எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, January 31, 2014

சீனாச்சட்டி, சீனாச் சட்டி பாரு!

இன்னைக்குப் போட வேறே படம் தேடிட்டு இருந்தப்போ இது கிடைச்சது.  ஏற்கெனவே சட்டி பற்றிய கருத்துப் பகிர்வில் சீனாச் சட்டி பத்திக் குறிப்பிட்டிருந்தேன். அப்போ எடுத்து வைச்சுட்டுப் போடாமல் விட்டுட்டேன் போல.  நான் போட நினைச்சது.  ஹார்லிக்ஸுக்குக் கொடுக்கும் மைக்ரோவேவ் கிண்ணம்.  ஆனால் பாருங்க, இங்கே சாக்லேட் ஹார்லிக்ஸுக்குத் தான் அது கொடுக்கிறாங்களாம். அது கொடுத்திருந்தால் எங்கள் ப்ளாகுக்குப் போட்டியாகப் போட்டிப் படம் போட்டு போட்லினு பேரும் வைச்சிருக்கலாம்.  சான்ஸ் போச்சு!  நாங்க வாங்கின ஹார்லிக்ஸுக்கு டிஃபன் டப்பா கொடுத்திருக்காங்க.  ஹிஹிஹி, ஓட்ஸ் வாங்கினால் இலவசமாக் கொடுக்கிற ஹார்லிக்ஸை வைச்சே ஒப்பேத்திட்டு இருந்தேன்.  இப்போ ஓட்ஸ் நிறைய இருக்கிறதாலே ஹார்லிக்ஸை வாங்கும்படி ஆயிடுச்சு!  யாரானும் வந்தாக் கொடுக்க வேணுமே! :))))


இங்கே இந்தச் சீனாச்சட்டியிலே பண்ணிட்டு இருந்தது வெண்டைக்காய்க் கறி.  சப்பாத்திக்கு. இது தக்காளி, குடமிளகாய் சேர்த்துப் பண்ணினது. செய்முறை ஏற்கெனவே போட்டிருக்கேன்.  அங்கே போய்ப் பார்த்துக்குங்க.   வெண்டைக்காயை முழுசாவும் பண்ணலாம்.  சப்பாத்திக்குத் தான். அதுக்கும் இந்தச் சட்டியிலே செய்தால் நல்லா வரும் என்பதோடு  சீனாச் சட்டியிலே செய்தால் நிறமும் மாறாது ; உடலில் இரும்புச் சத்தும் சேரும்.  எண்ணெயும் அதிகம் தேவைப்படாது.  இதிலே பருப்பு உசிலி செய்து பாருங்க. ஜூப்பரா இருக்கும்.  சின்ன உ.கி. ரோஸ்ட்டும் நல்லா வரும்.

பழைய சீனாச்சட்டியை இங்கே பார்க்கலாம்.

வெண்டைக்காய், குடமிளகாய், தக்காளி சேர்த்த கறி

22 comments:

  1. புது சீனாச்சட்டி போல தெரியுதே!
    எங்கள் மாமியார் வீட்டில் இருக்கிறது, அதில் தான் எல்லாம் செய்ய வேண்டும் என்று சொல்வார்கள்.
    நன்றாக இருக்கும் அதில் செய்வது.
    வெண்டைக்காய் செய்முறை நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  2. புது சீனாச்சட்டி போல தெரியுதே!
    எங்கள் மாமியார் வீட்டில் இருக்கிறது, அதில் தான் எல்லாம் செய்ய வேண்டும் என்று சொல்வார்கள்.
    நன்றாக இருக்கும் அதில் செய்வது.
    வெண்டைக்காய் செய்முறை நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  3. 'எதையும் ஒருமுறை' என்று ஒரு சுஜாதா கதை. அதில் கணேஷிடம் நிருபமா கேட்பாள் , ஒரு பறவையைக் காட்டி "அது பேர் என்ன சொல்லுங்க?" என்று! வசந்த். "குருவி" என்பான்! நிறு, "பாமரத்தனமாச் சொல்லாதீங்க" என்று சொல்லும்போது கணேஷ் அந்தப் பரவியின் விலங்கியல் பெயரைச் சொல்வான். அது போல,

    மொத்தமாக, பொதுவாக இரும்பு வாணலி என்று சொல்லி விடுவோம் நாங்கள். பார்த்தால் ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர்!

