நம்ம பால்கனிக்கு வந்த விருந்தாளிங்க. திடீர்னு பார்த்தால் கீச் கீச் சப்தம். திரும்பினேன். பால்கனியில் இவங்க ரெண்டு பேரும் உட்கார்ந்திருக்காங்க. பால்கனிக் கதவு உள்பக்கமாச் சார்த்தி இருக்கோம். கதவைத் திறந்தால் இவங்க ஓடிடுவாங்க. ஆகவே உள்ளே உள்ள கண்ணாடிக் கதவின் வழியாகவே அப்போக் கிட்டத்தில் கிடைத்த அலைபேசி மூலம் படம் எடுத்தேன். எப்படித் தான் தெரிஞ்சுதோ, உடனே ஒவ்வொருத்தரா என்னமோ பேசிட்டுக் கிளம்பிட்டாங்க. அங்கே சாப்பாடு போட்டுப் பார்க்கணும்.
இவங்க தான் வந்தது. படத்தில் தெளிவாய்த் தெரிய வாய்ப்பில்லை. தள்ளி நின்று எடுத்தது ஒரு காரணம். இரட்டைக் கண்ணாடிக்குப் பின்னர் நின்று எடுத்தது இன்னொரு காரணம். கொஞ்சம் நெருங்கினாலும் பறந்துடுமோனு கவலை. வரேன் இப்போ. வேலை இருக்கு. மாடியிலே வெங்காய வடாம் காயுது. போய்ப் பார்க்கணும். போன வருஷம் திருட்டுப் போனமாதிரி இந்த வருஷம் போகாமல் இருக்கணும். :)))))
கீழுள்ள குருவிப் படம் கூகிளார் தயவு
இங்கே குருவிகள் அமிர்தமா பேசறது. படம் எடுக்க முடியலை கீதா. இந்தப் பறவையின் பெயர்
ReplyDeleteஎன்னன்னு தெரியலையே . அழகா இருக்கு.
இது என்ன குருவினு எனக்கும் தெரியலை. ஆனால் இங்கே நிறைய இருக்கு. சளசளனு பேசிட்டே இருக்கும். :)குருவி வகையைச் சேர்ந்தது தான். :)
Deleteஇரண்டாவது படம் இணையத்திலிருந்தா?
ReplyDeleteஆமாம், ஶ்ரீராம், போட்டிருக்கணும், கவனிக்கலை. சேர்த்துடறேன்.
Deleteவந்த விருந்தாளிகளுக்கு மாடியில் விருந்து வைத்து விட்டு,
ReplyDeleteபால்கனியில் படம் எடுக்க முயன்றால் எப்படி?
போய் பாருங்கள் உண்ட மயக்கம் தீர ஜோராய் ஜோடியாய் காட்சி தருவார்கள்!
படம் எடுத்து பதிவில் போடுங்கள்!
நல்ல படம்!
நல்ல வடாம்!
நன்றியுடன்,
புதுவை வேலு
வாங்க யாதவன் நம்பி. கருத்துக்கு நன்றி.
Deleteபறவைகள்பலரகம். அவற்றில் நீங்கள் பார்த்தது ஒருரகமாய் இருக்கலாம் குருவி வகைகள் என்றாவது தெரிவிக்கின்றனவே சந்தோஷப் படுங்கள். கீழேஅமர்ந்திருக்கு குருவி அமர்க்களமால இருக்கிராஊ. .
ReplyDeleteகீழே இருக்கும் குருவி படம் இணையத்திலிருந்து எடுத்தது ஐயா. குறிப்பிட மறந்துவிட்டேன். :(
Deleteசரியாகத் தெரியல அம்மா...
ReplyDeleteஆமாம், டிடி, ரெண்டு கதவு, ரெண்டும் கண்ணாடிக் கதவு! :))) கதவைத் திறந்தால் பறந்துடுமே!
Deleteநல்ல விருந்தாளி தான். காலையில் இவ்விருந்தாளிகளின் குரல் கேட்டு எழுந்திருப்பதில் ஒரு சுகம்!
ReplyDeleteஆமாம், வெங்கட், காலை தினமும் கொஞ்சமும் சோம்பல் இல்லாமல், அலுப்பு இல்லாமல் புத்துணர்வோடு குரல் கொடுக்கும் பறவைகளை நினைத்தால் ஆச்சரியமாகத் தான் இருக்கிறது. :)
Delete