ம்ம்ம்ம்ம்ம், முந்தாநாள் தற்செயலாக ரவா தோசை செய்தேன். அப்போ எடுத்த படங்கள் இவை. அடுப்பில் தோசைக்கல்லில் இருக்கு!
மாவு ஊற்றியது இங்கே பார்க்கலாம். கல் பெரியது. படம் எடுக்கும் எண்ணம் வழக்கம் போல் இல்லை. அப்புறமா நான் சாப்பிட தோசையை வார்க்கையில் திடீர்னு தோன்றி எடுத்தேன். செல்லில் தான்! இன்னொரு நாள் பண்ணினால் காமிராவில் எடுத்துப் பதியணும். நினைவு வரணும். காமிராவை சமையலறையிலேயே வைச்சிருக்கணுமோ? :) தோசைக்குத் தொட்டுக்க நூல்கோல் சாம்பார், தக்காளிச் சட்னி!
நூல்கோல் வாங்கிச் சமைத்து நாட்கள் பலவாகி விட்டன. ஓரிருமுறை சமைத்திருக்கிறோம். அவ்வளவுதான்!
ReplyDeleteஶ்ரீராம், நூல்கோலும் பட்டாணியும் போட்டுக் காஷ்மிரி மசாலா சேர்த்துக் கூட்டு செய்து ஜீரா ரைஸுடனோ அல்லது ஃபுல்கா ரொட்டி, பராட்டாவுடனோ சாப்பிட்டுப் பாருங்கள்! செய்முறை தருகிறேன். :)
Deleteமடர் புலவுடனும் சாப்பிடலாம். :)
Deleteஎதுக்கு செய்முறைலாம் தரணும்? எங்கள் இடத்துக்கு வரும்போது சொல்லிவிட்டு வந்தால் பண்ணித்தருகிறேன் என்று சொல்லியிருக்கலாமே...
Deleteசெய்முறை கொடுத்தால் விட்டிலேயே பண்ணிச் சாப்பிடலாமே! :)
Deleteநாட்கள் என்று சொல்வதை விட வருடங்கள் என்று சொல்லலாம்.
ReplyDeleteஅலர்ஜி??? :) சாம்பார் நன்றாக வாசனையாக இருக்கும்! சப்பாத்திக்கு மிக்சட் வெஜிடபுள் பண்ணும்போது நூல்கோலும், பீன்ஸும் இருந்தால் அருமையா இருக்கும். :)
Deleteவேணுமா னு கேட்டால் எப்படி ..?
ReplyDeleteஅனுப்பி வைங்க கன்னியாகுமரி க்கு
ஒரு பார்சல்....
பார்சேல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல் வந்ததானு சொல்லுங்க!
Deleteபடங்கள் மகா மோசம்! போடாமலே இருந்திருக்கலாம்!
ReplyDeleteஉங்களுக்கு ரவாதோசையே கிடையாது போங்க! ஹூம்! இந்தப்படத்துக்கும் ரசிகப்பெருமக்கள் இருக்காங்க தானே! அப்புறம் என்னவாம்?
Deleteதலைப்பை மாற்றுங்கள் எனக்கு கோபம் வருது.
ReplyDeleteஹிஹிஹி, மாட்டேனே!
Deleteமுந்தா நாள் வார்த்த தோசையை கல்லில் அதுவும் மூடாம மூணு நாள் வச்சுண்டு இப்ப வேணுமா அப்படின்னா என்ன அர்த்தம்?
ReplyDeleteஎன்ன அர்த்தம்னேன் !!
அடுத்த தடவையாவது தோசை அதுவும் ரவா தோசை, அதுவும், நெய் ரவா வெங்காய மசால் தோசை வார்ப்பதற்கு முன் இரண்டு நாள் முன்னதாக சொல்லி அனுப்பவும்.
அப்பத்தான் ஒரு டாக்சி புடிச்சுகினு அங்கே வந்து ருசிக்க முடியும்.
அது இருக்கட்டும்.
இந்த ரவா ,,,
அதற்கு மூலப்ப்பொருள் என்ன ?
அத எப்படி பண்ணுகிறார்கள் ?
விளக்கம் தேவை.
சுப்பு தாத்தா.
சம்பா கோதுமையிலிருந்து சுத்திகரிக்கப்படுவதாக ஒரு சிலரும் கோதுமையிலிருந்து தான் என ஒரு சிலரும் சொல்கின்றனர். எதுக்கும் ரவையின் பூர்விகம் குறித்து ஆராய்கிறேன். :)))
Delete//முந்தா நாள் வார்த்த தோசையை கல்லில் அதுவும் மூடாம மூணு நாள் வச்சுண்டு இப்ப வேணுமா அப்படின்னா என்ன அர்த்தம்?
Deleteஎன்ன அர்த்தம்னேன் !!//
ஹிஹிஹி,படங்கள் சரியா வரலைனு தெரிஞ்சது! அதான் போடலாமா வேண்டாமானு யோசிச்சுட்டு இருந்தேன். அப்புறமாப் போட்டுட்டேன். :)
சமையல் பதிவுன்னா செய்முறை போடணும், ஆமா :-)
ReplyDeleteபோட்டுடுவோம். என் கசினும் முகநூலிலே கேட்டிருக்கா! :)
Deleteஅருமையான பகிர்வு
ReplyDeleteதங்கள் பதிவுகளை இணைத்து மின்நூல் ஆக்க உதவுங்கள்
http://tebooks.friendhood.net/t1-topic
நன்றி ஜீவலிங்கம் யாழ்ப்பாவாணன்!
Delete