சரயு நதிக்கரையில் துலாமாசத் தர்ப்பணம் முடித்துக் கொண்டு அங்கிருந்த ஒரு பண்டிட் மூலம் கோதான சங்கல்பம் செய்து கொண்டு அவருக்கு தக்ஷிணையும் கொடுத்தோம். பின்னர் அங்கிருந்து கிளம்பி அயோத்தி நகரில் ஶ்ரீராமன் சம்பந்தப்பட்ட முக்கிய இடங்களைப் பார்க்கச் சென்றோம். மேலே காணப்படுவது ஶ்ரீராம் தர்பார் என்னும் சின்னஞ்சிறு கோயிலின் நுழைவாயில். நாம் சந்நிதி என்பதை அங்கே தர்பார் என்கின்றனர்.
ஶ்ரீராமர், தன் குடும்பத்தோடு. வெளிச்சமும் அதிகம் அதோடு விளக்குகள் வேறே என்பதால் படம் தெளிவாக வரவில்லை. அடுத்துக் காண்பது சீதா கி ரசோயி என்னும் சீதையின் அந்தப் புரச் சமையலறை. அங்கே ஒரு சந்நியாசி இருந்தார். அவருக்கு எதுவும் சொல்லத் தெரியவில்லை; அல்லது பேச மாட்டார் என எண்ணுகிறோம். ஆனால் இங்கெல்லாம் நாங்க இரண்டு பேரும் கோயிலை நிர்வகிப்பவர்களும் தான் இருந்தார்கள்.
மஞ்சள் உடை உடுத்தி இருப்பவர் தான் சந்நியாசி.
சமையல் பாத்திரங்கள். இப்போ இதிலே சமைக்கிறாங்களானு தெரிஞ்சுக்க ஆவல். ஆனால் சொல்ல யாரும் இல்லை. வழிகாட்டிக்கும் இது பத்தித் தெரியலை. :(
வரவங்க சாப்பிடறதுக்கு அடுக்கி வைச்சிருந்த இலைக்கட்டுகள். இங்கே கொஞ்சம் வெளிச்சம் கம்மி என்பதால் ஓரளவுக்குப் படம் வந்திருக்குனு நினைக்கிறேன். அடுத்து கனக பவனம் போகலாம். ஆஞ்சநேயரைப் பார்க்கலாம். நாளைக்கு. சரியா?
அந்த சந்நியாசி சாப்பிட மட்டும் அங்க இருக்கறவர் போல! பாத்திரங்களெல்லாம் சீதா காலத்ததா?
ReplyDeleteஅங்கே படங்கள் சரியாகத் தெரியவில்லை. இங்கெ இன்னும் கொஞ்சம் பளிச்சென்று தெரிகிறது.கூட வந்த கைட் விளக்கி இருக்கலாம்.நல்ல பெரிய பாத்திரங்களாக இருக்கின்றன.
ReplyDeleteஅவர் ராமசரித மானஸ் படித்துக் கொண்டிருந்தார் ஶ்ரீராம். :))))
ReplyDeleteபாத்திரங்களெல்லாம் பழமையானவையே. சீதா காலத்தது இல்லாட்டியும் ஐநூறு வருடங்களுக்கு முன்னர் உள்ளதாக இருக்கலாம்.
ReplyDeleteவாங்க வல்லி, இதே படங்கள் தான் அங்கேயும். :))) வழிகாட்டி சீதாவின் சமையலறை என்றும் இங்கே தான் இந்தப் பாத்திரங்களில் தான் சமைப்பாங்க என்றும் சொன்னார் தான். அதை உறுதி செய்து கொள்ள முடியவில்லை. :))))
ReplyDeleteராம்கோயில் , சீதாசமையல்அறை கண்டுகொண்டோம்.
ReplyDeleteவாங்க மாதேவி. நன்றிங்க.
ReplyDeleteநீங்கள் சொல்வதைக் கேட்டுக் கொள்கிறோம். ......!
ReplyDelete