பிரம்மா ஈரேழு பதினான்கு லோகங்களையும் படைத்தாலும் காசி மாநகரம் மட்டுமே ஈசன் படைத்ததாக ஐதீகம். எல்லா உலகங்களிலும் பரந்து விரிந்திருக்கும் இந்த சிவப் பரம்பொருளின் திரிசூலத்தின் நுனியில் அமைந்த இடம் காசிமாநகர்ம். இங்கே அவன் ஆணையே செல்லும் என்பார்கள். காசியில் மரணமடையும் ஜீவன்களை சாக்ஷாத் அன்னபூரணியே தன் மடியில் இருத்த, ஈசன் அவர்கள் காதுகளில் தாரக மந்திரம் ஓத ஜீவன்கள் முக்தி அடைவதாகச் சொல்வார்கள். இந்தக் காட்சி பகவான் ஶ்ரீராமகிருஷ்ணருக்கு கங்கைக்கரையில் கிட்டியதாகவும் படிச்சிருக்கோம். அத்தகைய காசிக்கு முதலில் வந்த அம்பிகை விசாலாக்ஷியை விடப் பின்னர் வந்த அன்னபூரணி தான் பிரபலம் அடைந்திருக்கிறாள். அது ஏன்?
நம்ம வீடுகளிலே எல்லாம் அம்மா தானே சமைச்சுச் சாப்பாடு போடறாங்க. அத்தகைய அம்மாவான ஜகதாம்பிகை உலகின் அனைத்து ஜீவராசிகளுக்கும் அன்றாட உணவை அளித்து வந்தாள். ஒரு நாள் ஈசன் அன்னையிடம், எல்லா ஜீவன்களுக்கும் உணவளித்து முடிந்துவிட்டதா எனக் கேட்க, ஆயிற்று என அன்னை சொல்ல, தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த ஒரு சின்னப் பெட்டியை எடுத்துப் பார்த்தார் ஈசன். அங்கே ஒரு சின்ன்ன எறும்பு. அதன் வாயில் ஒரு அரிசித் துகள். ஈசன் புன்னகை புரிந்தார். அம்பிகையுடன் திருவிளையாடலுக்கு ஆயத்தமானார். அதற்கும் காரணம் இருந்தது. காசிமாநகரில் பஞ்சம் தலை விரித்தாடியது.
அந்தப் பஞ்சத்தைப்போக்கக் காசி ராஜன் செய்த முயற்சிகளெல்லாம் பலனளிக்கவில்லை. செய்வது என்ன எனத் தெரியாமல் தவித்தான். அன்னபூரணியாக அன்னை அங்கே சென்று அக்ஷய பாத்திரத்தால் உணவளித்தல் ஒழியப் பஞ்சம் தீராது. ஆகையால் ஈசன் அன்னையிடம் மாயையான இவ்வுலகில் உணவும் ஒரு மாயை, உணவளிப்பதும் மாயை எனக் கூற அன்னைக்கு வருத்தம் ஏற்பட்டது. இவ்வுலகம் பொருட்கள் நிரம்பியது எனவும், பொருட்களால் ஆனது, ஆற்றல் மிகுந்தது எனவும் கூறுகிறாள். அப்போது ஈசன் இல்லை என மறுக்க அன்னையும் தன் கருத்தில் பிடிவாதமாக இருக்கிறாள். இரு நாழி நெல்லைப் படியளந்து அன்னையிடம் கொடுக்கிறார் ஈசன். இதை வைத்து உலகத்து உயிர்களுக்கெல்லாம் படியளக்கச் சொல்கிறார். அன்னை அங்கிருந்து மறைகிறாள்.
சர்வலோக நாயகியான அன்னை அந்த நெல்லை விதையாக வைத்துக் கொண்டாள். என்ன செய்யவேண்டும் என அவளுக்கா தெரியாது! உலகமே வயலானது. கடலே ஏரியானது. ஈசனின் விடை வாஹனமே உழவு மாடானது. பலராமனின் கலப்பையை உழுவதற்குப் பயன்படுத்திக் கொண்டாள். உலகத்து நாயகியான அன்னை அறம் வளர்த்த நாயகியானாள். அங்கிருந்து கையில் அக்ஷயபாத்திரமும் அதில் நிறைந்த பாலமுதோடும் காசி மாநகருக்கு வந்து உணவுக் கூடம் அமைத்தாள். பசியென வந்தோருக்கெல்லாம் இல்லை எனாது அமுது படைத்தாள். அன்னையைப் பிரிந்த ஈசன் பிரிவால் வருந்தி தன் கையில் திருவோட்டை எடுத்து வந்து அவளிடம் பிக்ஷை என நீட்ட வந்திருப்பது சர்வேசன் எனத் தெரிந்தும் அன்னை அதில் பிக்ஷை இட்டாள்.