    ReplyDelete
  4. கோமதி அரசு, சூப்பர்!!!!!!!!!!! கரெக்டாக் கண்டு பிடிச்சுட்டீங்க. இது வாங்கி நாலு வருஷம் தான் ஆகுது. என்னோட கல்யாணச் சீனாச்சட்டி படமும் போட்டிருக்கேன். தேடணும், அது எப்படியோ விரிசல் கண்டு இட்லி வார்க்கும்போது விடும் ஜலமெல்லாம் அடுப்பிலேயே வழிய, அதை ஏதானும் வறுக்கனு வைச்சிருந்தேன். நம்ம ரங்க்ஸ் புண்ணியம், அதை தானம் செய்துவிட்டார். :)))))

    என்னோட இட்லித் தட்டுக்கு இந்தச் சட்டி பொருந்தலை. ஆகையால் இப்போல்லாம் இட்லிக் கொப்பரையில் தான் இட்லி! :))) மூணு தட்டு இருக்கு. எங்க ரெண்டு பேருக்கும் இரண்டு தட்டு வைப்பேன்.

    ReplyDelete
  5. இரும்பு வாணலி வேறே ஶ்ரீராம், அதோட படமும் போட்டிருக்கேன், தேடணும். இது வேறே! இந்தச் சட்டிகள் எல்லாம் வரும் முன்னர் மண்பானையிலேயே வறுப்பாங்களாம். பானை உடைஞ்சால் கூட அதன் அடிபாகமான ஓட்டில் வறுப்பாங்களாம்.

    என் மாமியார் மண் சட்டியில்தான் அவல், கடலை, நெல் பொரி போன்றவை வறுப்பாங்க. வறுக்கப் பயன்படும் சட்டுவம் எது தெரியுமா? தென்னை ஓலையிலிருந்து கிழித்து எடுத்த தென்னங்குச்சிகள். அதை ஒரு வாழை நாரில் கட்டி அதால் பிரட்டிக் கொடுத்து வறுப்பாங்க. நானும் வறுத்துப் பழகி இருக்கேன். :)))))))

    ReplyDelete
  6. சப்பாத்திக்கு (ஃபுல்கா ரொட்டி) இந்த வெண்டைக்காய்க் கறி நல்லா இருக்கும். :))) ஒரு முறை செய்து பாருங்க. கால் கிலோ வெண்டைக்காய்க்கு இரண்டு நடுத்தர அளவு குடமிளகாய், இரண்டு நடுத்தரத் தக்காளி போதும். தாளிக்க கடுகு, ஜீரகம், சாம்பார் பொடி இருந்தால் அதே போட்டுக்கலாம். மசாலாப் பொடிகள் எல்லாம் தேவையே இல்லை.

    ReplyDelete
  7. வெண்டைக்காய்க் கறி குறிப்பிற்கு நன்றி அம்மா...

    அதானே பார்த்தேன்... Horlicks வருபவர்களுக்கு... வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  8. சீனா சட்டி பார்த்தேன். பார்த்ததும் கோதுமை அல்வா கிளறினால் ஒட்டாமல் வருமே என்று தோன்றியது. அது சரி, வெண்டைக்காய் ,சிம்லாமிர்ச் கறி சுட்டி கொடுங்களேன். படிக்கிறேன்.

