வரிசையில் எங்கள் முறை வந்ததுமே அங்கிருந்த தன்னார்வலர் எங்களுக்கு எனத் தரைத்தளத்தில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், அங்கே ஃப்ளோர் ஆக்ஸெஸ் வழியாக நேரே உள்ளே அரங்கத்தினுள் நுழையலாம் எனவும் சொல்ல எனக்கு அப்பாடா என இருந்தது.நமக்கு அங்கே தான் இருக்கைகள் இருக்கும் என முதலில் இருந்தே எனக்குக் கொஞ்சம் சந்தேகமாகவே இருந்தது. நல்லவேளையாக மூத்த குடிமக்கள் என்பதால் நமக்குக் கிடைக்கும் சில சலுகைகள் உண்மையில் மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்தது. தரைத்தளத்துக்குச் செல்லும் வழியில் சென்று அங்கே கழிப்பறை எனக்குறிப்பிட்டிருப்பதில் போகலாம்னு நினைத்தால் அங்கிருந்த பாதுகாவலர் வெளியே தாற்காலிகக் கழிவறைகள் வைத்திருப்பதாகச் சொன்னார். நிறைய நடமாடும் கழிவறைகள். மீண்டும் ஸ்ரீரங்கம் நினைவுக்கு வந்தது. இங்கேயும் திருவிழாக்காலத்தில் அது நிறைய வைப்பார்கள். பின்னர் நேரே உள்ளே செல்லும் வழியில் சென்று எங்கள் இருக்கையைக் கண்டு பிடித்தோம். இடப்பக்கம் பக்கவாட்டில் இருந்து பார்க்கும்படி சில இருக்கைகளும் நடுவில் இடம் விட்டு மத்தியில் வருமாறு இரண்டு பக்கங்களிலும் இருக்கைகள், அதைத் தவிர்த்து வலப்பக்கம் வேறே இருக்கைகள். எங்களுக்குப் பின்னால் காலரியைச் சுற்றிலும் கீழே இருக்கைகள். அத்தனை இருக்கைகளும் சிறிது நேரத்தில் நிரம்பி வழிந்தன.
காலரிகளில் நிறையப் படிகள். அடுக்கடுக்காக அமைந்திருந்ததால் படிகளில் ஏறி, இறங்கி வர வேண்டும். எஸ்கலேட்டர் மேல் அடுக்கில் இறக்கி விடுகிறது. அங்கிருந்து படிகளில் இறங்கிக் கீழே உள்ள கடைசி அடுக்கு காலரிக்கு வந்து மீண்டும் படிகளில் இறங்கி இடத்தைக் கண்டு பிடித்து அமரவேண்டும். அங்கே உள்ள தளத்தில் கழிவறைகள் இருந்தன. ஆனால் அத்தனை படிகள் ஏறிச் செல்ல வேண்டும் என்பதால் நாங்கள் தாற்காலிகக் கழிப்பறையையே பயன்படுத்திக் கொண்டோம்.
காலரிகளில் நிறையப் படிகள். அடுக்கடுக்காக அமைந்திருந்ததால் படிகளில் ஏறி, இறங்கி வர வேண்டும். எஸ்கலேட்டர் மேல் அடுக்கில் இறக்கி விடுகிறது. அங்கிருந்து படிகளில் இறங்கிக் கீழே உள்ள கடைசி அடுக்கு காலரிக்கு வந்து மீண்டும் படிகளில் இறங்கி இடத்தைக் கண்டு பிடித்து அமரவேண்டும். அங்கே உள்ள தளத்தில் கழிவறைகள் இருந்தன. ஆனால் அத்தனை படிகள் ஏறிச் செல்ல வேண்டும் என்பதால் நாங்கள் தாற்காலிகக் கழிப்பறையையே பயன்படுத்திக் கொண்டோம்.
கூட்டம் கூட்டமாக
எதிரே மேடையில் கலை நிகழ்ச்சிகள் ஆரம்பமாக ஆயத்தம்
வலப்பக்க காலரியின் கூட்டம் ஒரு பார்வை
மேடை தெரியுதா?
