முதலில் நாங்கள் சென்றது யோக நரசிம்மரைப் பார்க்கவே. இந்தக் கோயில் மதுரை மாட்டுத்தாவணிப் பேருந்து நிலையத்துக்கு முன்னாலேயே வருகிறது. மதுரையிலிருந்து சுமார் 12 கி.மீ தூரத்தில் மதுரை மேலூர் சாலையில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் வடக்கே அழகர் கோயிலும், கிழக்கே திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயிலும் அமைந்துள்ளது. இவை இரண்டிற்கும் நடுவே இந்தக் கோயில் அமைந்துள்ளது. இது மதுரைப் பாண்டியன் பராந்தகன் நெடுஞ்சடையனின் அமைச்சர் மதுரகவி என்ற மாறன் காரியால் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. கி.பி. எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோயில் குடவரைக் கோயில் ஆகும். இந்தக் கோயிலின் முக மண்டபம் அமைச்சர் மாறன்காரியின் தம்பி மாறன் எயினனால் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. சுமார் 2,000 வருடங்கள் பழமையானது என்று இந்தக் கோயில் சொல்லப்படுகிறது.
ஆனைமலையை ஒட்டியே இந்தக் கோயில் அமைந்திருப்பதாலும் இது மலையின் கீழ்ப்பாகத்தைக் குடைந்தே கட்டி இருப்பதாலும் இந்தக் கோயிலில் கொடிமரம் கிடையாது. அதோடு விமானத்தின் நீள அகல அளவைப் பொறுத்தே கொடிமரம் அமைக்கப்படும் என்றும் இங்கே கருவறைக்கு மேல் ஆனைமலை உயர்ந்து காணப்படுவதாலும் கொடிமரம் இல்லை என்கின்றனர். நரசிம்மர் தலங்களிலேயே மிகப் பெரிய நரசிம்மர் உருவம் இந்தக் கோயிலில் தான் வடிவமைக்கப் பட்டிருக்கிறது. இந்தக் கோயிலை ஒட்டியுள்ள ஆனைமலையில் சமணர் படுகைகள் பல உள்ளன. அவற்றுக்கு எல்லாம் ஏறிப் போவது எங்களால் இயலாத ஒன்று என்பதால் போகவில்லை.:(
நரசிம்ம அவதாரம் நிகழ்ந்தது தேய்பிறைச் சதுர்த்திப் பிரதோஷ காலத்தில் என்பதால் இங்கே ஒவ்வொரு பிரதோஷமும் மிகச் சிறப்பாக வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. புத்திர பாக்கியம் வேண்டித் தவம் இருந்த ரோமச முனிவர் இங்கு வந்து இங்கு உள்ள சக்கர தீர்த்தத்தில் நீராடி யாகம் செய்தார். அப்போது நரசிம்மரை அவதார காலத்தில் இருந்தபடியே தரிசிக்க விரும்பிப் பிரார்த்தனை செய்ய உக்கிர நரசிம்மர் ரோமச முனிவர் முன் தோன்றுகிறார். அவ்வளவு தான்! சுற்று வட்டாரமே அந்த உக்கிரம் தாங்காமல் தத்தளித்துத் தடுமாறித் தவிக்க, தேவாதி தேவர்களும் முனிவர்களும் பிரஹலாதனைப் போய் வேண்டுகின்றனர். பிரஹலாதனும் இந்தத் தலம் வருகிறான். ஆனாலும் உக்கிர நரசிம்மரின் உக்கிரம் குறையாமல் இருக்கவே லோகமாதாவிடம் சரண் அடைகின்றனர் அனைவரும். மகாலக்ஷ்மியும் சாந்த சொரூபியாக இங்கே வந்து தன் கடைக்கண்களால் நரசிம்மரைப் பார்க்க உக்கிர நரசிம்மரின் உக்கிரம் குறைகிறது. மகாலக்ஷ்மியை ஆலிங்கனம் செய்து கொள்கிறார் நரசிம்மர். அது முதல் யோக நரசிம்மராகக் காட்சி கொடுத்து பக்தகோடிகளுக்கு அருள் பாலிக்கிறார்.
