அது 2005 ஆம் வருடம்! உடல்நிலை ரொம்பவே முடியாமல் வீட்டில் வேலையும் அதிகம் செய்ய முடியாமல் மனசு நொந்து போயிருந்த சமயம். பையர் கணினி வாங்கிக் கொடுத்துச் சும்மா இருக்கும் நேரங்களில் கணினியில் பொழுது போக்கச் சொல்லிச் சென்று விட்டார். விளையாட்டாக ஆரம்பித்தேன். 2005 ஆம் வருடம் நவம்பர் மாதம். அடுத்த மாதம் பையரின் கல்யாணம்! அப்போது தான் விளையாட்டாக ஆங்கிலத்தில் தட்டுத் தடுமாறிப் பதிவை ஆரம்பித்தேன்.
சில நாட்களில் எனக்கு அதன் மூலம் பல பதிவுகளுக்கும் தொடர்பு ஏற்பட்டது. அவற்றில் முக்கியமானவர்கள் என்றால் முதலில் அம்பி, பின்னர் ரேவதி! என்றாலும் நான் முதலில் பழகிக் கொண்டது துளசி கோபாலையும், நுனிப்புல் உஷாவையும் தான். இன்றும் அவர்கள் இருவரும் நண்பர்களே என்றாலும் சிறப்பான நண்பர்கள் என்று சொல்லப் போனால் (இதில் துளசிக்கோ, உஷாவுக்கோ வருத்தமெல்லாம் இருக்காது!) அம்பியும் ரேவதியும் தான். நான் மெல்ல மெல்லக் கணினித் தமிழ் எழுதப் பழகியது வெண்பா வடித்துக்கொண்டிருந்த ஜீவ்ஸ் என்னும் ஐயப்பனின் உதவியால் தான். அதே போல் ரேவதியும் நான் ஆரம்பித்தபோது கிட்டத்தட்ட அதே சமயம் ஆரம்பித்து அவரும் பழகிக் கொண்டு இன்று இணைய உலகிலும் முகநூலிலும் மிகவும் பிரபலமானவராக ஆகி இருக்கிறார்.
பத்து வருடங்களுக்கு முன் தொடர்ந்த நட்பு இன்னமும் தொடருவதோடு அல்லாமல் குடும்ப நண்பர்களாகவும் ஆகி விட்டோம். அந்த இனிய நட்புக்கு இன்று பிறந்த நாள். எனக்கு ஏதாவது ஒண்ணுன்னா முதலில் விசாரிப்பது ரேவதியும், எங்கள் ஶ்ரீராமும் தான். ரேவதி வீட்டுக்கே தொலைபேசி விடுவார். இல்லைனா தவிச்சுப் போயிடுவார். ஒருத்தர் கிட்டேயும் சொல்லாமல் அயோத்திப் பயணம் போயிட்டேன். எல்லாம் என்னோட விளையாட்டுப் புத்தி காரணமாத் தான்! ஆனால் ரேவதி பத்துநாட்களாக இணையத்தில் நான் இல்லைனதும் தவிச்சுப் போயிட்டாங்க. எப்படியோ என் அலைபேசி எண்ணைத் தேடி எடுத்து என்னைத் தொடர்பு கொண்டாங்க. நான் அப்போது வால்மீகி ஆசிரமத்தில் இருந்தேன். பின்னர் அவங்களிடம் இரண்டு நாட்களில் திரும்புவதாகவும் சொன்னேன். அதுக்கப்புறமாத் தான் அவங்களுக்கு சமாதானம் ஆச்சு!
நட்பு எவ்வளவு ஆழம் என்பதைப் புரிய வைத்த ரேவதிக்கு இன்று பிறந்த நாள். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ரேவதி! உங்கள் உடல்நிலை தேறி உங்கள் மனம் மகிழ்ச்சியுடன் இருக்கப் பிரார்த்தனைகளும் கூட. என் சார்பிலும் என் கணவர் சார்பிலும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
தங்கள் தோழிக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளையும் சொல்லிடுங்கோ. பகிர்வுக்கு நன்றிகள், மேடம்.
ReplyDeleteவல்லிமாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை எங்கள் சார்பிலும் தெரிவித்துக்கொள்கிறேன் கொள்கிறோம்.