குழந்தைகளின் மோகினி ஆட்டம்
நான் பையரைச் சோளப் பொரி வாங்கித் தரச் சொன்னேன். எங்க பெண் மெம்பிஸில் இருக்கையில் பெரிய பேத்திக்கு (அப்பு அப்போப் பிறக்கவில்லை) நிறைய வெண்ணெய் போட்டு வாங்கித் தருவாள். எனக்கும் ஆசையாக இருக்கும். ஆனால் கேட்கக் கூச்சம் என்பதால் கேட்டதில்லை. அதே போல் "சிவாஜி" படம் பார்க்க மெம்பிஸில் தியேட்டருக்குப் போனப்போவும் எல்லோரும் பக்கெட் பக்கெட்டாகச் சோளப் பொரி வாங்கினார்கள். நம்மவரிடம் சொன்னால் (நாங்க ரெண்டு பேர் தான் அந்தப் படத்துக்குப் போனோம்) "நீ என்ன சின்னக்குழந்தையா?" என ஓர் முறைப்பு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இணைய உலகிலேயே அன்றும், இன்றும் என்றும் ஒரே சின்னக்குழந்தை நான் தான் எனத் தெரியவில்லை! நு நினைச்சுட்டுப் போனால் போகிறதுனு அவரை மன்னிச்சு விட்டுட்டேன். ஆனால் இன்னிக்கு ஆசையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பையரும் வாங்கி வந்தார். பையர் தனக்கு சமோசாவும் எங்களுக்குச் சோளப்பொரியும் வாங்கி வந்தார். வேறே என்னென்னமோ விற்பதாகவும் ஒன்றும் சாப்பிடும்படி இல்லை எனவும் சொன்னார். எங்களுக்கு எதுவும் வேண்டாம் எனச் சொல்லி விட்டோம். ரங்க்ஸிடம் கொஞ்சம் கொடுத்துவிட்டுச் சாப்பிட ஆரம்பிச்சேன். என்ன ஏமாற்றம். நோ வெண்ணெய்! துரோகி! யாரைச் சொல்றது? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், பரவாயில்லைனு மனசை சமாதானம் செய்துட்டுச் சாப்பிட ஆரம்பிச்சேன். ரங்க்ஸிடம் கொடுத்ததைச் சாப்பிட்டு முடித்து விட்டார். இன்னும் வேண்டுமானு கேட்டால் வேண்டாம்னார். சரினு நான் சாப்பிட்டால் அவர் கையில் இருந்த ஜிப்லாக்கைத் திறந்து அதில் உள்ளவற்றை வெளியில் எடுத்துவிட்டுச் சோளப்பொரியை அதில் கொட்டச் சொல்லி வற்புறுத்தினார். எனக்கு ஒண்ணும் புரியலை! ஏன்? எனக் கேட்டால் நீ இந்த பக்கெட்டைக் கையில் வைச்சுக்கொண்டு தவிக்கிறே என்றார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அந்த பக்கெட்டைக் கையில் வைத்துக் கொண்டு தானே சாப்பிட முடியும்? இது கூடப் புரியலையேனு அவரை ஓர் முறை முறைத்துவிட்டு நான் பாட்டுக்குச் சாப்பிட ஆரம்பித்தேன். விடவில்லை. அதுகுள்ளே பாதி காலியாகப் பையருக்கு பயம் வந்துடுச்சு போல! அடுத்த துரோகி! வெண்ணெய் போட்டுச் சோளப்பொரி கேட்டால் வெறும் சோளப்பொரி வாங்கிக் கொடுத்ததோடு அல்லாமல் அதைச் சாப்பிடாதே, வயித்தை வலிக்கப் போகுதுனு கண்ணு வைக்க ஆரம்பிச்சார். கடுப்பாக வந்தது. லட்சியம் செய்யாமல் சாப்பிட்டால் இரண்டு பக்கமும் விட்டால் தானே!
மனசே நொந்து போனது. சின்ன வயசில் இருந்து ஆசைப்பட்ட ஓர் பதார்த்தத்தை இப்போக்கூடச் சாப்பிட விட மாட்டேன் என்கிறார்களே என! கிட்டத்தட்ட அழாக்குறையாக அந்தச் சோளப்பொரியைப் பையரிடம் கொடுத்தேன். அவர் வாங்கி வைத்துக்கொண்டார். (@துரை, சோகக்கதை இப்போ என்னன்னு புரியுதா?) கண்ணும் மனமும் அதிலேயே இருந்தது. அதற்குள்ளாக மேடையில் நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்போவதற்கான ஏற்பாடுகள் ஆரம்பித்தன.
சிறிது நேரத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசிக் கலை நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப் போவதாய்ச் சொல்ல நிகழ்ச்சிகள் ஆரம்பித்தன. முதலில் கேரளத்தின் மோகினி ஆட்டம், பின்னர் தமிழ்நாட்டின் பரதநாட்டியம், ஆந்திராவின் குச்சுப்பிடி, கர்நாடகாவின் யக்ஷகானம் என வரிசையாக ஒவ்வொன்றாக வந்தன. வடகிழக்கு மாநிலத்தின் குழந்தைகள் மிக அருமையாக ஆடினார்கள். எல்லோருமே நன்றாக ஆடி இருந்தாலும் இவர்கள் ஆட்டம் சிறப்பாக அமைந்தது. பஞ்சாபின் பாங்க்டா நடனமும், ராஜஸ்தான், ஹரியானாவின் நடனங்களும் கண்களைக் கவர்ந்தன. நிகழ்ச்சிகள் ஆரம்பம் ஆனதும் கழிவறையைப் பயன்படுத்தச் சென்றால் பாதுகாவலர்கள் வெளியே அனுமதிக்கவில்லை. காலரிக்குச் செல்லும் படிக்கட்டுகளைக் காட்டி அதன் வழியே மேலே ஏறி உயரே உள்ள முதல் காலரித்தளத்தில் உள்ள கழிவறைகளைப் பயன்படுத்தும்படி சொல்லி விட்டார்கள். நல்லவேளையாக எங்களுக்கு எதுவும் சாப்பிடாததால் பிரச்னை ஏதும் இல்லை
கலை நிகழ்ச்சிகளின் படங்கள் வெவ்வேறு விதங்களில்
மேடையின் இரண்டு பக்கங்களிலும் மற்றும் மேடைக்கு மேலும் பெரிய பெரிய ஸ்க்ரீன்கள். நடுவே கீழே விளக்கு வெளிச்சத்துக்குக் கீழே மேடை தெரிகிறது. பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அவற்றை ஓரளவுக்குக் கொடுத்திருக்கேன். மோகினி ஆட்டம் மட்டும் 2,3 முறை வந்திருக்குனு நினைக்கிறேன்.