நம்ம எங்கள் ப்ளாக் நண்பர் ஶ்ரீராம் அவர்களின் தந்தை ஹேமலதா பாலசுப்ரமணியன் என்னும் பாஹே நேற்று இறந்துவிட்டாராம். ஶ்ரீராம் அவரின் உடல்நிலை குறித்து நிறையச் சொல்லி இருந்தாலும் இந்தத் திடீர் இழப்புக் கொஞ்சம் எதிர்பாராதது தான். ஶ்ரீராமுக்கும் அவர் குடும்பத்தினருக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள். முகநூலில் கௌதமன் செய்தியைப் பகிர்ந்திருக்கிறார்.
*********************************************************************************
இனி மற்றச் சில செய்திகள் குறித்துப் பார்த்தால்
இந்த வாரம் முழுவதும் சோகமான செய்திகளே கிடைத்திருக்கின்றன. அமெரிக்காவில் ஹூஸ்டன் நகரில் பெய்த கடுமையான மழையில் (சென்னை மழையை விடக் கடுமை) எங்கள் மகளின் சிநேகிதியின் கணவர் காரில் செல்கையில் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். ஆறு வயது, நான்கு வயது உள்ள இரு குழந்தைகளோடு அந்தப் பெண் தவியாய்த் தவிக்கிறது. இதைத் தவிரவும் இன்னமும் எட்டுப் பேர்கள் மழை வெள்ளத்தில் காரோடு அடித்துச் செல்லப்பட்டிருக்கின்றனர். நினைக்கவே வேதனையாக இருக்கிறது.
இது தான் போச்சுனு குழுமத்தில் போனால் அங்கேயும் நண்பர் ஒருவர் தெரிந்தவர்களின் பையர் ஆற்றில் குளிக்கப் போனவர் காணாமல் போய் சுமார் ஒரு மாசமாகத் தேடியதைச் சொல்கிறார். ஆறுதலுக்குத் தொலைக்காட்சி பார்க்கலாமென்றால் தொலைக்காட்சியிலோ அரக்கன் ஒருத்தன் ஒரு பெண்ணை அடித்து இழுத்துச் செல்கிறான். எதுக்குனு நினைக்கறீங்க? பாலியல் பலாத்காரம் பண்ணுவதற்கு! நட்ட நடுத் தெருவில் அவன் அடித்து இழுத்துப் போவதை யாரும் தடுக்கக் கூட இல்லை! இப்படி எல்லாமா கொடூரம் நடக்கும்? இதற்குப் பெண்களா காரணம்? அன்றும், இன்றும், என்றும் மாறவே மாறாத ஆண் மனமன்றோ காரணம்!
இப்படி எல்லாமா பெண்ணைப் பார்த்தால் வெறி தோன்றும்? இது இந்தியாவில் மட்டும் அதிகமா இருக்கிறாப்போல் இருக்கு! அல்லது இங்கே இம்மாதிரிச் செய்திகளை மட்டும் சிறப்பு வெளியீடு செய்யறாங்களானு தெரியலை! அரசாங்கமும் என்ன என்னமோ செய்துட்டுத் தான் இருக்கு! ஆனாலும் பெண்ணுக்குப் பாதுகாப்பு என்பதே இல்லை! தமிழ்நாட்டில் தனியார் பள்ளி ஆசிரியை ஒருவர் தன் வீட்டு வேலைக்காரியினாலேயே அவரின் உதவியோடு குத்திக் கொல்லப்பட்டிருக்கிறார். பாவம் இரு சின்னஞ்சிறு குழந்தைகள்! மொத்தத்தில் எங்கேயுமே நிலைமை சரியில்லை. இன்னும் இருக்கு! ஆனால் எனக்கே அலுப்பா இருக்கிறதால் மற்றவை குறித்துப் பகிரவில்லை! :(

Our heart=felt condolences.
ReplyDeletesubbu thatha
www.subbuthatha.blogspot.com
ஏன் இப்படி வேதனையான நிகழ்வுகள் தொடர்கின்றன....
ReplyDeleteநண்பர் ஸ்ரீராம் அவர்களின் அப்பாவுக்கு எமது இரங்கல்கள்.
அய்யோ சோகங்கள் தொடருதே...
ReplyDeleteவருந்துகிறோம்...
//நம்ம எங்கள் ப்ளாக் நண்பர் ஶ்ரீராம் அவர்களின் தந்தை ஹேமலதா பாலசுப்ரமணியன் என்னும் பாஹே நேற்று இறந்துவிட்டாராம்.//
ReplyDeleteஇந்த ஆண்டு 2016 ஆரம்பம் முதல் வலையுலகில் அடுத்தது இதுபோன்ற சோகமான செய்திகளாகவே கிடைத்து வருவது மிகவும் வருத்தமாக உள்ளது. :(
ஸ்ரீராமின் அப்பா அந்தக்காலத்திலேயே, ஒரு சிறந்த எழுத்தாளர் என்பதே, எனக்கு சமீபத்தில்தான், எங்கள் ப்ளாக்கில் அவரின் கதையை ஒரு செவ்வாய்க்கிழமையன்று படித்த பின்புதான் தெரியவந்தது. அதற்குள் இப்படி ஓர் அதிர்ச்சியான செய்தி கேள்விப்பட வேண்டியதாக உள்ளது. :(
ஶ்ரீராமுக்கும் அவர் குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள்.
