteஅர்த்தத்தைப் படித்துவிட்டு வருகிறேன்.
தாமதமாகத்தான் வர முடிகிறது, மன்னிக்கவும்!
வாங்க கோமதி அரசு, வரவுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து படித்திருப்பீர்கள்னு நினைக்கிறேன். :))))
ReplyDeleteவாங்க மாதேவி, அதான், நவராத்திரி சமயம் எழுத வைச்சதும் அவளே! :)))
ReplyDeleteவாங்க ரஞ்சனி, மெதுவா வந்தாலும் பரவாயில்லை. இங்கே எனக்கும் அப்படித் தான். பலரோட பதிவுகளுக்குப் போகக் கூட முடியறதில்லை. உங்களை எல்லாம் நினைச்சு ஆச்சரியப்பட்டுட்டு இருக்கேன். வரவுக்கு நன்றிங்க.
ReplyDelete