எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, March 07, 2015

பயணங்கள் முடிவதில்லை! 12

இங்கேகடைசியாய் மேற்கண்ட சுட்டியில் படிச்சோம். இரவு நான் படுத்துத் தூங்கினப்புறமா விடுதியின் காப்பாளர் முத்துக்கிருஷ்ண பட்டாசாரியார் அங்கே வந்து பையரையும், ரங்க்ஸையும் பார்த்துப் பேசி இருக்கார்.  மறுநாள் காலை சேதுக்கரை ஸ்நானமும், அங்கே செய்ய வேண்டிய சங்கல்பம் குறித்தும் அவரிடம் விவாதித்து அவரே பண்ணி வைப்பதாகவும், காலை ஏழரைக்குள்ளாக சேதுக்கரைக்கு வந்துவிடும்படியும் கூறி இருக்கிறார்.  காலை ஆகாரம் கிடைக்காது என்றும் காஃபி கூடத் தாமதம் ஆகும் என்றும் சொல்ல, காஃபி இல்லாமல் உயிர்வாழ முடியாதே எனக் கருதிய ரங்க்ஸ் வேறு வகையில் அந்தப் பிரச்னையைத் தீர்க்க முடியுமா என யோசித்திருக்கிறார்.  அதுக்குள்ளே அந்த பட்டாசாரியாரே கோயிலுக்கு எதிரிலுள்ள இரண்டு கடைகளில் காலை ஐந்து மணிக்கே காஃபி கிடைக்கும் என்று சொல்லி ரங்க்ஸின் வாய், வயிறு இரண்டிலும் காஃபியை வார்த்தார்.

நல்லாத் தூங்கினதாலே என்னமோ எனக்கு சீக்கிரமே விழிப்பு வர ரங்க்ஸ் ஏற்கெனவே எழுந்து கொண்டு காஃபிக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார்.  இவ்வளவு சீக்கிரமாவா, மணி மூன்றரை தானே ஆகிறதுனு நான் சொல்ல, அது இரண்டு மணி நேரம் மெதுவாய்ப் போகுது என்றும் அவர் கைபேசியின்படி அப்போது மணி ஐந்தாகிவிட்டது என்றும் சொல்லிவிட்டு என்னை எழுந்து தயாராகும்படிக் கூறிச் சென்றார்.  நானும் எழுந்து காஃபி குடிக்கத் தயார் ஆனேன்.  ஹிஹிஹி. பையரையும், மருமகளையும் எழுப்பி அவங்களையும் சங்கல்ப ஸ்நானத்துக்குத் தயாராகக் கிளம்பவேண்டி ஏற்பாடுகள் செய்தோம்.  அங்கேயே இருக்கும் இன்னொரு பட்டாசாரியார் வீட்டில் மதியம் சாப்பாடு கிடைக்கும் என்றும் காலை ஆகாரம் கிடைக்காது என்றும் சொன்னார்கள். ஒரேயடியாக ப்ர ஞ்ச் வைத்துக்கொள்ளலாம்னு முடிவு செய்து கொண்டு எல்லோருமே குளித்து சேதுக்கரைக்குப் போகத் தயார் ஆனோம்.

பலரும் தநுஷ்கோடியில் காசியாத்திரை முடிக்கணும்னு நினைக்க, உண்மையில் இங்கே சேதுக்கரையில் தான் முடிக்கணும்னு எல்லோரும் சொல்றாங்க.  எங்களுக்கு அது பற்றி யாருமே கூறாததால் நாங்க தநுஷ்கோடி போய்த் தான் காசியாத்திரையைப் பூர்த்தி செய்தோம்.  திருப்புல்லாணிக்கு 2,3 முறை போயும் சேதுவுக்குப் போகவே இல்லை.  இப்போத் தான் முதல் முதல் சேதுவுக்குப் போகப் போறோம்.  ராமர் சேது பாலம் இருப்பதும் சேதுக்கரையில் இருந்து நாலு மைலுக்குள்ளாக என்றார்கள்.  நாங்கள் சென்ற வண்டியிலேயே சேதுவுக்குச் சென்றோம். கீழக்கரை என அழைக்கப்படுவதும் இதுதான் என எண்ணுகிறேன்.  சேதுவைக் காவல் காத்ததாலேயே ராமநாதபுரம் அரசகுலத்திற்கு சேதுபதி என்னும் அடைமொழி ஏற்பட்டிருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

தர்பாரண்யம் என ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட இந்த இடத்தில் ஆரம்பத்தில் திருப்புல்லாணி ஆதி ஜகந்நாதப் பெருமாள் கோயிலும், அதை விட்டால் உத்தரகோசமங்கைக் கோயிலும் தான் இருந்திருக்கிறது.  ஶ்ரீராமர் வழிபட்ட பின்னரே ராமேஸ்வரம் ராமநாதர் கோயில் தோன்றியதாகச் சொல்கிறார்கள். மிகத் தொன்மை வாய்ந்த ஆதி ஜகந்நாதர் இருப்பது திருப்புல்லாணியில். இருந்து 4 கிமீ தொலைவில் சேதுக்கரை உள்ளது. இங்கிருந்து தான் ஶ்ரீராமர் இலங்கை செல்லப் பாலம் அமைத்திருக்கிறார்.