அவர் ஆன்மா சாந்தியடைய நம் பிரார்த்தனைகள்.
முதலில் இராஜராஜேஸ்வரி பின் வைகறை இப்போது பாஹே சம்பிரதாயமாய் இரங்கல்கள் தெரிவிக்க மனம் இல்லைஎல்லோரும் போகுமிடம்தானே என்று ஆறுதல் படுத்திக் கொள்கிறேன்
ReplyDeleteஸ்ரீராம் அவர்களின் தந்தையார் காலமான செய்தி கேட்டு வருந்துகிறேன். அவர் ஆத்மா சாந்தியடையட்டும். வயோதிகம்,அவரின் உடல்நிலை குறித்து தெரிந்தபோது அவர்கள் மேலும் கஷ்டப்படக்கூடாது என்று நினைத்தேன். எழுதவும் எழுதினேன். சில சமயம் அவர்களுக்கு உடல்நிலையிலிருந்து விடுதலை கிடைத்தது என்று எண்ண வேண்டியுள்ளது. அவரின் ஒரு கதை படித்தபோது அவரைப்பற்றி அரிந்த எனக்கு
ReplyDeleteமிகவும் பாதிப்பாகத்தான் எழுதுகிறேன். அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும். நல்லுலகம் அவரை வரவேற்றிருக்கும். ஸ்ரீராம் அவர்களுக்கும், அவரின் குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
எங்கெங்கும்
எங்கெங்குகாணினும் சோகமடா. மனம் வருந்தியது. ஸ்ரீராமின் தந்தையார் அமரரானார். வயோதிகம், உடல் நலக்குறைவு,எல்லாமாக அவருக்கு விடுதலையைக் கொடுத்து விட்டது. எவ்வளவு வயதானவர்களானாலும் பிரிவு வாட்டவே செய்யும். அவரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன். ஒரு பின்னூட்டம் ஓடிவிட்டது. என்னுடைய அனுதாபங்கள் ஸ்ரீராமின் குடும்பத்தினருக்கு. வருத்தமுடன்
ReplyDeleteஸ்ரீராமின் தந்தை பாஹே அவர்கள் காலமான செய்தி அறிந்து மிகவும் வருத்தமாக இருக்கிறது. அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனைகள்.
ReplyDeleteபார்த்ததில்லை, பேசியதில்லை என்றாலும் 'எங்கள் பிளாக்'கில் சமீபத்தில் வெளிவந்திருந்த அவர் சிறுகதை மூலம் அதை வாசித்த எல்லோரின் நெஞ்சிலும் அவர் நிறைந்திருந்தார்கள்.
ஸ்ரீராமிற்கும் அவர் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.
வருந்துகிறேன்.
ReplyDeleteபாஹே அப்பாவின் செய்தி இப்போதுதான் பார்க்க முடிந்தது. இணையம் வேறு தொல்லை செய்கிறது. ஏனோ சோகச் செய்திகளாகவே இருக்கிறது....பாஹே அப்பா அல்சிமரில் இருந்தார். ஸ்ரீராமிடம் னீங்கள் பேசினால் எங்கள் இரங்கல்களையும், பாஹே அப்பாவின் பாதங்களில் நமஸ்காரங்களையும் தெரிவித்து விடுங்கள். நான் இங்கிருந்து ஸ்ரீராம் நம்பரை முயற்சி செய்தேன் போகவில்லை. மீண்டும் மீண்டும் அடித்தாலும் நம்பர் நாட் இன் யூஸ் என்று வருகிறது. நம்பர் மாறியிருக்கிறதா தெரியவில்லை. மெசேஜும் போகவில்லை.
ReplyDeleteகீதா
அறிஞர் ஸ்ரீராம் அவர்களின் தந்தையார் காலமான செய்தி கேட்டுத் துயருற்றேன்.
ReplyDeleteஅவர்கள் குடும்பத்தாருக்குத் துயர் பகிருகின்றோம்.
ஶ்ரீராம் அவர்களுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள். அன்னாரின் ஆண்மா இறைவன் திருவடியில் இளைப்பாற ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.
ReplyDeleteஶ்ரீராம் அவரகள் குடும்பத்தினருக்கு இழப்பைத்தாங்கும் சக்தியை ஆண்டவன் அளிக்க வேண்டுகிறேன்.