தாயார் நரசிங்கவல்லித் தெற்கு நோக்கி அமர்ந்து தனியாக சந்நிதி கொண்டிருக்கிறாள். கோயிலின் முகப்பில் ஒரு குளம் உள்ளது. உள்ளே சென்றால் ஏகப்பட்ட முன்னோர்கள். படம் எடுக்கணும்னு ஆசையோட காமிராவை எடுத்தால் நம்ம கையிலிருந்து பிடுங்குவாங்க போல இருந்தது. முறைச்சு முறைச்சு நம்மையே பார்க்கிறாங்க. சரினு உள்ளே வைச்சுட்டேன். வெளியே எடுத்த படம் மட்டும் பகிர்கிறேன். யோக நரசிம்மர் படம் கூகிளார் கொடுத்தது.

கர்பகிரஹத்தின் மேல் கூரையில் ஒரு ஓட்டை இருப்பதாகச் சொல்லப்படுகிறது அது பெருமாளின் கோபாக்னியால் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அழகர் கோயில் கோட்டைச் சுற்றுச் சுவரை இரணியன் கோட்டை என்பார்கள். அங்கேயும் ஒரு யோக நரசிம்மர் நுழைவாயிலில் காணப்படுவார்.
நான் கடந்த டிஸம்பரில் சென்று வந்தேன். மாணிக்க வாசகர் பிறந்த ஊர்தான் செல்ல நேரமில்லாமல் போனது.
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், எனக்குத் தெரியும் அங்கே தான் திருவாதவூர் என்று. ஆனாலும் போகலை! :(
DeleteADHI VENKAT has left a new comment on your post "ஆனைமலை யோக நரசிம்மரை ஒரு வழியாப் பார்த்தோம்!":
ReplyDeleteஆனைமலை யோகநரசிம்மரை தரிசனம் செய்தாச்சு... அறியாத தகவல்களைத் தெரிந்து கொண்டேன். நன்றி மாமி.
Publish
Delete
Mark as spam
ஆதி வெங்கட்டின் இந்தப் பின்னூட்டத்தைப் பல முறை பப்ளிஷ் கொடுத்தும் பப்ளிஷ் ஆகலை என்பதால் காப்பி, பேஸ்ட் செய்திருக்கேன். :))) இப்போக் கொஞ்ச நாட்களாச் சில சமயம் இப்படி ஆகிறது. ஆனால் இங்கே டாஷ் போர்டில் அந்தப் பின்னூட்டம் இருக்கும். அங்கே போய் பப்ளிஷ் கொடுப்பேன். இப்போல்லாம் டாஷ்போர்டிலும் இருக்கிறதில்லை. கொடுத்தாலும் போகிறதில்லை. ஒரே அடம்! :(
வாங்க ஆதி, மதுரை செல்லும்போதே இந்தக் கோயில்கள் வந்துடும். :) மதுரை போயிட்டுத் திரும்ப இங்கே வரணும்னு இல்லை. இல்லாட்டித் திரும்பும் வழியில் வரலாம். ஆனால் திருச்சி செல்லும் பேருந்துகள் இங்கே நிற்காது. மதுரை செல்லும் பேருந்துகளே நிற்கும்.:)
Deleteபார்த்ததில்லை.பார்ப்போமா தெரியவில்லை.
ReplyDeleteநன்றி ஜிஎம்பி ஐயா.
Deleteநானும் சேவித்திருக்கிறேன். மிக அருமையான கோவில்.
ReplyDeleteதொடருங்கள்...
வாங்க ராம்வி, நன்றி.
Deleteதரிசிக்க வேண்டிய கோயில்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteநன்றி சுரேஷ்!
Deleteஆணை மலை யோகா நரசிம்மர் ஸ்தல புராணம் அறிந்து கொண்டேன். இங்கு முனிவருக்கு தரிசனம் தந்தார்.
