எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, January 22, 2014

கடவுளே, காப்பாத்து! தொடர்ச்சி!

டெல்லியில் மாநிலத்திற்கெனத் தனியான காவல் துறை இல்லை.  ஏனெனில் அது நாட்டின் தலைநகர்.  பல பெரிய தலைவர்கள், உலகத்தலைவர்கள், மதத்தலைவர்கள் வந்து போகும் இடம்; வசிக்கும் இடம். முக்கியமானவர்கள் வசிக்கும் ஊர்.  அங்கே மாநிலத்தின் கீழ் காவல் துறை இருந்தால் சரியா வராது என்பதால் மத்திய அரசின் கீழ் செயல்படுகிறது.  ஏற்கெனவே ஷீலா தீக்ஷித் முன்னாள் முதல்மந்திரி காங்கிரஸ் கட்சியிலேயே இருந்தாலும் டெல்லி போலீஸின் மீது குறைகள் தான் சொல்லிக் கொண்டிருந்தார்.  ஆகவே இது புதுசா இப்போ கெஜ்ரிவால் மட்டும் வந்து சொல்லலை.  அவரும்,அவர் கட்சி ஆட்களும் விதிமுறைகளை மீறிச் சட்டத்தை மீறிச் செயல்படுவதையும் டெல்லி போலீஸ் இவங்களுக்கு இருக்கும் மீடியா செல்வாக்குக்குப் பயந்து கொண்டு வேடிக்கை தான் பார்க்கிறது.  அப்போ மட்டும் கெஜ்ரிவால் என்ன செய்தார்?

ஊழல் எதிர்ப்பு ஒன்று மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வளர்ந்த இந்தக் கட்சி நேர்மையான கட்சியாகத் தோற்றம் அளிக்கிறது.  அவ்வளவே. மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து இந்தக் கட்சியின் செயல்பாடுகளை ஆரம்பிக்கக் கூட இல்லை;  அது குறித்துப் பேசக் கூட இல்லை.  போராட்டங்களினால் ஊழல் ஒழியுமா?  செயல் முறை என்ன? டெல்லியின் முக்கியச் சாக்கடையான யமுனையைச் சீர் செய்ய இவர்கள் செய்யப் போவது என்ன?  சேரி மக்களைப் பாதுகாக்க எடுக்கப் போகும் நடவடிக்கைகள் என்ன?  தங்கள் கொள்கைகை எவ்விதம் நிறைவேற்றப் போகிறார்கள்?

உண்மையாக ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவராக இருந்திருந்தால் இவர் இப்படி எல்லாம் நடந்து கொள்ள மாட்டார்.  Governance எனப்படும் ஆட்சி முறைக்கட்டுப்பாடு இல்லாமல் இவர் சாதிக்கப் போவது தான் என்ன?  டெல்லி போலீஸை இவரிடம் ஒப்படைத்த அடுத்த நிமிடமே இவரால் ஊழலை ஒழித்துவிட முடியுமா?  குறைந்த பக்ஷமாக இவரால் பணியிடை நீக்கம் எனப்படும் சஸ்பென்ஷன் தான் செய்ய முடியும்.  அதற்கும் விசாரணைகளின் போது தக்க பதில் சொல்ல வேண்டும்.  இவர்  இந்தியன் சினிமாக் கதாநாயகனாகவோ, முதல்வன் படக் கதாநாயகனாகவோ தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறார்.  சினிமாக்களில் தான் ஒரே காட்சியில் நிர்வாகச் சீரமைப்பு நடைபெற முடியும்.  நிஜத்தில் அல்ல.  முதல் அமைச்சராக இவர் சாதித்தது தான் என்ன? முற்றிலும் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கிறார்.

தெருக்கூட்டம் போட்டுப் பொதுச்சொத்துக்களை நாசம் செய்வதும், பொதுமக்களையும் அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், இன்னும் எண்ணற்ற ஊழியர்களை அவரவர் பணியைச் செய்யவிடாமல் இரண்டு நாட்களாகத் தடுத்து வருகிறார்.  மெட்ரோ ரயில் நிலையங்களே மூடப்பட்டு விட்டன. அவசரத்திற்குக் கூட மக்கள் எங்கேயும் அணுக முடியாத அவலம். டெல்லியில் உங்கள் உறவினர்கள் யாரேனும் இருந்தால் அவர்களிடம் கேட்டுப் பாருங்கள். உண்மை நிலைமை புரியும்.  இந்த தர்ணா ஆரம்பிக்கும் முன்னர் அங்கே சென்றவர்கள் திரும்ப முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. நடுத்தர மக்களின் அறியாமையைப் பயன்படுத்திக் கொண்டு ஆட்சிக்கு வந்த கட்சி இது.