காசிராஜன் அன்னையைச் சோதிக்க நினைத்தான். அன்னையிடமிருந்து தானியங்களைக் கடனாகக் கேட்டான். அன்னை மறுத்தாள். அரசனை அங்கே வந்து உணவு உண்ணுமாறு அழைத்தாள். காசிராஜன், தன் மந்திரிமாரோடு மாறு வேஷத்தில் வந்து அன்னையிடம் உணவு உண்ண வந்த கூட்டத்தோடு அமர்ந்து உணவு உண்டான். உணவு எடுக்க எடுக்கக் குறையாமல் வந்த அதிசயத்தைக் கண்டான்; வியந்தான்.
இது சாமானிய மனிதரால் இயலாது; சாக்ஷாத் அம்பிகையே வந்திருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டு அவள் காலடிகளில் விழுந்து வணங்கி அங்கேயே இருக்க வேண்டுகிறான். அன்னை தான் தென் திசை நோக்கிச் செல்வதால் அங்கே தங்க இயலாது எனக் கூறி காசிமாநகரில் அன்றிலிருந்து பஞ்சமே ஏற்படாது எனவும் அருளாசி புரிந்தாள். அன்னையின் சாந்நித்தியத்தை அங்கே நிறுவ வேண்டும் எனக் காசி ராஜன் வேண்ட அன்னையும் அவ்வாறே தன் தெய்வீக சாந்நித்தியத்தை அர்ச்சா விக்ரஹமாக நிறுவினாள். மன்னனுக்கு முக்தியையும் கொடுத்தாள்.
இதைத் தான் பிரம்ம கபாலத்தில் அன்னை இட்ட பிக்ஷை எனச் சிலர் கூற்று. ஆனால் காசிமாநகரில் இதை மேற்கண்டவாறே சொல்கின்றனர். மேலும் காசிமாநகரில் அன்றிலிருந்து இன்று வரை உணவுப் பஞ்சமே வந்ததில்லை என்றும், எல்லா நாட்களும் ஏகாதசி, போன்ற விரத நாட்களிலும் கூட இல்லை எனாது இரவு பகல் எனப் பாராமல் உணவு கிடைக்கும் ஒரே இடம் அன்னை அன்னபூரணி அருளாட்சி செய்யும் காசிமாநகரம் தான் எனவும் கதியற்றவர்களுக்குக் காசியே துணை என்றும் கூறுவார்கள்.
தங்கமயமான அன்னபூரணியை வங்கி லாக்கரில் இருந்து தீபாவளி சமயம் மட்டுமே எடுத்து வருகின்றனர். கண்கள் கூசும் வண்ணம் பிரகாசிக்கும் சுவர்ண அன்னபூரணி நவரத்தினக் கிரீடம் அணிந்து, தங்கக் குடைக்குக் கீழே, தங்கப்பட்டாடை உடுத்தி, கையில் தங்கக் கிண்ணமும், தங்கக் கரண்டியும் பிடித்த வண்ணம், மார்பிலும், கழுத்திலும் நவரத்தின மாலைகள் மின்ன வெள்லிவிடையோனுக்கு பிக்ஷை அளிக்கும் காட்சியை தீபாவளி சமயம் மட்டுமே காசி மாநகரில் காண முடியும். அவள் அருகே ஶ்ரீதேவி, பூதேவித் தாயார்களும் அருகே சொர்ண விக்ரஹமாக அமர்ந்த வண்ணம் காட்சி கொடுப்பார்கள்.
ஈசன் கைகளில் இருப்பது பிரம்ம கபாலம் தான் என்றும் இங்கே அன்னபூரணி அளித்த பிக்ஷைக்குப் பின்னரே அது கைகளை விட்டு அகன்றது என்றும் கூறுகின்றனர். ஆதி சங்கரர் அன்னபூரணியை "நித்தியான்ன தானேஸ்வரி" என்று போற்றிப் பாடி உள்ளார். வெறும் அன்னத்தை மட்டுமின்றி ஞான வைராக்கியத்தையும் பிக்ஷையாகப் போட்டு இகம், பரம் அனைத்துக்கும் உதவுவாள். இவளே தென் திசையாகிய காஞ்சிக்கு வந்து காமாக்ஷியாக நிலைபெற்றாள். இவளே ஶ்ரீலலிதை. சிவப்பரம்பொருளை நாடுபவர்களுக்கு அவர்களின் ஆன்மிகப் பசியை நீக்கி ஞானமாகிய முக்தியை உணவாக அளிப்பவள் இவளே.

ஸ்வர்ண அன்னபூரணி பற்றிய ஜொலிக்கும் பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..!
ReplyDeleteபடிச்சாச்சு.
