எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, January 09, 2014

"பொடி" விஷயம்!

ஹெஹெஹெ, பொடி விஷயம்னா என்னனு நினைச்சீங்க? தெரிஞ்சுக்க ஆவலா இருக்கா??  ஒரு சிலர் மூக்குப் பொடியை நினைச்சிருக்கலாம். ஒரு சிலர் ஏதோ அல்ப விஷயம்னு நினைக்கலாம்.  ஒரு சிலர் சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா தலைப்புக்கு வைச்சதுனு நினைக்கலாம்.  ஆனால் உண்மையில் இது பொடியைப் பத்தின விஷயமே.  பொடினா சாம்பார்ப் பொடி, ரசப்பொடி விஷயம்.

எங்க அம்மா வீட்டில் சாம்பார் பொடினு தனியா எல்லாம் அரைக்கிறதில்லை/திரிக்கிறதில்லை.  ரசப்பொடினு தான் பண்ணுவோம்.  சாம்பார்னா சாம்பார் பண்ணுகிற அன்னிக்கு எல்லா சாமானும் எண்ணெயில் வறுத்து அரைத்துத் தேங்காய் சேர்த்துத் தான் செய்வது வழக்கம்.   பொடி போட்டு சாம்பார்னா நாங்கல்லாம் ஒரு காலத்தில் சிரிச்சிருக்கோம்.  ஆனால் அதெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி தான்.  இங்கே வந்தப்புறம் தினம் தினம் சாம்பார்னு ஆனதுக்கப்புறமாத் தான்பொடி போட்டும் சாம்பார் பண்ணுவாங்கனு தெரியவே வந்தது! :))) ஆனாப் பாருங்க இன்னி வரைக்கும் இந்த பொடி போட்ட சாம்பாருக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம். தொலையட்டும்னு விட்டுட்டேன்னு வைச்சுக்குங்க.  ரங்க்ஸும் தலை எழுத்தேனு சகிச்சுக்கப் பழகிட்டார்.  இப்போ நாம பார்க்க வேண்டியது அதெல்லாம் இல்லை.  இந்தப் பொடியைத் திரிக்க அல்லது அரைக்க நான் பட்ட கஷ்டங்கள் எல்லாம் இன்னிக்கு flash back லே வந்தது.

கல்யாணம் ஆகி முதல் குழந்தை பிறந்தப்போ எல்லாம் சென்னை வாசம் என்பதால் கருவிலியில் மாமியார் கிட்டே இருந்தோ, பெரும்பாலும் மதுரையில் அம்மா கிட்டே இருந்தோ பொடி அரைச்சு வந்துடும்.  பிரச்னை இல்லாமல் இருந்தது.  கல்யாணம் ஆகி நாலு வருஷத்திலே முதல் முறையா ராஜஸ்தான் போனப்போ தான் இந்தப் பொடி விஷயம் உண்மையில் எத்தனை பெரிய விஷயம்னு புரிஞ்சது.  கையிலே ஒண்ணரை வயசுக் குழந்தை!  புது இடம்;  நாங்க இருந்த குடியிருப்பிலே ஹிந்தி, ஆங்கிலம் செல்லுபடி ஆனாலும் உள்ளூர் மக்கள் பேசிய ராஜஸ்தானி கலந்த ஹிந்தி சட்டுனு புரியாது.

போய் இரண்டு மாசத்துக்கு ஒண்ணும் பிரச்னை இல்லை. பொடி எல்லாம் இருந்தது.  அதெல்லாம் ஆனப்புறம் தான் பிரச்னையே ஆரம்பம். மிளகாய் அரைக்க எனத் தனி மெஷினே அங்கே கிடையாது.  இருக்கிற மிஷினெல்லாம் கோதுமை மட்டுமே அரைக்கும்.  எப்போவோ கடைகளுக்காகக் கடலைப்பருப்பு.  அதுவும் குறிப்பிட்ட நாளில் மூட்டையாகக் கொடுப்பாங்க. நசிராபாத் முழுவதும் அலசி ஆராய்ந்தும் மிளகாய் அரைக்கும் மெஷினைக் கண்டே பிடிக்க முடியலை.   ஹோலி சமயத்தில் ஒரு சில ஊர்களில் மொத்தமாக மிளகாய் வத்தல், தனியா அரைச்சுத் தருவாங்களாம். நாம் கொடுக்கும் கால்கிலோ மி.வத்தல் சாமான்களை அரைப்பாங்களா?  தெரியலை.  அதோடு ஹோலி மார்ச்-ஏப்ரலில் வரும்.  இதுவோ ஆகஸ்ட் மாசம். அது வரைக்கும் என்ன செய்யறது?

