எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, October 25, 2013

எங்கே போனேன்? தெரிஞ்சுக்க வாங்க!


பல வருடங்களாக இந்த இடம் செல்ல ஆசை.  98 ஆம் ஆண்டில் காசிக்கு யாத்திரை சென்ற சமயம் அங்கே எங்கள் பயண ஏற்பாடுகளைக் கவனித்த புரோகிதர் அயோத்திக்கு அனுப்பி வைப்பதாகச் சொன்னார்.  ஆனால் அப்போ என் கணவரோட விடுமுறை தினங்கள் முடியும் நேரம் ஆகிவிட்டதாலும் திரும்பிச் சென்னைக்குச் செல்ல முன்பதிவு செய்த நாள் நெருங்கியதாலும் அப்போப் போக முடியவில்லை.  அதன் பின்னர் பலமுறை முயற்சித்தும் செல்ல முடியவில்லை. அதன் பின்னர் பல வருடங்கள் கழித்து ட்ராவல் டைம்ஸ் ஏற்பாட்டின் மூலம்  நாசிக், பஞ்சவடி, போன்ற இடங்கள் சென்ற போதும் இதே பாரத் தர்ஷன் மூலம் அயோத்யாவுக்கும் ஏற்பாடு செய்யுங்கள் என நாங்களே அவர்களைக் கேட்டிருந்தோம்.  அது போல் ஒரு திட்டமும் ஏற்பாடு செய்திருந்தனர்.  ஆனால் அதிலேயும் கலந்து கொள்ள முடியவில்லை. ஏதேதோ பிரச்னைகள்.  இடையில் இரண்டு முறைகள் யு.எஸ். பயணம்.  கோயிலில் கும்பாபிஷேஹ ஏற்பாடுகள் என இருந்ததோடு வீட்டிலும் சொந்தப் பிரச்னைகள். அப்படி நாங்கள் செல்ல நினைத்த இடம்


ஶ்ரீராம ஜன்மபூமி.

பொதுவாக இது போன்ற இடங்களுக்குச் செல்வது குழுவாகச் செல்வதே வசதி.  முக்கியமாய்ச் சாப்பாடு கிடைக்கும். செல்லுமிடத்துக்கு வேண்டிய வாகன வசதிகள் அவர்கள் பொறுப்பில் இருக்கும்.  செலவு குறையும்.  ஒரே ஒரு கஷ்டம் என்னவென்றால் தங்குமிடம்.  அவங்க பொதுவாக எல்லாருக்கும் சேர்த்து ஒரு கல்யாணச் சத்திரமோ, டார்மிட்டரி எனப்படும் படுக்கும் வசதி கொண்ட கூடங்களோ ஏற்பாடு செய்வார்கள்.  கேட்டுக் கொண்டால் அறை வசதி செய்து கொடுக்கலாம்.  ஆனால் அதிலும் ஒரு அறைக்கு மூன்றிலிருந்து நான்கு பேர் இருப்பார்கள்.  இது ரொம்பவே நுணுக்கமான விஷயம்.  சரியாக வருமா என்றெல்லாம் யோசித்து ஒன்றிரண்டு குழுவோடு போக முடிவு செய்து பணம் கட்டும் நேரம் ஏதேனும் ஒரு காரணத்தினால் அதை ஒதுக்கும்படி ஆகி விட்டது.


இப்போ இதைக் குறித்துப் பலரிடமும் பேசிப் பார்த்ததிலும், மற்ற பல காரணங்களினாலும் தனியாகவே போகலாம் என முடிவு செய்து அதற்கான தகவல்களைச் சேகரித்துக் கொண்டோம்.  வேளுக்குடி அவர்களின் ஶ்ரீராமனின் பாதையில் தொடரை நன்கு கவனித்துச் செல்ல வேண்டிய இடங்களை உறுதி செய்து கொண்டோம்.  ஆனால் எப்படிச் சென்றாலும் சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடியாக ரயில் பயண வசதி இல்லை.  லக்னோவிற்கு ரயில் இருப்பதாகச் சொல்கின்றனர்.  மூன்று நாட்கள் பயணம்.  முன்னெல்லாம் போயிருக்கோம் தான்.  ஆனால் இப்போ முடியுமா?  அப்போது தான் எங்கள் நெருங்கிய நண்பரும், நாங்கள் மானசிகமாய் குருவாக நினைப்பவருமான திரு காழியூரர் விமானப் பயணத்தை சிபாரிசு செய்தார்.  கட்டணம்???  ஏ.சி.க்கும் இதுக்கும் அப்படி ஒண்ணும் பெரிய அளவு வித்தியாசம் இல்லை.  ஆனால் விமானப் பயணக் கட்டணம் பேரம் செய்து குறைச்சலாக வரும்போது பதிவு செய்யணும்.