சோகச்செய்திகள்! குடும்ப சூழ்நிலை காரணமாக ஒன்றரைமாதமாக இணையம் பக்கம் வர இயலவில்லை! வந்தால் இப்படி மரணச்செய்திகள் கலங்க வைக்கிறது. ஆழ்ந்த இரங்கல்கள்!
ReplyDeleteஅனைவருக்கும் நன்றி. ஶ்ரீராமோடு இன்று காலை பேசினேன். சென்னையில் தான் இருக்கிறார். சென்னை நண்பர்கள் பார்க்க விரும்பினால் செல்லலாம். அலைபேசி எண். 99400 28358 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
ReplyDeleteபொதுவாகத் திங்கட்கிழமை யாரும் நேரிலோ அல்லது தொலைபேசியிலோ துக்கம் விஜாரிக்க வேண்டாம்.
ReplyDeleteஒருவர் இறந்துபோன நாள் + பாடி எடுக்கப்படும் நாள் ஆகியவை என்ன கிழமையாக இருப்பினும் போய் துக்கத்தில் பங்கு கொள்ளலாம். அதிலும் குளிகை இல்லாத நேரமாகப் பார்த்துச் செல்ல வேண்டும். குளிகை நேரத்தில் பயணம் செல்லலாமே தவிர, அந்த ஒன்றரை மணி நேரத்திற்குள் இறந்தவர் வீட்டுக்குப்போவதோ, துக்கம் விஜாரித்துவிட்டு நம் வீட்டுக்குத் திரும்பி வருவதோ கூடவே கூடாது என்பார்கள்.
அதுபோல இறந்த தினத்திலிருந்து ஒன்பதாம் நாளும் துக்கம் விஜாரிக்கவே கூடாது என்பார்கள். ஸ்ரீராமின் தந்தை 22/04/2016 வெள்ளிக்கிழமை இறந்திருப்பதாகத் தெரிவதால், ஒன்பதாம் நாளான 30/04/2016 சனிக்கிழமை யாரும் நேரிலோ தொலைபேசியிலோ துக்கம் விஜாரிக்க வேண்டாம்.
பொதுவாக இதுபோல, பிறகு ஒருநாள், நாம் ஒருவரை துக்கம் விஜாரிப்பது முடிந்தவரை வியாழக்கிழமையாகவோ அல்லது ஞாயிற்றுக்கிழமையாகவோ இருந்தால் நல்லது. அதுவும் நாம் விஜாரிப்பது குளிகை நேரமாக இல்லாமல் இருக்க வேண்டும் என்பார்கள்.
குளிகை கால நேரம் பற்றி தினசரி காலண்டர்களில் போட்டிருக்கும். ஒவ்வொரு நாளும் ஒன்றரை மணி நேரம் மட்டுமே அந்தக் குளிகை காலம் இருக்கும். அந்த நேரங்களில் ஒருவர் இறப்பு பற்றி துக்க விஜாரிப்பதைத் தவிர்ப்போமாக.
தினசரி குளிகை நேரங்கள்:
(ஓர் தகவலுக்காக மட்டுமே)
=============================
ஞாயிறு: 3.00 to 4.30
திங்கள்: 1.30 to 3.00
செவ்வாய்: 12.00 to 1.30
புதன் 10.30 to 12.00
வியாழன் 9.00 to 10.30
வெள்ளி 7.30 to 9.00
சனி 6.00 to 7.30
ஆறுதல் சொன்ன அனைத்து நட்புகளுக்கும் நன்றி.
ReplyDeleteமிக வருத்தமாக இருக்கிறது. ஸ்ரீராம் தன் அம்மாவின் மேல் வைத்திருந்த
ReplyDeleteபிரியம் அறிவேன்.
தந்தையின் மேல் அளவுகடந்த சோகம். இப்படி ஆகிவிட்டதே என்று.
நீங்கள் சொல்வது போல் பெற்றோர் இணைந்திருப்பார்கள்.
என் அஞ்சலிகள்.Thanks for the number Geetha.
இப்போதே இந்த துயரச் செய்தியை இந்தப் பதிவின் மூலம் கேள்விப்படுகிறேன். சகோதரர் ஸ்ரீ அவர்களுக்கும் குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். பெற்றோர் நம்மை நிரந்தரமாய் நீங்குதல் ஈடு செய்யமுடியாத இழப்பு . தெய்வமாய் நம்மை காப்பாற்றுவார்கள் எனும் நம்பிக்கை எனக்கும் பூரணமாக உண்டு.
ReplyDeleteஇந்த வருட ஆரம்பமே சரியில்லை என்று தோன்றுகிறது. இனிமேலாவது நிலைமை மாற கடவுளைப் பிரார்த்திப்போம்.
ReplyDeleteஆறுதல் சொல்லியிருக்கும் அனைவருக்கும் என் நன்றிகள்.
ReplyDelete