ReplyDeleteவல்லிம்மாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொல்வதில் உங்களுடன் நானும் கலந்து கொள்கிறேன். தமிழ்ப் பத்திரிகைகளின் பொற்கால எழுத்துக்களின் ஆகச் சிறந்த ரசிகருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅருமையான பதிவு. இவ்வாறு தான் நாம் ஒவ்வொருவரையும் அறிந்து, புரிந்து கொள்கிறோம். அடிக்கடி ரேவதி நரஸிம்ஹனுடன் இரு சொல் அளவளாவுதல் நடக்கும். அவருடைய தாத்தாவைக்கூட கண்டுபிடித்து விட்டேன். அவருக்கு என் மனமார்ந்த பிறந்த தின வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇன்னம்பூரான்
தங்கள் தோழிக்கு
ReplyDeleteஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
அன்பு வல்லி அக்காவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை நானும் இங்கே சொல்லிக்கிறேன்.
ReplyDeleteவாஞ்சையாக பழுகுவது அக்காவால் மட்டும் தான் முடியும்.
அன்பும், கருணையும் அந்த பார்வையில். எல்லோரும் வாழ பிரார்த்திக்கும் நல்லமனம் வாழ்க!
உங்கள் தோழிக்கு எம் சார்பில் வாழ்த்துக்கள்
ReplyDeleteதெரிவித்துக் கொள்கிறேன் சகோ...
வல்லி அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
ReplyDeleteஅன்பு கீதா. எத்தனை நல்ல வார்த்தைகள். எவ்வளவு அன்பு.
ReplyDeleteஎப்படியோ இணைந்துவிட்டோம். நம் நாட்களின் ,வளர்ப்புகளின் குற்றமற்ற தன்மையே
நம் நட்புக்குக் காரணம்.
உங்கள் வழியாக நான் தெரிந்து கொண்ட நட்புகள் ஏராளம்.
நான் பிரபலம் என்று இப்போதான் தெரிந்து கொள்கிறேன். ஹாஹ்ஹா. கீதாமா.
என் எழுத்து என்பது குடும்பம் சுற்றம் மட்டிலுமே. உங்கள் எழுத்து உலகளாவியது.
உங்கள் சாதனையும் அளவிட முடியாதது.
இத்தனை அன்புக்கு நான் பாத்திரமாகி இருக்கிறதுதான் எனக்கு பாக்கியம்.
உண்மைதான் உங்கள் யாருக்காவது உடல் நிலை சரியில்லை என்றால்
மனம் தவித்துப் போகிறது.
அதே போல் உங்கள் கணவர்,கோமதியின் சார் எல்லோரும் உன்னத மனிதர்கள்.
இவர்கள் போல நல்லவர்கள் அடுத்த தலைமுறையில் குறைவுதான்.
அம்பி,டிஆர்சி சார், தக்குடு எல்லாமாக நாம் பின்னூட்டமிட்டுக் கொண்ட காலம்
தனிக்காலம்.
அம்பியிடம் பேசியே வருடங்கள் ஆகின்றன.
இங்கே வந்து வாழ்த்தியவர்கள் அனைவருக்கும் என் அன்பு வணக்கங்கள்.
வெறும் நன்றி சொல்லி முடிக்க முடியாது. இந்த அன்பு நீடித்து நீங்கள் எல்லோரும் நன்றாக இருக்கணும்னு பகவானைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
@ அன்பு ஜீவி சார்,
ReplyDeleteநீங்கள் சொன்ன பொற்காலங்களை உங்கள் எழுத்தில்
படிக்க காத்து இருக்கிறேன்.ஊருக்கு வந்து வாங்கவேண்டும்.
@அன்பு இன்னாம்பூர் சார், உங்கள் வாத்சல்யத்துக்கு மிக நன்றி.
இன்னும் யாரையும் நேரில் பார்த்ததில்லை.
காலம் வாய்க்கட்டும்.
@ வை.கோபாலகிருஷ்ணன் ஜி மிக மிக நன்றி.
அன்பு ஸ்ரீராம்,
ReplyDeleteஅன்பு கோமதி, எத்தனை நல்ல உள்ளங்கள் என் சொத்து என்பதற்கு இந்தப் பதிவு உதாரணம். இறைவன் உங்கள் எல்லோரையும் அருமையாகக் காப்பாற்ற வேண்டும் மா.
ரேவதிக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள் சொன்ன அனைவருக்கும் என் நன்றி.
ReplyDelete