விமானப் பயணக் கட்டணம் குறைவாக வரும் நாளாகப் பார்த்துக் கொண்டே இருந்தோம். நாங்கள் செல்ல வேண்டிய தினத்தை முடிவு செய்தோம்.  விமானப் பயணக் கட்டணம் ஓரளவு குறைச்சலாய்க் கிடைக்கிறது என்பது தெரிந்ததும், இங்குள்ள  ஏஜென்ட் மூலம் இருப்பதிலேயே குறைவான விமானக் கட்டணம் உள்ள இன்டிகோவைத் தேர்ந்தெடுத்து டிக்கெட்டெல்லாம் வாங்கிட்டோம்.  விஜயதசமி கழிந்த அக்டோபர் பதினாறாம் நாள் சென்னையிலிருந்து லக்னோ செல்ல விமான டிக்கெட் தயார். சென்னைக்குச் செல்லத் திருச்சியிலிருந்து பல்லவனில் விஜயதசமி அன்று செல்லவும் டிக்கெட் வாங்கியாச்சு. சென்னை சென்று உறவினர் வீட்டில் தங்கி அங்கிருந்து விமான நிலையம் சென்று லக்னோ செல்லத் திட்டம்.  சென்னையில்  இரு தினங்கள் நல்லபடியாக முடிந்து லக்னோ செல்லவும் சென்னை விமான நிலையம் கிளம்பிவிட்டோம்.  இந்த விமானம் நேரடியாக லக்னோ செல்லாதாம்.  டெல்லி சென்று அங்கிருந்து வேறு விமானம் மாற வேண்டுமாம்.  அது வேறேயா!  கடவுளே!

இதிலே என்ன வேடிக்கைன்னா, ஹைதராபாத், பெண்களூருக்கு நேரடி விமான சேவை இருக்கிறது.  சென்னைக்கு மட்டும் கிடையாதாம்.  என்ன அநியாயம்! 

26 comments:

  1. நான் முன்பே ராமர் நடந்த பாதையில் நடந்து வந்தீர்களா? என்று கேட்டு எங்கே போனீர்கள் என்று
    கண்டு பிடித்து விட்டேன்.

    வேளுக்குடி அவர்களின் ஶ்ரீராமனின் பாதையில் தொடரை நன்கு கவனித்துச் செல்ல வேண்டிய இடங்களை உறுதி செய்து கொண்டோம். //
    விஜய் தொலைக்காட்சியில் பார்த்தேன் எவ்வளவு வயதானவர்கள் வேளுக்குடி அவர்களுடன் உற்சாகமாய் பயணம் செய்தனர்!
    உங்கள் அற்புத பயணத் தொடரை தொடர்கிறேன்.

    ReplyDelete
  2. // விமானப் பயணக் கட்டணம் ஓரளவு குறைச்சலாய்க் கிடைக்கிறது என்பது தெரிந்ததும், இங்குள்ள ஏஜென்ட் மூலம் இருப்பதிலேயே குறைவான விமானக் கட்டணம் உள்ள இன்டிகோவைத் தேர்ந்தெடுத்து டிக்கெட்டெல்லாம் வாங்கிட்டோம். //

    அருமையான திட்டம் தீட்டி காத்திருந்துள்ளீர்கள்.

    >>>>>

    ReplyDelete
  3. இதெல்லாம் ஒரு சேவையா...? விமான சேவை...! அநியாயம்...!!

    ReplyDelete
  4. //இந்த விமானம் நேரடியாக லக்னோ செல்லாதாம். டெல்லி சென்று அங்கிருந்து வேறு விமானம் மாற வேண்டுமாம். அது வேறேயா! கடவுளே!//

    ஆஹா, ஒரே காசில் இரண்டு விமானப்பயணம். நடுவில் டெல்லி ஏர்போர்ட் தரிஸனம் - இலவச இணைப்பு போல ;)

    >>>>>

    ReplyDelete
  5. கடைசியில் ஶ்ரீராம ஜன்மபூமியை அடைந்தீர்களா இல்லையா?

    சஸ்பென்ஸ் கொடுத்து ஏதேதோ கதைசொல்லி, கதையையும் பாதியில் நிறுத்தி விட்டீர்களே !

    மேற்கொண்டு விஷயம் தெரிந்து கொள்ளாமல் என் தலையே வெடித்துடும் போல இருக்கே!

    ராம ராம ராம ராமா !