அக்கம்பக்கம் விசாரித்ததில் மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி, தனியாப் பொடினு இயந்திரத்தில் அரைச்சுக் கொடுப்பாங்கனு கேள்விப் பட்டு கால் கிலோ மிளகாய் வத்தல், தனியா ஒரு கிலோ, அதற்கான சாமான்கள் என அனைத்தும் கொடுத்தோம். கிட்டத்தட்ட ஒன்றரை கிலோ சாமான்கள். ஆனால் எங்களுக்குக் கிடைச்சதோ  கால் கிலோ பொடி கூடக் கிடையாது. கேட்டால் அரைச்சால் அப்படித் தான் கம்மியா ஆகும்னு சொல்றாங்க.  "ஙே" னு முழிச்சோம்.

அடுத்து  இந்தப் பிரச்னையை எப்படிச் சமாளிக்கிறதுனு யோசிச்சதிலே பக்கத்திலே அஜ்மேரிலே கையால் அரைக்கிற மெஷின் கிடைக்குதுனு சொன்னாங்க.  ஏற்கெனவே காப்பிப் பொடி கிடைக்காது என்பதால் கொட்டையை மொத்தமா வாங்கி (ஹிஹி, மொத்தமான்னா, மொத்தமா, ஐந்து ஆறுகிலோ வரைக்கும்) எடுத்துட்டுப் போயிடுவோம்.  வீட்டிலேயே கொட்டையை வறுத்து, காப்பிக்கொட்டை மெஷினிலே போட்டு( கல்யாணச் சீரிலே அம்மா கொடுத்தது;  காரைக்குடி மெஷின்னு சொல்வாங்க அதை!  இப்போ காரைக்குடியிலேயே கிடைக்குமானு சந்தேகம்!) அரைச்சுத் தான் காஃபி.  குழந்தை அப்போத் தான் அம்மா கிட்டே பாசம் அதிகம் வந்து அம்மா தூக்கணும்னு அடம் பண்ணுவா.  அவளையும் தூக்கிக் கொண்டு அரைப்பேன். இப்போ சாம்பார் பொடிக்குமா?

அஜ்மேர் போய் மெஷினைப் பார்த்தோம்.  ஒரே சமயத்தில் கால்கிலோ பொருட்களைப் போடும் அளவுக்குப் பெரிய வாய் கொண்ட மெஷின்.  அப்போ அதோட விலை நூறு ரூபாய்க்குள் தான்.  வாங்கியாச்சு.  மிளகாய் வற்றலை நல்லா வெயிலில் காய வைச்சு மெஷினில் போட்டு அரைக்கணும்.  ஒரே தும்மல்!  குழந்தை அங்கே வரணும்னு பிடிவாதம்.  விளையாட்டு சாமான்களோடக் குழந்தையை முன்னறையில் போட்டுட்டு அந்தக் கதவைச் சும்மா சார்த்திட்டு அங்கே விளையாடும் குழந்தையை இங்கே இருந்தே கண்காணித்துக் கொண்டு அரைச்சேன்.  மிளகாய் ஒன்றிரண்டாகத் தான் வந்தது.  சரினு கொஞ்சம், தனியா, சாமான்களைப் போட்டேன்.  மஞ்சளைப் போட்டதும் எங்கோ சிக்கிக் கொண்டு!!! பிள்ளையாரே!  இப்போ என்ன பண்ணறது???