நான் ஜோக்கெல்லாம் செய்யவில்லை. யாரிடமும் நியாயமாப் பேசித் தீர்க்க முடியாத ஒரு நிலை தான் இப்போது; இல்லை என்னவில்லை.  ஆனால் இவர் கைகளில் அதிகாரம் இருக்கிறது. வெளிநாட்டுக்காரங்களோட நினைப்பும் இந்தியாவுக்கு முக்கியம் தான்.  அப்போத் தான் உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்க முடியும்.  ஏற்கெனவே ஊழல்களில் இந்தியா மிகத் தலை குனிந்து தான் நிற்கிறது.  இப்போ இந்த மாதிரியான அசட்டுத்தனங்கள் வேறே.  அப்படி என்ன அந்த கெஜ்ரிவால் சாதித்துவிட்டார்? அவர் என்ன ஒழுங்கானவரா? இல்லையே! வருமானவரித்துறையில் இருந்தபோது தண்டனைக் கட்டணத்துடன் திரும்பச் செலுத்த வேண்டிய பணத்துக்கு இவர் சொல்லாத சால்ஜாப்புகள் இல்லை. அப்புறமா சட்டரீதியான நடவடிக்கைனு துறையில் ஆரம்பிக்கவுமே மன்மோகன் சிங் பெயரில் செக் கொடுத்தார். துறையின் பெயரால் கொடுக்க வேண்டிய செக்கை இப்படிக் கொடுக்க இவரால் மட்டுமே முடியும்!

பற்றாக்குறை பட்ஜெட்டாக இருக்கையிலேயே மின் கட்டணக்குறைப்பு. மான்யத்தை எங்கிருந்து கொடுப்பார்?  ஷெல்டர் கட்டித் தரேன்னு சொல்லிட்டு ஆரம்பிக்கக் கூட இல்லை.  மின் கட்டணம் கட்டாதவங்களோட இணைப்பை மின் வாரியம் துண்டித்தால் இவர் போய்த் தொலைக்காட்சிக்காரங்களுக்கு முன் கூட்டி அறிவிச்சுட்டு மின் இணைப்பைக் கொடுக்கிறார்.  இது எல்லாம் சட்டப்படியான குற்றம் இல்லையா?  முதல்லே இவருக்குக் கொடுக்கப்பட்ட அரசாங்க வீட்டிற்குக் குடி போவதற்கே எத்தனை ஸ்டன்ட் அடிக்க வேண்டி இருந்தது!  டெல்லியில் சாமானிய மக்கள் படும் கஷ்டங்களைக் குறித்துத் தொலைக்காட்சியில் சொல்றாங்க.  கேளுங்க.

இவை அனைத்துமே பத்திரிகைகளில் வந்தவைகளே!  இதுக்கப்புறமும் கெஜ்ரிவாலை ஆதரிப்பது என்பது........ மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவதற்குச் சமம். :(  அதோடு டெல்லி தவிர மற்ற மாநிலங்களில் இவருக்கு ஆதரவு இருப்பதாக இவர் நினைப்பதும் கனவே! நேற்றிரவு வந்த செய்தியின் படி கெஜ்ரிவாலின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.  பார்க்கலாம், இனி எப்படி ஆட்சியை நடத்தப் போகிறார் என்று. மக்கள் சேவையைப் பெரிதாக நினைத்தால் சந்தோஷமே! பெரும்பான்மை மக்களால் எதிர்க்கப்பட்டாலும் இவருக்கு ஆதரவு தெரிவித்தவர்களும் இன்னமும் தெரிவிக்கிறவர்களும் இருக்கின்றனர் என்பதும் உண்மையே! ஆனால் பின் விளைவுகளைக் குறித்து யாருமே சிந்திக்கவில்லையோ எனத் தோன்றுகிறது.

இது நேற்றே எழுதியது.  ஆனால் என்ன காரணமோ வெளியாகலை. இப்போ வெளியிட்டுப் பார்க்கிறேன். :))))

12 comments:

  1. anaivarukkum kaajar alva kodukkaraanga.. vaangi sappittaa ellaam sariyaagidum.

    ReplyDelete
  2. பணம் கிடைத்தால் போதும் மண் குதிரையாய் இருந்தால் என்னா...?

    ReplyDelete
  3. இன்று : http://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Ethics-and-e-Books.html

    ReplyDelete
  4. நிச்சயமாக் கடவுள் தான் காப்பாத்தணும். அரசியல்னு வந்துவிட்டாலே இத்தனை தகிடுதத்தம் செய்துதான் தலைவராக முடியும் என்று நிரூபிக்கிறார் இவர்.

    ReplyDelete
  5. bunch of jokers! the sooner they are off the better!

    ReplyDelete
  6. அவரும், அவருடைய தலைக் கட்டும்! ஏதோ விளையாட்டு காட்டிக் கொண்டிருக்கிறார். சம்பந்தப்பட்ட அந்த அதிகாரிகளை லீவில் போகச் சொன்னது இவரின் வெற்றியாம்!

    ReplyDelete
  7. வாங்க அப்பாதுரை, அல்வா தான் கொடுக்கிறார் கெஜ்ரிவால்! :)))) சரியான பெயர் தான்.

    ReplyDelete
  8. வாங்க டிடி, நீங்க சொல்வது சரிதான். உங்க பதிவையும் படிச்சுட்டேன். :)))

    ReplyDelete
  9. வாங்க வல்லி, ரொம்ப மோசமான முறையில் சிறுபிள்ளைத் தனமா நடந்துக்கிறார். மன முதிர்ச்சியே இல்லை.

    ReplyDelete
  10. வா.தி. இப்போதைக்கு நடக்காது! :)))) ஒரு வேளை மக்கள் சபை தேர்தலுக்குப் பின்னர் எதிர்பார்க்கலாம். :))))

    ReplyDelete
  11. ஶ்ரீராம், சரியான பேத்தல் மன்னரா இருக்கார். என்னத்தைச் சொல்றது! :)))

    ReplyDelete