சேதுக்கரையில் ஒரு ஆஞ்சநேயர் கோயில் இருக்கிறது.  கடலைப் பார்த்த வண்ணம்  காட்சி அளிக்கும் ஆஞ்சிக்குக் கோயில் சமீபத்தில் தான் எழுப்பப்பட்டிருக்க வேண்டுமோ எனத் தோன்றுகிறது. அதோடு கரை முழுவதும் ஆங்காங்கே உடைந்த சிலைகள் கிடக்கின்றன. இவை யாரேனும் கொண்டு வந்து போட்டவையா என்ன என்று தெரியவில்லை. ஒவ்வொருத்தர் ஒவ்வொன்று சொல்கின்றனர். மிகத் தொன்மையான மஹாவீரரின் சிலை கூடக்கடலுக்குள் கிடப்பதாகச் சொல்கின்றனர். சிலைகள் முழு வடிவம் பெறாததால் அவற்றை வழிபடக்கூடாது என்னும் விதிப்படி நீரில் விடவேண்டும் என்பதற்காகக் கடலில் விட்டுச் சென்றிருக்கலாம். அவை காலப் போக்கில் கரையில் ஒதுங்கி இருக்கலாம்.

சேது சமுத்திரம் அமைதியாக இருக்கிறது. அதிகம் ஆழம் இல்லை. அதே போல் எல்லோரும் தநுஷ்கோடிக்கே போவதால் இங்கே கூட்டமும் அதிகம் இல்லை.  நாங்கள் பதினைந்து வருடங்கள் முன்னர் பார்த்த மாதிரியே திருப்புல்லாணி ஊர் இருந்தது.  சேதுவும் அப்படியே இருந்திருக்க வேண்டும்.


கடற்கரையில் காணப்பட்ட சில சிற்பங்கள்.










சேதுவில் ஸ்நானம் செய்யக் கடலில் இறங்கும் பக்தர்கள். கூட்டமே இல்லை.




கடலைப் பார்த்த வண்ணம் இருக்கும் ஆஞ்சி கோயில் 


13 comments:

  1. மணலில் கிடக்கும் சிலைகளைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. பிரார்த்தனை பண்ணிக்கொண்டு வந்து சேர்த்த சிலைகளோ என நினைத்தேன். அப்படி இல்லை என்கிறார்கள். :(

      Delete
  2. அந்த ஆஞ்சநேயர் கண்ணு நிஜமா குரங்கு கண்ணு மாதிரியே இருக்கும்!

    ReplyDelete
    Replies
    1. அப்படியா வா.தி!. நாங்க கிட்டேப் போய்ப் பார்க்கலை! :)

      சூரி சார், உங்க கருத்தின் பொருள் விளங்கவில்லை. :)

      Delete
  3. திருப்புல்லாணி, உத்தரகோசமங்கை பார்த்திருக்கிறோம். சேது கடற்கரைபோனதில்லை. தெரிந்திருக்கவில்லை.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜிஎம்பி ஐயா, முதல்லே எங்களுக்கும் தெரியலை தான். ஆனால் எனக்கு என்னமோ விட்டுட்டாப்போல் இருக்கும். இப்போத் தான் இது குறித்துத் தெரிய வந்தது.

      Delete
  4. கடற்கரையிலே ஏன் சிலைகளை வைத்துள்ளார்களோ...?

    ReplyDelete
  5. சேது ஸ்நானம் ஆச்சா??
    சுமார் 10 வருடங்களுக்கு முன் நாங்கள் போனபோது ஆஞ்சனேயர் கோவில் பார்த்ததாக நினைவு இல்லை.

    ReplyDelete
    Replies
    1. ஆச்சும்மா, ஆஞ்சி அங்கே 200 வருஷங்களுக்கு மேல் இருக்கிறதாச் சொல்றாங்களே!

      Delete
  6. மணலில் கிடக்கும் சிலைகள் - அந்தோ பரிதாபம்....

    தமிழகத்தின் பல கோவில்களில் இப்படி உடைந்த/சிதைந்து போன சிலைகளைப் பார்க்கும் போது கஷ்டமாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், இவை அத்தனை புராதனமாகவும் தெரியலை!

      Delete