25 comments:

  1. இது பொடி விஷயம் இல்லை தான்... எவ்வளவு சிரமப்பட்டுள்ளீர்கள்...!

    ReplyDelete
  2. 'ஆனாப் பாருங்க இன்னி வரைக்கும் இந்த பொடி போட்ட சாம்பாருக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம்.'

    ~சரிக செப்தாரு. கல்யாணம் ஆன புதிசிலெ, இரக்கமே இல்லாமல் ஒரு மடிசாரு மாமி, ' உனக்கு சமையல் தெரியுமோ' என்று கேட்க, இந்த மதராஸ் அப்பாவி பொண்ணு 'தெரியாது' என்று சொல்லி, எல்லாரும் லோகா அவர்களைப்போல் 'அனுதாபப்பட்டார்கள்'! ஆனால், எங்கள் சுற்று வட்டாரத்துக்கே வஸந்தா தான் நளபாகினி. ஒரு நாளாவது பொடி போட்ட சாம்பார் எனக்கு போட்டதில்லை. சாம்பாருக்கு நான் எப்போவாவது அரைத்துக்கொடுத்தது உண்டு. அவளுக்கு நான் சிங்கப்பூரிலிருந்து ஒரு மிக்ஸி வாங்கிக்கொடுத்தது நன்றாக ஞாபகம் இருக்கிறது.

    ReplyDelete
  3. சாம்பார்பொடி தீர்ந்து போச்சுன்னா, அரைச்சுவிட்ட சாம்பார்ன்னு எங்காத்திலே ஒன்று செய்வா. அதுவும் ஒரு மாதிரியாக ஆனால் ஜோராவே இருக்கும்.

    சாம்பார்பொடி அரைக்க மிஷினுக்குப்போகும் போது, ஏற்கனவே யாரும் சோம்பு போட்டு அரைத்திருக்கக்கூடாதே என ஸ்வாமியை வேண்டிக்கொண்டு செல்வோம்.

    ஏனோ அந்த சோம்பு வாடையுடன் சாம்பார்பொடி அரைத்து வந்தால் சுத்தமாகப் பிடிக்கவே மாட்டேங்குது.

    இது ஒன்றும் பொடி விஷயமல்ல ... மிகப்பெரிய விஷயமே தான்.

    தொடருமோ?

    ReplyDelete
  4. பொடி கான்சப்டையே கிண்டல் பண்ணிட்டு அப்புறம் பொடி இல்லைன்னு பொலம்பினா..... ஹிஹிஹி!

    ReplyDelete
  5. வாங்க டிடி, ஆமாம், அப்போல்லாம் இது மட்டும் கையால் அரைக்கலை, இட்லி, தோசைக்கும், சட்னி, துவையல், கூட்டுகளுக்கு அரைக்கிறதுனு எல்லாம் அம்மி, ஆட்டுக்கல்லில் தான். அம்மி, ஆட்டுக்கல் இரண்டுமே ராஜஸ்தான், குஜராத், ஆந்திரானு எல்லாமும் பார்த்திருக்கு. :)))))

    ReplyDelete
  6. வாங்க இ சார், வரவுக்கு நன்றி. அங்கேயும் அதே கதையா? சிங்கப்புர் மிக்சியா? தூள் கிளப்பிட்டீங்க!

    எங்க சித்திக்குச் சித்தப்பா யு.எஸ். முதல் முதல் போனப்போ ஒரு மிக்சி வாங்கிக் கொடுத்திருந்தார். அதை வைச்சு இந்தியாவிலே அரைக்கிறதுக்குள்ளே எம்பாடு, உம்பாடா ஆயிடும். :))))

    ReplyDelete
  7. வாங்க வைகோ சார், எங்க ஊர்ப்பக்கம் சாம்பார்னாலே அரைச்சு விட்டுத் தான். :)))) பொடி போட்டு சாம்பாரே அவ்வளவாத் தெரியாது. கொஞ்சமாப் பருப்புப் போட்டு அடியிலே தாளிச்சுக் கொட்டிப் பருப்புக் குழம்புனு பண்ணுவோம். அது சாம்பாருமில்லாமல், வத்தக்குழம்பும் இல்லாமல் இருக்கும். :))))