ReplyDeleteஆனால் நரசிம்ம அவதாரம் நிகழ்ந்த இடம் அகோபிலம் தான் இல்லையா?( என் சந்தேகம் தெளிவுக்காகக் கேட்கிறேன்)
அகோபிலம் ஆந்திராவிலே இருக்கு ராஜலக்ஷ்மி. நரசிம்ம அவதாரம் நிகழ்ந்த இடம் மலை உச்சியில் காணப்படும். நாங்க 2010 ஆம் வருடம் போனோம். இது குறித்து எழுதி இருக்கேன். http://aanmiga-payanam.blogspot.in/2009/02/blog-post_03.html இந்தச் சுட்டியில் ஆரம்பித்து மொத்தம் 13 அல்லது 14 பதிவுகள் பார்க்கலாம். ஒன்பது நரசிம்மர்களையும் தரிசித்தோம். கடுமையான பயணம்.
Deleteநீங்கள் கொடுத்துள்ள சுட்டியில் சென்று பார்க்கிறேன் மேடம். பிரஹலாதன் ராஜகுமாரன் ஆச்சே.
Deleteஅரண்மனை மலையுச்சியில் இருந்திருக்குமா என்பது போன்ற சின்ன சின்ன கேள்விகள். யுகங்கள் மாறும்போது தோற்றங்களும் மாறியிருக்கலாம் . மனதுள் இருக்கின்றன. நரசிம்மர் அவதரித்த தூண் அங்கிருக்கிறது என்று கேள்விபட்டிருக்கிறேன். உங்கள் பதிவுகளைப் படிக்கிறேன். இத்தனை கேள்விகள் என் மனதுள் எழுவதால் என்னை நாத்திகவாதியோ என்று சந்தேகப்பட வேண்டாம். அவனன்றி ஓரணுவும் அசையாது என்பதில் முழு நம்பிக்கையுடைவள் . ஆர்வத்தினால் மட்டுமே எழும் கேள்விகள்.
பிரஹலாதன் இருந்தது இந்த மலைப்பகுதியில் தான் என்கின்றனர் ராஜலக்ஷ்மி. அவன் கல்வி கற்ற இடம், அரண்மனை இருந்த இடம் என்றெல்லாம் மலையிலேயே காட்டுவார்கள். மலை உச்சியில் அரண்மனை இருந்திருக்க வாய்ப்பு உண்டு. பின்னாட்களில் இடிந்திருக்கலாம். இப்போது அங்கே உக்ரஸ்தம்பம் மட்டும் காணப்படுகிறது. அதற்குச் செல்வதும் கடினம் தான். மேலே பத்துக்குப் பத்து சதுர அடிக்குள் அந்த ஸ்தம்பமும் அதன் நடுவில் நரசிம்மர் தூணைப் பிளந்து கொண்டு வந்த வெடிப்பும் காண முடியும். இப்போதெல்லாம் அங்கே பாதை இன்னும் குறுகிவிட்டதால் அழைத்துச் செல்வதில்லை என்று கேள்விப் பட்டேன்.