ReplyDeleteஅன்னபூரணி பற்றிய பதிவு ஸ்வர்ணம் போல ஜொலிக்கிறது. பாராட்டுக்கள்.
ReplyDeleteஎல்லாப் பகுதிகளையும் படித்தேன் கீதாம்மா.
ReplyDeleteஎன் வாசகம் பாட்டின் பதிவில், இக்கதைகளுக்கு தொடுப்பு கொடுத்துள்ளேன். மிக்க நன்றிகள்.
வாங்க ராஜராஜேஸ்வரி, நன்றி.
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், சுண்டல் கலெக்ஷனில் பிசியா? போன பதிவில் ஆளையே காணோமே? :))))
வாங்க வைகோ சார் நன்றி.
வாங்க ஜீவா, ராத்திரி இந்த நேரத்துக்கு முழிச்சுட்டு இருந்து படிச்சதுக்கும் பின்னூட்டம் போட்டதுக்கும் நன்றிப்பா. :)))
@ஜீவா, நீங்க கேட்கலைனா நவராத்திரிக்கு எதுவுமே எழுதி இருக்க மாட்டேன். :))))
ReplyDeleteஎறும்பு வாயில் அரிசித்தூள் படித்ததும் எனக்கு என் அம்மா ஞாபகம் வந்து விட்டது.
ReplyDelete"வெறும் அன்னத்தை மட்டுமின்றி ஞான வைராக்கியத்தையும் பிக்ஷையாகப் போட்டு இகம், பரம் அனைத்துக்கும் உதவுவாள்." நல்லவிளக்கம்
ReplyDeleteஅன்னபூரணி அவள்சக்தி தெரிந்துகொண்டோம்.
வணக்கம் அன்புடையீர்,
ReplyDeleteஒம் அகத்திசாய நம !!!
கருணை உள்ளம் கொண்ட கும்ப முனியின் அருளால் வைகாசி வளர்பிறையில் இருந்து, கோயம்புத்தூர் அருகே உள்ள கல்லார் அகத்தியர் ஞான பீடத்தில் அகத்தியர் ஜீவ அருள் நாடியில் அருள்வாக்கு வருவதாக தகவல் உறுதி படுத்தப்பட்டு உள்ளது.
தொடர்பிற்கு மாதாஜி சரோஜினி - 9842550987
கல்லார் அகத்தியர் ஞான பீட முகவரி :
Sri Agathiar Gnana peedam
2/464-E, Agathiar Nagar,Thoorippalam
Kallar-641305,Mettupalayam,Coimbatore Dt, Tamilnadu, India
PH:98420 27383, 98425 50987.
( மேட்டுப்பாளையம் to ஊட்டி மெயின் ரோட்டில், மேட்டுப்பாளையத்தில் இருந்து 10 வது கிலோமீட்டரில் கல்லார் உள்ளது. )
நாடி பார்க்கும் நாள்:சனிக்கிழமை மட்டும்
நேரம் :9 மணி முதல் 2 மணி வரை
கட்டணம்:500/- ரூபாய்.
ஒம் அகத்திசாய நம !!!
ஒம் அகத்திசாய நம !!!
ஒம் அகத்திசாய நம !!!
தங்கள் பதிவின் மூலம்
ReplyDeleteஅன்னை அன்னபூரணியின் மகாத்மியங்கள்
அறிந்து மகிழ்ந்தோம்
பகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
அப்பாதுரை, உங்களோட மூன்றாம் சுழிக்கு என்ன ஆச்சு சார்? பதிவுகள் எதையும் காணோமே?
ReplyDeleteவாங்க அப்பாதுரை, அம்மா சொன்னதைப் பகிர்ந்திருக்கலாமோ? :))) நிச்சயம் ஏதேனும் புராணக் கதையாகத் தான் இருக்கும். :)
ReplyDeleteவாங்க மாதேவி, ஆமாம், அன்னபூரணி, ஞானத்தைத் தான் பிக்ஷையாகப் போடுவதாகச் சொல்வார்கள். வரவுக்கும் கருத்ஹ்டுக்கும் நன்றி.
ReplyDeleteநன்றி ஆன்மீக உலகம்.
ReplyDeleteவாங்க ரமணி சார், அன்னபூரணி மகாத்மியங்கள் பூரணமாக எழுத முடியலை. எழுதின வரைக்கும் பாராட்டியதுக்கு உங்களுக்குப் பெரிய மனசு. ரொம்பவே நன்றி சார்.
ReplyDeleteவாங்க அகிலா, நல்லவேளையா என்னோட பதிவிலே வந்து கேட்டீங்க. நான் எனக்குத் தான் வரலைனு நினைச்சேன். இப்போத் தான் நிம்மதி. ராத்திரி நல்லாத் தூங்கலாம். :)))))
ReplyDelete