    ReplyDelete
  8. வாங்க வா.தி. என்னத்தைச் சொல்றது! பொடி விஷயம் தானேனு விட முடியலை. பொடிச்சே ஆகவேண்டி இருக்கே! :)))))

    ReplyDelete
  9. அரைச்சி அரைச்சு ஓடாய்ப் போயிட்டேன்னு மெஷின் சொல்றதா இப்ப கீதா
    மதுரைப் பாட்டிக்கும் ஒரு அரைக்க குழபும் கீரையும் இருந்தால் போதும்.போடி சூப்பர்.

    --
    அன்புடன்,
    ரேவதி.நரசிம்ஹன்

    ReplyDelete
  10. பொடி விசயத்திலும் இவ்ளோ இருக்கா? ரொம்ப கஷ்டபட்டிருக்கிங்க!

    ReplyDelete
  11. இங்கே அப்படியே தலைகீழ், பிறந்த வீட்டில் பொடி போட்ட சாம்பார் அம்மா செய்வாங்க... வாரத்தில் ஒருநாள் தான் அரைச்சு விட்ட சாம்பார்... ஆனா புகுந்த வீட்டில் சாம்பார் என்றாலே அது அரைச்சு விட்ட சாம்பார் தான்.. அன்றாடம் வறுத்து அரைச்சு தான்...

    திருமணமாகி வந்த இரண்டே நாளில் மாமியார் எங்கோ வெளியே போயிருக்க, சமைக்கும் சந்தர்ப்பம் ஏற்படவே எங்கள் வீட்டில் வைப்பது போல் பொடி போட்டு சாம்பார் வைத்து விட்டேன்.. முடிச்சு இறக்கும் போது உள்ளேயிருந்து வந்த நாத்தனார் எங்க வீட்டில் சாம்பார்னா அது அரைச்சு விட்ட சாம்பார் தான் எனச் சொல்ல வெலவெலத்து போய் திரும்பவும் வறுத்து அரைச்சு விட்டேன்... மறக்க முடியாத அனுபவம்...:)) அன்றிலிருந்து சாம்பார்னா அரைச்சு விட்டு தான்...:)))

    தில்லியில் இருந்தவரை, இப்போவும் என்னவருக்கு இங்கிருந்து தான் சாம்பார் பொடி... நடுவில் ஒரு ஆறுமாசம் வேறு வழியில்லாமல் கடையில் வாங்கி உபயோகப்படுத்தினேன்..:))

    ஐய்யோ! அந்த மிஷினுக்கு என்ன ஆச்சு.. தொடர்ந்து வரேன்..

    ReplyDelete
  12. புள்ளையாரே...
    பேசாம ஒரு பிளவர் மில் வைத்திடலாம். பொடிக்கு பொடியுமாச்சு. வருமானத்துக்கு வருமானமும் ஆச்சு

    என்ன நாஞ்சொல்றது!

    ReplyDelete
  13. அட ...இந்தப் பொடி விஷயம் சுவாரஸ்யமா இருக்கே!.எனக்கும் டெல்லியில் சாம்பார் பொடி அரைக்க பட்ட கஷ்டமெல்லாம் நினைவிற்கு வருகிறது.

    ReplyDelete
  14. பொடி விஷயம் சூப்பர்!
    சிக்கிண்ட மஞ்சள் - அல்லது வேறு எதுவோ என்னாச்சு?
    பொடிவிஷயம் தொடரட்டும்!

    ReplyDelete
  15. பருப்புப்பொடி தேங்காய்ப்பொடி விஷயம்னு நெனச்சேனே..

    ReplyDelete
  16. வாங்க வல்லி, அரைச்சு அரைச்சு ஓடாய்ப் போகலை மெஷின். நல்ல கண்டிஷன்லேயே இருந்தது. கொடுக்க மனசும் இல்லை தான்! :))) ஆனாலும் கொடுத்தாச்சு!