Deleteமலை உச்சியில் அரண்மனை இருக்கலாம் ராஜலக்ஷ்மி, பல கோயில்கள் மலை உச்சியில் தானே காணப்படுகின்றன. அது போல் இருந்திருக்கலாம். காலப்போக்கில் பாழடைந்திருக்கலாம். நீங்கள் அங்கே சென்று பார்த்தால் புரியும். ஆனால் மிகக் கடினமான பயணம். என்னைப் பொறுத்தவரை நாங்கள் சென்ற திருக்கயிலை யாத்திரையை விட இது கடினமான ஒன்று. பல இடங்களில் மலையிலேயே ஏற வேண்டும். ஒரு பாறையைப் பிடித்துக் கொண்டு ஏறி இன்னொரு பாறைக்குத் தாவி அங்கிருந்து எதிர்ப்பக்கம் போய், அங்கே மலையிலிருந்து வரும் நதியைக் கடந்து, நதி ஓடும்போது நடுவில் காணப்படும் வழுக்குப் பாறைகளில் நடந்துனு ரொம்பவே திகிலான பயணம். கீழ் அஹோபிலத்திலேயே என்னைத் தங்கச் சொன்னார்கள். உங்களால் முடியாதுனு ரொம்பவே பயமுறுத்தினார் எங்கள் ஒருங்கிணைப்பாளர். ஆனால் அஹோபிலம் சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்திருந்த வழிகாட்டி தைரியம் சொல்லி என்னை அழைத்துச் சென்றார். கடைசி வரை பாதுகாப்பாகவும் அழைத்து வந்தார். ஒரு இடத்தில் நதியிலிருந்து மலையில் ஏறியதும் கீழே கிடு கிடு பள்ளம் இருக்கும். அந்தப் பக்கம் திரும்பாமல் நேரே பார்த்துக் கொண்டு போங்கனு சொல்வாங்க. கண் என்னமோ அந்தப் பள்ளத்தைத் தான் பார்க்கும். மனது குரங்குத் தனமா விழுந்துடுவோமோனு நினைக்கும். மேலும் ஒரு குறிப்பு! புடைவை அணிந்து செல்லாதீர்கள். சல்வார், குர்த்தா அல்லது லெகீஸ் மாதிரியான உடை அணிந்து செல்லலாம்.
Deleteமாட்டுத்தாவணியா!!
ReplyDeleteமாட்டுச் சந்தையை மாட்டுத் தாவணி என்று சொல்வார்கள் அப்பாதுரை. ஒரு காலத்தில் இங்கே மாட்டுச் சந்தை நடைபெற்றிருக்கிறது. :)
Deleteதாம்பணி என்னும் சொல்தான் பேச்சு வழக்கில் திரிந்து தாவணி என ஆகிவிட்டதாய்ச் சொல்வார்கள்.
Deleteஒருமுறை செல்ல வேண்டும் அம்மா...
ReplyDeleteஉங்களுக்குக் கிட்டக்கத் தானே போயிட்டு வாங்க டிடி!
Deleteஆணைகட்டிப் போரடிக்கும் அழகான தென்மதுரையில் நாரசிம்ம ஸ்வாமி. நான் இன்னும் பார்க்கவில்லை. கங்கணம் கட்டிப் போக வேணும். அருமையான விளக்கங்களுடன் படங்களும் உவை சேர்க்கின்றன கீதா. நரசிம்கனின் தரிசனத்துக்கு மிக நன்றி. பெரிய ஆ கிருதிதான்.
ReplyDeleteகட்டாயம் போய்ப் பாருங்க வல்லி! இவர் தான் எல்லா நரசிம்மர்களிலேயும் பெரியவர்னு சொல்றாங்க!
Deleteஇதுவரை சென்றதில்லை. செல்ல வேண்டும் - மே மாதம் மதுரை செல்லும் வாய்ப்பிருக்கிறது - பார்க்கலாம்! :)
ReplyDeleteமே மாசம் எப்போப் போறீங்கனு தெரியலை. மே 3 ஆம் தேதி சித்ரா பௌர்ணமி, அழகர் ஆத்திலே இறங்குவார். ஆகவே போனால் மே 3 தேதிக்கப்புறமாப் போங்க. முன்னால் போனால் மீனாக்ஷியைப் பார்ப்பதும் கடினம். சித்திரைத் திருநாள் நடக்கும். மே 1 ஆம் தேதி மீனாக்ஷி தேர்னு நினைக்கிறேன்.
DeleteEnga oru narasimhar patri ezuthiya girrrrrrr amma vazga, vazga
ReplyDeleteஎன்னாது? உங்க ஊரா? சரியாப் போச்சு,போங்க. நாங்க உங்களுக்கு முன்னாடியே பிறந்துட்டோம்! முதல்லே அது எங்க ஊர்! அப்புறமாத் தான் உங்க ஊர்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
Delete