ஶ்ரீராமநவமி மிக எளிமையான முறையில் கொண்டாடப் பட்டது. பாயசம், வடை, பாசிப்பருப்புச் சுண்டல், (மாமியார் வீட்டில் வடைப்பருப்பு வழக்கம் இல்லை)பானகம், நீர் மோர், சாதம், பருப்பு, சாம்பார், ரசம். எல்லாமும் நிவேதனம் செய்து சாப்பிட்டும் ஆகி விட்டது. எல்லா நிவேதனங்களுடனும் படம் எடுக்கலை. முதலில் படமே வேண்டாம்னு நினைச்சுட்டு எடுக்கலை. அப்புறமாத் தான் ராமரை மட்டுமாவது எடுக்கலாம்னு நினைச்சு எடுத்தேன். அப்போப் பானகம் நீர் மோர், வெற்றிலை, பாக்கு, பழம் கீழே இருந்தது. அதை மட்டும் எடுத்திருக்கேன். இந்த வருஷம் உங்களுக்கெல்லாம் பானகமும், நீர்மோரும் தான். :)))) வடை, சுண்டல் எல்லாம் நாங்களே சாப்பிட்டாச்சு!
ராமருக்குக் கதம்ப மாலை நான் கட்டினேன். துளசி மாலையும் கட்ட வாங்கி வைச்சுட்டுக் கட்ட முடியலை. ரொம்ப நேரம் உட்காரவும் முடியலை. நிற்கவும் முடியலை. வலி வந்துடுது. :(
மிக அருமை...
ReplyDeleteஸ்ரீராமநவமி நல்வாழ்த்துக்கள்..
நன்றி ராம்வி.
Deleteஸ்ரீ ராமனுக்கு ஜே.
ReplyDeleteலக்ஷ்மணனுக்கு ஜே
சீதா பிராட்டிக்கு ஜே
அனுமனுக்கு ஜே.
கீதா மாமி ஆத்து
நீர் மோர் பானகத்துக்கு
ஜே. ஜே.
சுப்பு தாத்தா.
www.menakasury.blogspot.com
ஹிஹிஹி, இந்த வருஷம் மத்தவங்களுக்கு எல்லாம் பானகம் , நீர்மோர் தான். நாங்க ரெண்டு பேர் மட்டும் பாயசம், வடை, சுண்டல் சாப்பிட்டுட்டோம். :)
Deleteவாழ்த்துக்கள் அம்மா...
ReplyDeleteநன்றி டிடி.
Deleteஹாப்பி பர்த் டே ராம்ஸ்!
ReplyDeleteதாங்கீஸ், தாங்கீஸ்
Deleteவடை சுண்டல் கிடையாதா? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..... மீதி எல்லாம் நீங்களே வெச்சுக்குங்க!
ReplyDeleteவடை, சுண்டல், பாயசம் எல்லாம் சாப்பிட்டாச்சே!
DeleteThanks for panagam & neer more, vadai & sundal illaina nanga comment poda mattom
ReplyDeleteஹிஹி, அதான் போட்டிருக்கீங்களே!
Deleteசகல சௌபாக்கியங்களுடன் சீரும் சிறப்புமாக நீடூழி ஸ்ரீராமன் வாழ வாழ்த்துகிறேன்.பிரசாதங்களை எல்லாம் பாவனையில் அருந்தினேன். நன்றி மேடம்
ReplyDeleteஇந்த உலகம் உள்ளவரை ஶ்ரீராமன் வாழ்வான் ஐயா. சந்தேகமே இல்லை. நன்றி.
Deleteஶ்ரீராமஜெயம்....... ஶ்ரீராமஜெயம்.. ஶ்ரீராமஜெயம்.
ReplyDeleteஅட? உங்க வீட்டு மெனு கொடுப்பீங்கனு பார்த்தால், க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)
Deleteநீர்மோர், பானகம், அரிசிப் பாயசம். அது கூட மாலைதான் முடிந்தது.
Deleteஜெய் ஸ்ரீராம்! எங்காத்துல பானகம் மட்டும்தான்!
ReplyDeleteஎன்ன ஆச்சு? பத்தியமாப் போட்டுட்டீங்க?
Deleteஸ்ரீ ராம ராமா ..
ReplyDeleteவாங்க அனுராதா பிரேம், நன்றிம்மா. முதல் வருகைனு நினைக்கிறேன்.
Deleteபூஜை அறை மிக அழகாக, மங்களகரமாக இருக்கிறது அம்மா.
ReplyDeleteரொம்ப நன்றி அனிதா ஷிவா!
Deleteவாட் இஸ் வடைபருப்பு?
ReplyDeleteவடைப்பருப்பு சாலடில் ஒரு வகை அப்பாதுரை. பாசிப்பருப்பை நன்கு கழுவி விட்டுக் குறைந்தது இரண்டு மணி நேரம் ஊற வைக்கணும். அப்புறம் நீரை நன்கு வடிகட்டி, அதில் பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய், மாங்காய், பச்சை மிளகாய், கருகப்பிலை, கொ.மல்லி, உப்பு சேர்த்து எலுமிச்சம் பழம் பிழிந்து கொண்டு கடுகு, பெருங்காயம் தாளிக்கணும். இப்போதெல்லாம் இவற்றோடு காரட்டும் நறுக்கிச் சேர்க்கின்றனர். நிவேதனத்துக்கு என்பதால் நான் காரட் சேர்ப்பதில்லை! :) வடை கூட மிளகு போட்டுத் தட்டுகிறேன். மி.வத்தல் போடுவதில்லை. பச்சைப் பயறையும் முளைகட்டி இதே போல் சாலட் செய்யலாம்.
Deleteசூப்பரா இருக்குதே ரெசிபி...
Deleteகதம்பமாலை கண்ணில் ஒற்றிக்கொள்ளும் அழகு. வாழ்த்துகள் கீதா மேடம்.
ReplyDelete