    ReplyDelete
  17. வாங்க சுரேஷ், பின்னே?? பொடி விஷயம்னு நினைச்சீங்களா? :))))

    ReplyDelete
  18. வாங்க ஆதி, தஞ்சாவூர்ப் பக்கமே கல்யாணங்களில் கூட தலைமைச் சமையல்காரர் லிஸ்ட் கொடுக்கிறச்சே பொடியும் வேணும்னு சொல்லி சாமான்கள் கொடுத்து நம்மைப் பொடி அரைச்சு வைக்கச் சொல்லி வாங்கி வைச்சுக்கிறார். போன வருஷம் மாயவரத்தில் நடந்த கல்யாணத்தில் கூட இதைப் பார்த்தேன். பொடியும் போட்டுவிட்டு மேல் சாமான்கள்னு அரைச்சு விடறாங்க.

    நம்ம முறை சுத்தமாக வறுத்து அரைத்தல் மட்டுமே! நோ பொடி! :))))))

    ReplyDelete
  19. கடைசி பெஞ்ச்! செய்திருக்கலாம் இல்ல??? தோணலை பாருங்க! :))))

    ReplyDelete
  20. வாங்க ராஜலக்ஷ்மி, வட மாநிலங்களில் இப்போதும், எப்போதும் பொடி விஷயம் பெரிய விஷயமாவே இருக்கு. மாமியாருக்கும், ஓர்ப்படிக்கும் இன்னமும் இங்கே இருந்து நான் தான் அரைச்சு அனுப்பிட்டு இருக்கேன். :))))

    ReplyDelete
  21. அவங்க எல்லாம் தினம் தினம் பொடி போட்டு சாம்பார் செய்தால் தான் ஜன்மம் சாபல்யம் ஆச்சுனு சொல்வாங்க! அந்த ரகம்! :)))

    ReplyDelete
  22. வாங்க ரஞ்சனி, அதெல்லாம் சரி பண்ணிட மாட்டோமா? :))))

    ReplyDelete
  23. அப்பாதுரை, பருப்புப் பொடி, தேங்காய்ப் பொடியெல்லாம் இங்கே நம்ம ரங்க்ஸுக்குப் பிடிக்காது. :)))) இங்கே நரசூஸ் காப்பிப் பொடி அரைகிலோ வாங்கினால் நூறு கிராம் பருப்புப் பொடி அல்லது ஒரு தம்ளர் அல்லது இன்ஸ்டன்ட் காபித் தூள் ஐந்து பாக்கெட் இலவசம். காப்பிப் பொடி வாங்குகையில் கட்டாயமாய்க் கொடுத்துடறாங்க. வைச்சுட்டு முழிக்க வேண்டி இருக்கு!:))))

    ReplyDelete
  24. ஆஆ! பருப்புப்பொடி தேங்காய்பொடி பிடிக்காதா? ஆச்சரியமான ஆச்சரியம்! actually தேங்காய் பொடி எனக்கும் சுமாராத்தான் பிடிக்கும். பம்மல்ல இருந்தப்ப ஒரு பக்கத்துவீட்டுல தேங்காய்பொடியையை வேறே வழியில்லாம சாப்பிடப்போய் அப்படியே சொக்கிப் போனேன். பாலக்காடு டைப் தேங்காய் பொடி அத்தனை அமோகம். அதற்குப் பிறகு சான்ஸ் கிடைக்கலே. இப்ப ஊருக்குப் போனா பாகற்காய் பொடி வேப்ப்பிலை பொடினு இஷ்டத்துக்கு அரைச்சு வச்சிருக்கான்க. ஹ்ம்ம்..

    ReplyDelete
  25. பொடி விஷயம்...... :)

    தில்லியில் கரோல் பாக் பகுதியில் முன்பு சாம்பார் பொடி அரைத்துக் கொடுத்தார்கள் - இப்போது அந்தக் கடையே இல்லை!

    தமிழர்கள் பலர் அந்த ஏரியாவில் இருந்து சென்று விட்டதால்!

    ReplyDelete