சக்ரதீர்த்தத்தில் இருந்து வியாசர் இருந்ததாய்ச் சொல்லப்படும் வியாச கடி சென்றோம்.
சுகருக்கும் தனியாக ஒரு ஆசிரமம் உள்ளது. மேலே காண்பது சூத முனிவர் நைமிசாரண்யத்து முனிவர்களுக்கு ஶ்ரீமத் பாகவதத்தைக் கூறிய இடம் எனப்படுகிறது.
ஶ்ரீமத் பாகவதம் கதை முதலில் சொல்லப்பட்ட இடம் எனப்படுகிறது.
உலக க்ஷேமத்துக்காக வேண்டி ஓம் நமோ பகவதே வாசுதேவாய என்னும் மந்திரத்தை இங்கே அமர்ந்து சொல்லச் சொல்லி வரும் பக்தர்களை வேண்டிக் கொண்டு வைத்திருக்கும் அறிவிப்பு.
ஸ்வாயாம்புவ மனு முதன் முதல் தோன்றிய இடம்னு ஒரு இடத்தில் சிலைகள் வைத்திருக்கின்றனர்.
இங்கே தான் வியாசர் வேதங்களை ஆறு சாஸ்திரங்களாகவும், பதினெட்டுப் புராணங்களையும், ஶ்ரீமத் பகவத் கீதையைத் தொகுத்ததாகவும், சொல்கின்றனர். இங்கே தாம் மஹாபாரதம், ஶ்ரீமத் பாகவதம், சத்யநாராயணர் கதை ஆகியவையும் தொகுப்பட்டதாய்க் கூறுகின்றனர். ஆனால் பத்ரிநாத்திலிருந்து இன்னும் சற்று மேலே சுமார் 3 கிலோ மீட்டருக்குள் உள்ள மானா என்னும் உயரமான சிறிய எல்லைக் கிராமத்திலும் இதே கதையைச் சொல்கின்றனர். இதில் விசேஷம் என்னவெனில் மானாவில் தான் சரஸ்வதி நதியைப் பார்க்க முடியும். வியாசர் குகையும், பிள்ளையாருக்கெனத் தனியான குகையும் அங்கே உண்டு. கிட்டத்தட்ட 3,500 மீட்டர் உயரத்தில் உலகின் உயரமான டீக்கடையும் அங்கே இருக்கு. பீமன் பாலம் என்னும் பாலம் வழியாகவே பஞ்ச பாண்டவர்கள் மேலுலகம் சென்றார்கள் என்கின்றனர். அந்தப் பாலமும் இன்னமும் இருக்கிறது. அதற்கருகே தான் சரஸ்வதி நதியைக் காண முடியும். அந்த வெள்ளத்தில் தான் இப்போது நம் காலத்தில் ஸ்வாமி ஶ்ரீஹரிதாஸ் மஹராஜ் ஜலசமாதி அடைந்ததாய்ச் சொல்லப்படுகிறது. ஒரு சிலர் கங்கையில் என்கிறார்கள்.
வியாசருக்கு உதவின பிள்ளையார்.
தன்னுடைய புத்திரன் ஆன சுகருக்கு ஶ்ரீமத் பாகவதம் குறித்த விளக்கங்களை அளித்ததாகவும் சொல்லப்படுகிறது.
சுகருக்கும் தனியாக ஒரு ஆசிரமம் உள்ளது. மேலே காண்பது சூத முனிவர் நைமிசாரண்யத்து முனிவர்களுக்கு ஶ்ரீமத் பாகவதத்தைக் கூறிய இடம் எனப்படுகிறது.
ஶ்ரீமத் பாகவதம் கதை முதலில் சொல்லப்பட்ட இடம் எனப்படுகிறது.
உலக க்ஷேமத்துக்காக வேண்டி ஓம் நமோ பகவதே வாசுதேவாய என்னும் மந்திரத்தை இங்கே அமர்ந்து சொல்லச் சொல்லி வரும் பக்தர்களை வேண்டிக் கொண்டு வைத்திருக்கும் அறிவிப்பு.
ஸ்வாயாம்புவ மனு முதன் முதல் தோன்றிய இடம்னு ஒரு இடத்தில் சிலைகள் வைத்திருக்கின்றனர்.
ஒழுங்கா மந்திரம் சொன்னீங்களா இல்லயா? :-)))
ReplyDeleteவாங்க வா.தி. போணி பண்ணினதுக்கு நன்னி ஹை!
ReplyDeleteமந்திரம் சொல்லலையே, இப்போ என்ன பண்ணுவீங்க,இப்போ என்ன பண்ணுவீங்க, இப்போ என்ன பண்ணுவீங்க? :P :P :P
ஓம் நமோ பகவதே வாசுதேவாய
ReplyDeleteஓம் நமோ பகவதே வாசுதேவாய
ஓம் நமோ பகவதே வாசுதேவாய
ஓம் நமோ பகவதே வாசுதேவாய
ஓம் நமோ பகவதே வாசுதேவாய
ஓம் நமோ பகவதே வாசுதேவாய
ஓம் நமோ பகவதே வாசுதேவாய
ஓம் நமோ பகவதே வாசுதேவாய
ஓம் நமோ பகவதே வாசுதேவாய
இப்படி மந்திரம் சொன்னால் ஐந்து வருடங்களில் அங்கு நேரில் செல்லும் வாய்ப்பு கிட்டும்போல!
Deleteஹாஹாஹா, உங்களைப் பார்த்துப் போகாதவங்களும் சொல்லட்டும்! :)
Deleteஅப்பாடா... அப்போதான் எனக்கு பதில் சொல்லலை. இப்போதாவது சொன்னீர்களே...!!!!
Deleteஅட! அது வேறேயா! :)))) அப்போ அதை எல்லாம் சரியாக் கவனிச்சிருக்க மாட்டேன் போல! :(
Deleteஆனால் உங்களைத் தான் தி.வா. சொல்லி இருக்கார் கீழே! அப்போக் கூட நான் கவனிக்கலை!
Deleteசொல்லாட்டி போங்க! மத்தவங்க சொல்லுவாங்க.
ReplyDeleteசொல்றாங்க பாருங்க!
உங்களுக்கு புண்ணீயமே கிடைக்காது!
@வா.தி. ஒண்ணும் வேணாம், போங்க! :))))
ReplyDeleteபடங்களுடன் தகவல்கள் அருமை அம்மா... நன்றி... வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி டிடி.
ReplyDeleteகண்டுகொண்டேன். நன்றி.
ReplyDeleteபடங்களும் தகவல்களும் தந்தமைக்கு நன்றி.
ReplyDelete