    ReplyDelete
  9. வாங்க டிடி, எங்க வீட்டுக்கு வந்தால் உங்களுக்கும் கட்டாயமாய் ஹார்லிக்ஸ் உண்டு. :))))

    ReplyDelete
  10. ராஜலக்ஷ்மி, இதிலே கோதுமை அல்வா கிண்டினால் சரியாய் வராது. நான் வெண்கல உருளியில் தான் கிளறுவேன். அல்லது கல்கத்தா அலுமினியம் சட்டியில் கிளறுவேன். :))))

    ReplyDelete
  11. @ராஜலக்ஷ்மி, வெண்டைக்காய், தக்காளி, குடமிளகாய்க் கறிக்கான சுட்டியைப் பதிவிலேயே சேர்த்திருக்கேன். பார்க்கவும். நன்றி.

    ReplyDelete
  12. சீனாச்ச்ட்டின்னால் கலசட்டியா. இல்லாட்டி வேற ஏதாவதா. எங்க வாங்கினீர்கள். முன்பே குறிப்பிட்டு இருந்த மாதிரி 12 விதவிதமான வறுக்கும் சட்டிகளை சிங்கம் காயலானுக்குப் போட்டுவிட்டார். இது அழகா இருக்கு.

    ReplyDelete
  13. வாங்க வல்லி, இது சென்னை கந்தகோட்டம் அருகே உள்ள இரும்புப் பாத்திரக் கடைத்தெருவில் வாங்கினேன். கந்தகோட்டத்திலிருந்து நேரே ஈவ்னிங் பஜாரை நோக்கிச் செல்லும் வழியில் போனால் முதலில் பிரியும் சந்தில் வலப்பக்கம் திரும்ப வேண்டும். திரும்பாமல் நேரே சென்றால் இடப்பக்க மூலையில் பெருமாள் செட்டிக்கடை, பெருங்காயம் விற்பார்கள். பெருங்காயம் மலிவாகவும், வாசனையாகவும் கிடைக்கும். :))))

    ReplyDelete
  14. இந்தச் சட்டி வார்ப்பிரும்பினால் செய்யப்பட்டது. இதுவும் இரும்புச் சட்டி தான். :))))

    ReplyDelete
  15. சீனாச்சட்டியில் சப்ஜி அருமை...

    வெண்டை சப்ஜி சப்பாத்திக்கு அப்பாவுக்கும் மகளுக்கும் மிகவும் பிடித்தது..:) எனக்கு கூட்டோ க்ரேவியோ, தயிரோ...:))

    ReplyDelete
  16. அல்வா வெண்கல உருளியில் நன்றாக வருமா மாமி? ட்ரை பண்ணி பார்க்கிறேன்..

    ReplyDelete
  17. வெண்டை சப்ஜி பார்த்துட்டு வந்துட்டேன்...குடமிளகாயும், தக்காளியும் சேர்த்து செய்து பார்க்கிறேன்..

    திருட்டு பாத்திரம் இங்கேயும் வழக்கத்தில் உண்டு.. எனக்கு ஒரு குட்டி இரும்பு வாணலி கொடுத்தார் அம்மா..

    ReplyDelete
  18. வாங்க ஆதி, இந்த வெண்டைக்காய் சப்ஜி எங்க வீட்டிலே அடிக்கடி பண்ணுவோம்.:))))

    ReplyDelete
  19. வெண்கல உருளியில் தான் அல்வா நல்லா வரும்னு என்னோட கருத்து.:))))

    ReplyDelete
  20. குடமிளகாய், தக்காளி சேர்த்தால் சுவை கொஞ்சம் வித்தியாசமா இருக்கும்.:))

    ReplyDelete
  21. சீனசட்டியில் சமையல் சூப்பர்.

    கடமைகள் இருந்ததில் தொடர முடியவில்லை. இப்பொழுதுதான் வரக்கிடைத்தது.

    ReplyDelete
  22. சீனாச்சட்டி.....

    இந்த பேரு எதனால வந்தது! ஒரு வேளை முதன் முதலா சீன நாட்டிலிருந்து வந்ததோ?

    ReplyDelete