    ReplyDelete
  6. ஸ்ரீராமரின் பாதையில் போனவர்களைப் பார்ப்பதும் புண்ணியம். காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  7. ராம் ஜென்ம பூமி பயணம் இனிதாய் தொடங்கிவிட்டது...... நானும் உங்களுடன் தொடர்ந்து வருகிறேன்....

    ReplyDelete
  8. Very interesting!! waiting for continuation....

    ReplyDelete
  9. குழுவாகச் செல்வதே நல்லது... சென்னைக்கு நேரடியாக விமானம் இல்லாததற்கு இண்டிகோ ஏர்லைன்சுக்கு கண்டனங்கள்.... ஹிஹி...

    ReplyDelete
  10. ஆஹா...பயணக்கட்டுரை - அதுவும் ஒரு புண்ணியஸ்தலத்துக்கு - தொடருங்கள்... தொடருங்கள்.

    ReplyDelete
  11. வாங்க கோமதி அரசு, முதல் ஆளாக வந்து போணி பண்ணியதுக்கு நன்றி. :))))))

    நீங்க மட்டுமில்லாமல் இன்னொரு குழுமத்திலும் ஒருவர் சொல்லி இருந்தார். என்றாலும் நீங்க ரொம்பவே ஸ்மார்ட் தான் என்பதை மறுக்கவே மாட்டேன். மற்றபடி போகப் போக எழுதி வருகையில் படித்து வந்து கருத்துப் பகிரவும். நன்றி.

    ReplyDelete
  12. வாங்க வைகோ சார், விமானப் பயணத்தின் மூலம் நேரம் மிச்சப்பட்டாலும் பணம் செலவாகிறதே! அதான் ரொம்ப யோசிக்க வேண்டி இருக்கு! :)) இப்போப் பல்வேறு சேவைகள் இருப்பதால் போட்டியில் விலை கொஞ்சம் குறைகிறது.

    ReplyDelete
  13. டிடி, எந்த சேவையைச் சொல்றீங்கனு புரியலையே?

    ReplyDelete
  14. வைகோ சார், டெல்லிக்கு விமானத்தில் போயிருக்கேன். இப்போப் போனப்போ தரிசனம் எங்கே பண்ண முடிந்தது. ட்ரான்சிட் என்பதால் ஒரு டெர்மினலில் இருந்து இன்னொரு டெர்மினலுக்கு ஓடி அங்கேயும் செக்யூரிடி செக் போன்றவற்றை முடித்துக் கொண்டு செல்லவே நேரம் இருந்தது. :))))

    ReplyDelete
  15. பொறுங்க வைகோ சார், முழுக்கதையும் சொல்ல வேண்டாமா? :))))

    ReplyDelete
  16. வாங்க வல்லி, வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  17. வாங்க வெங்கட், வரவுக்கும் கருத்துக்கும் நன்றிப்பா.

    ReplyDelete
  18. மிடில்க்ளாஸ் மாதவி, முதல் வருகையா? வரவுக்கும் பாராட்டுக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  19. வாங்க ஸ்கூல் பையர், ஆமாம் சென்னைக்கு நேரடி சேவை இருந்திருக்க வேண்டும். :))))

    ReplyDelete
  20. வாங்க ஶ்ரீராம், வரவுக்கு நன்றி.

    ReplyDelete
  21. என் அண்ணா பெண் லக்நௌவில் இருந்தாள். அங்கே வரும்படி அநேக அழைப்புகள் விடுத்துக் கொண்டிருந்தாள். எங்கள் துரதிர்ஷ்டம் போக முடியவில்லை. போயிருந்தால்....சுற்றுவட்டாரம் எல்லாம் பார்த்திருக்கலாம்.

    ReplyDelete
  22. வாங்க ஜிஎம்பி சார், இப்படி நாங்களும் பல வாய்ப்புக்களைத் தவற விட்டிருக்கோம். இந்தப் பயணத்திலேயே படிச்சுட்டு வாங்க, தெரியும், என்றாலும் ஒண்ணும் செய்ய முடியலை. :)))))

    ReplyDelete
  23. பயணம் ஆரம்பிச்சுடுத்தா? நானும் தொடர்ந்து வருகிறேன் மாமி..... என்னையும் அழைச்சிண்டு போங்கோ....

    ReplyDelete
  24. அயோத்யா ஆவலுடன் தர்சிக்க....

    ReplyDelete
  25. வாங்க கோவை2தில்லி, உங்களவர் தீபாவளிக்கு இங்கே வரச்சே நீங்க அயோத்திக்கு வரணும்னு சொல்றீங்க? :)))) வாங்க, வாங்க! :)

    ReplyDelete
  26. வாங்க மாதேவி, நன்றிங்க.

    ReplyDelete