எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, January 15, 2014

சீர் கொடுக்க வாங்கப்பா எல்லோரும்!

அண்ணன்மார்களே,

தம்பிமார்களே,

எல்லாருக்கும் நல்லதே நடக்க வேண்டிக் கொண்டு கனுப்பொடி வைச்சாச்சு.  சீர் கொடுக்க வரிசையிலே வாங்கப்பா!  ப.பு. கொடுக்கிறவங்க தனி வரிசை.  தங்கக்காசு கொடுக்கிறவங்க வரிசை தனி.  நகையாக் கொடுத்தால் தனி வரிசை.  முத்துக்கள், நவரத்தினங்கள் இன்னொரு வரிசை. மத்தச் சீரெல்லாம் பொது வரிசை. கூட்டம் சமாளிக்க முடியாமல் போயிடுமோனு பயம்மா இருக்கு.  முந்துங்க, முந்துங்க!  :))))))

20 comments:

  1. அக்கா சீர் அனுப்பலாமா. அப்படின்னா இத்தோட ஒரு வைர நெக்லஸ் அனுப்பறேன்.>***+++++

    ReplyDelete
  2. ஆஹா, பிறந்த வீட்டுச் சீர் யார் கொடுத்தால் என்ன?? அதுவும் வைர நெக்லஸ்!!! வேணாம்னு சொல்வேனா என்ன?? அனுப்புங்க, அனுப்புங்க வாங்கிக்கறேன். :))))) நன்னி ஹை!

    ReplyDelete
  3. சாமுந்திரிக்கா பட்டு சாறி, ப்ளாட்டினம்நகை செட் அனுப்புகிறேன். :))

    வாழ்த்துகள்!.

    ReplyDelete
  4. ஆஹா! சீர்என்றாலும் கேட்டவுடன் முதலில் வருவது திண்டுக்கல் தனபாலன் தான்.
    சகோதருக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. லட்சம் கட்டி வராகன் பார்சல் செய்திருக்கேன்!

    ReplyDelete
  6. சீர் கொடுக்காவிட்டால் சீறிப்பாய்ந்து விடுவீர்களோ என்ற பயத்தில் ஓடோடி வந்துவிட்டேன்.

    வேண்டிய மட்டும் எடுத்துக் கொள்ளுங்கோ ! ;)))))

    ReplyDelete
  7. வாங்க டிடி, வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  8. ஆஹா, மாதேவி, சாமுத்ரிகா பட்டும், ப்ளாட்டினம் செட்டுமா? அடிச்சது அதிர்ஷ்டம்! :))))

    ReplyDelete
  9. வாங்க கோமதி அரசு, நன்றி.

    ReplyDelete
  10. ஶ்ரீராம், லக்ஷம் கட்டி வராகன் பார்சல் வந்தது. :))))

    ReplyDelete
  11. வாங்க வைகோ சார், வேண்டியமட்டும் எடுத்துண்டாச்சு! :)))

    ReplyDelete
  12. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  13. அட.....நல்ல ஐடியாவாக இருக்கே!
    நான் கூட என் பதிவில் கல்லா கட்டப் போகிறேன். எல்லோரும் இப்படி வாரி வழங்குகிறார்களே ..மிஸ் பண்ணிடக் கூடாதில்ல..அதற்குத் தான்.

    ReplyDelete
  14. why அண்ணன்மார்களே,
    தம்பிமார்களே... what about others?

    what is ப.பு? pattu pudavai?

    //கூட்டம் சமாளிக்க முடியாமல் போயிடுமோனு பயம்மா இருக்கு
    hahahaha..

    sakotharigal sakotharanukku seer thara mathiri oru pandikaiyum illaamap pochE?!

    ReplyDelete
  15. ரெண்டு பதிவா நிக்க வெச்சு கேள்வி மேல கேள்வி கேட்டுட்டு அப்புறம் சீரைக் கொண்டு வா ஊரைக் கொண்டு வான்னா எவன் வருவாங்கறேன்....

    ReplyDelete
  16. வாங்க சுரேஷ், உங்களுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  17. வாங்க ராஜலக்ஷ்மி, கீழே இ.கொ. உங்க பதிலையும் மத்தவங்க பதிலையும் பார்க்கலை போல! எம்புட்டு வருமானம் வந்திருக்கு!!!!!

    ReplyDelete
  18. அப்பாதுரை, ப.பு. பட்டுப் புடைவையே தான். :)))) ஜி+ தம்பி, வா.தி. வஸ்த்ரகலா கொடுத்திருக்கார். :)))) இங்கே மாதேவி சாமுத்ரிகா பட்டு!

    கேட்டீங்களே ஒரு கேள்வி!
    //sakotharigal sakotharanukku seer thara mathiri oru pandikaiyum illaamap pochE?!//

    ராக்கியன்னிக்குக் கூட சகோதரர்களுக்கு ராக்கிக் கயிறு கட்டிட்டு வசூல் தான் பண்ணுவோமாக்கும்! :))))

    ReplyDelete
  19. இ.கொ. மிச்சம் கேள்விகள் இன்னிக்கும் நாளைக்கும் வரும். :))) சீர் கொடுத்தவங்க பட்டியலைப் பார்க்கலையா?? எடுத்த எடுப்பிலே வல்லி அக்கா வைர நெக்லஸிலே ஆரம்பிச்சிருக்காங்களே! :))))

    ReplyDelete